May 10, 2007

என் முதல் ப்ளாக்

நான் முதன் முதலில் ப்ளாக் ஆரம்பித்த போது எழுதிய இரண்டு இடுகைகள் இவை. இது எழுதியது சிறுமுயற்சி ப்ளாக்கில் இல்லை வேறு. அதில் சில குழப்படி நேர்ந்ததால் புது ப்ளாக் உருவாக்கினேன். இங்கே இப்போது இணைத்து வைத்துக்கொள்கிறேன். படித்து விட்டு சிரிக்காதீர்கள் எதாச்சும் எழுத்துல முன்னேற்றம் இருக்கா பாருங்க.

அக்டோபர் 26.
என் முதல் எழுத்து இதுஎழுத வேண்டும் என்ற எண்ணம் மிக இருந்தாலும்எழுத இதுபோன்றதொரு வசதி எனக்கு இப்பொழுது தான் கிடைத்தது.மட்டுமல்லாது படிக்கவும் உங்களை போன்றவர்கள் இதுவரை கிடைக்கவில்லை.

இன்றைய தினத்தில் காந்தி தனத்தை பற்றி அனைவரும் பேசி கொண்டு இருக்கிறார்கள்.அந்த விதத்தில் இன்றைய இளையவர்களுக்கு அறிவுரை தரும் படங்கள் வருவது வரவேற்க படவேண்டியதே.[லகெ ரகோ முன்னாபாய் ]

அதிக வருவாய் அதிக சுதந்திரம் தவறான பாதையை தேர்ந்தெடுக்கும் தலைமுறைக்கு இது காந்திய கருத்துக்களை அறிமுகம் செய்கிறது.சிரார்களும் அவருடைய கருத்துக்களை படிக்க விரும்பும் வண்ணம் சிரிப்பு கலந்துதந்துள்ளனர்.கமல் மீண்டும் தரவேண்டும் ஒரு தமிழாக்கம்

இதற்கு வந்த முதல் பின்னூட்டங்கள்

வருக வருக! நல்வரவு!!
By
sivagnanamji(#16342789), At October 26, 2006 3:06 PM ·

நன்றி, முதல் எழுத்துக்கே பின்னூட்டம் தந்து வரவேற்பு தந்ததற்கு .-நான்

தமிழ் பதிவுக்கு புது வரவு.வருக வருக. நல்ல பதிவுகளைத் தருக.நாங்கள் காத்திருக்கிறோம் படிப்பதற்கு.கமலின் காதுகளுக்கு எட்ட வேண்டுமே.பார்கலாம்.நமது சங்கத்து உறுப்பினர்களே வந்து ஆதரவுக்கரம் கொடுங்கள்.
By
தி. ரா. ச.(T.R.C.),


சுத்தமும் பொறுமையும்
சுற்றுபுறத்தை பொது இடத்தைச் சுத்தமாய் வைத்து இருப்பதில்லை என்பதே நம் நாட்டில் உள்ள மிக முக்கிய குறைபாடு.ஆனால் சொல்லும் எவரும் அதை கடைபிடிப்பது இல்லை.அவர்களே கடைபிடிப்பது இல்லை என்றால், குழந்தைகள்?? குடும்பமாய் ஒரு பூங்காவுக்கு சென்ற போது அங்கே கண்ட காட்சியை எழுதுகிறேன்.(யாரது பதிவர் காட்டாறா? இப்போதைய வியர்டு பதிவு படிச்சுட்டு சுத்தத்தைப் பற்றி நீ பேசலாமான்ன்னா கேட்கறீங்க...ஏங்க அந்த அளவு மோசமில்லைங்க...)

ஒரு வெளிநாட்டு தம்பதி இரு குழந்தைகளுடன் வந்து இருந்தனர். சிறுவன் கையில் ஒரு தின்பண்ட கவரை வைத்து இருந்தான் . அது காலியானதும் அவன் அதை அருகிலேயெ கீழே போட்டு விட்டான். தந்தை அதனை எடுத்து குப்பைத் தொட்டியில் போடுமாறு கூற அவன் பலமாக மறுத்து கொண்டு இருந்தான். பிறகு நீ போடவில்லை என்றால் நாம் இங்கிருந்து போகபோவது இல்லை என சொல்லவும், சிறிது மனம் மாறிய சிறுவன் அருகில் இருந்த தொட்டியில் போட முடியாது என்றான்.

