March 17, 2009

அல்மோரா சுற்றுலா -1

எவரெஸ்டில் கால் பதித்த டென்சிங்கின் வரலாறு , புது இடங்களை தேடி அலைந்து சுற்றுபவர்களைப்பற்றிய தொலைகாட்சி நிகழ்ச்சிகள் என்று படித்து பார்த்து ஆச்சரியமாய் இவங்களை எது இழுத்திருக்கும் .. என்ன உணர்ந்திருப்பார்கள் .. என்று நினைத்துக்கொள்வேன்.ஆனால் உண்மையில் ரசனையான விசயம் தான்.

தோழி கேட்டாங்க .. என்னங்க விடுமுறைக்கு அல்மோரா போனீங்களாமே.. அது ஒரு கிராமமாமில்ல..
ஆமாங்க மலையில் அது நகரம் தான்..ஆனா நமக்கு கிராமம் .
அங்க போய் என்ன பாத்தீங்க?
2வது நூற்றாண்டுல கட்டின கோயில்கள். மலைஏற்றம். யாருமற்ற பாதைகளில் நடைபயணம்.

அய்யோ அது ரிஸ்க் இல்லையா?

ஹ்ம் இருக்கலாம் ரிஸ்க் இல்லாத எது இருக்கு ? வாழ்க்கையில்..

யாருகூட போனீங்க வேறெ நண்பர்கள் யாரும் வந்தாங்களா?
இல்லை நாங்க நால்வரும் தான்.
என்னப்பா போரடிக்காதா?
இல்லை அங்க தான் நாங்க நால்வரும் ஜாலியா அக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் மாதிரி ஜாலியா குடும்பமா இருப்போம்..

சரி பஸ்ஸா ட்ரையினா ... எப்ப புக் செய்தீங்க சொல்லவே இல்லையே?

புக் எல்லாம் செய்யலைங்க... பேருந்து நிலையம் போனோம் பஸ் பிடிச்சு போயிட்டோம்.

அல்மோரா போகனும்ன்னு எப்படி தேர்ந்தெடுத்தீங்க? நெட்லயா பிடிச்சீங்க..
ஹ்ம் முன்னாடி நானித்தால் போனோமில்ல அப்ப அங்கருந்து ராணிகேத் அல்மோரா போகலாம்ன்னு சொல்வாங்க.. தொடர்ச்சியா போக அப்ப விடுமுறை இருக்காததால் இப்ப அல்மோரா இன்னொரு முறை ராணிகேத் போவோம்.
-----------------------
அல்மோரா போவதற்கு டில்லி ஆனந்த்விகார் இண்டர்ஸ்டேட் பேருந்து நிலையத்திலிருந்து இரவில் 8 மணிக்கு ஒன்றும் 9 மணிக்கு ஒன்றும் பேருந்துகிளம்புகிறது. நாங்கள் எட்டு மணிபேருந்திற்கு சென்றோம். வெகுசீக்கிரமே கிளம்பிவிட்டோம் என்றாலும் எக்கச்சக்க ட்ராபிக் ஜாம். மூன்று பேர் சீட்களை எல்லாம் ஒத்தையாட்கள் ஜன்னலைப்பிடித்து உட்கார்ந்து கொண்டார்கள்.எதுக்கா? ராத்திரி நீட்டிப்படுக்கத்தான்.

இரவு 2 மணிக்கு மேல் தான் மலைப்பயணம் ஆரம்பிக்கிறது. ஐந்து மணிக்கெல்லாம் அல்மோரா வந்து சேர்ந்துவிட்டோம். தில்லியில் வெயில் அடித்துக் கொளுத்தியது. மலை நெருங்க நெருங்க குளிராடைகள் ஒன்று ஒன்றாய் அணிந்தோம். தொப்பி , மப்ளர் , க்ளவுஸ்.
நடுக்கும் குளிர் இல்லைதான். அல்மோராவில் பேருந்து நிலையம் என்பது ஒரு பேருந்து நிறுத்தம் தான். அங்கிருந்து அந்த காலை நேரத்தில் குமாவுன் ஹாலிடே ஹோமுக்கு நடந்தோம.

முன்பே பேசி வைத்திருந்தபடி அறைஎடுத்தோம்.ஹாலிடே ஹோமிலேயே சமையற்காரர் செய்து தந்த ஆலுபராத்தா சாப்பிட்டுவிட்டு மீண்டும் நடை.மால் ரோட்டில் ( கடைத்தெருங்க)பேருந்து நிலைய எதிரில் இருக்கும் கோவிந்த் வல்லப் பந்த் ம்யூசியம் சென்றோம். அங்கே அல்மோராவின் மிகப்பழமையான கோயில்களின் புகைப்படங்களும் செய்திகளும் சிற்பங்களும், ஓவியங்களும் என இரண்டு சிறிய அறைகளும் .. ஒரு சிறிய அறையில் கோவிந்த் வல்லப் பந்த் ன் வரலாறும் இருந்தன.

