photo : thanks to layoutsparks.com
ஒளிகளை நிறுத்தி
ஒலிகளையும் சேமித்திருக்கும்
வனம் சொன்ன உறுதிமொழி
நம்பத்தகுந்ததென கூடு சமைத்தேன்
எப்போதாவது நிகழும் பெருந்தீயினையும்
வனமே
பெருமழை துணையோடு தணித்து
தஞ்சமென்றது
இருளோடு கலந்து
நிசப்தங்களே பழகிக்கொண்டிருக்க
தன்னையே பதம் பார்க்கும்
உளியின் ஓசையோடு கொண்ட பேராசை
வனத்துக்கு வெளியே ஈர்த்தபடியே இருக்கிறது.
29 comments:
மீ த ஃபஷ்டு :)
/இருளோடு கலந்து
நிசப்தங்களே பழகிக்கொண்டிருக்க
தன்னையே பதம் பார்க்கும்
உளியின் ஓசையோடு கொண்ட பேராசை
வனத்துக்கு வெளியே ஈர்த்தபடியே இருக்கிறது.//
அசத்தல் அக்கா! இந்த வரிகள் ரொம்ப பிடிச்சுருக்குது..
கவிதாயிணி முத்துக்கா வாழ்க வாழ்க
வாவ்.. அக்கா.. சூப்பர் கவிதை.. கலக்கிட்டிங்க.. :)
அற்புதமான புகைப்படம்!!
வனம் அழகு!
அந்த வனத்தை படம் பிடிச்சது அதைவிட அழகு எல்லாவற்றிற்கும் மேலாக வனத்திற்கு ஏற்றார் போல் எழுதிய கவிதை சிகரம் வைத்தது போல் அமைந்து விட்டது.
அருமை நன்றாக இருந்தது.
நல்லா இருக்கு :) அடிக்கடி இப்படி எழுதுங்க.
யேய்.. யாருப்பா அது கோனார் நோட்ஸ் வேணுங்கறது இந்தக் கவிதைக்கு ??
நல்லா இருக்கு வரிகள்!
அடுத்த சூப்பர் கவிதை இது
மிக அருமையான கவிதை!!!
புகைப்படம் நீங்க பிடிச்சதா ???
அற்புதமான புகைப்படம்!!
//தன்னையே பதம் பார்க்கும்
உளியின் ஓசையோடு கொண்ட பேராசை
வனத்துக்கு வெளியே ஈர்த்தபடியே இருக்கிறது.//
இந்த வரிகளினால் ஈர்க்கப்பட்டேன். மிகவும் அருமை...
//சென்ஷி said...
கவிதாயிணி முத்துக்கா வாழ்க வாழ்க
///
மறுக்கா கூவிக்கிறேன் :)))
/./ Jeeves said...
நல்லா இருக்கு :) அடிக்கடி இப்படி எழுதுங்க.
யேய்.. யாருப்பா அது கோனார் நோட்ஸ் வேணுங்கறது இந்தக் கவிதைக்கு ??//
மீ த கேட்டீங்க் :))))
வனத்தை வெளியே இழுக்கும் உளியின் ஓசை??
புரியாவிட்டாலும் நல்லா இருக்கு முத்து.
நன்றி சென்ஷி :)
நன்றி சஞ்சய்,நன்றி தமிழ்பிரியன்,நன்றி ரம்யா :)
நன்றி ஜீவ்ஸ் ... நோட்ஸ் பிரிண்ட் செய்யல..:)
--------------------
நன்றி முல்லை , நன்றி அமித்தும்மா, நன்றி ஜீவன் .. (படம் உதவி கூகிள் )
செல்வநாயகி படம் நான் பிடிச்சதில்ல உதவின்னு ஒரு வரிசேத்துட்டேன்ப்பா.. :)
-------------------------
நன்றி க.பாலாஜி :)
நன்றி ஆயில்யன் :)
------------------------
நன்றி வல்லி புரியலயன்னாலும் நல்லா இருக்குன்னு சொன்னதுக்கு நன்றி. :)
யேய்.. யாருப்பா அது கோனார் நோட்ஸ் வேணுங்கறது இந்தக் கவிதைக்கு ??//
:))))
கவிதாயினிக்கு பாராட்டுக்கள்
//Jeeves said...
