November 26, 2008

அலகாபாத் திரிவேணி-காசித்தொடர்(6)

அலகாபாத்துக்கு காசியிலிருந்து ஏறிய ரயில் வழக்கமான ரயில்களைப்போலவே தாமதமாக எங்களைக்கொண்டு சேர்த்தது. ஒரு ஆட்டோ (100ரூ) பிடித்து நாட்டுக்கோட்டை சத்திரம் என்று சொன்னொம். நல்லத்தெரியும்ன்னு சொல்லறார் ஆனா நாகர்சத்திரம்ன்னு சொல்றார். சரி காசியில் நாட் கோட் இங்க நாகரோ என்று தப்பா நினைத்துவிட்டோம். அவர் தெலுகு சத்திரத்தில் கொண்டுவிட்டுவிட்டார். பிறகு அந்த தெலுங்கரே ஒரு ஆட்டோ வைத்து மீண்டும் நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரம் கொண்டு விட்டார்.

காசி அளவு இல்லை என்றாலும் பெரிய ஹால் இருக்கிறது. அறைகள் மிக சிறியது தான்.அதிக கூட்டமில்லாததால் எங்கள் உடமைகளை அங்கே வைத்துவிட்டு , அங்கிருந்த மேனேஜர் ஏற்பாடு செய்தபடி எல்லாம் சுத்திப்பார்க்க ஆரம்பித்தோம். மேனேஜர் அங்கே வந்து 3 வருடம் ஆகிறதாம்.. ஹிந்தி புரியுமாம் ஆனா பேசவராது. அந்த ஊர் ஆளுங்களுமே இவர்களுடன் பல வருட பிசினஸ் என்பதால் தமிழ் புரிந்து கொண்டார்களாம். இவர் பாட்டுக்கு போனில் எங்கடா இருக்கே? போட் வேணும்ங்கறார். அங்கே இருந்து சரியான் பதில் ஹிந்தியில் வருகிறது. சரிதான் நானும் என் பையனும் பேசுவது போலயே இருக்கே என்று நினைத்துக்கொண்டேன். என்னதான் நான் தமிழில் கேட்டாலும் அவன் போனமாதம் வரை ஹிந்தியிலேயே தான் பதில் சொல்வான்.மாற்றி மாற்றி தமிழும் ஹிந்தியும் சளைக்காமல் பேசிக்கொள்வோம்.

ஆட்டோக்காரர் வந்தவுடன் நேராக திரிவேணி சங்கமத்தில் இறக்கிவிட்டார். அங்கே கார்த்திகேய் என்னும் படகுப்பையன் (சின்னப்பையன் தானே அப்பறம் என்ன படகுக்காரர்) பொறுப்பேற்றுக்கொண்டார்.
"யஹாங் கங்கா யமுனா சரஸ்வதி நதி தீன் நதி ஹை. யமுனா நதி .. பச்சே கலர் (அட பச்சை கூட தெரிஞ்சு வச்சிருக்கார்ப்பா..) கங்கா நதி வெள்ளே கலர். "
அட ஆமாம் ரெண்டும் சேரும் இடத்தில் அழகா நிறத்தின் பிரிவு தெரியுதே.சரஸ்வதி கண்ணுக்குத்தெரியாதது. புழுபூச்சி வராத தண்ணி திரிவேணியிலும் இருக்காம் கங்கை வருதே..

சின்னச் சின்ன மேடை போட்டு ஆற்றின் நடுவில் மரமேடைகள். அங்கே இறங்கி முங்கிக்குளிக்கலாம். வழக்கம்போல பெரியவர்கள் இறங்கிக்குளித்தார்கள். ஸீகல் பறவைகள் எக்கச்சக்கமா இருந்தன. அதற்கு உணவு தருவதற்கு ஆசைப்பட்டால் அதற்கும் ஒரு படகுப்பையன் உணவு விற்கிறான் .

டிப்ஸ் ஆக கொஞ்சம் பணம் கொடுத்த பின்னும் இவங்க யாரு உங்க மாமனார் மாமியாரா இவங்க தலைய சுத்தி ஆசிர்வாதம் செய்து உங்க இஷ்டம் தேதோன்னு கொஞ்சம் வாங்கிக்கிட்டான்.

திரிவேணிக்கு அருகிலேயே ஹனுமான் கோயில் .. நாங்கள் சென்ற நேரம் ஆரத்தி நடந்துகொண்டிருந்தது. ஹனுமான் ஓவியம் தரையில் வரைவது போல தரையில் ஹனுமான் சிலை இருந்தது.சுற்றிலும் கம்பியிட்ட இடத்திலிருந்து குனிந்து வணங்கி வழிபட்டோம்.

