October 4, 2011

காற்றலை இல்லை என்றால் (மனப்) பாட்டொலிக்கேட்பதில்லை






இந்த முறை கொலுவில் தீம் டாய்ஸ்டோரி.. சோனி டீவியில் இருந்து டாய்ஸ் எல்லாம் வெளியே வருகிறது.. எல்.ஜி டீவி தான் ந்னு குட்டிப்பையன் ஒரே அழுகை.. அது எப்படி? நாம ஒரு ‘சோனி’(க்)குடும்பம் ந்னு சொல்லி .. நானும் பொண்ணும் ஒரே பிடியா , ”சோனி எல் சிடி” டீவி மாடல் தான் செய்தோம். அதுல இருந்து பாருங்க ஒரு டினோசர் வெளிய வந்திட்டிருக்கு.. ட்யூப்லைட்.. டீவி ,ஷோகேஸ், பக்கத்துல சின்ன பியானோ, பூந்தொட்டி, எல்லாம் பெரிசு செய்து பார்த்துக்கோங்க..:)

முன்னமே வெளிய வந்த பொம்மையெல்லாம் நின்னிட்டிருக்கு.. சுண்டலை எல்லாம் போட்டோ எடுக்கல இந்த முறை.. இன்னிக்கு சுசியமும் , பட்டாணி சுண்டலும்.. எல்லாருக்கும் வச்சிக்கொடுத்தது டீ கப்ஸ் பீங்கானில்.. எல்லாத்தையும் படம் எடுத்துப்போட ரொம்ப சோம்பலாகிடுச்சு.... அம்மா ஸ்கைப்ல குழந்தைங்க பாடியதை எழுதி இருக்காங்க..நானும் ஊருல இருக்கும் கொலுவுக்கு திருப்புகழ் பாடினேன்.. அம்மா பூஜை செய்யும்போது பாடும் ‘ அன்னவாகன தேவி ’பாடினேன் அவங்க கூடவே..

அமரிக்காவில் இருக்கும் தம்பிக்கு ஃபேஸ்டைம் ல கொலுவைக்காண்பிச்சேன்.. அங்கருந்தே
நாத்தனார் மகளும் தம்பி மகனும் எங்கள் கொலுவுக்கு பாடினார்கள்.

”காற்றலை இல்லை என்றால் (மனப்) பாட்டொலிக்கேட்பதில்லை”

21 comments:

கோபிநாத் said...

சூப்பர் ;-)

IlayaDhasan said...

நல்ல கொலு.

என்னோட சிறுகதை ,நேரமிருந்தால் படிக்கவும்:
B L A C K D I A M O N D - சவால் சிறுகதைப் போட்டி -2011

ஹுஸைனம்மா said...

//‘சோனி’(க்)குடும்பம் //
:-)))))

//ரொம்ப சோம்பலாகிடுச்சு//
அதை நிரூபிச்சிட்டீங்க!! :-))))

//ட்யூப்லைட்..//
படத்துல ட்யூப்லைட்டக் காணோமே, ஒருவேளை திட்டுறீங்களோன்னு தோணினாலும், ச்சே.. ச்சே.. நீங்க நல்லவங்களாச்சே... னு, நல்லாத் தேடினேன், கிடைச்சிடுச்சு!! :-))))

ஆமினா said...

நல்ல தீம்

சாந்தி மாரியப்பன் said...

கொலு ஜூப்பரு :-))

சோனி எல்.சி.டி யில் சன் டிவி தெரியுதா :-))))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி கோபி :)

இளையதாசன் நன்றி :)

ஹுசைனம்மா முழுக்கவே என் ஐடியா தான்னாலும் அந்த ட்யூப்லைட் ல நான் கொஞ்சம் காலரைத் தூக்கிவிட்டுக்கிட்டேன்..:)

ஆமினா நன்றிப்பா:)

சாரல் எங்க வீட்டுல எந்த டீவியை வாங்கினாலும் அதுல கார்டூன் நெட்வொர்க்கோ இல்லாட்டி ஹங்காமவோ மட்டும் தான் தெரியுது :((

Yaathoramani.blogspot.com said...

