April 18, 2007

வாழ்வென்பது வண்ணங்கள்

ரசித்த திரைப்படங்களின் வரிசையில் இன்னுமொரு இரானிய திரைப்படம். கப்பா..gabbeh . ஆரம்பத்திலிருந்தே படத்தின் வண்ணம் மனதை அள்ளிக்கொண்டு போனது. கதாநாயகியின் அந்த நீல உடை அவ்வளவு அழகு. கதையில் முதலில் வரும் முதிர்ந்த தம்பதியின் பேச்சுக்களும் , அந்த வயதான பெண்மணியின் உடையும் கதாநாயகியின் உடையும் ஒரே மாதிரி இருப்பது என்று எடுக்கப்பட்ட கதை. எடுக்கப்பட்ட விதம் வித்தியாசமானது.




இரானின் நாடோடிக் குடும்பத்தில் ஆடுகளை மேய்ப்பதும்
அதன் கம்பளியெடுத்து செய்யப்படும் ஒரு வகையான கப்பா எனப்படும் விரிப்பு செய்வதும் கதையின் ஓட்டத்தோடு ஓட்டமாய் நமக்கும் புரிகிறது. ஏதோ நாமும் அந்தக் கூட்டத்தில் இருப்பது போன்றதொரு உணர்வு . வண்ணங்களுக்காக மலர்களைத் தேடி அலைகிறார்கள். மலர்களை வெந்நீரில் போட்டு சாயமிட்டு விரிப்புகளை செய்கிறார்கள்.

கதாநாகியின் பெயரும் கப்பா தான் அவள் அந்த முதியவர்களின் விரிப்பிலிருந்து வெளிப்பட்டு அவளுடைய கதையைச் சொல்லுகிறாள். முதியவர்களோடு பேசும் இளம் கப்பா ஒரு கற்பனையே.முதியவரின் பேச்சு அடிக்கடி அப்பெண்ணை அழகாயிருக்கிறாய் உன்னைக் கல்யாணம் செய்யப்போகிறேன்.. உண்மையைச்சொல் என்னைக் காதலிக்கிறாய் இல்லையா? என்று போக வயதான பெண்மணியின் சின்ன ப் பொறாமைக்கோபம் என்று போகும் மிக மெல்லிய காதல் கதை.


கப்பா ஒரு குதிரை மேல் வருபவனை விரும்புகிறாள். அவன் இக்கூட்டத்தைத் தொடர்ந்து வந்து ஓநாயைப் போல சத்தமிடும் போதெல்லாம் கப்பா திரும்பிப் பார்த்து சிரிப்பது ஒரு கவிதையான காட்சி. அவள் தந்தை திருமணத்தை குடும்பத்தில் நிகழும் பிறப்பு இறப்பு திருமணம் என்ற காரணங்களால் தள்ளிப்போட்டிருப்பார். அவளாகச் சென்றால் துப்பாக்கியால்
சுட்டுவிடுவார் என்று காரணம் கூறுகிறாள். குதிரைமேல் அவளும் காதலனும் இருப்பது போன்றதொரு படம் வரைந்த விரிப்பை தோள் மேல் சுமந்தபடி அவள் ஒவ்வொரு இடமாக மாறும்போதும் அவன் பின் தொடர்ந்தவண்ணமிருப்பான்.

காலையில் பெண்களும் இரவில் ஆண்களும் காவல் காக்க குடும்பத்தின் மூத்தமகளாக பொறுப்புகளுக்கு நடுவில் தத்தளிக்கிறாள்.

அவளின் சித்தப்பாவாக வருபவர் நிறங்களைப்பற்றி நடமாடும் நாடோடிக் குழந்தைகளின் பள்ளி ஒன்றில் சொல்லிக்கொடுக்கும் காட்சியும் அருமையானது.
ஃப்ரேமுக்கு வெளியே கையைக் கொண்டு சென்று அவர் நிறங்களை வானத்திலிருந்து மலர் தோட்டத்தில் இருந்து எடுப்பதும் அவற்றின் சேர்க்கை அளிக்கும் நிறங்களைப்பற்றியும் விளக்குவதும் அழகு.