அதற்குள் இருட்டி விட்டது. ஹனுமான் கோயிலுக்கு பின்புறம் சிறிது தூரத்தில் காஞ்சி மடத்தின் அடுக்குமாடி கோயில் .ஒவ்வொரு மாடியிலும் வேவ்வேறு ஓவியக்கதைகள. ஒவ்வொரு மாடியிலும் ஒரு சன்னிதி ,சிவன், திருமால் இன்னும் என்ன என்ன சாமி் என்று மறந்து விட்டேன்..:(

நாக வாசுகி கோயில் இரவில் அந்த கோயில் மிக அழகாக இருந்தது. புராணங்களில் கூட இந்த கோயில் வருகிறதாமே.. கஜகரணம் அடித்தாயே என்ன ஆயிற்று என்று சொல்வோமே அந்த கோயில் இங்கே இருக்கிறது.கஜகர்ணன் ஒரு முறை இந்தமூன்று நதிகளையும் குடித்துவிட்டானாம். அவன் பாடு பொறுக்காமல் அவனை வேணி மாதவ் அழித்த இடம் என்று எழுதி இருந்தது. வேணிமாதவ் கோயில்.

சித்தபீட் கோயில் ஆலுப்பி தேவி..கோயிலுக்குள்ள போனோமா .. ஒன்னுமே புரியலை. சாமியே இல்லை.. மூணு பக்கம் கதவு இருக்கு அந்த பக்கமா நுழைஞ்சா இருக்குமோ என்று நுழைஞ்சுநுழைஞ்சு வரோம் .. அட ஒன்னுமே இல்லைங்க .. ஒரு சதுரமேடை நடுவில் சின்ன பள்ளம் அதில் கொஞ்சம் தண்ணீர். அதற்குமேலே ஒரு மரத்தொட்டில் .எப்படிகும்பிடுவதுன்னு தெரியாமல் முழிச்சிட்டிருந்தோம். வேறு சிலர் தொட்டிலை இழுத்து அதில் தலை யை வைத்துக்கும்பிடவும் அது தான் முறை என்று தெரிந்து கொண்டோம். விக்கிபீடியா சொல்லும் கதை என்னவென்றால்...

ஒரு காட்டு வழியில் கல்யாண ஊர்வலம் போய்க்கொண்டு இருந்ததாம் திருடர்கள் வந்து கொள்ளையடித்து ஆட்களை கொன்று போட்டுவிட்டு மணமகளை வைத்திருந்த பல்லாக்கு (டோலி)திரையை நீக்கிப் பார்த்தால் அவள் மறைந்துவிட்டாளாம். அந்த கன்னிதேவி தான் .அதனால் தான் இந்த ஜூலா வழிபாடாம.

ஜவஹர்லால் நேரு பிறந்த வீடு ஆனந்தபவன் 5 மணியோடு மூடிவிடுவதால் எங்களால் பார்க்கமுடியவில்லை. இன்னும் எவ்வளவோ இடங்கள் இருந்தாலும் தில்லி ரயிலுக்கு நேரமாகியதால் மீண்டும் சத்திரத்துக்கு சென்று இட்லியை உள்ளே தள்ளிவிட்டு ரயிலேறினோம். காசி தொடர் முடிவுற்றது.

18 comments:

Thamiz Priyan said...

நல்ல அனுபவங்கள்! மீண்டும் இது போல் பல பயணங்கள் கிடைக்க வாழ்த்துக்கள்!

துளசி கோபால் said...

//அவன் போனமாதம் வரை ஹிந்தியிலேயே தான் பதில் சொல்வான்.//

இந்த மாதம் எப்படி?


ஆமாம். கங்கை நீர் எத்தனைநாள் ஆனாலும் புழுபூச்சி வர்றதில்லை சொல்றாங்களே. அது எவ்வளவு உண்மை?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி தமிழ்பிரியன்.. எவ்வளவு பார்த்தாலும் அள்ள அள்ளக்குறையாம நம்மநாட்டுலயே இத்தனை இருக்கே ..அப்பறம் வெளியே வேற கொஞ்சம் போகனும்ன்னு ஆசையா இருக்கு உங்க வாழ்த்துக்கு நன்றி..:)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

துளசி இந்த மாதம் எப்படின்னா? அவனே பாதி தமிழும் பாதி ஹிந்தியுமா பேசறான்.. :) கொசு ஆரஹாஹே.. மேரேக்கோ கடிக்கிறாஹே..ன்னு மரியாதையா..

