December 11, 2008

கோல்டன் டிக்கெட்..சாக்லேட் ஆறு , சாக்லேட் அருவி

நேற்று இரவு நானும் மகனும் சார்லி இன் த சாக்லேட் பேக்டரி படம் பார்த்தோம். பன்னிரண்டு மணிக்கு மேல் எனக்குத்தான் தூக்கம் வந்தது. ஆனால் அவனோ இன்னும் கொஞ்சம் தான் இருக்கு தூங்காதே அம்மா என் கூட பாரு என்று என்னைத் தொடர்ந்து உற்சாகப்படுத்தியபடி இருந்தான். அப்படியும் ஒரு காட்சியில் என்னை அறியாமல் தூங்கிவிட்டேன். பிறகு அவனே அந்த கதையை எனக்குச் சொன்னான்.

சாக்லேட் சாப்பிடக்கூடாது என்று பல்டாக்டரான தந்தையால் மிகவும் கண்டித்து வளர்க்கப்பட்ட ஒரு சிறுவன் பெரியவனாகி சாக்லேட் தொழிற்சாலையே ஆரம்பிக்கிறான். அவனுடைய ரகசிய செய்முறைகளை யாரோ கடத்தி வெளியே விற்றுவிட்டார்கள் என்ற கோபத்தில் அவன் எல்லா தொழிலாளர்களையும் விரட்டி விடுகிறான். அதே ஊரில் ஏழையாக இருக்கின்ற சார்லியின் தாத்தா அதில் வேலை செய்தவர்களில் ஒருவர். அவர் அந்த தொழிற்சாலையின் முதலாளியான வில்லி வோன்காவைப்பற்றி தன் பேரனிடம் ஒரு மேதையென்று சொல்லிவைக்கிறார்.

அந்த தொழிற்சாலை ஊராருக்கு ஒரு அதிசயம். யாருமே அங்கே வேலைக்குச் செல்வதில்லை ஆனால் சாக்லேட்கள் உற்பத்தியாகி வெளியே அழகாக டப்பாக்களில் அடைக்கப்பட்டு வெளியே வருகிறது. ஒரு நாள் அறிவிப்பு ஒன்று எல்லா இடங்களிலும் ஒட்டப்பட்டுக் காண்கிறார்கள். வோன்காவின் சாக்லேட்களில் ஐந்து சாக்லேட்களில் மட்டும் "தங்க அனுமதி சீட்டு" (கோல்டன் டிக்கெட்) வைக்கப்பட்டிருக்கிறது. யாருக்கு கிடைக்கிறதோ அந்த ஐந்து குழந்தைகள் தொழிற்சாலையை சுற்றிப்பார்க்க ஒரு நாள் அனுமதிக்கப்படுவார்கள்.அவர்களில் ஒருவருக்கு நினைத்துப்பார்க்கமுடியாத ஒரு பரிசு கிடைக்கும்.

சார்லிக்கும் அதனைப் பெற ஆசை . அவன் குடும்பமோ ஏழை. அப்பா அம்மா இரண்டு தாத்தா இரண்டு பாட்டி என்று பெரிய குடும்பம். அப்பாவுக்கோ வேலை போய்விட்டது. சிரமங்களுக்கிடையில் அவன் பிறந்தநாளுக்காக வாங்கிய சாக்லேட் பட்டையில் சீட்டு கிடைக்கவில்லை. ஆனால் அவன் அதை பெரிதாக நினைக்காமல் அதனை குடும்பத்திலிருப்போர் அனைவருடனும் பகிர்ந்துகொள்கிறான்.தாத்தாவின் சேமிப்பில் வாங்கிய பட்டையிலும் கிடைக்கவில்லை. அதற்குள் ஒவ்வொரு அனுமதிச்சீட்டாக பெற்றவர்கள் தொலைகாட்சியில் பேட்டிக்கொடுக்கிறார்கள்..இன்னும் இருப்பது ஒரே ஒரு சீட்டுத்தான்.