அவர் திருமணத்தைக் காரணம் காட்டி ஒருமுறை கப்பா தடுக்கப்படுகிறாள். அவர் ஒரு பாடகியைக் கல்யாணம் செய்யவேண்டும் என்கிறார். ஊரில் எல்லாரும் அழகாயிருக்கிறார்கள் ஆனால் அவர் நினைப்பது போல் யாரும் இல்லையாம். மற்றொரு ஊரில் அப்படி ஒரு பெண்ணைக் கண்டதும் அவர் கேட்கிறார் நீ பாடிய பாடல் நன்றாக இருக்கிறது . யாரை நினைத்து எழுதினாய் ? அவள் அப்படி யாரும் இல்லையென்றதும் சரி நான் சரியாக இருந்தால் என்னைத் திருமணம் செய்து கொள்வாயா என்று கேட்கிறார் .

அப்போது அவள் கோபமாக இருந்தால் என்னை என்ன செய்வாய் என்று ஒரு கேள்வி கேட்கிறாள் பாருங்கள் .
அந்த வயதான சித்தப்பாவுக்குள் இருக்கும் ரொமண்டிக் இளைஞன் ஒரு கவிதையைப்பாடி அவளை சம்மதிக்க வைக்கிறார் .




அதன் பிறகு அவள் தாயின் பிரசவம் காரணமாகி தடுக்கிறது.

கடைசியில் ஒரு தருணத்தில் தப்பித்து செல்லும் கப்பாவையும் குதிரைக்காரனையும் தந்தை பின் தொடர்ந்து செல்கிறார் . துப்பாக்கி இரண்டு முறை முழங்குகிறது. வரும்போது அவர் கப்பாவின் விரிப்பை எடுத்து வந்து கூட்டத்தின் முன் போடுகிறார்.

முதியபெண் சொல்கிறாள் நாங்கள் இறக்கவில்லை என் அப்பா என்னைச் சுடவும் இல்லை. அது மற்ற தங்கைகள் ஓடிப்போகாமல் இருக்க என் தந்தை சொன்ன பொய் என்று.
Screenwriter, Editor, Set Designer, Sound Designer & Director: Mohsen MakhmalbafDirector of Photography: Mahmoud KalariSound: Mojtaba MirtahmasbExecutive Manager and Still Photographer: Mohammad Ahmadi Music: Hossein AlizadehCast: Abbas SayyahiShaghayegh JowdatHossein MoharramiRoghayyeh MoharramiParvaneh Ghalandari1996, Color, 72 mins

34 comments:

உண்மைத்தமிழன் said...

முத்துலஷ்மி அவர்களே.. இந்தப் படத்தை நான் Film Festival-லில் பார்த்தேன். தற்போதைய காலக்கட்டத்தில் ஈரானியத் திரைப்படங்கள் சினிமா பற்றிய புரிதலை புரியாதவர்கள் பலருக்கும் புரிய வைத்துக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்தை இயக்கிய இயக்குநரின் அடுத்து வந்த திரைப்படங்கள் பலவும் மிக அருமையான திரைப்படங்கள்தான். இதுபோல் நிறைய நல்ல சினிமாக்களை அறிமுகம் செய்து வையுங்கள்.. வாழ்த்துக்கள்.. நன்றி..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி உண்மைத்தமிழன்..தியேட்டரில் பார்த்தீர்களா? கொடுத்துவைத்தவர்.
நான் சின்னத்திரையில் தான் தற்போது படம் பார்ப்பது..குழந்தைகள் பெரியவர்களான பின் வேண்டுமானால் இது போன்ற விழாக்களின் போது படங்களைப்பார்க்கும் வாய்ப்புகிடைக்குமென நினைக்கிறேன்.

நாகை சிவா said...

பார்க்க முயற்சி செய்கிறேன்!

