சிட்டுக்குருவியினையொத்த
சிறகுபெற்ற என் மனது
உன் இருப்பிடம் தேடி
வீட்டின் முற்றத்தில் இறங்கி
உதட்டிலிருந்து சிதறிய சொற்களை
கடவுளின் பிரசாதமென
கொணர்ந்து சேர்க்கிறது
நாளை மீண்டும் ஒரு
வண்ணத்துப்பூச்சியென
ஜன்னலின் ஊடாக நுழைந்திருக்கும்
என்னிடமல்லாமல் வேறு யாரோடும்
பேசும் ஒவ்வோர் வார்த்தைகளையும் கூட
வேதமென எழுதி வைக்கிறது
மறுநாளும் அதற்கப்புறமும்
வழிதவறியதாகச் சொல்லிக்கொண்டு
வாசல் நுழையும் வண்டென
திரைச்சீலைத் தள்ளி தைரியமாய்
எட்டிப்பார்க்கும் தென்றலென
நித்தம் பல உருமாறி
தன்வேலையைச் செவ்வனே
செய்யும் அது.
பி.கு : மீள்பதிவு
நித்தம் பல உருமாறி
தன்வேலையைச் செவ்வனே
செய்யும் அது.
பி.கு : மீள்பதிவு
30 comments:
கவிஞர் முத்துலட்சுமி அக்கா அவர்களே!
கவிஞரா இருந்தா டெல்லியில் எம்பி பதிவி தருவார்களாமே? உங்களுக்கு ஏதும் கிடைக்கலியா?.. ;-))
இருக்கற குடும்பத்தலைவி பதவியே போதுமப்பா :) நிறைய பொறுப்பெல்லாம் ஏத்துக்க முடியாதுன்னு நான் தான் வழிவிட்டேன்.. :)
சிறகு பெற்ற மனதும் நல்லாயிருக்கு.
/சிறுவாடு சின்னப்பையன் சிறுமழலையும்/ நல்லாயிருக்கு:)!
முத்துலெட்சுமி/muthuletchumi said...
இருக்கற குடும்பத்தலைவி பதவியே போதுமப்பா :) நிறைய பொறுப்பெல்லாம் ஏத்துக்க முடியாதுன்னு நான் தான் வழிவிட்டேன்.. :)//
பதவிக்கு அலையாத சகோதரி வாழ்க
தமிழ் பிரியன் said...
கவிஞர் முத்துலட்சுமி அக்கா அவர்களே!
கவிஞரா இருந்தா டெல்லியில் எம்பி பதிவி தருவார்களாமே? உங்களுக்கு ஏதும் கிடைக்கலியா?.. ;-))//
யுத்து!
உமக்கு பதவி வேணும்னா நீரு டெல்லி போய் பார்லிமெண்ட் முன்னாடி குந்திகுனு கவுஜ எழுத வேண்டியது தானேய்யா
//தமிழ் பிரியன் said...
கவிஞரா இருந்தா டெல்லியில் எம்பி பதிவி தருவார்களாமே? உங்களுக்கு ஏதும் கிடைக்கலியா?.. ;-))/
ஓ நீங்க அவுங்களை பத்தி சொல்லுறீங்களா தமிழ்பிரியன் - என்னிக்கு மீனம்பாக்கம் அப்புறம் மதுரையில எப்ப பாக்கலம் தங்களை....????
கவிதை நன்றாக இருக்கு!!
கவிதை நல்லா இருக்குங்க..
நல்லாயிருக்கு :))
ராமலக்ஷ்மி வரும்போதே டிவிட்டரைப் படிச்சிக்கிட்டே தான் உள்ளே நுழையறீங்க குட்.. :)
------------------------
கானா, கவிதை மட்டும் எழுதினாபோதுமா.. இல்ல தமிழ்பிரியன்னு பேரு தமிழ்ல வச்சா மட்டும் போதுமா இப்படியே பல போதுமா கேக்கனுமே.. ?
ஆயில்யன் அவங்க வரதுக்குள்ள நீங்களே டிக்கெட் எடுத்து அங்க கொண்டுவிட்டிருவீங்க போல? :)
--------------------------
மேனகாசத்யா, நேசமித்ரன், கோபிநாத் நன்றி நன்றி நன்றி :)
/தமிழ் பிரியன் said...
கவிஞர் முத்துலட்சுமி அக்கா அவர்களே!
கவிஞரா இருந்தா டெல்லியில் எம்பி பதிவி தருவார்களாமே? உங்களுக்கு ஏதும் கிடைக்கலியா?.. ;-))/
ரிப்பீட்டேய்...:)
/கானா பிரபா said...
தமிழ் பிரியன் said...
கவிஞர் முத்துலட்சுமி அக்கா அவர்களே!
கவிஞரா இருந்தா டெல்லியில் எம்பி பதிவி தருவார்களாமே? உங்களுக்கு ஏதும் கிடைக்கலியா?.. ;-))//
யுத்து!