கங்கை தண்ணி புழு பூச்சி வராதது உண்மைதான்னு ஆராய்ச்சி செய்திருக்காங்களாம்..அது இமயமலையில் மூலிகைகள் மேல பட்டு வருவதால் தானாம்.யமுனால கலந்தபின்ன அது மாசு பட்டுருது. நாம சின்ன சின்ன கலசங்களில் அடைச்சு வைக்கிறோமே அதனால் தானா இருக்கும்.. அடைச்சு வைத்த தண்ணி் கெட்டுப்போகம இருக்கே..வேற கெட்டுப்போகம இருக்க என்ன சான்ஸ் இருக்குன்னு தெரியல.

Anonymous said...

நாக வாசுகி கோயில் பாம்பு கோயிலா?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆமா சின்ன அம்மிணி , பாம்புக்கோயில் தான்..

நாகை சிவா said...

பயணம் இனிதே அமைந்தது :)))

rapp said...

மீ த எத்தனாவது?:(:(:(

rapp said...

//மேனேஜர் அங்கே வந்து 3 வருடம் ஆகிறதாம்.. ஹிந்தி புரியுமாம் ஆனா பேசவராது. அந்த ஊர் ஆளுங்களுமே இவர்களுடன் பல வருட பிசினஸ் என்பதால் தமிழ் புரிந்து கொண்டார்களாம். இவர் பாட்டுக்கு போனில் எங்கடா இருக்கே? போட் வேணும்ங்கறார். அங்கே இருந்து சரியான் பதில் ஹிந்தியில் வருகிறது. சரிதான் நானும் என் பையனும் பேசுவது போலயே இருக்கே என்று நினைத்துக்கொண்டேன்//

நானும் பிரான்சும் போலன்னும் சொல்லலாம்:):):) அந்தளவுக்கு நாம பீதியக் கெளப்புவோம்ல:):):)

rapp said...

//புழுபூச்சி வராத தண்ணி திரிவேணியிலும் இருக்காம் கங்கை வருதே..
//

இங்க தண்ணி பயங்கர சில்லுன்னு இருக்காதா?

rapp said...

இதுல நீங்க சொல்லிருக்க நெறயக் கோவில்கள் பத்தி எனக்குத் தெரியாது:(:(:(

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நாகை சிவா, பயணம் இனிதே அமைந்தது..அடுத்தநாளிலிருந்து சமைக்கனுமே வேலைக்குபோனுமே, பள்ளிக்கூடம்போனுமேன்னு ஆளாளுக்கு ஒரு கவலை..:)
----------
ராப் யூ த எட்டாவது..:)
ஆமா ராப் கொஞ்சம் ஜில்லுன்னு தான் இருந்தது .. விண்டர் வேற ஸ்டார்ட் ஆகிடுச்சுல்லயா...நாங்க தான் தலையில் தண்ணித்தெளிச்சிக்கிறவங்களாச்சே.. குளிச்சவங்க தான் நடுங்கிட்டிருந்தாங்க..

கிரி said...

பல தகவல்களை கூறி உள்ளீர்கள், சிறப்பாக இருந்தது உங்கள் தொடர்.

என் பெற்றோரை காசிக்கு அழைத்து செல்லும் என் ஆசை இதன் மூலம் வலுப்பெற்று இருக்கிறது. பார்ப்போம் .....

கோபிநாத் said...

\\காசி தொடர் முடிவுற்றது.\\\

ரைட்டு ;))

மங்கை said...

இந்த காசி தொடர் நல்லா வந்து இருக்கு... சொன்ன மாதிரி கொஞ்சம் ஓட்டமா இருக்குற மாதிரி இருக்கு... அடுத்த தடவை கொஞ்சம் நிதானமா முயற்சி செய்ங்க...இன்னும் சிறப்பா இருக்கும்.. 4 பதிவுல போடறத 6 பதிவா செய்துடுங்க...:-))

ராமலக்ஷ்மி said...

அனுபவங்களை அருமையாக விவரித்திருந்தீர்கள். பலருக்கும் பயனுள்ளதாய் இருக்கும் இந்தப் பகிர்தல். வாழ்த்துக்கள்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கிரி பெரியவங்க ஆசையை நிறைவேத்தி வைக்கிறது நல்லது தானே போயிட்டுவாங்க என்ஜாய்...
--------------------
ரைட்டு கோபி :)
--------------------
எங்கள மட்டும் சொல்லுங்க மங்கை..நீங்க ஒரு பதிவு போடவே இரண்டு மாதம் ஆகுது..கோபியைவிட மோசமாகிட்டீங்க..:)
-------------------
நன்றி ராமலக்ஷ்மி.. :)

Linq said...

Hello,

This is Alpesh from Linq.in. and I thought I would let you know that your blog has been ranked as the Best Blog of All Time in the Languages Category

Check it out here Award

Linq tracks posts from Indian blogs and lists them in order of recent interest. We offer syndication opportunities and many tools for bloggers to use in there web sites such as the widget below:

Blogger Tools

Alpesh
alpesh@linq.in
www.linq.in