காட்டாறு said...

நான் சினிமா விரும்பி பார்ப்பதிலை. ஆனா கதை தெரிஞ்சிக்க ஆர்வம் உண்டு. நல்ல சினிமாக்கள் பற்றி மேலும் எழுதுங்கள்.

பங்காளி... said...

நலலாருக்கு விமர்சனம்....இந்த படத்தினை எப்படி பார்த்தீர்கள்....குறுந்தகட்டின் மூலமா அல்லது இனையத்தில் தரவிறக்கி பார்த்தீர்களா?

வெவரமா சொன்னீங்கன்னா நானும் பார்த்துருவேன் படத்தை.....

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நாகை சிவா கண்டிப்பாகப் பாருங்க
பொறி மாதிரி படமும் பார்க்கறது தான் இது மாதிரி படமும் பார்க்கறது தான்.
சினிமா ன்னா எல்லாமும் தானே.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

காட்டாறு ஏங்க ஏங்க சினிமா பார்க்கறது இல்லை...நல்லாப்பாருங்க நல்லப்படமா பாருங்க ... :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பங்காளி முன்பே சொன்னதுபோல நாம அவ்வளவெல்லாம் செலவு செய்வது இல்லைங்க...HBO Zee studio
இதெல்லாம் தான் நமக்கு உலகப்படங்களை எல்ல்லாம் கொண்டுவந்து ஹாலிலேயே காண்பிக்கிறாங்களே.க்ரேட்மூவிஸ் வரிசையில் இப்படி அப்பப்ப பார்க்கறது .

Jazeela said...

நல்லவேளை படத்தை முடிச்சிட்டீங்க, இல்லன்னா எங்கிருந்து குறுந்தகட வாங்கி பார்க்கிறது. இப்படி நிறைய படம் காட்டுங்க ;-) ஓசில பார்த்துக்குறோம்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கதையில் அவர்கள் இறக்கவில்லை என்பதையும் கப்பா பேசுவது கற்பனைப் பாத்திரம் என்பதையும் நான் முதலில் எழுதவில்லை ஆனால் அப்படி ஒன்றும் சர்ப்ரைஸ் இல்லை யாரேனும் பார்க்கமுடிந்தால் அவர்களும் ஆரம்பத்திலேயே அதை உணர்ந்துவிடுவார்கள் என்று தோன்றியது கடைசியில் எழுதி இணைத்துவிட்டேன். அப்படத்தின் ஸ்கிர்ப்ட் கூட இணையத்தில் கிடைக்கிறது.
http://www.makhmalbaf.com/books.php?b=32 படித்துப்பாருங்கள் பார்த்தது போலவே உணர்வீர்கள்.

அபி அப்பா said...

//முத்துலெட்சுமி said...
நாகை சிவா கண்டிப்பாகப் பாருங்க
பொறி மாதிரி படமும் பார்க்கறது தான் இது மாதிரி படமும் பார்க்கறது தான்.
சினிமா ன்னா எல்லாமும் தானே//

பொறியில் மாட்டிய புலியே! இந்த மாதிரி படமும் பாரப்பா, அதே நேரம் உம்ம கோபி தம்பி கிட்ட பொறி படம் நல்லாயிருக்குன்னு விமர்சனம் எழுதுவதை நிறுத்த சொல்லுப்பா:-))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பொறிமாதிரிப் படமும் பார்க்கறது தான் ன்னு எழுதி இருக்கனே பாக்கலயா அபி அப்பா..டப்பா படம்ன்னு மத்தவங்க சொல்ற படமும் பார்ப்பேன் ... இதையும் பார்ப்பேன்.

பொறிக்கு என்னங்க குறைச்சல்...சூப்பரா பூஜா இருக்கா, நல்ல மெசேஜ் இருக்கு..என்ன எடுத்தவிதம் தான் சரி இல்ல. இப்படி தப்பான படமும் சரியான படமும் பார்த்து ஒரு நாள் நான் பெரிய டைரக்டர் ஆகப்போறேன்.

