March 22, 2007

சே இதெல்லாம் நல்லவா இருக்கு -5

சுடர் விளையாடும் போது நப்பாசை இருந்தது நமக்கு கொடுக்கமாட்டாங்களான்னு ...ஆனா இந்த வயர்டு விளையாட்டு
வேணாமே நமக்குன்னு இருந்தது. நாகை சிவா மூலமா வந்துடுச்சே என்கிட்டயும் . சொல்லறேன் . என்னோட பதிவுல நானே என்னப்பத்தி போட்டுக்
கொடுக்கற மாதிரி எழுதறது இது தான் முதல்.
வீடு சுத்தம் பண்ணறது , அப்படின்னதும் சுத்தம் பண்ணிகிட்டே இருப்பனோன்னு நினைச்சீங்கன்னா தப்பு... எப்பவும் வீட்ட துடைச்சு சுத்தமா வச்சுக்கறவங்களப் பாத்து அவங்களுக்கு
சுத்தம் செஞ்சுக்கிட்டே இருக்கற வியாதி இருக்கோன்னு கேக்கறவ நான். நானும் செய்வேன் ஆனா ஒரேடியா பிசாசு மாதிரி மேலே கீழே எல்லாத்தையும் எடுத்து துடைச்சு சேஞ்சுக்கு வேற இடம் மாத்தி வச்சுன்னு அல்லோல கல்லோலப் படுத்துவேன். அன்னைக்கெல்லாம் எல்லாரும் ஆகா இவளல்லவோ பெண் அப்படிங்கற மாதிரி நடப்பேன் . எப்படி என் திறமை அப்படின்னு கேட்டு பாராட்டு வாங்கிப்பேன். இல்லாட்டி
சாப்பிட்ட தட்டு ..பூஸ்ட் குடிச்ச டம்ளர் வரை பக்கத்துலயே வச்சுட்டு அப்படியே உட்கார்ந்தும் இருப்பேன். ஆனா தினமும் நீட்டா வைக்கறது , எடுத்த இடத்தில் திருப்ப வைக்கறது இதெல்லாம் பழக்கமே இல்லை...பழக சொல்லி சொல்லறவங்க
பேச்சை கேட்கற பழக்கமும் இல்லை. அதது எடத்துல துடைச்சு வைக்க வீடு என்ன ம்யுசியமான்னு திருப்ப கேட்பேன். கஷ்டம்.


பேசிக்கிட்டே இருக்கறது...ஒரு நாலு பேர் கூட்டமா என் கூட இருந்தா நான் தான் பேசிக்கிட்டே இருப்பேன். அப்பப்ப இடையில் யாராவது பேசிட்டாலும் திருப்பி வாங்கிடுவேன் மைக்கை. அப்புறம் தனியா இருக்கும் போது நினைச்சுப்பேன். சே இது எல்லாம் நல்லாவ இருக்கு . நாளைலேர்ந்து நாம கேக்கனும் மத்தவங்க பேசணும்..ஆனா முடியாது . கல்யாண வீடு நாலு மனுசங்க பேச கிடைச்சா [ உண்மையில் கேட்க கிடைச்சான்னு தான் இருக்கனும் ] குரல் பெரிதாகி கதைஅடிச்சு கதை அடிச்சு தொண்டை கட்டி
பேசமுடியா அடுத்த ரெண்டு நாள் சைகை பாஷயில் பேசுவேன். முன்னாடியே யாராவது நிறைய பேசுற போல நாளைக்கு என்ன மௌனவிரதமான்னு கேட்டு
கோடி காட்டினாலும் ...இப்படி சேருர சமயத்துல இதெல்லாம் பார்க்கக்கூடாதுன்னு பேசிடறது. அடுத்த நாள் எல்லாரும் அப்பாடா தொல்லை விட்டுதுன்னு இருப்பாங்க. ஆர்வக்கோளாறு இருக்கறவங்க , உப்பு போட்டு கொப்பளியேன் சரியாகிடும்ன்னு அட்வைச் பண்ணுவாங்க..எதுக்கு திருப்பி கதை கேட்கவா ...ஆனா நாம தான் வித்தியாசமான ஆள் ஆச்சே உப்பு தண்ணி கொப்பளிச்சேனோ ஒத்துக்கவே ஒத்துக்காது அப்பறம் ம்...ஆங் கூட சொல்லமுடியாத அளவு ஆகிடும். அப்படியே பேசாம சைகை காட்டிட்டு இருந்தா அடுத்த நாள் சரியாகிடும்.