அதிர்ஷ்டவசமாக சாலையில் கண்டெடுத்த பணத்தில் சார்லி வாங்கிய சாக்லேட் பட்டையில் அந்த சீட்டு கிடைத்துவிடுகிறது. அதை விலைக்குக்கொடுக்க சொல்லி எல்லாரும் கேட்க, கடைக்காரர் மட்டும் வீட்டுக்கு எடுத்து செல்லப் பணிக்கிறார். வீட்டிற்கு வந்த பிறகு தங்கள் ஏழ்மை நிலை போக அதனை விற்கலாம் என்று முடிவெடுப்பதாக சொல்கிறான். அதுவரை அந்த குடும்பத்தில் எதிர்பதமாக பேசிவந்த இன்னொரு தாத்தா இந்த முறை நம் குடும்பத்தில் என்ன குறை.. பணம் பெரிய விசயமே இல்லை. நீ பலபேருக்கு கிடைக்காத இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்துவது தான் சிறப்பு என்று சொல்கிறார். ஒவ்வொரு குழந்தையும் தன்னோடு ஒரு பெரியவர்களை அழைத்துச் செல்லலாம் என்பதால் அவன் அவனுடைய தாத்தாவையே கூட்டி செல்கிறான்.

அங்கே வருகின்ற குழந்தைகளில் சார்லியைத் தவிர மற்றக்குழந்தைகள் அனைவருமே சரியாக வளர்க்கப்பட்டவர்கள் இல்லை. ஒரு குழந்தை பணக்காரர் மகள். நினைப்பதெல்லாம் அடைய வேண்டும் என்றிருப்பவள். அவளுக்காக அப்பாவின் கம்பெனியில் வேலை செய்பவர்கள் அனைவரும் வேலைகளை விட்டு சாக்லேட் களை பிரித்து தேடிக்கிடைக்கிறது. சார்லி தன் தாத்தாவிடம் .. "இது எப்படி சரியாகும் தாத்தா? அவளாக தேடவில்லையே."
தாத்தா- "அப்படித்தான் எல்லாம் நடக்கிறது சார்லி ."

ஒரு குழந்தை எந்நேரமும் சாக்லேட் சாப்பிடுபவன்.
ஒரு குழந்தை எந்நேரமும் வீடியோகேம்ஸில் அடிஉதை என்று வாழ்பவன். ( சாக்லேட் பிடிக்காதவன் வேறு)
ஒரு குழந்தை ட்ராபிகள் வாங்கிக்குவிக்கும் ஜீனியஸ்.. பபிள்கம் அதிக நேரம் சுவைப்பதில் கின்னஸ் ரெக்கார்ட் செய்தவள்.

உள்ளே குள்ளமனிதர்களும் இந்தியப்படங்களைப்போல அடிக்கடி வரும் பாடல்களும் செட்டிங்களும் பிரமாதம்.குள்ளமனிதர்கள் உதவியுடன் வோன்காவின் தொழிற்சாலை நடக்கிறது.

உள்ளே போனதும் வருகின்ற உலகம் தான் என் மகனுக்கு மிகவும் பிடித்தது. சாக்லேட் ஆறு சாக்லேட் அருவி.. சாக்லேட் மரங்கள் அங்கங்கே ஐஸ்கிரீம்..இதே போல் நம் வீட்டிலும் இருந்தால் அள்ளி அள்ளிச்சாப்பிடுவேன் என்று சொல்லிக்கொண்டான்.. கனவுக்கு போயிருப்பான் .எந்நேரமும் சாக்லேட் சாப்பிடும் பையன் சாக்லேட்டை அள்ளிக்குடிக்கமுயன்று அதற்குள் விழுந்துவிடுவான்.அதனால் அவனும் அவன் அம்மாவும் வெளியேற்றப்படுவார்கள்.அவன் பைப் ஒன்றால் உறிஞ்சப்படும் போது ..என் மகன் சிறியவன் என்பதால் அவனுக்கு அவன் நல்லபடி வெளியே அனுப்பபடுவார்கள் என்று பலமுறை சொல்லவேண்டி இருந்தது.