பங்காளி... said...

பொறி...ல...ஒரு டூயட் நல்லாருக்கு....

பூஜா நல்லாவா இருக்கு....எனக்கென்னவோ பூஜாவ பார்த்தா காஞ்சு போன கருவாடுதான் ஞாபகத்துக்கு வருது....:-)))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆமாமா பேருந்தில் நீ எனக்கு ஜன்னலோரம் பாட்டு சூப்பரா இருக்கு,.
பூஜா அழகா? இல்லையா ? அது அவங்கவங்க கண்ணோட்டத்தைப்
பொறுத்தது...உங்கள் சென் தத்துவத்தைப் போலவே பங்காளி. :)

அபி அப்பா said...

//ஒரு நாள் நான் பெரிய டைரக்டர் ஆகப்போறேன். //

நல்ல விஷயம் எற்கனவே எனக்கு அஸிஸ்டண்ட் டைரக்டரா அனுபவம் இருக்கு(குரங்கு ராதா பதிவிலே), அதனால ஒரு சான்ஸ் குடுங்க மேடம், பிளீஸ்.:-)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அபி அப்பா உங்களுக்கு சான்ஸா
கொஞ்சம் ரிஸ்க் தான் இருந்தாலும் பரவால்ல ஒரு ஊர்க்காரங்க என்கிறதுக்காக கொடுத்துடலாம்.

மங்கை said...

நல்லா சொல்லி இருக்கீங்க லட்சுமி..
மனதை தொடும் கதை...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆமாம் மங்கை அப்படியே இறகு போல லேசாக்கும் இப்படிப்பட்ட படங்கள்.மகளும் சேர்ந்து உட்கார்ந்து பார்த்தாள்.

காட்டாறு said...

அது என்னவோங்க பொறுமையா உட்கார்ந்து பார்ப்பதில் பொறுமையில்லை. :) ஆனா காமெடி படம்ன்னா பார்ப்பேன். பாட்டு நெறையா கேட்பேன். ஒன்னு விட மாட்டேன். FM ஓடிக்கிட்டே இருக்கும். நானும் சேர்ந்து தான்.

எப்போவாவது தோழர்கள் வரும் போது வேறு வழியில்லாமல் படம் பார்ப்பேன்.

நாகை சிவா said...

//நாகை சிவா கண்டிப்பாகப் பாருங்க
பொறி மாதிரி படமும் பார்க்கறது தான் இது மாதிரி படமும் பார்க்கறது தான்.
சினிமா ன்னா எல்லாமும் தானே.//

:-)))))) மக்கள் இந்த பொறிய மறக்க மாட்டேன்க்குறீங்க....

நான் ஆங்கில படமும் நிறைய பாப்பேன்ங்க... தமிழில் எல்லா குப்பையும் பாப்பேன், சில சமயம் அதில் சில மாணிக்கங்கள் கிடைக்கும்.
இப்ப கூட ஒரு 4 படம் பார்த்து இருக்கேன், விமர்சனத்துடன் வரேன்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நாகை சிவா தமிழ்நாட்டுல இருந்தா இப்படி பார்ப்பமா?தெரியல
ஆனா தமிழ்நாட்டை விட்டு வெளிய இருக்கறதால் சிடி வேற கொண்டுவந்து வீட்டுல யே கொடுக்கறதால எல்லாப்படமும் பார்த்துடறோம்..குப்பையோ டப்பா வோ எதுனாலும்...நல்லா இல்லன்னா ஏன் நல்லா இல்லன்னு பார்க்கறது...நல்லா இருக்குதுன்னா நல்லப்படமாச்சேன்னு பார்க்கறது ...:)

சென்ஷி said...

இப்பக்கூட பொறுமையா படிச்சேன்..
கொஞ்சம் குழப்பமாவே இருக்கு..
நான் இன்னும் டியூப்லைட்டாவே இருக்கேனோ :)

சென்ஷி

காட்டாறு said...