சாப்பாடு .. இது ஒரு கடமை மாதிரி சமைக்கறதோ சாப்பிடறதோ ரெண்டுமே தான்.
முதல்ல சாப்பிடறது சொல்லறேனே ...சின்ன வயசில எல்லாரும் என்ன சாப்பிட்டன்னு கேட்டா தண்ணிக் குடிச்சேன்னு சொல்லுவேனாம். நிஜத்தண்ணி தான். தண்ணிக் குடிச்சே பேசுவாப்பா இவன்னு சொல்லுவாங்க.நான் பால் குடிக்கறேன், இட்லி சாப்பிடறேன்னா ஊருக்கே தெரியும் . கத்தி அழுது அட்டகாசம் செய்து தான் எதுவுமே. காலேஜ் படிக்கும் போதும் அம்மா பால் டம்ளரைக் கொண்டுவந்து கொடுப்பாங்க அங்க வைங்கன்னு சொல்லிட்டு மறந்துடுவேன் ஆறி ஆவலாப்போனப்பறம் அம்மா இன்னும் குடிக்கலயான்னப்பறம் அப்படியே ஊத்திக்குவேன். சில சமயம் அவங்க பாக்கலன்னா குடிக்காம காலேஜுக்கும் போயிடுவேன்.சாயங்காலம் திட்டு விழும் . அப்படியே வயிறு சுருங்கிப்போச்சு. பசின்னா என்னன்னு தெரியாது.பையன் வயத்துல இருந்தப்ப தவிர அப்ப மட்டும் கடோத்கஜன் மாதிரி அடுத்து அடுத்து ன்னு உள்ள தள்ளினேன். எப்பவும் ஹோட்டல் ல காசுக்கொடுக்கறவங்க வருத்தப்படறமாதிரி மீதி வைக்காம எந்திரிக்க மாட்டேன். கல்யாண வீட்டுல வைக்கற முதல் கரண்டி சாதத்திலயே ரசம் சாம்பார் வத்தகுழம்பு மோர் எல்லாம் சாப்பிட்டுறுவேன். பரிமாறறவங்க பக்கத்துலயே நின்னு ஆச்சரியமா பாப்பாங்க.


