April 5, 2007

இன்றைக்கு என்ன கிழமை

சில சமயம் இன்னைக்கு என்ன கிழமை ன்னு மறந்து போவதுண்டு .இங்க அபி அப்பா எனக்கு அனுப்பிய கமெண்ட் ல இருந்த விஷயத்த பாருங்க.

""நேத்து காலை எழுந்திருக்கும் போதே இங்க துபாய்ல மழை வரும் போல இருந்துது. நான் வியாழக்கிழமைன்னு நெனச்சுகிட்டு(இங்கு வெள்ளி லீவ்) வீக் எண்ட்தானேன்னு ஜாலியா ஆபீஸ் போய், தமிழ்மணத்துல பூந்துகிட்டேன். ஒரு ஆணி கூட புடுங்கலை. ஜாலியா ஸ்டார் பதிவர் ஜெஸீலா பதிவுல போய் லந்து பண்ணிகிட்டு இருந்தேன். அதோட வீட்டுக்கு வந்து நாளை லீவ்ன்னு நெனச்சுகிட்டு ஜாலியா தூங்கிபோயிட்டேன்.காலைல ஆபீஸ்ல இருந்து போன்"என்ன வரலியா, லீவான்னு" சரி வெள்ளி கிழமை கூட ஆணியான்னு நெனச்சுகிட்டு கேசுவல் ட்ரஸ்ல ஆபீசுக்கு வந்துட்டேன். இங்க வந்து பாத்தா எல்லாரும் பிரசண்ட், அப்பகூட என்னது எல்லாருக்கும் ஆணி போலன்னு நெனச்சுகிட்டேன். சற்று முன்புதான் இன்னிக்கு வியாழன்ன்னு த்ரிஞ்சுது. ஆஹா பர்முடாஸ்ல வந்துட்டோமேன்னு என் கேபின் விட்டு வெளியே வரவேயில்லை. அதனால இன்னிக்கும் தமிழ்மணம் தான் கதி. இது போல யாருக்காவது எப்பவாவது நடந்திருக்கா? என்னைப்போல லூசு யாரவது உண்டா? சொல்லுங்கப்பா:-) ""

இத பதிவா போட உரிமை வாங்கி இருக்கேன் அவர்கிட்ட இருந்து.

கிழமை மறந்து போவது நிறைய நடக்கும்.. வெள்ளிக்கிழமை லீவ் விட்டு இருந்தாங்க்ன்னா ஞாயிற்றுக்கிழமைய திங்களா நினைக்கறது ...
வியாழக்கிழமை லீவ் விட்டு இருந்தாங்கன்னா வெள்ளிக்கிழமைய சனிக்கிழமையா நினைச்சுட்டு பிள்ளைங்கள பள்ளிக்கூடம் அனுப்பனுமே வீட்டுக்காரர் ஆபீஸ் போனுமேன்னு இல்லாம தூங்கிட்டு இருப்பேன்.


எனக்கு இப்படி மட்டுமில்ல ரொம்ப நாள் லீவ் விட்டு பள்ளிக்கூடம் திறக்கற அன்னைக்கு பாதிவழியில் அதே கலர் சீருடை எங்காவது தெரியலன்னா
இன்னைக்கு உண்டா நம்ம சரியா நியாபகம் வச்சு தான் வந்தமான்னு பதட்டமாகிடும். பரிட்சைக்கு போறப்போ கொஸ்டின் பேப்பர் கையில் வரவரை இன்னைக்கு இன்ன எக்ஸாம் தானே மாத்தி ஏதும் படிச்சுட்டு வரலியேன்னு தோணும்... . . இதும் வயர்டுல ஒண்ணோ

ஒரு முறை எங்க மாமா குடும்பம் சுத்திப் பார்க்க வந்திருந்தாங்க அவங்களுக்கு சுற்றுலா பஸ்ஸில் புக் செய்து வைத்திருந்தோம்.
காலையில் இட்லி செய்து சப்பாத்தி செய்துன்னு 4 மணிக்கு எந்திரிச்சு பிள்ளைங்கள தயார் செய்து 9 மணிக்கு கடை வாசலில் போய் உட்கார்ந்தா வண்டி வரவே இல்லை. திங்கள் கடையெல்லாம் வேற லீவ் எங்க விசாரிக்க , போன் செய்து தலைமை ஆபீஸ் ல கேட்டா ராத்திரி ஒன்பதுங்கறாங்க.