பபிள்கம் மெல்பவள் வோன்கா சொல்வதைக்கேட்காமல் சோதனை செய்யப்படாத ப்ளூபெர்ரி பபிள்கம் சாப்பிட்டதால் நீல நிறமாக மாறி பந்து போல உருண்டு வெளியேற்றப்படுவாள். அப்போதும் அவனுக்கு பயப்படாமல் இருக்க விவரிக்கவேண்டி இருந்தது. அதிகம் பபிள்கம் சாப்பிடக்கூடாது என்று சொல்ல நல்ல ஐடியா...:) ஜூஸறில் போட்டு பெர்ரியின் ஜூஸ் எடுக்க அவளும் அவள் அம்மாவும் ஆட்டத்திலிருந்து வெளியேற்றப்படுகிறார்கள்.

டிவியே அதிகம் பார்ப்பவன் டீவிக்குள் சென்று சின்னவனாகிவிடுவான். ஆட்டம் க்ளோஸ்.

நட்களை( nut) பிரித்தெடுக்க இருக்கும் அணில் குட்டிகளைப்பார்த்து இப்போதே அணில் குட்டி ஒன்று தனக்கு வளர்ப்பு ப்ராணியாக வேண்டும் என்று கேட்டசிறுமிக்காக அவள் தந்தை வோன்காவிடம் பேரம் பேசிப்பார்க்கிறார். வோன்காவின் மறுப்பை கண்ட சிறுமி அணிலைப்பிடிக்க செல்ல.. அணில்கள் கோபம் கொண்டு அவளை சூழ்ந்துகொள்ள... ( இந்த இடமும் பயம் தான் குட்டிப்பையனுக்கு) ஒரு அணில் மிக அருகில் அவள் முகத்துக்கு சென்று நெற்றியில் "டொக் டொக்" இது நல்ல நட் இல்லை..(மகனுக்கு ஒரே சிரிப்பு பேட் கேர்ள் பேட் நட்)


தந்தை பதற.. இப்பொழுது என்ன ஆகும்.. நல்ல நட் இல்லையென்றால் குப்பைக்கூடைக்குப்போவார்கள். மகள் குப்பைக்கூடைக்குள் விழ அப்பாவும் விழ.. ஆட்டம் க்ளோஸ்..

மீதி இருப்பவன் சார்லி என்பதால் அவர்களை வீட்டிற்கு சென்று இனி எல்லாரிடமும் சொல்லிக்கொள் உனக்கான பரிசு நீ என் தொழிற்சாலைக்கு முதலாளி. எனக்கு வாரிசு என அறிவிக்கிறான். குடும்பத்தினரைப் பிரிந்து அந்த தொழிற்சாலையை தனதாக்கிக்கொள்ள விரும்பாத சார்லி வோன்காவுக்கு ஆச்சரியம் தருகிறான்.குடும்பத்தினரை அழைத்துச் செல்ல மறுக்கும் வோன்கா.. திரும்பி செல்கிறான்.

கடைசியில் மற்ற குழந்தைகள் வெளியேறுவடு காட்டப்படுகிறுது.. இல்லாவிட்டால் நம்ம குழந்தைகள் பயந்துவிடுவார்களே... :)

மீண்டும் வரும் வோன்கா சார்லியின் அறிவுரைப்படி தன் தந்தையைக்காண செல்கிறான். அங்கே அவன் தந்தை அவன் பற்களை சோதனையிட்டு ஆச்சரியப்படுகிறார்.
-"வில்லி வோன்கா ? !!!!!
-ஆமாம்...
-நீ இதுவரை சாக்லேட் சாப்பிடவே இல்லயா..?

-இல்லை அப்பா எப்போதுமே"

சார்லியின் குடும்பமும் அதே போல ஒரு வீடும் சாக்லேட் பேக்டரியிலேயே அமைக்கப்பட்டும் குடும்பமாய் ஜாலியாய் ..... கடைசியில் சுபம்.

43 comments:

Thamiz Priyan said...

மீ த பர்ஸ்ட்ட்ட்ட்ட்ட்ட்டூ

ஆயில்யன் said...

//சாக்லேட் ஆறு சாக்லேட் அருவி.. சாக்லேட் மரங்கள் அங்கங்கே ஐஸ்கிரீம்..இதே போல் நம் வீட்டிலும் இருந்தால் அள்ளி அள்ளிச்சாப்பிடுவேன் என்று சொல்லிக்கொண்டான்///


அய்யோ! நினைச்சாலே சும்மா சூப்பரா இருக்கே!

