January 19, 2010

பொங்கலும் தமிழ்படமும்

பொங்கல் அன்று தொலைகாட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்கவில்லை என்றால் சாமி குத்தம் . அதனால் நானும் நாலைந்து நிகழ்ச்சிகளைப் பார்த்துவைத்தேன். எஸ் எஸ் டிவியில் மதுமிதா பேட்டி.. அழகான பாடல்கள் , கனாக்கானும் காலங்கள் பாடலை காலை ஒலிபரப்பிலும் மாலை ஒலிபரப்பிலும் இரண்டு முறையும் கேட்டேன். விழாநேரங்களில் கூட எஸ் எஸ் டிவிக்காரங்க அனுமாரும் சாமியாருமாக வியாபாரங்களுக்கு நேரம் ஒதுக்கும் கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லை..

நீயாநானாவைக்கூட பாக்கவச்சிட்டாங்கன்னா பார்த்துகோங்க..சூர்யாவாச்சே..கல்விகடன்களுக்கு பேங்க்குக்கு அடுத்தபடியாக அகரமும் இருக்கிறதாம்.(இருக்கின்ற சிஸ்டத்தையே தொடர்ந்து வளர்க்கிறது எப்படி சரியாகும்? ) பார்க்கும் போது கலங்க வைப்பது என்பது இதிலும் தொடர்ந்தது. பல மாணவர்களைப் பற்றிக் கேள்விபட்டபோது வயிறு பகீரென்றது. 19 வருடங்களாக ஃபேஸ் மேக்கர் வைத்திருக்கும் ப்ரபசர் தனக்கு ஆபரேசனுக்கு முன்பாக சுத்தம் செய்யவந்த இளைஞன் எம்.ஏ படித்த கதையைக் கேட்டு கலங்கியதைச் சொன்னபோது நம்மையும் துக்கம் தொண்டையடைக்கச் செய்தார்.

நவநீதகிருஷ்ணன் கிராமப்புறப் பாடல் நிகழ்ச்சியும் அருமை. குழந்தைக்காக பிறந்ததலிருந்து அம்மா பாடும் பாடல்களை அவர் வரிசையாக விவரித்துக்கொண்டே பாடிய விதம் ரசிக்கும்படி இருந்தது.

”தமிழ்படம்” குழுவினரின் கலந்துரையாடல் பார்த்தேன். அசந்துவிட்டேன். அடுத்த ரயிலைப் பிடித்து தமிழ்நாடு சென்று முதல் ஷோ பார்க்கலாம் போன்ற ஆசையை உண்டாக்கிவிட்டார்கள். சிரிக்காமல் அவர்கள் பேசியது எனக்கு மிக ஆச்சரியம். அதும் ஒஹமசீயோ வைப் பற்றியும் ரெட் கேமிராவைப்பற்றியும் அவர்கள் பேசிக்கொண்டது எனக்கு வயிறுவலிக்க சிரிக்க உதவியா இருந்தது. ஒஹமசியோவின் வரிகளை வரலாற்று பொக்கிஷத்தை யாரும் பாட சிரமம் இல்லாம தேன்கிண்ணத்தில் வலையேற்றிய மைப்ரண்டின் கடமை உணர்ச்சியை , ஈடுபாட்டைச் சொல்லி சொல்லி வியந்து கொண்டிருந்தேன்.

இதற்குமுன் வந்த படத்தில் எல்லாம் எனக்கு உதட்டசைவு க்ளோசப்பில் இல்லை எனவே இந்த படத்திலாவது சரியாக செய்யவேண்டுமென்று கவனமெடுத்து செய்ததாகச் சொன்னார் ஹீரோ மிர்ச்சி சிவா .அதுவும் ஒஹம்சியா நாக்கமுக்க இடங்களில் எல்லாம் “நீயில்லாம நானில்லை ..நானில்லாம நீயில்லைனு ‘ அர்த்தம் இருக்கிறதா நினைத்துக்கொண்டு உருகி உருகி நடித்தார்களாம்.