சமைக்கிறதும் அப்படியே தான். அடுக்களையிலேயே இருக்கறது பிடிக்காது ...ஹாலிலேயே எவ்வளவு நேரம் உட்கார்ந்து டிவி அரட்டைன்னு இருக்க சொன்னா சந்தோஷமா இருப்பேன். கடமைக்காக சரியான நேரத்துக்கு அடுக்களையில் நுழைந்து கடகட ன்னு எல்லாத்தையும் செஞ்சுட்டு சட்டுபுட்டுன்னு வெளியில வந்துடனும் எனக்கு. அப்புறம் யாராவது நின்னு என்ன செய்யறான்னு பாக்கவும் கூடாது .கல்யாணம் ஆனதும் மாமியார் கிட்ட என் சமையல் தானே நீங்க ஆபிஸ் போங்க சமைச்சு வைக்கறேன் மதியானம் வந்து சாப்பிடுங்கன்னு சொல்லிட்டேன். யாராவது பாத்தா படபடன்னு வந்து சரியா வராது. அடுக்களைக்குள்ள நுழையற வரை இன்னைக்கு என்ன மெனுன்னு யார் கேட்டாலும் தெரியாதுங்கறது தான் பதில். என்ன சமைக்கறதுன்னு யோசிக்கறமாதிரி கஷ்டம் உலகத்துல வேற கிடையவே கிடையாதுன்னு எனக்கு தோணும். யாரும் அதுக்கு ஹெல்ப் செய்ய மாட்டாங்க. பின்ன தோசை அப்படின்னா மாவு இல்ல வேற சொல்லுங்க... அடுத்து ...வேண்டாம் என்ன முடியுமோ அதச்செய் ன்னு பேசாம இருந்துடுவாங்க . எளிமையான விஷயம் அப்படிங்கறதுல எக்ஸ்பர்ட் ன்னு பேர் வாங்குவேன். கூட்டாஞ்சாதம் , சொதின்னா யாரு செய்யறதுன்னு கொஞ்சம் சோம்பேறித்தனம்.
மதுரா சொன்னா மாதிரி கடகடன்னு முடிக்கறதுல எதயாச்சும் கொட்டி கவுத்து தான் வேல செய்வேன். ஒரு தடவை பூரி செய்துட்டு அடுப்ப ஆப் பண்ணவே இல்லை. பெரிய வாணலியா , அடியில குறைச்சு வச்சு இருந்த தீ தெரியல. சூடாகி சூடாகி பத்திக்கிச்சு வாணலி திகு திகுன்னு எரியுது. கடவுள் தான் தினம் தினம் காப்பத்தறார்.


புத்தகம் படிக்கறது ... சின்ன வயசுலயே குண்டு குண்டு புத்தகம் அட பாட புத்தகம் இல்லங்க. நாவல் படிச்சு கண்ணாடி போடற நிலைமை . சாப்பாடு படிக்கும்போது புக் வேணும். சமைக்கும்போதும் கூடவே புக்கோ நியுஸ் பேப்பரோ எதாச்சும் இருக்கும் கையில. சின்னதுல அம்மா சொல்லுவாங்க காய் நறுக்கிட்டு இருக்கேன் போ போய் குக்கர கொறச்சி வச்சுட்டு வான்னு நான் புத்தக சுவாரசியத்துல போய் அணைச்சுட்டு வந்துருவேன். அப்பறம் அவங்க
என்ன ஒரு மாதிரி சத்தமே இல்லயேன்னு போனா தெரியும் ...அப்பா சொன்னத சரியா செஞ்சாளான்னு நீதான் பின்னாடி போய் பாக்கனும் அப்படிம்பாங்க. ஒதடு தேயறதுக்கு உள்ளங்கால் தேயலாம்பாங்க அம்மா. வீட்டுக்கு வந்து புக் போடுவாங்களே வாரப்பத்திரிக்கை அது எல்லாம் சீக்கரம் முடிச்சுட்டு அண்ணன் எப்ப வருவாங்க ன்னு ஒக்காந்து இருக்கற்து. பக்கத்து வீட்டுல வாங்கற வண்ணத்திரை கூட படிக்கறது..லீவுக்கு சித்தி ஊருக்கு போனா ரெண்டு ஸ்டூல் போட்டு பரண் மேல ஏறி பழைய பாக்கெட் நாவல் எல்லாம் எடுத்து படிக்கறது.
இப்பவும் தான் தில்லி தமிழ் சங்கத்துல இருந்து நாவல் கட்டுரைத் தொகுப்புன்னு பொழுது போகுது. சேர்ந்த புதிது ஒவ்வொரு முறையும் விகடன் கல்கி ஆண்டுவிழா மலர் இதெல்லாம் கூட எடுத்து வந்து படிச்சேன் .
பழய அமுதசுரபி , வாரப்பத்திரிக்கையில் கிழிச்சு பைண்ட் பண்ண நாவல் கள் , பழைய பூந்தளிர் , காமிக்ஸ் எதுவுமே இப்பவும் திகட்டாம திருப்ப படிப்பேன். இப்படி எல்லாம் விழுந்து விழுந்து பாடத்தை படிச்சு இருந்தா ...ஹ்ம் ...எதச்செய்யணுமோ அதத்தவிர மத்ததெல்லாம் செய்யறதே பழக்கமாகிப் போச்சு.

