February 28, 2007

வழி வழியாய்

ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு
கொண்டு செல்ல வேண்டிய விஷயங்களை மிகச்சரியாக கொண்டு சேர்க்கும் வாய்ப்புகள் பெண்களுக்கு சற்று அதிகமாகவே இருக்கிறது. தாயே முதல் ஆசிரியை ஆக இருக்கின்ற காரணத்தால் இது எளிதாகிறது.
ஆன்மீக நெறிகளும் பூஜைகளும் கடவுளின் அவதாரங்களைப்பற்றிய புராணங்களும் மற்றும் பண்டிகை விசேஷங்களும் பெண்களால் குழந்தைகளுக்கு போதிக்கப் படுகிறது.



வீர சிவாஜிக்கு அவர் தாய் மகாபாரதம் போன்ற கதைகளையும் விஷய ஞானத்தையும் போதித்ததே அவருடைய வெ ற்றிக்கு ஒரு காரணம் எனச் சொல்கிறார்கள். முன்னோர்களின் விஷய ஞானம் படித்து அறிந்து கொள்வது விட செவி வழி அதுவும் தாயின் மடியில் அமர்ந்து கனிவான மொழியில் கிடைக்கப் பெறும்போது மனதில் ஆழமாகப் பதியும்.



பெற்றவள் அறிவு பூர்வமாக சொல்லித்தருகையில் பாட்டி
கதைகள் சொல்லி பேரக்குழந்தைகளை ஒரு கனவு உலகத்துக்கு அழைத்துச் செல்கிறார்கள்... குழந்தைகள் புதிதாக கற்பனை வளத்தைப் பெறுகிறார்கள். மரம் வந்து பேசுமாம் ,கிளி வந்து பேசுமாம், ஏழு மலைகளும் ஏழு கடல்களுக்கும் அப்பால் இருக்கும் அபாயம் மிகுந்த பகுதிக்குக் கூடப் போய் வரும் கதாப்பாத்திரத்தில் ஒன்றிப்போய் குழந்தைகளுக்கு தைரியம் வருகிறது.



இப்புனைவு கதைகளில் குணநலம் கூட கற்றுத் தரப்படுகிறது. கடும் பயணத்தில் கதாப்பாத்திரத்தால் முன்பு உதவி பெற்ற எறும்பும் , மீனும் வந்து உதவும்.
முன்பு கடுமையாய் நடந்து கொண்ட கதாப்பாத்திரத்துக்கோ ஆபத்துகளில் மீள இப்படி உதவி எதுவும் கிடைக்காது. நட்பும் உதவியும் ஆபத்தில் உதவும் என்று கற்றுக் கொடுக்கப்படுகிறது.



இயற்கையை நேசிப்பதற்கு இயற்கையோடு ஒன்றிப் போவதற்கு கற்றுத்தந்தார்கள். வீட்டுத்தோட்டமும் பிறஉயிர் பேணுதலும் இயற்கையாய் பழகித் தந்தார்கள்.


உடல் நலத்திற்கு வழிவழியாய் வந்த அனுபவத்தில் இந்த உணவு இதற்கு நல்லது , இந்த கால நிலைக்கு உகந்தது இது என்று அறிந்து கடுக்காயிலிருந்து கஷாயம் வரை உபயோகிப்பது அறிந்திருப்பார்கள் பெண்கள்.



நான் நன்கறிந்த முதல் பெண் என் தாய்.
நான் என் தாய் வழி கற்றவை ஏராளம். சாந்தமும் நேர்மையும் அவர்களின் குணநலன். யாருக்கும் தீங்கு நினைத்தலும் நமக்கு கெடுதல் என்று சொல்வார்கள்.
ஆன்மீகமும் அறிவியலும் பொதுஅறிவும் விளையாட்டாய்
போதித்தார்கள்.



வாரம் ஒரு நாள் மௌனம் இருந்து ஆற்றலை சேமிப்பது அவர்கள் வழக்கம். யாரிடமும் தேவையற்ற வார்த்தைகளை உபயோகித்துப் பார்த்ததில்லை.


மனிதன் மனிதத்தின் மதிப்பை உணர்ந்து பிறர்க்குத்
துன்பமளிக்காமலும், இயன்ற அளவில் உதவி செய்து கொண்டும், எல்லோரும் இன்புற்று வாழ வேஎண்டுமென்று மன்மார வாழ்த்தி நல்லெண்ண அலைகளைப் பரப்பிக் கொண்டே இருக்க வேண்டும் எனும் மகரிஷியின் தத்துவங்களில் அவர்களுடைய ஈடுபாடும் உடற்பயிற்சியின் முக்கியத்துவமும் என்னை வியக்கவைக்கும். நேற்று பேச ஆரம்பித்திருக்கும் மழலையிடமிருந்து வயது முதிர்ந்தவர்கள் வரை வயது வித்தியாசம் இல்லாமல் அவர்கள் சமமாய் கொள்ளும் நட்பின் சாயல் தாய் வழியாய் எனக்கும் என்வழி மகளுக்கும்.