’பச்சை பிங்க் தமிழன்’ பாட்டில் அவர் வெறுமே நடந்து தான் வந்தாராம். பில்டப்ங்கறது அவங்கவங்களா குடுத்துகிறது இல்லை சுத்தி இருக்கவங்க குடுக்கறதுதாங்கற தத்துவத்தை எளிமையாக விளக்கினார். ஹீரோயின் கடைசியாக நான் நடித்த பட ஹீரோக்களிலேயே இவர் தான் மிகச் சிறந்த கோ ஸ்டார் என்றார். ஹீரோ இதுவரை நீங்க எத்தனை படம் நடிச்சிருக்கீங்க என்று திருப்பி கேட்டால் இது தான் அவருக்கு முதல் படமாம், நல்லாத்தான் கிளம்பி இருக்காங்கப்பா..

22 comments:

Anonymous said...

ஆக மொத்தம் பொங்கல் டீவீ நிகழ்ச்சி ஒண்ணுவிடாம பாத்துட்டீங்கன்னு சொல்லுங்க :)

விக்னேஷ்வரி said...

ம், எனக்கும் சேர்த்து டிக்கெட் புக் பண்ணுங்கக்கா.

MyFriend said...

:-)
hehehehehe

எனக்கு ரெண்டு டிக்கெட் ப்ளீஸ் :-)

கோபிநாத் said...

ம்ம்ம்..டிவி பொங்கல் கலக்கல் ;)

தமிழ்படம் அடுத்த மாசம் வரும் போல..ரெடியாகுங்க ;))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பொங்கலுக்கு நாலு நாள் நிகழ்ச்சிங்க சின்னம்மிணி ,அதுல நாலே நால் தானுங்கோ நான் பாத்தேன் :)
---------------------

ஊருக்குப் போனும்ன்னா உடனே ரெடியாகிடுவீங்களே விக்னேஷ்வரி.. :)

கோமதி அரசு said...

முத்துலெட்சுமி, பொதிகையை விட்டு விட்டீர்களே,அதிலும் பொங்கல் பற்றி சிறப்பு நிகழ்ச்சிகள் வைத்தார்கள்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாம்மா மை ப்ரண்ட் ரெண்டு டிக்கெட்டாம்ல.. ஓஹோ.. :))
----------------
கோபிநாத் நன்றி.. எங்க ஊருலயே ரிலீஸ் செய்யமாட்டாங்களா :)

CS. Mohan Kumar said...

தமிழ் படம் நல்லா சிரிக்க வைப்பாங்கன்னு நிறைய எதிர் பார்ப்பு பாக்கலாம்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கோமதிம்மா.. எல்லாச் சேனலையும் மாத்தி மாத்தி நல்லது தேடினேன்...பொதிகையில் என்ன பார்த்தேன் ஞாபகம் வரல..பொதிகையிலும் ஒரு நாள் நவநீதகிருஷ்ணன் கிராமியப்பாட்டு வந்ததுன்னு நினைக்கிறேன்.
--------------
மோகன்குமார்.. ஆமா சிரிக்கவும் செய்யலாம் சிந்திக்கவ்ம் செய்யலாம்..
அதே சமயம் அவங்களுக்கு சினிமாக்காரங்களைக் கிண்டல் செய்வதா நினைச்சிடுவாங்களோன்னு பயம் போல..இது சினிமா ரசிகர்களாகிய எங்களின் தமிழ்சினிமாவைக் கொண்டாடும் வழின்னாங்க.. உண்மைதான்..நாம என்னதான் சொன்னாலும் இதுபோன்ற ஹீரோயிச சினிமா அன்பர்கள் தானே..

R.Gopi said...

அப்போ “பொங்கல்” உங்களுக்கு “பலே பொங்கல்” போல இருக்கே முத்துலெட்சுமி....

அப்படியே அந்த “தமிழ்படம்” டிக்கெட் புக்கிங் பண்றச்சே, எனக்கும் ஒரு டிக்கெட் ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...