யார்கிட்ட குடுக்கறது தயவுசெய்து திட்டாதீங்கப்பா ...இந்த கடவுள் பத்தி எழுதிட்டு இத்தன கார்டு எழுதிப்போடுங்கன்னு சொல்லி மத்தவங்கள மாட்டி விடறமாதிரி தலைப்பா போச்சு.


பொன்ஸ்
வடுவூர் குமார்
ஒப்பாரி
சென்ஷி
அன்புத்தோழி

38 comments:

இலவசக்கொத்தனார் said...

சரிதா. நீங்களே நல்லா சமைக்க ஆரம்பிச்ச உடனே (!!) சமைக்கறதுல தானா ஆர்வம் வந்திடும்.

நல்லாச் சாப்பிடுங்க. ஓக்கே?

பங்காளி... said...

இப்டி எல்லாரும் சொந்த செலவுல சூனியம் வச்சிக்கறங்களேன்னு கவலையோட பார்த்துட்டு இருந்தேன்....அந்த லிஸ்ட்ல நீங்களும் சேர்ந்தாச்சா.....

ஆனாலும் நீங்க அப்படி ஒன்னும் வ்வியர்ட் இல்லை லட்சுமி.......அநியாயத்துக்கு சென்சார் பண்ணீட்டீங்களோ....

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வரும் கொத்தனார்ஜி ..ஈசியா இருக்கறது ஆர்வமா சமைச்சு வைப்பேன்.கஷ்டமானது செய்யனும்ன்னு கற்பனை கூட பண்ணறது இல்ல.
நல்லா சாப்பிடறதா...எல்லா
வேளையும் ஒழுங்கா சாப்பிட்டாலே போதாதா?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\ஆனாலும் நீங்க அப்படி ஒன்னும் வ்வியர்ட் இல்லை லட்சுமி.......அநியாயத்துக்கு சென்சார் பண்ணீட்டீங்களோ....//

அப்படில்லாம் சென்சார் இல்லங்க
ஏற்கனவே எழுதணவங்க விஷயம் எல்லாம் எனக்குள்ளயும் இருக்கு.
அத தவிர இது.
பயங்கரமான கோவம்,
பிடிவாதம் ..நியாபகமறதி இதுல எக்ஸ்ட்ரிம் லெவல் ஆளுதான்.

துளசி கோபால் said...

/அப்புறம் யாராவது நின்னு என்ன செய்யறான்னு பாக்கவும் கூடாது .//

ஹா............. அப்படியா? தெரியாமப்போச்சே:-)))))

பொன்ஸ்~~Poorna said...

நானும் உங்களை மாதிரி தான்.. பின்னால நின்னு யாரும் பார்க்கக் கூடாது என்கிறது சமையல் அறையில் மட்டுமில்லை, பெருக்குவது, துடைப்பது, பாத்திரம் துலக்குவது, துவைப்பது, எந்த வேலைக்கும் பின்னால வந்து 'சரியா செய்திட்டியா'ன்னு அம்மா கேட்டாங்கன்னு வைங்க, "இந்தா, நீயே செய்யி" என்று சொல்லி கையில் கொடுத்திட்டு அடுத்த வேலைக்குப் போயிடுவேன் :-D

எங்கம்மா கையால நான் கத்துகிட்ட சமையல்னு ஒண்ணுமே இல்லை. தானா புத்தகம் படிச்சி கத்துகிட்டது தான். அதான் அவங்க சொல்லி, நம்ம செய்யணும்னாலே அவங்க பக்கத்தில் நின்னு பார்க்கக் கூடாதுன்னு ஒரு ரூல் இருக்கே.. அப்புறம் எப்படி? :)

பணியிடத்தில் கூட அப்படித் தான். என் வேலையை எனக்குக் கொடுத்தாச்சா.. நீங்க உங்க வேலையப் பாருங்க, நான் முடிச்சி வைக்கிறேன்னுடுவேன் :)