//நாகை சிவா தமிழ்நாட்டுல இருந்தா இப்படி பார்ப்பமா?தெரியல
ஆனா தமிழ்நாட்டை விட்டு வெளிய இருக்கறதால் சிடி வேற கொண்டுவந்து வீட்டுல யே கொடுக்கறதால எல்லாப்படமும் பார்த்துடறோம்..//

இது ரொம்ப சரி முத்துலெட்சுமி.

//குப்பையோ டப்பா வோ எதுனாலும்...நல்லா இல்லன்னா ஏன் நல்லா இல்லன்னு பார்க்கறது...நல்லா இருக்குதுன்னா நல்லப்படமாச்சேன்னு பார்க்கறது ...:) //

:) இதுவும் சரிதான். எதுக்கு படம் பாத்துட்டு பொலம்பனும்ன்னு நண்பர்கள் கிட்ட நெறையா முறை கேட்டிருக்கேன். அவங்க இது ஒரு த்ரில் மாதிரி சொல்லுவாங்க?!? ஒங்க கிட்டேயும் கேட்கிறேன்... ஏன் நல்லா இல்லைன்னு தெரிஞ்சும் ஒரு படத்தைப் பார்க்கிறோம்?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சென்ஷி ஒரு தாத்தாவும் பாட்டியும் இருக்காங்க அதுல தாத்தாவும் பாட்டியும் ஒரு தரை விரிப்பு வச்சிருக்காங்க அதை தண்ணியில் போட்டு கழுவும் போது அதுல இருந்து ஒரு இளம் பெண் வரா அது பார்த்தா அந்த பாட்டியோட சின்ன வயசு பாத்திரம் அந்த கற்பனை பாத்திரத்துக்கூட தாத்தாவும் பாட்டியும் பேசப்பேச அப்படியே ஃப்ளாஷ் பேக் விரியுது...சின்ன வயசுல அவங்க காதலிச்சப்போ கல்யாணத்துக்கு குடும்பத்துல வந்த தடங்கலையும் கடைசியில் ரெண்டுபேரும் சேர்ந்தப்போ சுட்டுக் கொண்ணுட்டதாக குடும்பத்தில் நினைத்திருந்ததையும் அவங்க பேச்சினூடாக நமக்கு விளக்கி இருக்காங்க. கதையைச் சொன்ன விதம் கொஞ்சம் குழப்பமா இருந்தாலும் அதான் அதோட வெற்றிக்கு காரணம்.படத்தை பாருங்க இன்னும் புரியும்.

அபி அப்பா said...

//நான் இன்னும் டியூப்லைட்டாவே இருக்கேனோ :)//

தெரியலப்பா:-)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்லா இல்லன்னாலும் ஏன் நல்லா இல்லன்னு பார்க்கிறது தான் காட்டாறு...ஒருத்தன திட்டனும்ன்னு வச்சிக்குங்க அவன் செஞ்ச தப்பு என்னன்னு தெரிஞ்சா தானே திட்டறது ஒழுங்கா திட்டலாம். :) பாத்துட்டு பொலம்ப மாட்டோம் ..எப்படி மோசமா எடுத்துறுக்காம்பாருன்னு பேசிக்குவோம்..இதுல ஒன்னும் தப்பு இருக்கறமாதிரி தெரியல...

காட்டாறு said...

//முத்துலெட்சுமி said...
நல்லா இல்லன்னாலும் ஏன் நல்லா இல்லன்னு பார்க்கிறது தான் காட்டாறு...ஒருத்தன திட்டனும்ன்னு வச்சிக்குங்க அவன் செஞ்ச தப்பு என்னன்னு தெரிஞ்சா தானே திட்டறது ஒழுங்கா திட்டலாம். :)
//
கலக்கீட்டிங்க போங்க!