மீ டூஊஊ!!!!

அள்ளி அள்ளி சாப்பிடுவேன் அத்தனை சாக்லேட்களையும் ஐஸ்கீரிம்களையும் :)))

ஆயில்யன் said...

போட்டோஸ் எல்லாம் நொம்ப பெருசா அழகா இருக்கு!

சாக்லேட் நீச்சல் குளம் !

அணில்கள் சூழ்ந்த அந்த பாப்பா (எம்புட்டு பயமா இருந்திருக்கும்!?)

ஆயில்யன் said...

பெரியவக பர்ஸ்ட்டு வந்துட்டாக!

ஹய்ய்யா! சின்ன பையன் நான் மெதுவா மீ த செகண்டு வந்துட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்!

Thamiz Priyan said...

இந்த மாதிரி ஒரு சாக்லேட் பாக்டரிக்கு போகனும்னு ரொம்ப நாளா ஆசை எனக்கு..;)

rapp said...

மீ த தர்ட்:(:(:(

rapp said...

பொறந்தநாள் வேலையெல்லாம் முடிச்சுக்கிட்டு அடுத்த வாரம் வர்றேன்:):):)

நட்புடன் ஜமால் said...

\\"இது எப்படி சரியாகும் தாத்தா? அவளாக தேடவில்லையே."
தாத்தா- "அப்படித்தான் எல்லாம் நடக்கிறது சார்லி ."\\

ஆம் அப்படித்தான் பலவும் ...

நட்புடன் ஜமால் said...

\உள்ளே போனதும் வருகின்ற உலகம் தான் என் மகனுக்கு மிகவும் பிடித்தது. சாக்லேட் ஆறு சாக்லேட் அருவி.. சாக்லேட் மரங்கள் அங்கங்கே ஐஸ்கிரீம்..இதே போல் நம் வீட்டிலும் இருந்தால் அள்ளி அள்ளிச்சாப்பிடுவேன்\\

இப்படி ஒரு ஆசை இருந்ததேயில்லை (அட நம்புங்க).

ஆனால் இதை படித்த பிறகு அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் ...

சந்தனமுல்லை said...

குழந்தைகளுக்குத் தேவையானது எல்லாமே இதுல இருக்கு போலருக்கே!!

☀நான் ஆதவன்☀ said...

நானும் இந்த படத்தை பார்த்திருக்கேன். தொழிற்சாலைக்கு உள்ளே குள்ள மனிதர்கள் பாடும் பாடலும் வேலை செய்யும் விதமும் நன்றாக இருக்கும்.

ஒரு ஸ்பெஷல் செய்தி இது ஒரு '3D' படம்

ramachandranusha(உஷா) said...

Roald Dahl லின் பிரபல சிறுவர் நாவல் இது. புத்தகமாய் படித்துப்பாருங்கள், அதில் உள்ள படங்களும் அருமையாய் இருக்கும். உங்கள் மகன் இன்னும் ரசிப்பான். அவருடைய மெடில்டா, சோலோ, சிறுகதை தொகுப்பு எல்லாமே நன்றாக இருக்கும். இதை http://www.roalddahl.com/ பாருங்கள்.

கவிதா | Kavitha said...

அட என்னோட அணிலுகூட இருக்கு போல...

butterfly Surya said...

கயல் ஜி..

நல்ல படமும் விமர்சனமும்.. படங்கள் சூப்பர்..