நல்லா இருக்கு :) அடிக்கடி இப்படி எழுதுங்க.
யேய்.. யாருப்பா அது கோனார் நோட்ஸ் வேணுங்கறது இந்தக் கவிதைக்கு ??
//
நான் கேட்க போறேன்னு முன்னாடியே ஜீவ்ஸ்க்கு தெரிஞ்சிருக்குக்கா :)
நல்ல கவிதை நல்ல புகைப்படம, நீண்ட நாட்களுக்கு பிறகு பார்க்கிறேன்
///முத்துலெட்சுமி/muthuletchumi said...
செல்வநாயகி படம் நான் பிடிச்சதில்ல உதவின்னு ஒரு வரிசேத்துட்டேன்ப்பா.. :)////
:(( நான் நீங்க எடுத்ததுன்னு நினைச்சு பாராட்டிட்டோமே?
கவிதை... ஹிஹிஹிஹி
கவிதாயிணி முத்துலட்சுமி அக்கா வாழ்க! வாழ்க!
தென்றல் , ஆதவன் ..நோட்ஸ் குடுத்தா கொஞ்ச நஞ்ச இருக்கறதும் சுத்தமா நல்லா இல்லாத மாதிரி தோணிடுமாம்.. :)
அட இவ்வளவுதானான்னு .. அதான் குடுக்கல.. :))
-----------------------------
ஆமா இசக்கிமுத்து நானும் அதிகம் எழுதல.. நீங்களும் பிசியா இருந்திருப்பீங்களோ ? :) நன்றி
-----------------------------
தமிழ்பிரியன் இந்த படத்தை கூகிளில் நான் தானே தேடினேன் ..அதனால் இருக்கட்டும் பாராட்டு...:)
//கூடு சமைத்தேன்//
அட குருவி கூடு கட்டுறதை இப்படி சமைக்கிறதுன்னு உணர்வுப் பூர்வமா சொல்ல முடியுமா... கவனிச்சிக்கிட்டே வாரேன் நானும் சீக்கிரமா இது மாதிரி எழுதக் கத்துக்கிடுவேன் போல...
நல்லா வந்துட்டே இருக்குங்கோவ்வ்வ்வ்....
Wow! Yakkov.. Kalakkal ponga. Ivlo naal aengay poyiruntheenga. Super!
குட் ;)
//உளியின் ஓசையோடு கொண்ட பேராசை//
முத்துலெட்சுமி மேடம்... கவிதை சூப்பர்... அதுவும் அந்த ஃபோட்டோ அதவிட சூப்பரு..
கவிதையில் வரும் மேலே குறிப்பிட்டுள்ள வரியில் ஏதும் "நுண்ணரசியல்" இல்லையே!?
தெகா இதெல்லாம் கவனிச்சு கத்துக்காதீங்க.. வேற நல்ல கவிதை படிச்சு கத்துக்குங்க.. :)
--------------------------
காட்டாறு என்னது இது ப்ளேட்டை திருப்பிப் போடறீங்க.... நான் இங்கயே தானே இருக்கேன் :)
----------------------------------
நன்றி கோபிநாத்:)
-------------------------------
உங்களுக்கு நன்றி சொல்றதா வேணாமா ஆர். கோபி :))
ஒளி ஊடுருவி செல்லும் படம் அழகு என்று நினைத்து கவிதையைப் படித்தால் ஒளிகளை நிறுத்தி என்று ஆரம்பிக்கிறது கவிதை.
கவிதை அழகு.
Post a Comment