என்னை யோசிப்பவர் வேற கூப்பிட்டிருக்கார்.. சீக்கிரமே வரேன் :))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

துளசி அதான் அன்னைக்கே சொல்லிட்டேனே தலைகால் புரியாம இருந்தேன் .சமைச்சுருக்கலாம் எதாச்சும்.
உங்கள இன்னும் கவனிச்சிருக்கலாமோன்னு
இப்பக்கூட கவலை.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பொன்ஸ் , பின்னாடி கூட்டும் போது வந்து நிக்கறதா...கதவு பின்னால வெளக்கமாறு இருக்கும் ...எடுக்கப்
போற நேரம் ...ஏண்டி நேரம்
ஆச்சே கொஞ்சம் வீட்டக்கூட்டக்
கூடாதான்னு கேட்டதுமே அங்கயே
வச்சிட்டு போயிடுவேன். கெட்டகுணம்.
யாரும் சொல்லி செய்யக்கூடாது.
நானும் அம்மாக்கிட்ட கத்துக்கல சமையல். அம்மா ஊருக்குப் போனா நானே சமையல்.அப்பா உப்பு மட்டும் கம்மியா போடு நாங்க அப்புறம் போட்டுக்கறோம் சாதத்துல .அதிகமா போனா குறைக்க முடியாதுன்னு சொல்லுவாங்க. எதாச்சும் சொல்லிக்குடுக்கனும்ன்னு கண்டிப்பா கிச்சன்க்குள்ள கூட்டிட்டு போனா ...ம். ஒகே ஒகேன்னு தலையாட்டி வச்சுப்பேன்.

சென்ஷி said...

//யார்கிட்ட குடுக்கறது தயவுசெய்து திட்டாதீங்கப்பா ...இந்த கடவுள் பத்தி எழுதிட்டு இத்தன கார்டு எழுதிப்போடுங்கன்னு சொல்லி மத்தவங்கள மாட்டி விடறமாதிரி தலைப்பா போச்சு.//

:)))

சென்ஷி

சென்ஷி said...

// பங்காளி... said...
இப்டி எல்லாரும் சொந்த செலவுல சூனியம் வச்சிக்கறங்களேன்னு கவலையோட பார்த்துட்டு இருந்தேன்....அந்த லிஸ்ட்ல நீங்களும் சேர்ந்தாச்சா.....

ஆனாலும் நீங்க அப்படி ஒன்னும் வ்வியர்ட் இல்லை லட்சுமி.......அநியாயத்துக்கு சென்சார் பண்ணீட்டீங்களோ.... //

உண்மையாவா :)0

சென்ஷி

கோபிநாத் said...

அட....இப்பதான் போன பதிவுக்கு பின்னூட்டம் போட்டு போனேன் அதுக்குள்ள Templateஐயும் மாத்தி பதிவும் போட்டுட்டீங்க ;-)))


\\பேசிக்கிட்டே இருக்கறது\\.......உங்க ரங்கமணி நிலைமையை நெனைத்து பார்த்தேன் ;-))))))))


சாப்பாடு விஷயம் எனக்கும் இப்படி தான்........ரொம்ப தூரம் ;-)))

\\என்ன சமைக்கறதுன்னு யோசிக்கறமாதிரி கஷ்டம் உலகத்துல வேற கிடையவே கிடையாதுன்னு எனக்கு தோணும்.\\

இங்கையும் கொஞ்சனால் முன்னாடி சமைக்கும் போது எனக்கும் அப்படி தான் தோணுச்சி.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சென்ஸார் பண்ணாம யாரும் எழுத மாட்டாங்க சென்ஷி.உண்மைதான்.
எல்லாத்தையும் சொல்லிட்டா
எப்படி.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

என்ன பண்ண கோபிநாத்...என் பதிவு சில பேருக்கு சரியா வேலை செய்யலயாம்...பின்னூட்டம் போட முடியலயாம்...லிங்க் வேல செய்யலயாம்
எதாச்சும் செஞ்சு பாவம் அவங்க
ஆசையை நிறைவேத்தனுமில்லையா
டெம்ப்ளேட் மாத்தியாச்சு.பொன்ஸ்க்கு
போன் போட்டாச்சு..சீக்கிரம் சரியாகும்.