குழந்தைகள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

தமிழ்பிரியன் ஆமாங்க நீங்க தான் பர்ஸ்டேய்...நான் ஒரு முறை பிஸ்கட் பாக்டரி போயிருக்கேன் கடலூர்லன்னு நினைக்கிறேன்..
---------------
ஆயில்யன் எனக்குக்கூட ஆசை தான் .விதவிதமான அந்த சாக்லேட் புல்வெளியில் நடந்துபோய் சாப்பிட்டா நல்லாத்தான் இருக்கும்..போட்டோ இன்னும் பெரிசா இருக்கு பதிவில் தெரியாதேன்னு சுருக்கிப்போட்டிருக்கேன் ..
-------------------------
ராப் இப்போலேர்ந்தே பிறந்தநாள் வேலையா.. அது சரி நீ பெரிய தலைவி இல்லையா.. கொண்டாடிடலாம்..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அதிரை ஜமால் .. பாருங்க ஆசை வராதவங்களுக்கு வரவைக்கிற கற்பனை உலகம் கண்முன்னே ... :)

---------------------
முல்லை எல்லாம் இருக்கு ..இன்னோரு தடவைப்பார்த்தா இன்னும் விவரமா ஒரு நல்லொழுக்கப்பாடம் நடத்தலாம்.. ஃபேமிலி மதிப்பு வரை இருக்கு.. அட்வைஸ்ன்னா வந்துருவோமே நாம.. :))
-------------------
நான் ஆதவன்... ரொம்ப நன்றீங்க.. இத 3D ல பார்த்தா சூப்பரா இருக்குமே.. ம்...அவங்க பாடற பாட்டு நல்லா இருந்தது.. பையன் ஆகா திரும்ப பாட ஆரம்பிச்சிட்டாங்கன்னு ஓவ்வொரு த்டவையும் கமெண்ட் அடிச்சான்.. அந்த நடிகரின் முகம் நல்லா இருந்தது இல்லையா.. :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

புனிதா.. :)நன்றி.. படம் பாருங்களேன் ஜாலியா இருக்கும்..
-------------------
உஷா படம் பாத்ததுக்கப்பறம் தான் அது புத்தகமா வந்த விசயமே எனக்குத்தெரிஞ்சது..ஆங்கிலபிரபல நாவல்களை எல்லாம் பூந்தளிர் பைக்கோ க்ளாஸிக்ஸ் மூலம் தமிழில் படிச்சு வளர்ந்தவ நான்.. :) இணைப்பு தந்ததற்கு நன்றி பார்க்கிறேன்ப்பா...
------------------------
கவிதா அது உங்க அணிலா.. அதான் கோவமா இருக்கா. .. ( சும்மா ஜோக்குக்கு) ஆனா உங்க அணிலு நல்ல பிள்ளை ..கூலான அணிலாச்சே..

கோபிநாத் said...

ம்ம்ம்ம்....;))

ramachandranusha(உஷா) said...

அட நீங்க வேற:-) அமீரகத்தில் புத்தகவாசனையே மூக்கில் படாம இருந்த காலக்கட்டத்தில் பிள்ளைகள்,
ஸ்கூல் லைப்ரரியில் இருந்து கொண்டு வர, ஏதாவது படிக்க கிடைக்காதா என்ற ஏக்கத்தில் படிக்க
ஆரம்பித்து, ரோல்டால் விசிறி ஆனேன்.
சொல்ல விட்டு போனது- மெடில்டா படம் கட்டாயம் பாருங்க. சின்ன பிள்ளைகளுக்கு மிக மிக
பிடிக்கும். வேற ஏதாவது சொன்ன சஸ்பென்ஸ் போயிடும். பார்த்துட்டு எனக்கு உங்க மகனை
மெயில் போட சொல்லுங்க :-)

சென்ஷி said...

என் ஆபிஸ் எதிர்க்க ஒரு சாக்லேட் கம்பெனி இருக்குது. சாக்லேட், பிஸ்கட்ன்னு உற்பத்தி செஞ்சு ஏற்றுமதிக்கு அனுப்பி வைப்பாங்க. ஆனா இது வரைக்கும் உள்ளே போய் பார்க்கணும்னு ஆசை வரல. ஆனா சாக்லேட் செய்யற இயந்திரங்கள் சிலது பார்த்திருக்கேன்.

இப்ப உங்க பதிவு படிச்சப்புறம் அந்த கம்பெனி உள்ள போயிட்டு வரணும்னு முடிவு செஞ்சிருக்கேன். போயிட்டு வந்து போட்டோவோட பதிவு போடறேன் :))

vidhyamss said...