அன்பும் ,கருணையும், பெண்கள் கற்ற கல்வியும் அவளுக்கு மட்டுமல்லாது குடும்பத்திற்கும்.. அக்குடும்பத்து நபர்களால் சமூகத்திற்கும் வழிவழியாய் சென்றடையட்டும்.

12 comments:

Anonymous said...

//ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டிய விஷயங்களை மிகச்சரியாக கொண்டு சேர்க்கும் வாய்ப்புகள் பெண்களுக்கு சற்று அதிகமாகவே இருக்கிறது.//

இச்சமூகத்தில் தாயின் முக்கியத்துவத்தை மிகச் சரியாக சொல்லி இருக்கீங்க லட்சுமி.

//ஆன்மீக நெறிகளும் பூஜைகளும் கடவுளின் அவதாரங்களைப்பற்றிய புராணங்களும் மற்றும் பண்டிகை விசேஷங்களும் பெண்களால் குழந்தைகளுக்கு போதிக்கப் படுகிறது.//

தனக்கான முக்கியத்துவத்தை தாய் வீணடிப்பதையும் சரியாகச் சொல்லி இருக்கிறீர்கள். ஆன்மீகப்போர்வையில் தற்போது விளம்பரப்படுத்தப்படும் புதுப்புது சாமியார்களும் தாய்மார்களைக் குறிவைத்து பிரசங்கம் செய்வதும் அதனால்தான். அளவுக்கதிகமாக ஆன்மீகத்தைப் போதித்து குழந்தைகளின் உண்மையைத் தேடும் ஆர்வத்தை மட்டுப்படுத்துவது தாய்மார்கள் தங்களை அறியாமல் செய்யும் தவறாகவே நான் நினைக்கிறேன்.

//வீர சிவாஜிக்கு அவர் தாய் மகாபாரதம் போன்ற கதைகளையும் விஷய ஞானத்தையும் போதித்ததே அவருடைய வெற்றிக்கு ஒரு காரணம் எனச் சொல்கிறார்கள்.//

யார் அப்படிச் சொன்னது? மகாபாரதத்தை விற்றும், பேசியும் பிழைப்பவர்கள்தான் அப்படிச் சொல்லி இருப்பார்கள்.

தாய்மை என்பதை அன்பின் உருவமாகத்தான் அனைவருமே போற்றுகிறோம். குழந்தை கருவானது முதல் வளர்ந்து பள்ளிக்குச் செல்லும்வரை அனைத்து பொறுப்புகளையும் தாய்மீது திணிக்கும் முயற்சியாக, அதற்கு ஈடாக அவளை உருக்கமாக புகழ்ந்து தள்ளுகிறோம். ஆம், இந்த சூட்சுமம் உணராத தாய்மை உண்மையில் உன்னதமானது தான்!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\அளவுக்கதிகமாக ஆன்மீகத்தைப் போதித்து குழந்தைகளின் உண்மையைத் தேடும் ஆர்வத்தை மட்டுப்படுத்துவது தாய்மார்கள் தங்களை அறியாமல் செய்யும் தவறாகவே நான் நினைக்கிறேன்.//


கருத்துகளுக்கு நன்றி கவுதமன் .ஆனால்உங்கள் கருத்திலிருந்து நான்
மாறுபடுகிறேன். என் தாயைப் பற்றியே நான் மாடலாகக் கொண்டு இப்பதிவை எழுதி இருக்கிறேன்.
என் தாய் ஆன்மீகத்தை சொல்லிக்
கொடுத்தார்கள் அதனால் நானோ என்
தம்பியோ புது விஷயங்களையும்
உண்மையறியும் என்று நீங்கள் சொல்கிற
படியான தேடல்களோ இல்லாமல்
வளரவில்லை. என் தாயின் சமமான
பிறமத மதித்தலினால் மற்ற மதங்களைப்
பற்றியும் நாங்கள் படித்திருக்கிறோம்.
அதற்கும் அவர்கள் தான் வழிகாட்டி.
எங்கள் படிப்பு அலமாரியில் குரானும்
பைபிளும் உண்டு.புத்தனைப் பற்றியும்
உண்மை தேடலில் அறிவியல் பூர்வமான விஷயங்களைப் பற்றி க்
கூறும் வேதாத்திரி மகரிஷியின் கருத்துக்களையும் போதித்தவர் என் தாய்.www.vethathiri.org படித்துப் பாருங்கள். எதனையும் திணிக்கவில்லை அவர்களின் போதனை.


தாய்மையின் மீது எத்தனை சுமை
திணிக்கப்பட்டாலும் அதனை இயல்பாகவே கொண்ட பாசத்தாலும்
அன்பாலும் நிறைவேற்றுவது பெண்மை.
நான் இரண்டு குழந்தைகளுக்கு தாய்.
வேறு எந்த வேலையை என் மேல் திணிக்கப்பட்டதாக நினைத்தாலும்
என் குழந்தைகளுக்கு நானே முதல் ஆசிரியை யாக இருப்பதில் உண்மையில்
எனக்கு எந்தவிதமான சுமையும் இல்லை.