வடுவூர் குமார் said...

வின் 2000 இல் சரியாக தெரிகிறது.என்னையும் டேக் செய்ததற்கு நன்றி.
இனிமேல் தான் யோசிக்கனும்.
பயர் பாக்ஸ்ஸில் எழுத்து சின்னதாக தெரிகிறது,ஆனால் அது உங்கள் கையில் இல்லை.
நாங்க பார்த்துக்கொள்கிறோம். :-))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

மறுமொழிக்கு நன்றி வடுவூர்குமார் அவர்களே. டேக் யோசிச்சி எழுதுங்க..இல்லாட்டி வீட்டுல இருக்கறவங்க கேட்டு எழுதுங்க.

காட்டாறு said...

எனக்கு ரொம்ப நாளா தூசியும் தும்பும் உள்ள வீட்ட பாக்கணுமுன்னு ஆச. அப்படி இருந்தா பழங்காலத்து வீடுன்னு ஒரு நெனப்பு எனக்கு. உங்க வீட்டுக்கு வந்துரலாம் போலவே.

வெற்றி வெற்றி வெற்றி! என்னடா இவ நம்ம தலைவர் எம்ஜிஆர் மாதிரி கூவுறான்னு பல தல திருமுறது தெரியுது. அது முத்துலெட்சுமி யக்காவுக்கு தெரியும். நன்றி. உங்கள் முயற்சிக்கு மிக்க நன்றி.

மங்கை said...

//யாராவது பேசிட்டாலும் திருப்பி வாங்கிடுவேன் மைக்கை.//

அதான் எனக்கு தெரியுமே..:-))...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வெற்றி பெற்றதிற்கு வாழ்த்துக்கள் தங்கச்சி [காட்டாறு நீங்க தங்கச்சி தானே..]உங்களுக்காகத்தானே டெம்ளேட் எல்லாம் மாத்திருக்கேன்.

தூசி தும்புன்னு அப்படியே பழங்காலத்து வீடுன்னு கற்பனை
பண்ணிட்டீங்களா? நான் தான்
எப்பவாவது பிசாசு சுழண்டு வேலை
செய்யறமாதிரி சுத்தம் செய்வேனே.
பொருட்கள் அங்க இங்க இறைஞ்சு கிடக்கும் அவ்வளவு தான்.. அடப்பாவமே இதான் உண்மையிலேயே சொ.செ.சூ. [விளக்கம் வேணும்ன்னா பங்காளி கமெண்ட் பாருங்க.]
நீங்க வரீங்கன்ன வுடனே சுழண்டு சுத்தம் பண்ணிடுவேன்.B-)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆமா மங்கை நேரிலோ
போனிலோ நிறைய நாம பேசிக்கறோமே
[ஓ நாம இல்ல
நான் பேசறேன் நீங்க
கேக்கறீங்க அப்படித்தானே]
குறைகுடம் தான் தளும்பும் சரிதானே?

அபி அப்பா said...

நான் இங்க கொஞ்ச நேரம் எட்டி பாக்கலை, அதுக்குள்ள 19 வந்துடுச்சே! இன்று காட்டாறுவின் கவிதை படித்தேன். கலக்கமாயிடுச்சு! போய் படிங்க சகோதரி!

Arun's Thoughts said...

வணக்கம் முத்துலெட்சுமி,

நீங்கள் கேட்ட weird கேள்விகளுக்கு விடை அளித்திருக்கிறேன். கண்டிப்பாக பாருங்கள்

அன்புத்தோழி

VSK said...

நானும் அழைத்திருந்தேன் உங்களை!

ஆகவே என் அழைப்பையும் ஏற்றதாகக் கொள்கிறேன்!