வணக்கம், இந்த வருடம் என் பெண்ணுக்கு ஸ்கூலில் ஆங்கில பாடத்தில் ஒரு புத்தகமாக 'Charlie and the chocolate factory' கொடுது இருக்கிறார்கள். வந்தவுடனேயே படித்து விட்டேன். படம் வந்திருப்பது 2 மாசங்களுக்கு முன் பார்த்தேன். புத்தகத்தை படிக்கும் போது கிடைக்கும் நிறைவு படத்தில் இல்லை.

நசரேயன் said...

/*
அதிகம் பபிள்கம் சாப்பிடக்கூடாது என்று சொல்ல நல்ல ஐடியா
*/
ஐடியா நல்லா வேலை செய்ததால் சொல்லுங்க, நானும் சிறு முயற்சி பண்ணுகிறேன்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாப்பா கோபி.. :)
-----------------------

வண்ணத்துப்பூச்சியார்..நன்றி :)
---------------------
புரியுதுங்க உஷா.. இப்ப மகள் மேஜிக் ட்ரீ ஹவுஸ் புத்தகங்கள் விரும்பி லைப்ரரியிலிருந்து எடுத்துட்டுவரா.. நல்லாத்தான் இருக்கு அதும்.. எனக்கு புரியற அளவான ஆங்கிலத்தோட :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சென்ஷி நிஜ பேக்டரி எப்படி இருக்கும்னு எழுது நல்லா இருக்கும். ஆனா கற்பனை போல அழகா இருக்காது க்ரேக்கலரா மிசின்களோட இருக்கும்.. கற்பனை கதையில் கலர்புல்லா இருந்தது. .... :)
-------------
ஸ்ரீவித்யா சுதாகரன்.. உண்மைதாங்க முதலில் புத்தகமா படித்த எந்த ஒன்றும் திரைக்கதையாக அமைத்தபின் அதன் அழகோடு இருந்ததா சரித்திரமில்லை...

Unknown said...

இந்த படம் இரண்டாவது வெர்ஷன். பழையதுக்கும் இதுக்கும் 600 வித்தியாசங்கள்; ரெண்டுமே எனக்குப் பிடிக்கும்...

இதுல ஒரு குள்ள மனிதர் (கென்யாவில் பிறந்த பிரிட்டிஷ் இந்திய வம்சாவளி கொர்தீப் ராய்) தான், ஆனா, கணிணி அசைபட நுட்பத்தில பட்டைய கிளப்பிட்டாங்க.

உஷா, மெடில்டா படம் பசங்களை விட எனக்கு ரொம்பவே பிடிக்கும்:-)

மங்கை said...

சமத்து சபரி... பகல் நேரத்துல கூட அவன கொஞ்சம் அடம் பிடிக்க சொல்லனும்... வரேன் வரேன்...

Anonymous said...

நேரில் படம் பார்த்தது போல உள்ளது.
மிக அருமையான வர்ணனை.

Anonymous said...

சாக்லெட்டுன்னா இன்னிக்கும் எனக்கு உசிர். சின்ன வயசில இருமல் வரும்னு சாக்லெட், மத்த இனிப்பு எதுவும் கண்ல காட்ட மாட்டாங்க. அதனால பல்லும் உருப்படியா இருந்தது வேற விஷயம். அப்பெல்லாம் இது மாதிரித்தான், சாக்லெட் ஆறு, மரம் அப்படின்னு ஒரே கற்பனை. நினைக்கவே சந்தோஷமாத்தான் இருக்கு இன்னும்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கெக்கே பிக்குணி , கூகிளில் பார்த்தேன் இரண்டு வெர்சன் வந்திருக்குன்னு.. பலே எல்லாரும் டபடபான்னு வந்து எல்லாம் இன்பார்மேசனும் குடுக்கறீங்க..பயனுள்ளது எனக்கு...என் மகளுக்கு பள்ளியிலேயே 3D கண்ணாடியோட பார்க்க செய்தார்களாம்..இவன் 4 வய்சு இப்பத்தானே ஆகப்போது .. அதே பள்ளிக்குத்தான் போகப்போறான் அங்கேயே இருக்க தியேட்டரில் காட்டிடுவாங்கன்னு நினைக்கிறேன்.. :)
நாங்க கார்டூன் நெட்வொர்க்கில் பார்த்தோம் அன்னைக்கு..
----------------------------
சொல்லரசன் நன்றிங்க..
-----------------------------
மங்கை வாங்க.. அவனுக்கு ஒன்னுமே தெரியாதாக்கும் நீங்க தான் சொல்லிக்கொடுக்கணுமோ.. மாசத்துக்கு பதிவெழுதற கணக்கைப் பக்கத்துல பாருங்க.. ...:)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சின்ன அம்மிணி என் பையனுக்கு எந்நேரமும் சாக்லேட் வேணும்.. ரொம்ப மோசமாகம தடுத்து கொஞ்சம் கிஸ்மிஸ் திராட்சை, முந்திரின்னு மாத்திட்டு வரேன்.. ஆனாலும் ஒரு வேளைக்கு ஒரு கோட்டா மட்டும் அப்படியே இருக்கு,,, :)

