பலவருடங்களாக மொகல் கார்டன் போக ஆசைப்பட்டு தட்டிக்கொண்டே இருந்தது. மொகல் கார்டன் வருடத்தில் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் குறிப்பிட்ட சில நாட்களுக்கு பொதுமக்களுக்கு திறந்து விடப்படும். இந்த பின்னூட்டம் வந்த நேரம் நாங்கள் நிஜமாகவே அங்கு போக திட்டம் போட்டுக் கொண்டிருந்தோம். மார்ச் மாதம் வரும் விருந்தினர்களை அங்கு அழைத்துப் போவதாக திட்டமிட்டோம்.
கையில் எதுவும் எடுத்துச் செல்ல அனுமதி இருக்காது என்பதால் கேமரா எடுத்துச் செல்லவில்லை.
நார்த் அவென்யு அருகில் இருந்த செக்யூரிடி போலிஸிடம் மொகல் கார்டன் எப்படி செல்லவேண்டும் என்று கேட்டோம். சிரித்தபடியே ஒரு பேப்பரில் அனுமதி சீட்டு எழுதி "அங்கே தான் அனுப்புகிறோம் உங்களை" என்றபடி தடுப்புகளை அகற்றி உள்ளே அனுமதித்தார்.ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி வரிசைகள் அமைத்து பாதுகாப்பு சோதனைகளை நடத்திக்கொண்டிருந்தார்கள் .சந்தேகத்தோடே கையில் கொண்டு சென்றிருந்த தண்ணீர் பாட்டிலை நினைத்தது போலவே வாங்கி பக்கத்தில் இருந்த சுவற்றின் மேல் வைத்திருக்கிறோம் வரும்போது இருந்தால் எடுத்துக்கொள்ளுங்கள் என்றார் . உள்ளேயே மினரல் கேன் தண்ணீர் கிடைக்கிறது என்று சொன்னார்கள். உள்ளே நுழைவாசலிலேயே பெரிய பெரிய மினரல் கேன்கள் சாய்த்து வைக்கப்பட்டு இருந்தது.
தற்காலிகமாக பைபர் கழிப்பறைகள் வைக்கப்பட்டு பச்சை நிறத்துணிகள் கொண்டு தனிப்பிரிவு வேறு செய்திருந்தனர்.
முதலில் வந்தது மூலிகைத் தோட்டம் . இது நம்ம ஊரு கலாம் புதிதாக ஏற்படுத்தியது . அன்று நல்ல வெயிலும் இல்லாமல் குளிரும் இல்லாமல் நன்றாக இருந்தது . மெல்லிய தென்றலில் மூலிகை மணம் வீசியது . மூலிகையின் அறிவியல் பெயருடன் அது எதற்காக உபயோகிக்கப் படுகிறது என்றும் எழுதிய பெயர்பலகைகள் இருந்தது. துளசி , கருந்துளசி என்று ஆரம்பித்து அஸ்வகந்தா , கற்றாழை , மிண்ட் வகையறாக்களுடன் பெரிய தோட்டம் விரிந்து இருந்தது .
மகள் "நல்லாத்தான் வளத்துருக்கார் கலாம் " என்று சான்றிதழ் வழங்கினாள். இந்த மூலிகை வரிசைகளைப் பிரிக்கும் வகையில் மஞ்சளும் வெள்ளையுமான பூக்களின் வரிசைகள் கொண்டு கட்டம் கட்டி இருந்தார்கள் . கண்ணைப் பறித்தன மலர்கள். அடுத்ததாக கோழி வான்கோழி என்று ஆரம்பித்து முயல் , ஆமை வரை அங்கே வளர்க்கப்படுவை களின் கூண்டுகள் .
மிகப் பெரிய ஒரு ஆலமரத்தின் கீழ் ஆலமரம் எப்படி எல்லாருக்கும் நிழல் கொடுக்கிறது , சிறு உயிருக்கும் உதவியாக இருக்கிறது என்பதானதும் சில கேள்விகளுமான திரு கலாம் எழுதிய அருமையான கவிதை ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் வைக்கப்பட்டிருந்தது. அடுத்ததாக இசை நீருற்று. முதலில் சிதார் மெலிதாக ஒலிக்க அதற்கேற்றார்ப் போல் ஆடிக்கொண்டிருந்தன நீருற்றுக்கள். காற்று பலமாக வீசியபோதெல்லாம் தண்ணீர் புகையைப் போல் காட்சியளித்தது. சாரல் எங்கள் மேலும் விழுந்தது. அங்கே அமர்ந்து பார்க்க நாற்காலிகளும் நிழலும் அமைத்து இருந்தார்கள்.(லவுன்ச்) .
