இணையம் கிடைக்காத நேரமொன்றில் வழக்கம்போல பாதியிலிருந்து இந்த கொரிய திரைப்படம் ஒயாசிஸ் (Oasis) ஐ பார்க்கத்தொடங்கினேன் . அழகான பாடல் ஒன்றின் வரிகள் கீழே வந்து கொண்டிருந்தது. ஆனால் பாடலுக்கு வாயசைத்து நடிப்பதோ மூளையின் கட்டளைக்கு உடம்பு ஒத்துழைக்க மறுக்கும் ஒரு பெண். ஆவலால் தொடர்ந்து பார்க்க ஆரம்பித்தேன். சற்றே குறைப்பாடு உடைய ஹீரோ. அதிகப்படியான பாதிப்பை உடையவளாக ஹீரோயின்.(cerebral palsy)
தனியாக அறையில் இருக்கும் கதை நாயகிக்கு ஜன்னல் வழியாகத் தெரிகிற மரக்கிளையின் நிழல் தினம் பயமுறுத்துவதாக இருக்கவே .. அவன் அதை மந்திரத்தில் ஒரு நாள் மறைத்துவிடுவதாக வாக்களிக்கிறான். வீட்டிற்கு அவளின் அண்ணனும் அண்ணியும் வரும் முன்னர் அவன் மீண்டும் கதவைப் பூட்டி சாவியை பழையபடி இருந்த இடத்தில் வைத்துவிட்டுப் போய்விட்டான். மறுநாள் அவர்கள் இருவருமாக அவுட்டிங் செல்கிறார்கள். அவளை உப்புமூட்டையாகத் தூக்கிக்கொண்டு அவளின் சக்கர நாற்காலியையும் தூக்கியபடி அழைத்துச் செல்கிறான்.
ரயிலில் மற்ற சாதரண காதலர்களைப் போல அவர்களும் இருக்கவேண்டுமென்று அவள் கற்பனை செய்கிற காட்சியில் கதாநாயகி எழுந்து நின்ற போது தான் சாதாரணமான ஒரு நடிகை எப்படி அப்படி பாதிப்பினை உடையவளாக நடித்தாள் என்று எனக்கு ஆச்சரியாக இருந்தது. மூன்ஸோரி (moon so-ri) நல்ல அழகான நடிகை. அதே சமயம் குறைப்பாடு உடையவராக கை கால் முகம் எனக் கோணியபடி அதே சமயம் கோபம் மகிழ்ச்சி போன்ற உணர்ச்சிகளைக் காண்பிக்க அதே கோணல்களிலேயே வேறுபாடுகளைக் காட்டி அசத்தி இருந்தார். கதை நாயகனும் நன்றாக நடித்திருந்தார்.
இவர்கள் இருவருமாக உணவருந்த சென்ற இடத்தில் நாசூக்காக வெளியேற்றப்படுகிறார்கள்.ஒரு முறை கதைநாயகனின் அம்மாவின் பிறந்தநாளுக்கு பெரிய உணவு விடுதியின் குடும்ப நிகழ்ச்சிக்கே அழைத்துப் போகிறான். அனைவரும் அவளை அழைத்து வந்ததற்காக அவன் மேல் கோவம் கொள்கிறார்கள். அண்ணன்காரனின் பேச்சு மூலம் அண்ணன் குடித்துவிட்டு கார் ஓட்டியதால் இறந்துபோனவர் நாயகியின் அப்பா என்றும் குடும்பத்தின் முக்கிய சம்பாதிக்கும் ஆள் என்பதால் அண்ணனுக்கு பதில் தான் சிறைக்கு செல்வதாகக் கூறி கதாநாயகன் சென்றதும் எனக்குத் தெரிந்தது. (அது படத்தின் ஆரம்பத்தில் வந்த காட்சி போலும். சீரியல் ரீகேப் போல இதை திரும்பச் சொன்னது எனக்கு வசதியாக இருந்தது.) தான் குற்ற உணர்ச்சியால் அவள் வீட்டுக்குப் தேடிப்போய் பார்த்ததாகவும் இப்போது தாங்கள் நண்பர்கள் என்றும் சொல்கிறான். நான் செய்ததற்கு உனக்கு எப்படி குற்ற உணர்ச்சி வருகிறது என்று அவன் அண்ணன் கோபிக்கிறான்.