அமிர்தவர்ஷினி அம்மா said...

photos நீங்க கதை சொன்ன விதம், அப்புறம் அந்த பேட் நட், உங்க பையன் பயப்பட்டுது எல்லாமே ரொம்ப நல்லா சொல்லியிருக்கீங்க.
எனக்கும் இந்த படம் பாக்கனும்னு ஆசையா இருக்கு.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நசரேயன் என்பையன் சின்னப்பையன் தானே அதனால் பயப்படறான்.. மத்தபடி இந்த படத்திலயே ஏன் அப்படி ஆனான்னு சொல்ல நான் சொன்னது என்னன்னா..அது இன்னும் சரியா செய்யாத பபிள்கம்மாம்.. கெட்டுப்போன பபிள்கம் மாதிரின்னு ... நாம சொன்னால்லாம் கேக்கற பிள்ளைங்களாங்க.. நாம சிறுமுயற்சி மட்டும் தான் செய்யலாம்..:)

-------------------------

வாங்க அமிர்தவர்ஷினி அம்மா.. நன்றி..பாருங்க, குட்டீஸோட உக்காந்து பாக்கும்போது ஜாலியா இருக்கும்..

sindhusubash said...

எங்க பொண்ணுக்கு(6 வயது) கூட இந்த படத்தை காட்டணும்..சரியான சாக்லேட் பைத்தியம். சாக்லேட் குளம் சூப்பர்!!!!!!!!!

butterfly Surya said...

சென்னையில் தமிழக அரசு உதவியுடன் சர்வதேச திரைப்பட விழா நடக்கிறது.

இதனை ICFA ( International Cine Appreciation Forum) ஏற்பாடு செய்துள்ளது.


10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் 36 நாடுகளைச் சேர்ந்த 120 படங்கள் பங்கேற்கின்றன.
சென்னையில் உள்ள பிலிம் சேம்பர், உட்லண்ட்ஸ், சிம்பொனி ஆகிய திரையரங்குகளில் தினசரி 4 முதல் 5 காட்சிகளாக இந்தப் படங்கள் காட்டப்படுகின்றன.
இதில் மகிழ்ச்சியான விஷயம் இந்த திரைப்பட விழா நடக்க தமிழக அரசு உதவி செய்துள்ளது. அதற்காக முதல்வர் கலைஞருக்கு நன்றி.

டிசம்பர் 17-ம் தேதி மாலை 6 மணிக்கு கலைவாணர் அரங்கில் இந்த விழா தொடங்குகிறது.உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் செய்தி விளம்பரத் துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொள்கின்றனர்.

உலக திரைப்பட வரலாற்றில் தனி முத்திரை பதித்த ஜப்பானிய இயக்குநர்
Keisuke Kinoshita விற்கும் நமது இயக்குநர் மேதை C.V. ஸ்ரீதர் அவர்களுக்கும் சிறப்பு அஞ்சலியுடன் திரைப்பட விழா துவங்குகிறது.