ஷேடின்ங் செய்தது போல இதழின் இருவண்ணங்கள்.. "பெயிண்டிங் செய்த பூப்போல இருக்குதுல்ல"
முதலில் பெயிண்டிங் பூவைப் பார்த்ததால் இப்படி சொல்கிறோம். இதைப் பார்த்துத்தானே அவங்க பெயிண்டிங் செய்திருப்பார்கள்.
பெரிய பெரிய டாலியாக்கள். "இதை வைத்துக்கொள்ள ஒரு தலை இல்லை 4 தலை வேணும்மா" ..மகள்.வெல்வெட் போன்ற பூக்கள் பெரிய பெரிய ரோஜாக்கள் , அடிக்கும் ஆரஞ்சில் பூக்கள் என்று பார்க்கப்பார்க்க ஆசையாக இருந்தது.
ஒரு அரசியைப்போல நினைத்துக் கொண்டால் அரண்மனை தோட்டத்தில் உலவுவது போல இருக்கும். அங்கங்கே இருக்கும் சிமெண்ட் இருக்கைகள் அரண்மனை இருக்கைபோலத்தான் இருந்தது ஆனால் அமர்வதற்கு அனுமதி இல்லை. இப்படி ஒரு இடத்தில் அமைதியாக புத்தகம் படிக்க கிடைத்தால் என்று மனம் ஏங்கியது. ஆங்காங்கே இருக்கும் நீர் ஊற்றுக்களை சுத்தம் செய்தவண்ணம் இருப்பதால் தெளிந்த நீராக இருக்கிறது.
போன்சாய் மரங்கள்.. சிறு சிறு மொசம்பி ஆரஞ்சு பழங்களைப் பார்க்க ஆச்சரியமாக இருந்தது. சிறுவர்கள் குழு ஒன்று பேசிய பேச்சுக்கள் ..
டேய் இது என்னடா 87 ல இருந்து இன்னமும் இப்படி சின்னதா இருக்கும் வளரவே இல்லையே...
இது நான் பிறந்த வருடம் 99 ..என் மரம்..அது உன்னோடது 98 சரியா..
காக்டெஸ் வகையறாக்கள்... கூட இருந்தது.
அங்கிருந்து வெளியேற மனமே இல்லை.
வெளியே வரும் போது மகள் இவ்வளவு இடம் ஒருவருக்கு மட்டுமா ? என்று கேட்டாள்.
அப்படி அந்த காலத்தில் செய்திருக்கிறார்கள்.ஆனால் இப்போது கலாம் அவர்கள் இருக்கும் அத்தனை அறைகளையும் தினமும் சுத்தம் செய்து பராமரிப்பது அதிக செலவு என்று சிலவற்றை உபயோகிப்பதைக் குறைக்க முயற்சி எடுத்திருப்பதாக கேள்விப்பட்டதை விளக்கினேன்.பெரிதானவுடன் நானும் ஒரு ஜனாதிபதியாக ஆகலாம் என நினைக்கிறேன் என்றாள் .. சரிதான் முயற்சி செய்யலாமே என்றோம்.
The Mughal gardens are open to the public in February-March every year. Visitors are allowed entry to the garden from 9.30 A.M. till 2.30 P.M. on all days except Mondays. The gardens may remain closed on other days also in case of a function in the Mughal gardens or during the visit of a VVIP during the said period. The dates are made known to the public through various media. The entry and exit into the gardens is regulated from Gate No. 35 of the President's Estate, which is located near the North Avenue, at the western end of the Church Road.
மேலும் விவரங்களுக்கு இங்கே பார்க்கலாம்
அங்கிருந்து வெளியேற மனமே இல்லை.
வெளியே வரும் போது மகள் இவ்வளவு இடம் ஒருவருக்கு மட்டுமா ? என்று கேட்டாள்.
அப்படி அந்த காலத்தில் செய்திருக்கிறார்கள்.ஆனால் இப்போது கலாம் அவர்கள் இருக்கும் அத்தனை அறைகளையும் தினமும் சுத்தம் செய்து பராமரிப்பது அதிக செலவு என்று சிலவற்றை உபயோகிப்பதைக் குறைக்க முயற்சி எடுத்திருப்பதாக கேள்விப்பட்டதை விளக்கினேன்.பெரிதானவுடன் நானும் ஒரு ஜனாதிபதியாக ஆகலாம் என நினைக்கிறேன் என்றாள் .. சரிதான் முயற்சி செய்யலாமே என்றோம்.