சரி என்று அவன் தாய் அவனை சற்று தொலைவில் இருந்த தொட்டிக்கருகில் அழைத்து சென்றார்.ஆனால் அவன் அங்கே சென்றதும்.. இல்லை அங்கே என்று இன்னும் தொலைவில் இருந்த ஒன்றை காட்ட ..அவன் தாய் சிரித்த முகத்துடன் ..வா என்று அழைத்து சென்று போடச் செய்தார்...எப்படியும் அவனை குப்பைத் தொட்டியை உபயோகிக்க வைக்க வேண்டும் என்பதற்கு அந்த பெற்றோர் காட்டிய பொறுமை என்னை வியப்பாக்கியது.


ரயில் நிலையத்தில் எத்தனையோ குப்பைத் தொட்டி இருந்தாலும் தேனீர் அருந்திய பின் தண்டவாளத்தில் போடும் இளைஞர்களை படித்தவர்களை அங்கேயே தட்டி கேட்பதற்கு கூட பொறுமை வேண்டும். என்ன அதெற்கு எதெற்கு பொறுமை என்கிறீர்களா? ஆம் ஒருவேளை வந்து விட்டாயா என்பதாய் திட்டு கிடைத்தால் , புத்தரைப் போல் பொறுமை காத்து ,என்னை அல்ல அவன் திட்டுவது என்று நினைத்துக் கொள்ளவேண்டுமே!!!!


இதற்கு வந்த பின்னூட்டத்தில் ஒன்று தான் இங்கே இருக்கிறது மற்ற இரண்டு காணவில்லை.

கல்வெட்டு (எ) பலூன் மாமா said...
அடிப்படை விசயங்களை இந்தியர்களில் 99.99999999....% பேர்கள் அவர்களின் குழந்தைகளுக்கு கற்றுத்தருவது இல்லை. இவர்களுக்குத் தெரிந்தால்தானே கற்றுத்தருவதற்கு.இது போன்ற தவறுகளை ஒரு தவறாகவே எடுத்துக் கொள்ளாத மனப்பான்மைதான் உள்ளது. தண்டவாளத்தில் ஒன்னுக்குப் போனா குத்தமா? என்ற அளவிலேயே இது உள்ளது. இதில் பிச்சைக்காரன் முதல் பெரும் பணக்காரர்கள் அனைவரும் சொரணை இல்லாத ஜென்மங்களே.இரயிலில் சாதாரண வகுப்பில் பயணம் செய்பவன் முதல் உயர் வகுப்பில் பயணம் செய்பவன் வரை அனைவரும் குப்பையை ஜன்னலுக்கு வெளியே தூக்கி எறியும் ஜென்மங்கள்தான்.


வரிசையில் பொறுமையாக நிற்கவும், குப்பையை அதற்கான இடத்தில் (அது இல்லாத பட்சத்தில் தன்னுடன் வைத்து இருந்து வீட்டில் கொண்டு சென்று போடுதல்) போடுவதற்கும் சுய அறிவு இல்லாத ஜென்மங்கள் வாழும் இந்த நாடு என்றும் இந்த விசயத்தில் திருந்தாது.திருந்த வேண்டுமா? ஒரே வழி குழந்தைகளுக்கு சின்ன வயதில் இருந்தே இது போன்ற விசயங்களில் பெற்றோர்கள் முன்மாதிரியாகச் செயல்பட்டு வர வேண்டும்.இந்த ஜென்மங்கள் பிட்சா தின்னுவது,கார் வங்குவது,ஜீன்ஸ் போடுவது போன்றவற்றில் வெளிநாட்டை கேள்வியே கேட்காமல் காப்பி அடிக்கும்.ஆனால் ...விடுங்கள்... முடிந்தால் நீங்களும் உங்கள் குழந்தைகளும் இதை கடை பிடியுங்கள்.

நான் எழுதியது ஆமாம் வீட்டுல எப்படியோ வெளியே போனால் பிக்னிக்கோ இல்லை பயணமோ குப்பை போடுவதற்கென்று ஒரு கவர் கொண்டுசெல்வேன். வாழைப்பழத்தோலிலிருந்து சிப்ஸ் கவர் வரை எல்லாம் அதில் போட்டு கொண்டுவந்து வீட்டுக் குப்பைத்தொட்டியில் தான் போடுவது வழக்கம்.