//பாத்துட்டு பொலம்ப மாட்டோம் ..எப்படி மோசமா எடுத்துறுக்காம்பாருன்னு பேசிக்குவோம்..இதுல ஒன்னும் தப்பு இருக்கறமாதிரி தெரியல...
//

எதிலையுமே தப்பு இருக்குதுன்னு சொல்ல முடியாதில்லையா.. அதனால நான் தப்பு இதுன்னு சொல்லல... உங்க கருத்த கேக்குறதுக்கு தான் :)

Ayyanar Viswanath said...

உங்களோட உலக சினிமா படங்கள் எல்லாமே அற்புதமான படங்கள்
சில படங்கள் நான் எழுதனும்னு நெனச்சிருந்த படங்களும் கூட
:)
இந்த படம் இன்னும் பாக்கல..ஈரான் ல மஜித் மஜித் இயக்கிய திரைப் படங்கள் பாருங்க ( children of heaven , colour of paradaise )

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி அய்யனார்...சில்ட்ரன் ஆப் ஹெவன் பார்த்துட்டேன்...இன்னோன்னு பாக்க முயற்சிக்கறேன்...எந்த நேரத்துல ஓசியில் பார்க்கறேன்னு சொன்னேனோ..
இப்ப செட் டாப் பாக்ஸ் வெச்சாத்தான் எனக்கு புடிச்ச ஷீ ஸ்டுடியோ வருமாம்...கொஞ்ச நாளா நல்ல படம் பார்க்காம கவலையா இருக்கு...

butterfly Surya said...

நல்ல படமும் விமர்சனமும்.

இரானிய படம் "BARAN" பாருங்கள்.. மஜித்மஜிதியின் அதி உன்னத படைப்புகளும் ஒன்று..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி வண்ணத்துப்பூச்சியார். .. ஒரே நாளில் மூன்று விமர்சனங்களைப் படித்திருக்கிறீர்கள்.. நன்றி.. நீங்கள் சொன்ன படங்களை எல்லாம் பார்க்க முயற்சிக்கிறேன்.. ஆனால் நான் தேடிப்பார்ப்பதில்லை ..அந்த நேரத்து ரேடியோ இசையைப்போல திடீரென பார்ப்பதில் எனக்கு ஒரு மகிழ்ச்சி..

butterfly Surya said...

நல்லவற்றை தேடி தேடி பார்பதில் எனக்கு அலாதி பிரியம். அது மட்டுமல்ல அதை பகிர்வதிலும்தான்.

1998ல் இவர் இயக்கிய Children of Heaven ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் இரானிய படம். பல்வேறு உலக திரைப்பட அரங்கில் விருதுகளை வாரிக்குவித்த படம்.

கோவிலிலோ கல்யாண மண்டபத்திலோ தவறவிட்டு விடுவோமோ என நினைக்கும் "காலணி" தான் திரைப்படத்தின் "கதாநாயகன்"

அனைவரும் பார்க்கவேண்டிய படம்.

இவரது மிகச்சிறந்த சில படங்கள்:

Baduk (1992)

God Will Come (1995)

Father (1996)

The Colour of Paradise (1999)

Baran (Rain) (2001)

Weeping Willow (2005)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சில்ட்ரன் ஆஃப் ஹெவன் பாத்துட்டேன்.. ஆனா அதைப்பத்திஎல்லாரும் எழுதிட்டாங்க..

நான் படத்தைப் பார்த்துட்டு எழுதறேனே தவிர விமர்சனம் படிக்க எனக்கு பிடிக்காது அவ்வளவா.. (அதாவது படம் பார்க்கும் முன்னர்)..ஏன்னா படம் பார்க்கும் போது என்னோட வியூ அப்பறம் .. எழுதினவங்க வ்யூ ரெண்டும் குழம்பிடக்கூடாதே..

butterfly Surya said...

அதுவும் சரிதான் கயல்.

ஆனா சில விமர்சனங்களை படித்தவுடன் அந்த திரைப்படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவலும் ஏற்படும் எனக்கு. ஆனா விமர்சனம் நல்லா இருக்கணும். அப்படித்தான் உங்க விமர்சனங்களும் இருந்தது. நன்றிகள் பல....