குழந்தைகளுக்காகத்தான் கொலு
அவங்க விருப்பம்தான் முதல் சாய்ஸ்
அருமையாக இருக்கிறது
நவராத்திரி திரு நாள் நல்வாழ்த்துக்கள்

வெங்கட் நாகராஜ் said...

கொலு ரொம்ப நல்லா இருக்கு....

சோனி! டிவி... :)))

அடடா சுண்டல் மிஸ் பண்ணிட்டோமே... :(

Bibiliobibuli said...

கயல், கொலுவும் நீங்க பாட்டுகளை பகிர்ந்துகிட்டதும் ரசிச்சேன். Nice!!

ராமலக்ஷ்மி said...

அருமையா அழகா இருக்கு கொலு.

டாய்ஸ்டோரி செக்‌ஷனுக்குத் தனிப்பாராட்டு.

//ட்யூப்லைட்.. டீவி ,ஷோகேஸ், பக்கத்துல சின்ன பியானோ, பூந்தொட்டி, எல்லாம் பெரிசு செய்து பார்த்துக்கோங்க..:)//

பார்த்தாச்சு:)! ஹுஸைனம்மா வேற கிடைச்சுட்டுன்னு சொன்னாங்களா, 4,5 ஆவது படங்களில் ட்யூப் லைட்டை தேடு தேடெனத் தேடி பிறகு படம் 2-ல் கண்டு பிடிச்சிட்டேன்:)!

அப்புறம் பியானோ வாசிச்சவரு ஸ்டூலோடு விழுந்து விட்டார் போலயே. உட்கார வையுங்க:)!

ஆயில்யன் said...

கொலு சூப்பர்


டைட்டில் பார்த்துட்டு ஆஹா நிறைய வானொலி அல்லது பாடல்கள் இணையத்தில் இருப்பது பத்தின ரிப்போர்ட்டாக இருக்கும் நினைச்சேனாக்கும் :)

//அப்புறம் பியானோ வாசிச்சவரு ஸ்டூலோடு விழுந்து விட்டார் போலயே. உட்கார வையுங்க:)! //

LOL:)) அவுரு வாசிச்சு வாசிச்சு களைச்சுப்போயி கவுந்துட்டாருபோல :))

மழை said...

எதோ ஒரு கொலு ஹ்ம் :)

'பரிவை' சே.குமார் said...

கொலு அழகு...

படங்கள் எல்லாம் அழகாய் இருக்கு...

துளசி கோபால் said...

தீம் கொலு!!!! படா சூப்பர்!

நின்னு நிதானமா ரசிச்சதுலே நாள் போனதே தெரியலை!

விஜயதசமி வாழ்த்து(க்)கள்.

முகுந்த்; Amma said...

தீம் கொலு அருமைங்க..சோனி டிவி சூப்பரோ சூப்பர் போங்க..

ADHI VENKAT said...

இன்றைய வலைச்சரத்தில் ”இது எங்க ஏரியா, உள்ள வாங்க!”

உங்கள் வலைப்பக்கம் பற்றி எழுதி இருக்கிறேன். முடிந்தபோது வந்து பாருங்கள்.

நட்புடன்

ஆதி வெங்கட்.

Unknown said...

me the firstu..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

எதுல பர்ஸ்ட் சிவா? :)

Asiya Omar said...

கொலு அருமையாக இருக்கு.ரசித்து பார்த்தேன்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ரமணி .. நன்றிங்க :)

நன்றி வெங்கட் அடுத்தமுறை வந்துடுங்க..:)

நன்றி ரதி :)

பியானோ வாசிச்சவர்ன்னு யாரும் இல்ல.. பக்கத்துல இருந்த வேற டாய்ஸ் விழுந்து கிடக்கு ..ஸ்டூலும் சாஞ்சு இருக்கு..அதெல்லம் கவனிக்காம படம் எடுத்துட்டேன் ராமலக்‌ஷ்மி :)) உங்களுக்கு ஸ்கைப்ல காமிக்கும் போது தான் கடைசியில் அதை சரி செய்தேன்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆயில்யன்.. :) நன்றிப்பா.

மழை வாங்க.. நன்றி :)

குமார் நன்றி :)

துளசி நன்றி :))

முகுந்தம்மா பிசியம்மா..நன்றி :))

ஆதி கலக்குங்க.. நன்றிப்பா :)


ஆசியா நன்றிப்பா :)