எங்க வீட்டுல இன்னோருத்தங்களுக்கு நடந்த கதை இன்னொரு விதம் . ப்ளைட் மதியம் 1 மணிக்குன்னு பேக் செஞ்சுட்டு ஆமா கரெக்டா கிளம்பிருமான்னு செக் செய்தவங்களுக்கு கிடைச்ச பதில் என்ன தெரியுமா?
"கரெக்டா போய் சேர்ந்துருச்சேங்க.."
ப்ளைட் ராத்திரி ஒரு மணிக்கு இந்நேரம் ப்ளைட் லேண்ட் ஆகி எல்லாரும் வீடே போய் சேர்ந்திருப்பாங்கன்னா எப்படி இருக்கும்.


இப்படி கதை இருந்தா எழுதுங்கப்பா யாராச்சும்......டேக் எல்லாருக்கும் பொது .

29 comments:

லக்ஷ்மி said...

எனக்கு கிழமை மறக்கரது இல்லை பெரும்பாலும். தேதிதான் தடுமாறும். ஆனால் நீங்கள் குறிப்பிட்டுள்ள விடுமுறை முடியும் நாளில் குழப்பம், பரிட்சை நாள் பற்றிய குழப்பம் மட்டுமில்லைங்க வெளியூர் பயணங்களின் போதும் எனக்கு இந்த குழப்பமுண்டு. பஸ் அல்லது ட்ரெயினில் ஏறி உட்கார்ந்து டிக்கெட் பரிசோதகரும் வந்து போனப்புறம்தான் நிதானத்துக்கு வருவேன்னா பார்த்துகுங்களேன். அதுலயும் என்னை முன்பதிவு செய்யச்சொன்னா தீர்ந்தது. முன்பதிவு கவுண்டரிலேயே ஒரு நான்கு முறையாவது சரி பார்த்துகொண்ட பிறகு வீட்டிற்கு வந்த பின்னும் யாரிடமாவது கொடுத்து அவர்கள் சரிபார்த்து சொன்னாலெயொழிய நிம்மதி கிடையாது எனக்கு. எப்படியும் தேதி நேரம் முதலியவற்றை சொதப்பியிருப்பேன் என்ற அதீத தன்னம்பிக்கைதான் காரணம்.

அபி அப்பா said...

நான் இங்க என் கேபினை விட்டு விளியே வர முடியாம தவிக்கிறேன், எல்லாருக்கும் இது நக்கலா போச்சே:-))))

Naufal MQ said...

இன்னமுமா இந்த அபிஅப்பா பெர்முடா போதையில இருக்கார்? அதான் போட்டு துவைச்சாச்சுனு சொன்னாங்களே!!!

Anonymous said...

எனக்கு பெர்முடா ரொம்ப புடிக்கும். அபிஅப்பா கிட்ட இருந்து அதை வாங்கி தாங்க.

கதிர் said...

முதல் செமஸ்டர்ல மூணு தேர்வு மாலை நேரம், மீதி ஒண்ணு காலை நேரம். நானு சாவகாசமா மதியம் போறேன். பரிட்சை எழுதிட்டு எல்லாரும் போயிட்டாங்க அப்படியே நீயும் கெளம்பி ஊருக்கு போ ராசான்னு அனுப்பிட்டாங்க.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

எப்படியோ குழம்பறீங்க என்ன லக்ஷ்மி...உங்க தன்னம்பிக்கை , நிதானம் படித்து :)

Anonymous said...

அபி அப்பா நேத்து நம்மோட மங்கல் சந்திப்பின் விளைவா இதெல்லாம்..??

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அபி அப்பா நீங்க வேற யானைக்கு ஒரு காலம் வந்தா பூனைக்கு ஒரு காலம் வரும்னு
தெரியாதா? நீங்க என்ன வந்து 5 மணிக்கு ஓட்டு போட்டீங்களான்னு கேட்டீங்கள்ள அதுக்கு பேரு என்னவாம்? சகோதரின்னு பார்த்தீங்களா?

Avanthika said...

ஹையா..அவந்தி லூசே பரவாயில்லை போல இருக்கு...
இந்த மாதிரி ட்ரெஸ்ல எல்லாம் ஸ்கூலுக்கு போனது இல்லை..
எழுந்திருச்சாதான போறதுக்கு...

//இன்னமுமா இந்த அபிஅப்பா பெர்முடா போதையில இருக்கார்? அதான் போட்டு துவைச்சாச்சுனு சொன்னாங்களே//

அண்ணா இன்னொரு தடவை அவங்க கிட்ட அபி அப்பாவ விட்டுடலாம் அப்ப ஞாபக மறதி எல்லா சரி ஆயுடும்

Anonymous said...