7 comments:

Anonymous said...

Me the first

by
My friend

and

abiappa

சென்ஷி said...

//என் முதல் எழுத்து இதுஎழுத வேண்டும் என்ற எண்ணம் மிக இருந்தாலும்எழுத இதுபோன்றதொரு வசதி எனக்கு இப்பொழுது தான் கிடைத்தது.மட்டுமல்லாது படிக்கவும் உங்களை போன்றவர்கள் இதுவரை கிடைக்கவில்லை.///

வாஸ்தவம்தான்... அப்ப சென்ஷி இதை கவனிக்காம விட்டுட்டான்..


இப்படில்லாம் எழுதிட்டு முன்னேற்றம் இருக்கான்னு கேட்டா நாங்க என்னத்த சொல்றது. முன்னாடி எழுதியிருக்கறதே தேவலன்னு தோணுது.
அப்ப ஆரம்பமே மொக்க இல்லாம, கவிதை இல்லாம, நல்ல விஷயத்தை பத்தி எழுதியிருக்கீங்க..வாழ்த்துக்கள்..


சென்ஷி

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி அபி அப்பா .இப்படி ஆர்வமா வந்து பின்னூட்டமிடறீங்க நீங்க ரெண்டுபேரும்..._/\_

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\முன்னாடி எழுதியிருக்கறதே தேவலன்னு தோணுது.//

:( இதுக்குத்தான் சொல்வாங்க தன் தலையில் தானே மண் போட்டுக்கறது ன்னு... படிச்சு வித்தியாசம் சொல்லுங்கன்னு கேட்டேன்ல..அதான்..

ம். ரொம்ப நன்றி தம்பி சென்ஷி.

சென்ஷி said...

//:( இதுக்குத்தான் சொல்வாங்க தன் தலையில் தானே மண் போட்டுக்கறது ன்னு... படிச்சு வித்தியாசம் சொல்லுங்கன்னு கேட்டேன்ல..அதான்..//

அதுக்கில்லக்கா. நான் பாட்டுக்கு எதுனா பின்னூட்டத்துல சொல்லப்போக அது பதிவுக்கு சம்மந்தமில்லாததுன்னு யாராச்சும் சண்டைக்கு வந்து, இல்லை இதுவும் பின்னூட்டம் தான் ஆனா கொஞ்சம் பின்நவினத்துவம் கலந்திருக்கு நான் வாதம் செய்ய, அப்புறம் நீங்க சமாதானத்துக்கு வர எதுக்கு வம்பு.... நம்ம வேலைய சரியா பார்ப்போமே..

ஒண்ணு தெரியுமா.. நான் பதிவு பிடிச்சிருந்தாதான் பின்னூட்டம் போடுவேன். அப்படி பாத்தா இப்போ உங்ககிட்ட எவ்வளவோ முன்னேற்றம்.. ஒரு பதிவுக்கு நான் 3லேந்து 5 பின்னூட்டம் வரைக்கும் போடறேனே.. :)

சென்ஷி

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அப்ப ஒரு பின்னூட்டம்ன்னா குட்.
ரெண்டுன்னா வெரி குட்...
மூணுன்னா எக்ஸண்ட் அப்படி எதாச்சும் கிரேட் இருக்கா..
இனி ஒரு பின்னூட்டம் போட்ட எல்லாரும் சென்ஷி அப்ப என்னோடது எல்லாம் நல்லா இல்லையான்னு அடிக்க வரப்போறாங்க..எப்படியும் மாட்டிக்கப்போறது தானெ எதுக்கு இப்போல்லாம் ஒரே அடக்கம்..

கோபிநாத் said...

\இங்கே இப்போது இணைத்து வைத்துக்கொள்கிறேன். படித்து விட்டு சிரிக்காதீர்கள் எதாச்சும் எழுத்துல முன்னேற்றம் இருக்கா பாருங்க.\\

ஒன்னும் சொல்லறதுக்கு இல்ல ;) (அந்த அளவுக்கு முன்னேற்றம் இருக்குக்கா)

வாழ்த்துக்கள் ;-))