பிறகு இருவருமாக கரோக்கி இடத்தில் சென்று பாட்டு பாடி தங்கள் வருத்தம் கோபங்களை மறந்து வீடு திரும்பும் நேரம் கதாநாயகிக்கு கதாநாயகன் மேல் அன்பு மிகுந்து அவளே அவனை தன்னோடு இரவு தங்கும்படி கேட்கிறாள். இருவரும் தனித்திருக்கும் போது எதிர்பாராத விதமாக அவளின் அண்ணனும் அண்ணியும் வந்து கதாநாயகன் நாயகியை பலாத்காரம் செய்ததாக பிடித்துக்கொடுக்கிறார்கள்.
அவளுக்கு கிடைக்கும் உதவித்தொகையைக் கொண்டு வாழ்ந்து வரும் அண்ணனும் அண்ணியும் மேலும் இக்குற்றத்திற்காக கதாநாயகனின் அண்ணனிடம் பணம் கேட்கிறார்கள். அவர்கள் மறுத்துவிடுகிறபடியால் கதாநாயகன் சிறைவாசம் அனுபவிக்க நேரிடுகிறது. கதாநாயகிக்கு நோயின் தீவிரத்தினால் தன் பக்கத்து நியாயத்தை சொல்ல முடியாத துயரத்தில் முட்டி மோதி அழுவதை அவள் பயத்தில் அழுவதாக போலீசாரும் கணக்கில் எடுக்கிறார்கள்.
நாயகனின் அம்மா ஒரு பாஸ்டரை அழைத்து வந்து நாயகனுக்கு புத்தி வரும்படி ப்ரார்த்திக்கிறார் அப்போது கதாநாயகன் தப்பித்துச் சென்று கதாநாயகியின் வீட்டு ஜன்னலுக்கருகில் இருக்கும் மரத்தை மேலே ஏறி வெட்டுகிறான். இவனுக்கு புத்தி மழுங்கி இருப்பது உண்மைதான் . எதற்காக செய்கிறான் என்று எல்லாரும் கோவப்படும் போது கதாநாயகி மரம் வெட்டப்படுவதைப் பார்த்து தன் ஒரே பொழுதுபோக்கான வானொலியின் ஒலியை அதிகமாக வைத்து அவனுக்காக ஜன்னலில் முட்டிக்கொள்கிறாள்.
அவன் அங்கிருந்தே மரத்தின் மேல் நின்றபடி அந்த பாடலுக்கு ஆடுகிறான். இந்த சிறைவாசம் முடியட்டும் இளவரசி உனக்கு மீண்டும் பணிவிடை செய்ய வருவேனென்று அவன் கடிதம் வருவதோடு படம் முடிந்து விட்டது.
நடுவீதியில் இரவில் ட்ராபிக் ஜாமில் இளவரசி இளவரசி என்று அவளை குழந்தையைப் போல தூக்கிக்கொண்டு ஆடுகிறான்.(படத்தில் கதாநாயகின் பெயருக்கு கொரியனில் அர்த்தம் இளவரசியாம் ) அவளுக்கு உணவை ஊட்டியபடியே தன் கனவில் அவர்கள் இருவரும் நடனம் ஆடியதையும் கூடவே ஒரு இந்தியப்பெண்ணும் ஒரு குட்டி யானையும் .. ஒரு பையனும் நடனமாடியதாகக் கூற கற்பனைக்காட்சி உருபெற்று நிஜமாகவே ஒரு குட்டியானையும் ஒரு பெங்காலிப் பெண் என நினைக்கிறேன் இவர்களோடு நடனமாடுகிறார்கள். வாழ்க்கையில் இருவருக்குமான பல சோகங்களுக்கு நடுவே இந்த சொர்க்கமான நொடிகள் ஒயாசிஸாக ..
எளிமையான அழகான காதல்கதை. இன்னோரு முறை முழுதுமாகப் பார்த்து ரசிக்க ஆசை.