//முத்துலெட்சுமி/muthuletchumi said...
பொங்கலுக்கு நாலு நாள் நிகழ்ச்சிங்க சின்னம்மிணி ,அதுல நாலே நால் தானுங்கோ நான் பாத்தேன் :)//

ஆஹா... இது வேறயா... கெளம்பிட்டாய்ங்கய்யா... கெளம்பிட்டாய்ங்க.... பெரிய க்ரூப்பா இல்லா அலையிறாய்ங்க...

மங்கை said...

அதானே டி வி இல்லாத ஒரு பண்டிகையா..

:)

pudugaithendral said...

டீவி பாத்தீங்களா!!!

நமக்கு அதுக்கு மட்டும் ஏனோ நேரம் கிடைக்க மாட்டேங்குது.

நல்லா எஞ்சாய் செஞ்சிருக்கீங்க. குட்.

சிங்கக்குட்டி said...

//பொங்கல் அன்று தொலைகாட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்கவில்லை என்றால் சாமி குத்தம்.//

ஹ ஹ ஹா தொப்பி தொப்பி (சந்திரமுகி சிரிப்பு)

அத விடுங்க இப்ப புதுசா டிக்கெட் சேல்ஸ் கூட இருக்கு போல?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

R.கோபி\\ நாலே நால் தானுங்கோ// ன்னு சொன்னா நாலே ’நாள்’ ந்னு நினைச்சிட்டீங்களா.. நாலே நாலு ப்ரோகிராம் தான் பாத்தேன்னு சொன்னே.. :)
--------------------------
வாங்க மங்கை உங்களுக்கென்ன ஊர் பொங்கல்.. அங்கயுமா டிவி ?
------------------------
தென்றல் வேலைகளை செய்துகிட்டே அங்கயும் இங்கயுமா டிவி பாத்துடவேண்டியது தான்.. :)சீரியல்கள் இல்லாத நாளாச்சே..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சிங்கக்குட்டி ’வானம் வசப்படும்’ எழுதறவர்ன்னு நிரூபிக்கிறீங்க.. சரியான கேள்வி கேட்டு என்னை தப்பிக்க வச்சீங்க..அவங்கள்ளாம் என்னை டிக்கெட் எடுத்துக்குடுக்க சொன்னாங்க..அதை சேல்ஸ் ந்னு சொல்லி காப்பாத்திட்டீங்க.. :)

Thamiz Priyan said...

பொங்கல், டிவி... பிரமாதம்...;-)

Deepa said...

நல்ல அலசல். நான் ஒரு ப்ரோக்ராமும் முழுசா பாக்க முடியல. :(

//கல்விகடன்களுக்கு பேங்க்குக்கு அடுத்தபடியாக அகரமும் இருக்கிறதாம்.(இருக்கின்ற சிஸ்டத்தையே தொடர்ந்து வளர்க்கிறது எப்படி சரியாகும்? )//
சரியான கேள்வி.

சந்தனமுல்லை said...

you are tagged here

http://sandanamullai.blogspot.com/2010/01/blog-post_19.html

இந்த வாட்டி டீவி பொங்கலா..நடத்துங்க! :-))

சாந்தி மாரியப்பன் said...

சமைக்கிறதுக்கும் கொஞ்சூண்டு நேரம் ஒதுக்கினீங்கன்னு சொல்லுங்க. :-))).

Chitra said...

ஹீரோயின் கடைசியாக நான் நடித்த பட ஹீரோக்களிலேயே இவர் தான் மிகச் சிறந்த கோ ஸ்டார் என்றார். ஹீரோ இதுவரை நீங்க எத்தனை படம் நடிச்சிருக்கீங்க என்று திருப்பி கேட்டால் இது தான் அவருக்கு முதல் படமாம், நல்லாத்தான் கிளம்பி இருக்காங்கப்பா............ha,ha,ha.......

☀நான் ஆதவன்☀ said...

’தமிழ்படம்’ பொங்கலுக்கே ரிலீசாகும்னு நினைச்சேன். ஆகல :(

சென்ஷி said...

:(

தமிழ்ப்படம் பேட்டியை பார்க்கலை நானு..