சிறப்புகள்:

போலந்திலிருந்து 5 திரைப்ப்டங்கள் திரையிடப்படும்.
பிரேசில், சீனா, டென்மார்க், பிரான்ஸ், ஜெர்மன், ஹங்கேரி, இஸ்ரேல், இத்தாலி,ஜ்ப்பான், மலேசியா மற்றும் பல நாட்டு மிகச்சிறந்த திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.
இந்தியன் பனோரமாவில் நமது மொழி படங்களான தமிழ், மராத்தி, மலையாளம், கன்னடம், அஸ்ஸாமி படங்களும் திரையிடப்படும்.
தமிழில் சுப்பிரமணியபுரம், அஞ்சாதே, பூ மற்றும் காஞ்சிபுரம் ஆகிய படங்கள் இந்த விழாவில் பங்கேற்கும் என தெரிகிறது.

தரமான உலக சினிமா ரசிகர்களுக்கு இது செம விருந்துதான்..


நான் கண்டிப்பா போறேன்.. சென்னை வாசிகளே " Don't Miss It"

ராமலக்ஷ்மி said...

இப்படி ஒரு படமே இருக்கிறதா? ஹான்சல் & க்ரேட்டல் கதையெல்லாம் படிக்காதையே நான் சின்ன வயதில் என் தம்பி தங்கைகள் அத்தை குழந்தைகளைச் சுற்றி அமர வைத்து சாக்லேட் குகை கதை சொல்லுவேன். ஏறத்தாழ இப்படத்தில் வர்ற மாதிரில்லாம் இருக்கும். அதில் வரும் கதாபாத்திரங்கள் யாவரும் கதை கேட்பவர்களாகவே இருப்பார்கள். திறந்த வாய் மூடாது அகன்ற கண் இமைக்காது கதை கேட்பார்கள். இப்போதும் என் அத்தை பிள்ளைகள் அதைச் சொல்லி சிலாகிப்பார்கள். இதுல ஹைலைட் என்னன்னா 2 வருடம் முன், திருமணம் ஆன புதிதில் என் தம்பி மனைவி திடீர்னு ‘அக்கா அக்கா எனக்கும் அந்த சாக்லேட் குகை கதை சொல்லுங்களேன்’ என்றதுதான்:))!

ராமலக்ஷ்மி said...

//கதையெல்லாம் படிக்காதையே //

அட நம்புங்கப்பா:)))!

குடுகுடுப்பை said...

இந்த படத்தை பாத்தா இதுல வருகிற எல்லா சாக்லேட்டயும் வாங்கித்தர சொல்வா என் பொண்ணு.

butterfly Surya said...

படம் பார்த்தாச்சு கயல்.. சூப்பர்.

நன்றிங்கோ...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சிந்து பாருங்க.. பாத்துக்கிட்டே அந்நேரம் அந்த குட்டி என்ன ஃபீல் செய்யறான்னு கவனிங்க அங்க தான்சுவாரசியம் இருக்கு..
----------------------------
வண்ணத்துபூச்சியார் நன்றிங்க..நான் தில்லியில் இருக்கேன் அதெல்லாம் போகமுடியாது.. இங்க நடக்கறது கூட போறதே இல்ல.. எங்க முடியுது.. :(

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ராமலக்ஷ்மி நீங்க சொன்னதுன்னா அது சூப்பராத்தான் இருக்கும்.. எங்கப்பாவும் இப்படி ஒரு அண்டங்காக்கா கதை வச்சிருந்தாங்க..எபப்வும் அவங்கள சுத்தி ஒரு கூட்ட ம் அந்தக்கதைகேக்கும் .. அது அவங்க ஒரிஜனலா சுத்தின ரீலாக்கும்.. :)
-------------------------------
குடுகுடுப்பை.. உங்க பொண்ணு உங்களுக்கு கப் வாங்கிக்குடுத்தாஇல்ல. சாக்லேட் நீங்க வாங்கிக்குடுங்க.. எல்லாம் ஒரு கிவ் அண்ட் டேக் பாலிஸி தான்..

கண்மணி/kanmani said...

முத்து படமும் அதைவிட உங்க பையனின் இரசிப்பையும் நீங்க எழுது இருந்த விதம் அருமை,.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி கண்மணி... :)

பாச மலர் / Paasa Malar said...

சாக்லேட் உலகம்..உங்கள் வர்ணனை மிகவும் ரசிக்க வைக்கிறது முத்து..ரசித்தேன்..