அல்மோரா பேருந்து நிலையத்திலிருந்து மினி பஸ் ஒன்றில் ஜாகேஸ்வர் கோயிலிற்கு செல்வதற்காக ஏறிக்கொண்டோம். இந்த மலைக்காரர்களுக்கு இசைமேல் எக்கச்சக்க பிரியம் .அவர்கள் மொழியாகட்டும் ஹிந்தியாகட்டும் பாட்டு கேட்காமல் இருக்கவே மாட்டார்கள்.குமாவுன் மொழிப்பாடல்களோட இசை ரொம்ப நல்லா இருக்கும். ஆனால் அன்றைக்கு போட்ட எல்லா ஹிந்திப் பாட்டும் செம டப்பா பாடல்கள். நீ என் முதல் மழை.. நீ என் முதல் வாய்ப்புன்னோ இல்லாட்டி நீ யாருன்னா என் இதயம் யாருக்காக இறக்கின்றதோ அவள் /அவன் . என்று போய்க்கொண்டிருந்தது.


ஜாகேஸ்வர் கோயிலை ஜோதிர்லிங்கக்கோயில் என்றும் அவர்கள் சொல்கிறார்கள். அங்கே சிறுதும் பெரிதுமாக நூற்றுக்கும் மேற்பட்ட கோயில்கள் இருக்கின்றன. முக்கியமான சன்னிதியில் ம்ருத்யுஞ்சர் , கேதாரேஸ்வர் ,ஜாகேஸ்வர் என்று லிங்கங்கள் உள்ளன.
வழக்கம்போல காசைக்குடுத்தால் நீயே அபிஷேகம் பூஜை செய்யலாம் , அணையா விளக்குக்கு நெய் கொடு என்று பலதும் சொன்னார்கள்.. எங்களுக்கு முன்பு ஒரு குடும்பம் அவர்களே ஆரத்தி காட்டிக்கொண்டிருந்தார்கள்.
மதிய உணவாக ரொட்டி சாப்பிட்டுவிட்டு அல்மோரா செல்ல என்ன வழி என்று விசாரித்த போது .. தற்போது வண்டி எதுவும் கிடைக்காது வேண்டுமென்றால் 3 மைல் நடந்தால் கூட்டு ரோட்டில் ஜீப் கிடைக்கும் என்றார்கள்..

அழகான மலைப்பாதையில் , சரிவில் ஓடிய ஆற்றின் சலசலப்பின் ஓசையை ரசித்தபடி நடையைப் போட்டோம்.

39 comments:

அபி அப்பா said...

சூப்பரோ சூப்பர்!!!!

Deepa said...

//புக் எல்லாம் செய்யலைங்க... பேருந்து நிலையம் போனோம் பஸ் பிடிச்சு போயிட்டோம்.////
ஹ்ம்ம்.. குடுத்துவச்சவங்க...

மலைப்பாதையும்... ஜில்லுன்னு காற்றும் முகத்திலே அடிச்சிட்டு போகிரா மாதிரி ஒரு பீலிங்க்.... சூப்பர் பிரயாணம்.. சூப்பர் பதிவு

Iyappan Krishnan said...

தூள்

ஆயில்யன் said...

// அபி அப்பா said...

சூப்பரோ சூப்பர்!!!!//


படித்த பிறகே வந்த வார்த்தைகளாக இருக்கும் என்று அண்ணனின் மீது நம்பிக்கை கொண்டு ரிப்பிட்டேய்ய்ய்ய் போட்டுக்கிறேன் :))))

Suresh Kumar said...

அழகான மலைப்பாதையில் , சரிவில் ஓடிய ஆற்றின் சலசலப்பின் ஓசையை ரசித்தபடி நடையைப் போட்டோம்.//////////////////////

அருமையாக இருக்கிறது

வல்லிசிம்ஹன் said...

கயல் முத்து மூலம் இப்படி யாத்ரை போறதும் சுகம்தான். அவ்வளவு தெளிவா கூடவே போகிற மாதிரி எழுதறீங்க.
ஆமா,அந்தப் புதுப்பாட்டு ,இந்த அபிஷேக் பச்சன் பாடறது வைக்கலியா:) புறாவெல்லாம் பறக்குமே அந்தப் பாட்டு.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அபி அப்பா நன்றி..
------------------
தீபா நன்றி.. தில்லியில் ஆரம்பிச்சிட்ட வெயிலுக்கு அங்க இருந்த இதமான குளிர் ஆனந்தமா இருந்ததுப்பா..
--------------------
நன்றி ஜீவ்ஸ். :)

எம்.எம்.அப்துல்லா said...