தமிழ்நதி said...

முத்துலட்சுமி,

பெண் என்பவள் தாயாக,ஆசிரியராக,மனைவியாக,மதிமந்திரியாக,சிநேகிதியாக,சமையற்காரியாக,பிள்ளைகளுக்கு நடுநிலைவாதியாக,கணக்காளராக எத்தனை வடிவம் எடுக்க வேண்டியிருக்கிறது ஒரு குடும்பத்தில். நினைத்துப் பார்த்தால் வியப்புத்தான். ஆனால், அதை பெரும்பாலானோர் நினைத்துப் பார்ப்பதில்லை என்பதுகூட ஒரு வியப்புத்தான் இல்லையா...?

உங்கள் தாயாரில் நீங்கள் வைத்திருக்கும் மதிப்பை உங்கள் குழந்தைகள் உங்கள் மீது நிச்சயம் வைப்பார்கள். வழிவழியாகத் தொடர்வதே மதிப்பும் அன்பும்.

துளசி கோபால் said...

தாயில்லாமல் நான் இல்லை
தானே எவரும் பிறந்ததில்லை

கோபிநாத் said...

அருமையான பதிவு...

\\தாயே முதல் ஆசிரியை ஆக இருக்கின்ற காரணத்தால் இது எளிதாகிறது.\\

உண்மை...உண்மை..

\\வும் தாயின் மடியில் அமர்ந்து கனிவான மொழியில் கிடைக்கப் பெறும்போது மனதில் ஆழமாகப் பதியும்.\\

இந்த அனுபவங்களை நினைத்து பார்க்கும் போது என் கண்கள் கலங்குகின்றன. என் அம்மாவும் அருமையாக கதை சொல்வாள்..ம்ம்ம....இப்ப போன்னுல வேறும் எப்படி இருக்க? எப்படி இருக்க தான்...

ரொம்ப நன்றி..

அருமையான பதிவு...

கோபிநாத் said...

ஆமா...அது என்ன
"உலக சினிமா (1) & உலகசினிமா (4)"
இந்த ரெண்டுத்துக்கும் என்ன வித்தியாசம்???

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\தமிழ்நதி said... உங்கள் தாயாரில் நீங்கள் வைத்திருக்கும் மதிப்பை உங்கள் குழந்தைகள் உங்கள் மீது நிச்சயம் வைப்பார்கள். வழிவழியாகத் தொடர்வதே மதிப்பும் அன்பும்.//


நன்றி தமிழ்நதி, குழந்தைகள்
என்மேல் மதிப்பு வைக்கும்படியான அம்மாவாக இருக்க
எல்லா முயற்சிகளையும்
என்னால் இயன்றவரை
செய்கிறேன். இருந்தாலும்
மனதில் ஒரு குறைதான்.
அம்மாவை மிஞ்ச முடியுமோ
என்று.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி துளசி
ரொம்ப நல்ல பாட்டு
அந்த காலத்தில் தான்
இப்படி எல்லாம்
அருமையான பாட்டுக்கள்
படத்துக்கு படம் வரும்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கோபிநாத் , எப்படி இருக்க எப்படி இருக்கன்னு கேக்கறது அம்மாதானே
உங்க மேல அக்கறையால
தானே கேக்கறாங்க.
போய் பக்கத்துல ஒக்காந்து
நிறைய பேசிட்டு வாங்களேன்.
இல்லன்னா...ஒரு கடிதம்
கையால் எழுதுங்க அதுக்கு
இருக்கும் மதிப்பே தனி.
நினைத்து நினைத்து மகிழ்வார்கள்.


அப்புறம் உலக சினிமா
உலகசினிமா ரெண்டுத்துக்கும் வித்தியாசம் நடுவில்
ஒரு ஸ்பேஸ் தான் :-)
வகை எழுதும் போது தெரியாமல்
செய்த தப்பை சுட்டி காட்டியதற்கு
நன்றி .சரி செய்து விடுகிறேன்.

Arun's Thoughts said...

வணக்கம்,

உங்கள் ஆலோசனைக்கு நன்றி, நான் இப்பொழுது மறுமொழியை சரி செய்துள்ளேன். நீங்கள் உங்கள் வீட்டில் திருமணஞ்சேரி கோவிலுக்கு செல்வது பற்றி சந்தோஷம்


அன்புத்தோழி

மங்கை said...

arumaiyaana pathivu latchumi..

avanga ellaam appidi irundhathunaala thaan, innaikku avangala paarthukurathukku namma illattiyum...neriya sonthangal pakkathula irukkaanga...antha porumaiyum..pakirnthu unnuthalum
hmmm...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நிச்சயமாய் மங்கை. அவர்களுக்கு நிறைய பேர் இருக்காங்க. அன்பு கொடுப்பதை விட அதிகமாக திருப்பிக் கொடுக்கும்.