The Mughal gardens are open to the public in February-March every year. Visitors are allowed entry to the garden from 9.30 A.M. till 2.30 P.M. on all days except Mondays. The gardens may remain closed on other days also in case of a function in the Mughal gardens or during the visit of a VVIP during the said period. The dates are made known to the public through various media. The entry and exit into the gardens is regulated from Gate No. 35 of the President's Estate, which is located near the North Avenue, at the western end of the Church Road.
மேலும் விவரங்களுக்கு இங்கே பார்க்கலாம்
23 comments:
அழகான கட்டுரை.
வாழ்த்துக்கள்... நானும் போக ஆசைப்படுவதுண்டு.. ஆனால் அதை சீக்கிரம் மறந்தும் விடுவதுண்டு.
சென்ஷி
////நார்த் அவென்யு அருகில் இருந்த செக்யூரிடி போலிஸிடம் மொகல் கார்டன் எப்படி செல்லவேண்டும் என்று கேட்டோம். சிரித்தபடியே ஒரு பேப்பரில் அனுமதி சீட்டு எழுதி ////
ப்ரிண்ட் அவுட் எடுத்துப்போயிருந்தா கையால எழுதியது மிச்சமாகி இருக்கும் இல்லையா...
யாம் அனானியாக பின்னூட்டம் போட்ட நேரம் இந்த சிறப்பான அனுபவம். நன்றாக படங்களுடன் படைத்திருக்கிறீர்கள்
வாழ்த்துக்கள்..
அதே அனானி.
டெல்லியை விட்டு கிளம்பும் முன்பு இங்கு போக ஒரு சான்ஸ் கிடைத்தது.
பார்க்கவேண்டிய இடங்களில் இதுவும் ஒன்று.இயற்கை விரும்பிகள் மிகவும் சந்தோஷப்படுவார்கள்.
காமிரா எடுத்துப் போகாமலே எப்படி இத்தனை அழகான படங்கள்?
சென்ஷி கண்டிப்பா போய்ட்டுவாங்க.
மனசு அப்படியே சந்தோஷமா சின்னக்குழந்தையப்போல லேசாகி சந்தோஷமா உணர்வீங்க. அதப்பாரேன் இதப்பாரேன்னு சொல்ல ஒரு நண்பரைக்கூட்டிப் போங்க .
அதே அனானி யா..வாங்க வாங்க ..
உங்க வாக்கு பலிச்சுடுச்சு.
பிரிண்டர் வேலை செய்யமாட்டேங்குது.
அது மட்டும் இல்ல எல்லாருக்குமே இந்த சீசன்ல அனுமதிஇலவசம் தானே
அதான் எடுத்துட்டு போகல.
உண்மைதான் குமார்ஜி ...அதுவும் புது மூலிகைத் தோட்டம் போட்டுருக்கார் பாருங்க நம்ம கலாம்
அருமை...அழிஞ்சு போகாம இதெல்லாம் நம்ம நாட்டோடதுன்னு பெருமையா பாதுகாக்கனும்.
இசை ஊற்றுக்கு ஐலவ் மை இண்டியா பாட்டு பாடுச்சு..மெய்சிலிர்த்துப் போச்சு. கலாம் நம்ம தமிழர்ன்னு ஒரு கர்வம் வேற.
பொன்ஸ்...போட்டோ எடுக்க நமக்கு
அங்கே தானே அனுமதி இல்ல,
கூகுள் ல இருந்து எடுக்கலாமே :))
நல்ல கட்டுரை. ஆக அந்த அனானி அனானிதானா? உங்க சுடர் பதிவுலதான் இப்படி ஒரு அழைப்பு காலாம் அவர்களிடமிருந்து வந்தது தெறிந்தது. நான் கூட அவர்தான்னு நம்பிட்டேன். எப்படியோ ஒரு நல்ல பதிவு கிடைத்தது!!
madam article super..iam new to delhi..so i missed the chance to visit mugal garden..but next year i wont miss it.also unga pira pathivugalum nalla iruku..who are the other persons in delhi..
gopinath g (feelgopi@gmail.com)
அட என்ன அபி அப்பா என்னயெல்லாம் கலாம் கூப்பிடுவாரா ?
நீங்க வேற.