அக்காவும் எனைய மாதிரி ஊர்சுற்றி ஆயிட்டீங்களா??

:)))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆயில்யன் . .. நம்புங்க நம்புங்க.. சின்னபிள்ளை அப்படித்தான் நம்பும்..
:)
-----------------------
நன்றி சுரேஷ் குமார்...
---------------------
வாங்க வல்லி .. எது மசக்கலி மடக்கலி யா..:)
அந்த எலிப்பாட்டு போடலை .. கைலாஷிங்கற பதிவர் இந்த ஏரியாப் பற்றி முன்பே அழகா பதிவிட்டிருக்கிறார். அடுத்த அல்மோரா பதிவில் நான் அந்த பதிவுக்கு லிங்க் தருகிறேன்..
------------------
அப்துல்லா நீங்க பிசினசா ஊர் சுற்றுரீங்க.. உங்கள மாதிரி ஆக முடியுமா நாங்க.. :)

ராமலக்ஷ்மி said...

//ழகான மலைப்பாதையில் , சரிவில் ஓடிய ஆற்றின் சலசலப்பின் ஓசையை ரசித்தபடி நடையைப் போட்டோம்.//

வல்லிம்மா சொன்னா மாதிரி கூடவே நாங்களும் நடை போட்டாற் போல் ஒரு உணர்வு. அருமையாய் எழுதியிருக்கிறீர்கள்.

அபி அப்பா said...

அம்மாடி எனக்கு ஒரு ஆசை அதை பின்னுட்டட்திலே சொல்லவா?

சரி சொல்லிடறேன்!
நான் நம்ம தங்க மச்சானுக்கு பொண்டாட்டியா பொறக்கனும்:-))))

sindhusubash said...

உங்க கூடவே வந்த பீலீங்.குளிர்ந்த காற்றும்,நீரோடையும் மனசை வருடுது.

சந்தனமுல்லை said...

படங்கள் நல்லாருக்கு! :-)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ராமலக்ஷ்மி நாளைக்கு வாங்க .. கோலு தேவி கோயிலுக்கு போகலாம்.. :)
---------------------
@ அபிஅப்பா.. :)

------------------
சிந்து வாங்க :) கூடவே வாங்க.. சரியா..
------------------
முல்லை நன்றிப்பா.. இன்னும் நிறையபடம் நாளை போடறேன்...

பாபு said...

அந்த கடைசி போட்டோ ரொம்ப நல்லா இருக்கு

அமுதா said...

படங்கள் அழகு... உங்கள் பதிவும் அருமை

KarthigaVasudevan said...

// அபி அப்பா said...

சூப்பரோ சூப்பர்!!!!//


படித்த பிறகே வந்த வார்த்தைகளாக இருக்கும் என்று அண்ணனின் மீது நம்பிக்கை கொண்டு ரிப்பிட்டேய்ய்ய்ய் போட்டுக்கிறேன் :))))

நானும் போட்டுக்கறேன் ரிப்பிட்டேய்ய்ய்ய் ...

ambi said...

ரொம்ப இயல்பா உங்க கூடவே பயணம் செய்யற மாதிரி இருக்கு. :)

ம்ம். மேல போவட்டும் வண்டி.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பாபு , அமுதா , டவுட் நன்றி நன்றி.. :)

--------------
அம்பி என்ன வண்டியா.. அதான் நடையைக் கட்டினோம்னு எழுதி இருக்கேன்ல.. அப்படியே ஜீப் வருதான்னு காதை தீட்டிக்கிட்டு வாங்க .. வந்தா தொத்திக்கலாம். :)

ஆயில்யன் said...

//ரிஸ்க் இல்லாத எது இருக்கு ? வாழ்க்கையில்..
//

மலைப்பக்கம் போனாலே தானா ஃபீலிங்க்ஸ் விட ஆரம்பிச்சிடறாங்க :)

ஆயில்யன் said...

//இன்னொரு முறை ராணிகேத் போவோம்//

ரைட்டு !

(எனக்கென்னமோ இது கேள்வி கேட்டவங்களுக்கு சொன்ன மாதிரி தெரியல! மாமா நோட் பண்ணிக்கோங்க பிளான் ரெடி...!)

ஆயில்யன் said...

//அழகான மலைப்பாதையில் , சரிவில் ஓடிய ஆற்றின் சலசலப்பின் ஓசையை ரசித்தபடி நடையைப் போட்டோம்.//

ஓ...! (சஸ்பென்ஸ் மிஸ்ஸிங்கோன்னு ஒரு ஃபீலிங்!)

Thamiz Priyan said...

அக்காவின் அடுத்த பயணக்கட்டுரை..வெரிகுட்! ப்ளாக்கில் போட வேண்டும் என்பதற்காகவே முன்னாடி விட்டு பின்னால் இருந்து போட்டோ எடுத்த மாதிரி இருக்கு.. ;-)))

கானா பிரபா said...