சுவையாக இருந்தது ....பதிவுதான்!
:))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி விஎஸ்கே அவர்களே.
சில நாட்களாக சிறிது நேரம் தான்
தமிழ்மணத்தை படிக்க கிடைப்பதால்
தாமதமாகத் தான்
உங்கள் பதிவுக்கு சென்று படித்தேன். என் பெயரை அழைத்ததாகத் தெரியவில்லையே.
வேறு யாரையோ நினைத்துக் குழம்பிவிட்டீர்களோ ?
பரவாயில்லை யார் மாட்டிவிட்டால்
என்ன ?

VSK said...

ஆம்! குழம்பித்தான் "விட்டிருக்கிறேன்"!

தவறான தகவலுக்கு வருந்துகிறேன்.
எப்படியோ உங்களையும் என் பதிவுக்கு வரவழைக்க நான் செய்தது எனக் கொள்கிறேன்!

:))

80% கொடுத்திட்டு, 100% என நினைத்துக் கொண்டிருக்கிறேன்!
:(

Unknown said...

மொத்தத்தில் மணித்துளிகள் ஒவ்வொன்றும் தங்கள் கட்டுப்பாட்டில் போலும்!

வல்லிசிம்ஹன் said...

எனக்கும் உனக்கும் இசைந்த பொருத்தம் என்ன பொருத்தமோ.:-0)
மீண்டும் வரேன்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\சண் ஷிவா said...
மொத்தத்தில் மணித்துளிகள் ஒவ்வொன்றும் தங்கள் கட்டுப்பாட்டில் போலும்! //
அப்படித்தான் சண் ஷிவா..அப்படி என்
கட்டுப்பாட்டில் இருந்தால் சந்தோஷமாய்
வளைய வருவேன்.இல்லைன்னா..
என்னோட ஆறா...வது முகம்
காட்டப்படும்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\வல்லிசிம்ஹன் said...
எனக்கும் உனக்கும் இசைந்த பொருத்தம் என்ன பொருத்தமோ.:-0)
மீண்டும் வரேன். //

நீங்க தான வல்லி ஏதோ ஒரு பின்னூட்டத்தில்சொன்னீங்க எல்லாரும்
ஏறக்குறைய ஒரே மாதிரி சிந்திப்பதாலேயே
எழுத வந்திருக்கிறோம் பொலன்ன்னு.

வாங்க வாங்க மீண்டும் மீண்டும். வருக.
மறுமொழிகளை தருக.

நாகை சிவா said...

//அதது எடத்துல துடைச்சு வைக்க வீடு என்ன ம்யுசியமான்னு திருப்ப கேட்பேன்//

ரீப்பிட்டு.... நம்ம வீடும் இப்படி தான், அதிலும் நம்ம ரூம் ரொம்பவே சூப்பரா இருக்கும்.....

நாகை சிவா said...

//நல்லா சாப்பிடறதா...எல்லா
வேளையும் ஒழுங்கா சாப்பிட்டாலே போதாதா? //

அது சரி... இருந்தாலும் நல்ல சாப்பாட்டை எப்படி சாப்பிடனும் என்ற டவுட் இருந்துச்சுனா நல்லா சாப்பாட்டை சமைத்து(!!!) இல்ல தயார்(!!!) செய்து என்னயே கூப்பிடுங்க... எப்படி சாப்பிடனும் என்று சாப்பிட்டு காட்டுறேன்...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நாகை சிவா நல்லா யாராச்சும் சமைச்சுத்தந்தா ஒரு வாய் கூட
சாப்பிடுவேன் தான். ஆனா
நான் நல்லா சமைச்சு இருந்த
சாப்பாட்ட சாப்பிட்டு நல்லாருக்குன்னு
சொல்லிட்டாங்கன்னா எப்போத விட
மனசு நிரஞ்சு ஒன்னும் இறங்காது.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அபி அப்பா நீங்க சொன்னீங்களேன்னு
காட்டாறோட கவிதையைப் படிச்சு
உணர்ச்சிவசப்பட்டு பின்னூட்டம் குடுத்துட்டேன். கவிதை எல்லாம்
அனுபவமாத்தான் இருக்கனும்ம்னு
அவசியமில்லையே.. அந்த நேரம்
சட்டுன்னு எதோ தோணிடுச்சு.