நான் இட்ட பின்னூட்டம் எங்கே?

அபி அப்பா said...

//அபி அப்பா நீங்க வேற யானைக்கு ஒரு காலம் வந்தா பூனைக்கு ஒரு காலம் வரும்னு
தெரியாதா? நீங்க என்ன வந்து 5 மணிக்கு ஓட்டு போட்டீங்களான்னு கேட்டீங்கள்ள அதுக்கு பேரு என்னவாம்? சகோதரின்னு பார்த்தீங்களா? //

கலாய்ங்க பரவாயில்ல,ஆனா எனக்கு இந்த வாரம் 2 நாள் லீவ் கிடைச்சமாதிரி சந்தோஷமா உக்காந்துகிட்டு இருக்கேன். இப்போ கூட எனக்கு வந்த ஒரு மெயில் பாத்து சிரிச்சுகிட்டு இருக்கேன், என்னய வச்சு நல்லா காமடி செய்யிராங்கப்பா.:-))))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

@ தம்பி அருமை...ரொம்ப படிச்சிருப்பீங்க அதான் பரிட்சை நேரம்
மறந்துருச்சு..

@பௌலர் ...அதெல்லாம் நல்லா மெஷின்ல போட்டு துவைச்ச டிரெஸ் தான்...வீட்டம்மா இருந்தா இந்த நிலம வந்துருக்குமா ...

@ அவந்திம்மா எப்படியோ உனக்கு குஷியா இதுல...

அபி அப்பா said...

//லக்ஷ்மி said...
எனக்கு கிழமை மறக்கரது இல்லை பெரும்பாலும். தேதிதான் தடுமாறும். ஆனால் நீங்கள் குறிப்பிட்டுள்ள விடுமுறை முடியும் நாளில் குழப்பம், பரிட்சை நாள் பற்றிய குழப்பம் //

சகோதரி லெஷ்மியை முத்து லெஷ்மியா மாத்தினது நீங்க தானே:-))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சச்சின் நீங்க்க அந்த "அதே அனானியா".. போங்க போய் நல்ல ப்ராண்ட் ஐட்டமா பாத்து 2000 3000 ரூ ஒரு பார்மல்ஸ் வாங்கிட்டு அந்த டிரஸ் மாத்திக்குங்க.. வேண்ணா அதுல கையெழுத்துப் போட்டுத் தருவார் அபி அப்பா...சச்சினுக்கே ஆட்டோகிராப் போட்டவர் அபி அப்பான்ன பெருமை கிடைக்கும்.
[அனானி விளையாட்டு ஒரு அளவோட இருக்கட்டும் பயமுறுத்தாதீங்க]

அபி அப்பா said...

// அவந்திகா said...
ஹையா..அவந்தி லூசே பரவாயில்லை போல இருக்கு//

பார்ரா பார்ரா சந்தோஷத்த:-))

லக்ஷ்மி said...

//அபி அப்பா Said...

சகோதரி லெஷ்மியை முத்து லெஷ்மியா மாத்தினது நீங்க தானே:-))//

அதே... அதே...

இலவசக்கொத்தனார் said...

நல்ல வேளை அபி அப்பா ட்ரெஸ் போட்டுக்கிட்டு போனாரே!! அது இருக்கட்டும் அவரு அந்த மாதிரி எல்லாம் சவுண்ட் விட்டு ரஜினி மாதிரி ஆகலாமுன்னு பார்க்கறாரா?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

என்னங்க கொத்ஸ்...இப்படி எல்லாம்.பாக்யராஜ்ன்னாங்க இப்ப ரஜினியா?

இப்படி எல்லாம் செஞ்சா ரஜினி
ஆகிறாலாமா?
எங்கங்க ரஜினிக்கு என்ன பெரிய மரியாதை குடுக்கறாங்க இப்பல்லாம்.காவேரி பிரச்சனைலேர்ந்து ஜே மேட்டர் வரைக்கும் பாவம் அவர ஓட்டிட்டுல்ல இருக்காங்க.

வர்த்தகம் said...

எல்லாரும் ட்யூப் லைட் ஆன கதையா...ஹி..ஹி...நாமதான் இப்படி விசித்திர ஜந்துவா இருக்கோமோன்னு அப்பப்ப கவலைபட்டதுண்டு...

பரவாயில்லை.நம்மள மாதிரி நெறய ஆளுங்க இருக்காப்பா...தேங்ஸ் முத்துலட்சுமி....