ஆனா என்னைக்காவது அவரப்பார்த்துட்டு பதிவு போட்டாலும்
போடுவேன்.
தனியா விமானத்தில போக பயந்துட்டு
ஏறின நான் காக்பிட் போய் குழந்தைக்கு பைலட்ட அறிமுகப்படுத்தினவளாக்கும் நான்.
நன்றி கோபி கண்டிப்பா பாருங்க. நல்லா இருந்தது . எனக்கு தெரிஞ்சு சென்ஷீ , மங்கை தில்லியில் இருக்காங்க. இன்னும் இருப்பாங்க நான் வலைப்பதிவுக்கு புதிது தான். அதான் தெரியலை.
//தனியா விமானத்தில போக பயந்துட்டு
ஏறின நான் காக்பிட் போய் குழந்தைக்கு பைலட்ட அறிமுகப்படுத்தினவளாக்கும் நான்.//
இந்த தைரியம்தான் வேண்டும். உங்க தன்நம்பிக்கை எல்லா பெண்களுக்கும் இருந்தா பிறகு எதுக்கு ஆணீயம்,பெண்ணீயம் விவாதமெல்லாம். குட்.
அழகாக எழுதியிருக்கீங்க...
புகைப்படங்களும் அருமை...பார்க்க வேண்டும் போல் இருக்கிறது.
நல்லா இருக்கு லட்சுமி....
போகனும்னு ஆசையை தூண்டி விட்டுடீங்க..ஹ்ம்ம்ம்...போகனும்
//பெரிதானவுடன் நானும் ஒரு ஜனாதிபதியாக ஆகலாம் என நினைக்கிறேன் என்றாள் .. சரிதான் முயற்சி செய்யலாமே என்றோம்//
ஆஹா....நான் தான் தோட்டக்காரி
:-))..இப்பவே அப்ளிகேஷன் போடறேன்...
நன்றி கோபிநாத் , நன்றி மங்கை.
நீங்கள்ளாம் பாக்க ஆசைப்படுவீங்கன்னு தானே விவரமெல்லாம் குடுத்துருக்கேன்.
பாருங்க பாருங்க.
மங்கை ...அது என்னா நீங்க தான் ப்ரைம் மினிஸ்டரே ஆகப்போறீங்க.
அப்புறம் போய் தோட்டக்காரின்னு சொல்லிகிட்டு..... என்ன நீங்க.ம்.
அது மெயின்...
இது பார்ட் டைம் ஜாப்..:-))...
(ஜூனியர் மனசு வச்சாலும் நீங்க விட மாட்டீங்க போல இருக்கே)
நல்லா இருக்கு லட்சுமி.
கலாமே கூப்பிட்டு இருக்கார்னா பெரிய வி.ஐ.பி தான் நீங்க.
படங்கள் அருமையா இருக்கு அதே சமயம் எளிமையான உங்க எழுத்தும்.
அன்புடன்
தம்பி
மொஹல் கார்டன்லே என்னையும் பார்த்துருக்கீங்க, எங்க
அக்காவையும் பார்த்துருக்கீங்க:-)
அதானே மூலிகைன்னதும் நாந்தானே மொதல்லே இருக்கணும்.
அந்த பெயிண்டிங் பூவுக்கு நான் இங்கே 'நாய் மூஞ்சி'ன்னு பேர் வச்சுட்டேன்.
ஒரு வித நாயின் முகம்போல இருக்கு பாருங்க கண் மூக்கெல்லாம்:-))))
இங்கே அநேகமா இது பார்டரிங் ப்ளாண்ட் தான்.
Pansy ன்னு இங்கே அதைச் சொல்றாங்க.
எதை?
நாய் மூஞ்சியைத்தான்:-)
\\செல்வநாயகி said...
நல்லா இருக்கு லட்சுமி. //
நன்றி செல்வநாயகி.
*****************
\\ தம்பி said...
கலாமே கூப்பிட்டு இருக்கார்னா பெரிய வி.ஐ.பி தான் நீங்க.//
என்ன தம்பி விளையாட்டுக்கு
தானே இப்படி எழுதி இருக்கீங்க
உண்மையில் பதிவர் நண்பர் தானே
கூப்பிட்டு இருந்தார் கலாம் மாதிரி.
சரியா படிச்சீங்க தானே.
துளசி ,ஆமா மூலிகைன்னா நீங்கதானே
முதலில் .
pancy நல்லா இருக்கு பேர் ஃபான்ஸியா.
Post a Comment