கண்மணி/kanmani said...

யக்கா வீடு சுத்தம்பண்ரது..அடுத்து பேசுவது குறிப்பா அடுத்தவங்கள பேசவிடாம நாமே பேசறது நீயும் என்ன மாதிரியே இருக்க அக்காவ்.
இந்த தொண்டைகட்டு சமாச்சாரம் நம்மட்ட அதிகம்.ரங்கமணிகிட்ட ஆல்வேஸ் திட்டுதான்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கண்மணி நாம ஒரே மாதிரியா...சரிதான்..பாவம்
உங்க ரங்கமணி.
ஆனா கடவுள் எதிர் எதிர் குணமுள்ளவங்கள சேர்த்துவைத்து
குடும்பத்தக் காப்பாத்திடறார் பாருங்க.
இல்லன்னா ரெண்டுபேரும்
குப்ப பண்ணிட்டு இருந்தாலோ
ரெண்டு பேரும் செலவு செய்தாலோ
உருப்பட்டாப்பல தான்.

Hariharan # 03985177737685368452 said...

//அது சரி... இருந்தாலும் நல்ல சாப்பாட்டை எப்படி சாப்பிடனும் என்ற டவுட் இருந்துச்சுனா நல்லா சாப்பாட்டை சமைத்து(!!!) இல்ல தயார்(!!!) செய்து என்னயே கூப்பிடுங்க... எப்படி சாப்பிடனும் என்று சாப்பிட்டு காட்டுறேன்...//


நாகை சிவா,

அது என்ன என்னயே கூப்பிடுங்க...

நல்ல சாப்பாடுன்னா நாங்களும் அதை நல்லாவே எப்படிச் சாப்பிடுவதுன்னு டெமோவுக்கு சாப்பிட்டுக் காட்டுவோமே!

//கல்யாண வீட்டுல வைக்கற முதல் கரண்டி சாதத்திலயே ரசம் சாம்பார் வத்தகுழம்பு மோர் எல்லாம் சாப்பிட்டுறுவேன். பரிமாறறவங்க பக்கத்துலயே நின்னு ஆச்சரியமா பாப்பாங்க.//

கல்யாணவீட்ல பரிமாறுபவர்கள் எல்லாம் எங்களால அத்லெடிக்கா ஓடியாடவேண்டி வரும்! சின்னவயசுல எங்களோட சிங்கிள் இன் டேக்குக்கு பயப்படுவாங்க!

எங்களையும் ஆச்சரியமாத்தான் பாப்பாங்க! இடமே ரணகளமாயிருக்கும்! பீமன், பகாசுரன்னு ஒரே பந்தியில பக்கத்தில் அமர்ந்து கும்மியடிப்பதைப் பார்த்து!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஓ ...அது சரி...ஹரிஹரன் அப்ப சமைச்சவங்களுக்கு இருக்காதே அதான் ஓடறாங்க.

பாவமா இன்னும் கொஞ்சம் போடட்டுமான்னு பார்த்து பார்த்து
பரிமாறுவாங்க எங்கள மாதிரி ஆளுக்கு.
ஏன்னா அவங்களுக்கு மிஞ்சுமே.

Meenapriya said...

அக்கா தயவுசெய்து template மாத்திருங்க ஒன்னுமே படிக்க முடியலை

முத்துலெட்சுமி/muthuletchumi said...

தங்கச்சி இப்போதானேம்மா லிங்க் வேல செய்யலேன்னு டெம்ப்ளேட் மாத்தினேன். இப்போ என்னாச்சும்மா கலர் சரியா இல்லாததால படிக்க முடியலயா?

மாத்த முயற்சி செய்யறேன்.