இந்த பயணக்கட்டுரையில் இன்னும் நிதானமா விபரமா சொல்றீங்க அருமை அடுத்த பதிவுக்காக காத்திருக்கேன்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆயில்யன் தலைவர் தான் இதெல்லாம் ப்ளான் செய்யறதுல எனக்கு முன்னோடியாகிட்டாங்க இப்பல்லாம்.. சஸ்பென்ஸ் எல்லாம் வைக்கத்தெரியலயே..
--------------------------
தமிழ்பிரியன் ஒவ்வொரு இடத்திலும் மூன்று முறை படம் எடுப்பேன்.. ஒன்று பெண்டெக்ஸ் ரோல் கேமிராவுக்காக ஒருமுறை.. வீடியோவாக கொஞ்சம் எடுத்துட்டு வீடியோவிலேயே ஆட்களை வச்சு ஒருமுறை எடுத்து ரிலேட்டிவ்ஸ்க்கு காட்ட.. ஆட்கள் இல்லாம ஒரு முறை அது ப்ளாக்கில் போட..

இந்த இடத்தை மட்டும் தனியா எடுக்கலை. சரின்னு இந்த படத்தை போட்டுட்டேன்.. :)

Anonymous said...

அழகான சுற்றுலா அக்கா...ம்ம் நம்மை நாமே ரிஜார்ஜ் பண்ணிக்கொள்ள இம்மாதிரியான சுற்றுலா அவசியமாய் தேவைப்படுது :-)

Thekkikattan|தெகா said...

பயங்கர ஏற்பாடோடத்தான் போயிருக்கீங்க... போற வார வழியில ஏதாவது பட்சிகள்(அட மிருக வகைங்க) தண்டுபட்டதாங்கிறதை சொல்லணும். ஏன்னா, இந்தப் பதிவுக்கு 1 ன்னு கொடுத்து வைச்சிருக்கிறதப் பார்த்தா தொடர் பதிவுதான்னு நிச்சயமாயிருச்சு :-( ...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆமா புனிதா.. இது ரீசார்ஜ் தான்.. முன்ன ஒரு விட்டு விடுதலையாகின்னு நானித்தால் பதிவு போட்டேன்.. :)
---------------------
தெகா மிருகம்ன்னா .. நாயும் ஆட்டுக்குட்டியும் தான் பாத்தேன். அதுல ஒரு நாயைப்பத்தி அடுத்த பதிவில் சொல்வேன்.. இந்த தனிப்பாதையில் கொஞ்சம் திகிலை கிளப்பியது அது தான்..

நசரேயன் said...

நல்லா இருக்கு.. பயணம் தொடரட்டும்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நசரேயன் நன்றி..

RAMYA said...

ரொம்ப அருமையா இருந்துச்சுங்க.

படங்கள் அனைத்தும் அருமையோ அருமை!!

RAMYA said...

ஒவ்வொரு இடமும் பார்த்து ரசித்ததை விளக்கமாக விளக்கிய உங்களுக்கு ஒரு சபாஷ்!!

கூடவே நடந்து வந்தது போல் ஒரு உணர்ச்சி மனதிலே ஏற்பட்டது.

நாகை சிவா said...

அருமையான பயணக் கட்டுரை :)

ramachandranusha(உஷா) said...

டிக்கு :-)
(போக வேண்டிய இடங்கள் பட்டியலில் சேர்த்தாச்சு)

☀நான் ஆதவன்☀ said...

கடைசி போட்டோ சூப்பர் மேடம். நிறைய படங்கள் இன்னும் எதிர்பார்க்கிறேன்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ரம்யா நன்றி.. இன்னும் கூட புகைப்படம் எடுத்திருக்கலாமோ என்றிருக்கிறது. பல இடங்களில் நான் காட்சியை ரசித்தோ அல்லது மகனை தூக்கவேண்டியோ இருந்து போட்டோ எடுக்கக்கூட மறந்திருக்கிறேன்.. :)
-----------------------------
நாகை சிவா.. இது எனக்கு ஞாபகம் வச்சிக்க ஒரு குறிப்பு..
:)
-------------------------------
உஷா வாங்க.. குறிச்சிக்குங்ககுறிச்சிக்குங்க.. அங்கருந்து ஒவ்வொரு 50 கிமீ ரும் பாக்க வேண்டிய இடமாத்தான் இருக்கு..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நான் ஆதவன்.. நன்றி.. எப்படியும் இன்னுமொரு மூன்று பதிவுகள் வரும்..

பனித்துளி சங்கர் said...

ஆஹா அருமை நேரில் சென்று பார்த்த ஒரு உணர்வு . பகிர்வுக்கு நன்றி !

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாசகன் சங்கர் நன்றிங்க..