உமக்கு பதவி வேணும்னா நீரு டெல்லி போய் பார்லிமெண்ட் முன்னாடி குந்திகுனு கவுஜ எழுத வேண்டியது தானேய்யா/
இதுக்கும் ரிப்பீட்டேய்...:)
அக்கா..கவிதைல பின்னுறீங்க!
//இருக்கற குடும்பத்தலைவி பதவியே போதுமப்பா :) நிறைய பொறுப்பெல்லாம் ஏத்துக்க முடியாதுன்னு நான் தான் வழிவிட்டேன்.. :)//
உங்களுக்கு ”வித்தக கவிஞி” அப்படின்னு பட்டம் கொடுத்தராலம்க்கா :)
கவிதை ரொம்ப நல்லாயிருக்குக்கா.
/கானா பிரபா said...
முத்துலெட்சுமி/muthuletchumi said...
இருக்கற குடும்பத்தலைவி பதவியே போதுமப்பா :) நிறைய பொறுப்பெல்லாம் ஏத்துக்க முடியாதுன்னு நான் தான் வழிவிட்டேன்.. :)//
பதவிக்கு அலையாத சகோதரி வாழ்க/
இதுக்கு நான் ரிப்பீட்டேய் போடலைன்னா அப்புறம் ரிப்பீட்டேய் க்கே அர்த்தம் இல்லாம போய்டும்:)
/சிட்டுக்குருவியினையொத்த
சிறகுபெற்ற என் மனது/
சிறகில்லாமலே மனசு பறக்கும்...இதிலே சிட்டுக்குருவியின் சிறகு வேற இருந்தா கேக்கவா வேணும்...ரொம்ப ரசிச்சி எழுதி இருப்பீங்க போல:)
கவிதை ரொம்ப நல்லா இருக்குதுக்கா!
சிறகு பெற்ற மனம் காட்டாறாய் பாயும் குற்றால அருவியாய் கொட்டும் என,கண்ட இறைவன் இத்தனைக்கும் இல்லம் தாங்காது என்றுதான்மனதை மடக்கி வைத்தானோ
கவிதை நல்லாயிருக்கு....
வாழ்த்துக்கள் முத்துலெட்சுமி.....
கவிதை நன்றாக இருக்கிறது. கடகடவென எனக்கும் சிறகு முளைத்தது போல.
//பொறாமையை பெருந்தன்மையாக//
பொறாமையைப் பொறுமையாக...
சிறுமையைப் பெருந்தன்மையாக...
இஃகிஃகி... ஒரு லொள்ளுதேன்...
//பொய்மையை உண்மையாக//
பொய்மையை மெய்மையாக....
இன்மையை உண்மையாக....
http://maniyinpakkam.blogspot.com/2009/08/blog-post_08.html
அர்த்தம் நிறைந்த பல ரிப்பீட்டேய் போட்டு புகழைத் தக்கவைத்துக்கொண்ட நல்லவரே.. நன்றி..
-----------------------
நான் ஆதவன் பெட்டி அனுப்பறேன்.. :)
சென்ஷி நானும் மீள்பதிவு போட ஆரம்பிசிட்டேனே.. ;)
---------------------
சரிதான் கோமா :) நன்றி
ஆர்.கோபி நன்றி..
--------------
சாய் ராம் ரொம்ப ரொம்ப நன்றி.. பார்த்து பறங்க.. :)
வாங்க பழமைபேசி.. அது என் வரிகள் அல்லவே.. பாண்டிச்சேரி அன்னை யின் வரிகள்.. கடன்வாங்கியதை எப்படி மாற்றுவது.. :)
மென் கவிதை முத்துலக்ஷ்மி
ரொம்ப நாள் ஆச்சோ நீங்க கவிதை எழுதி அல்லது நான் இந்த பக்கம் வந்து?
:)
அய்யனார்
:) நீங்கள் இந்த பக்கம் வந்து நாளானதும் உண்மைதான்.. நான் சிலகாலமாக கவிதை எழுதவில்லை என்பதும் உண்மைதான்.. இதன் பழய பதிப்பிலும் இதை ரசித்துப் பின்னூட்டமிட்டிருக்கிறீர்கள்.. நன்றி.. :)
//முத்துலெட்சுமி/muthuletchumi said...
வாங்க பழமைபேசி.. அது என் வரிகள் அல்லவே.. பாண்டிச்சேரி அன்னை யின் வரிகள்.. கடன்வாங்கியதை எப்படி மாற்றுவது.. :)
//
ஓ, அப்படீங்களா? அப்பத் திருப்பிக் கொடுக்கும் போது, என்னோட பின்னூட்டத்தையும் சேர்த்துக் கொடுத்துடுங்க... என்ன நாஞ்சொல்றது? இஃகிஃகி!
Post a Comment