வர்த்தகம் said...

தப்பு நடந்திருச்சி...யாருடா இந்த வர்த்தகம்னு குழம்பீடாதீங்க தாயே...

நாந்தான் உங்க பங்காளி...

புதுசா வர்த்தகம்னு ஒரு வலைப்பூ ஆரம்பிச்சிருக்கம்ல...அதுக்கு தட்டீட்டு இருந்தேன்..அப்படியே பின்னூட்டியதால வந்த குழப்பம்.

நம்ம புது வலைப்பூவுக்கு வந்து உங்களின் அருளாசிகளை வாரிவழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்...

http://varththaham.blogspot.com/

வல்லிசிம்ஹன் said...

அதே அதே முத்துலட்சுமி.

உங்களை கொத்ஸின் 'அழகுகள் ஆறு ' எழுதக் கூப்பிட்டு இருக்கேன்.
கௌரவம் செய்யுங்க.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வர்த்தகம் யாருன்ன்னு கூட தெரியாமல இருக்கோம் இதுக்கு ஒரு விளக்கம் வேறயா?

சரி உங்களுடைய ட்யூப்லைட்
வெளிச்சத்தப்பத்தி பதிவ ஓடிக்கிட்டே
போட்டுருங்க...வயர்டுல கூப்பிடாததுக்கு
இப்போ இத டேக் பண்ணிடறேன்.
[அப்பாடா ]

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வந்துட்டேன் வல்லி , நன்றி .போட்டுடறேன்.அழகு...ம்..
கவிதயா நிறையத் தோணுது...எதத எழுதறது...

இராம்/Raam said...

நானும் இதே மாதிரி ஒரு பதிவு போடுறேன்.....

ஹி ஹி ஐ ஹாவ் லாட் ஆப் கிறுக்ஸ் எக்ஸ்பீரியன்ஸ் :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாங்க இராம்..எழுதுங்க எழுதுங்க...படிச்சு சிரிக்கறதுக்கு நாங்கள்ளாம் இருக்கோமே..சீக்கிரம்.

கோபிநாத் said...

எனக்கும் இந்த மாதிரி நிறையா நடந்திருக்கு.
எந்த சிப்டுன்னு மறந்து போயி திரும்பவும் வீடு வந்திருக்கேன் ;-(

முத்துலெட்சுமி/muthuletchumi said...

என்ன கோபி எல்லாரும் இப்படி
பின்னூட்டத்தில் இப்படி நடந்திருக்குன்னு போட்டா போதுமா
இன்னும் விரிவா எழுதி சிரிக்கவைங்களேன்.

MyFriend said...

//இன்னைக்கு உண்டா நம்ம சரியா நியாபகம் வச்சு தான் வந்தமான்னு பதட்டமாகிடும். பரிட்சைக்கு போறப்போ கொஸ்டின் பேப்பர் கையில் வரவரை இன்னைக்கு இன்ன எக்ஸாம் தானே மாத்தி ஏதும் படிச்சுட்டு வரலியேன்னு தோணும்... . . இதும் வயர்டுல ஒண்ணோ///

எனக்கு இதுபோல நிறைய நடந்திருக்கு. :-)) ஒரு தடவை கணக்கு பரிட்சைன்னு ஜாலியா விளையாடிட்டு பரிட்சைக்கு போய் உட்கார்ந்த பயலோஜி பேப்பர் கொடுத்தாங்க. "டீச்சர், இன்னைக்கு 12-ஆம் தேதி.. கணக்குதானே"ன்னு கேட்டா, "இன்னைக்கு 21-ஆம் தேதி பயலோஜி. ஒரே கணக்கு பரிட்சைஐ எத்தனை தடவைதான் செய்வே?"ன்னு திரும்ப என்னையே கேள்வி கேட்குறாங்க. என்ன கொடுமை சரவணன் இது! :(

cheena (சீனா) said...

ம்ம்ம் - ஞாபக மறதி எல்லோருக்குமே சகஜம் தான். கன்பூஷன் எங்கே வரும்னா - ராத்ரி இல்ல இல்ல அதிகாலயில கிளம்புர ரயிலு. பிளைட்டு இதெல்லாம் மறு நா தேதி போட்டு டிச்கெட் குடுப்பாங்க. அதாவது 21ம்தேதி ராத்ரி 12:30 மணினா அது 22ம்தேதி போட்டுக் குடுப்பாங்க. நாம மெதுவா 22ம்தேதி ராத்ரி போனா அம்பேல் தான்