17 comments:
ஆஹா.... உலகத்திரைப்படம் பார்க்க ஆரம்பிச்சுட்டீங்களா? இனி நீங்க இந்த பேட்டைக்கும் ரவுடிதான்க்கா :)
நான் ஆதவன் , நான் இதுக்கு முன்னாடி 12 படம் எழுதி இருக்கேனே.. இருந்தும் ரவுடியாக முடியல..:)
நல்லாயிருக்கு தேடிப்பார்க்கிறேன்.
பாலைவனச்சோலை என்றதும் பழைசை சொல்றீங்கன்னு நினைச்சேன்
பார்த்த விதத்தினை சொல்லும் எழுத்துக்களில் - ம் வாய்ப்பு கிடைக்கும்போது பார்த்துவிட நினைக்கிறேன்! :)
//பேட்டைக்கு ரவுடிதான்க்கா//
ரைட்டு இனி கலக்கல் தான் :)
\\☀நான் ஆதவன்☀ said...
ஆஹா.... உலகத்திரைப்படம் பார்க்க ஆரம்பிச்சுட்டீங்களா? இனி நீங்க இந்த பேட்டைக்கும் ரவுடிதான்க்கா :)
\\
ரீப்பிட்டே...பார்த்துவிடுகிறேன் ;)
கானல் நீர்னு பேர் வைச்சிருக்கலாம். புதுப்பட விமர்சனம்னு நினைச்சு ஏமாந்துட்டேன்.
முத்தக்கா, Coffee Prince சீரியல் பாருங்க. கொரியந்தான் . 17 எபிசோட்தான். சூப்பரா இருக்கும். :)
மனதை நெகிழச் செய்த(Oasis) . படம் பார்க்கும் வாய்ப்பு இல்லை என்றாலும், உங்கள் பகிர்தல் படம் பார்க்கும் உணர்வை தந்தது
நீண்ட நாட்களுக்கு பிறகு படிக்கிறேன்,
தோழிக்கு எனது புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!!
அன்போடு,
இசக்கிமுத்து..
கானா பழசு போக அதே பேரில் புதுசும் வருதாமே :)
-----------------------------------
ஆயில்யன் வெளிநாட்டில் உங்களுக்குத்தான் எல்லாமெ தேடினால் கிடைக்குது .. தேடிப்பாருங்க..
-------------------------
கோபி நன்றி பாருப்பா..
------------------
சின்னம்மிணி கானல்நீரா முடிக்கலையே மீண்டும் அவங்க காதல் துளிர்க்க வழி இருக்காப்பல இருக்கே அதனால்.. அப்பப்ப பாலையில் கிடைக்கிற சிறு நிழல் மாதிரி சந்தோசம் வந்து போகுது.. :)
நீங்க சொன்னது யூ ட்யூப் ல இருக்கா தேடிப்பார்க்கறேன்பா..
தமிழ் உதயம் நன்றிங்க.. பொதுவா நான் பாத்த படத்தை மறந்துறாம இருக்கவே இங்க பதிஞ்சு வச்சிக்கிறேன்.. உங்களைப்போன்றவர்களுக்கும் அது உதவினா நல்லது தான் :)
------------------
வாங்க இசக்கிமுத்து நன்றி
உங்களுக்கும் புத்தாண்டுவாழ்த்துக்களும் பொங்கல்வாழ்த்துகளும்..:)
DVD கிடைக்குமா...
விக்னேஷ்வரி நீங்க தான் கேட்டு சொல்லுங்களேன் நமக்கு இது போனற டிவிடிகள் எங்க கிடைக்கும்ன்னு.. :)
ஓ..உலகப்படமா!! கலக்குறீங்க மேடம்! :-)
நான் உலகப்படம் உள்ளூர் படம்ன்னு எல்லாம் விட்டு வைக்கிறதில்ல முல்லை.. எல்லா செண்டி கதைகளூக்கும் ரசிகை :)
நான் உலகப்படம் உள்ளூர் படம்ன்னு எல்லாம் விட்டு வைக்கிறதில்ல முல்லை.. எல்லா செண்டி கதைகளூக்கும் ரசிகை :)
நானும்...
ஓக்கேக்கா.. டவுன்லோடு செஞ்சு பாத்துடறோம்
நான் சென்னையில் உலக சினிமா dvd கடை வைத்துள்ளேன்.
என்னிடம் உள்ள திரைப்படங்களின் தொகுப்பு .
dvdworld65.blogspot.com
Post a Comment