January 12, 2010

குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரிய குழந்தைகளுக்கும் தான்

உயிரும் சதையுமாய் இருப்பவர்கள் திரைப்படத்தில் உணர்ச்சிகளைக் கொட்டி நடிப்பது என்பது ஒரு வகை. அதிலும் கூட ஒவ்வொருவர் தான் தனித்திறமையோடு மிளிர முடிகிறது. ஓவியங்களாய் வரைந்தவை உயிர்பெற்று நடமாடும் வரைபட அசைபடங்கள் ( கார்டூன் அனிமேசன்) நாளுக்கு நாள் மனித கண்டுபிடிப்புக்களின் உச்சங்களைத் தொட்டு நிற்கின்றது. முப்பரிமாணத்தில் வரையப்படும் கதாபாத்திரங்கள் தன் அசைவுகளாலும் உணர்வு வெளிப்பாடுகளாலும் ஓவியங்கள் என்பதனையே நம்மை மறக்கச் செய்யக்கூடிய வல்லமை படைத்தவையாக இருக்கின்றன .

boundin


அழகான வெண்செம்மறி ஆடு ஒன்று . அது தன் பட்டுபோன்ற பளப்பளப்பான கம்பளியுடலுக்காகவும் அழகான துள்ளல் ஆட்டத்திற்காகவும் நண்பர்களால் நேசிக்கப்பட்டு வருகிறது. கம்பளி நீக்கப்பட்டுவிட்ட ஒருநாள் ”நான் அசிங்கமாக , ரோஜா வண்ணத்தில் கேலிக்குறியவனாக நண்பர்களுக்கு தோன்றிவிட்டேனே” என்றுசோர்ந்து போய்விடுகிறது. அங்கே ஜேக்கலோப் (ஜாக் ரேபிட் உடல் + மானின் கொம்புகளுடையது) என்கிற கற்பனை கதாபாத்திரம் வருகிறது.

”உன் வண்ணத்தில் என்ன இருக்கிறது? சொல்லப்போனால் இப்பொழுது தானே நீ உன் நடனத்தை மேலும் சிறப்பாக்கிக் கொள்ளமுடியும். உயர உயர மிக உயரமான துள்ளல்கள் ஏன் நீ செய்யக்கூடாது? நடனம் சிறப்பாக இருக்கும் போது அதே நண்பர்கள் மீண்டும் ரசிக்கத்தானே செய்வார்கள் ” என்று காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். மீண்டும் மே மாதம் வருகிறது. மீண்டும் கம்பளி நீக்கப்படுகிறது. ஆனால் இம்முறை ஆட்டுக்குட்டிக்கு சோகமில்லை வருத்தமில்லை . தன்னம்பிக்கையோடு முன்போலவே குதித்தாடுகிறது

----------------------------------


கொக்கின் அலகில் ஒரு குழந்தை கிடக்கும் மூட்டை தொங்கிக் கொண்டிருக்கும் படத்தை நீங்கள் வாழ்த்து அட்டைகளில் பார்த்திருப்பீர்கள். சில நாடுகளில் வெள்ளை நிற கொக்கு ((white stork) பிள்ளைப்பேற்றுக்கான அதிர்ஷ்டத்தை வழங்குவதாக கதைகள் வழியாக நம்பிக்கை நிலவுகிறது. நீண்ட தொலைவு வலசைப் (migration) போவதன் பொருட்டு வசந்தகாலத்தில் வந்து சேர்கின்றன. அவை குடும்பத்துக்கு வசந்தகாலத்தின் தூதுவர்களாக நல்ல அதிர்ஷ்டத்தைத் தருவதாக உக்ரேனிய நாட்டில் கருதுகிறார்கள். இதனால் அவை மனிதர்கள் வசிக்கின்ற பகுதிகளுக்கு அருகில் கூடுகட்டி வாழத் தடை ஏதும் இருப்பதுமில்லை.

பார்ட்லி க்ளவுடி(partly cloudy) .





மேகங்களிலிருந்து தான் அந்த கொக்குகள் குழந்தைகளைக் கொண்டுவருவதாக இக்கதை பின்னப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு மேகத்திற்கும் ஒரு கொக்கு உண்டென்றும் அவை மேகங்கள் படைக்கின்ற அழகான , ரசிக்கத்தகுந்த குழந்தைகளையும் பூனைகுட்டிகளையும், நாய்க்குட்டிகளையும் அதனதன் தாயிடம் கொண்டு சேர்ப்பதுமாக இருக்கின்றன. ஆனால் கெஸ் என்கிற மேகம் செய்வதெல்லாமோ ஒரு முள்ளம்பன்றி , ஒரு முதலை போன்ற அச்சமூட்டுகின்ற விலங்கினங்களின் குட்டிகளைத் தான். அவைகளைக் கொண்டு சேர்ப்பதற்குள் அந்த மேகத்தின் நட்பு கொக்குக்குத்தான் எல்லா துன்பமும் நேரிடுகிறது. ஆனாலும் அது அச்செயலை ஒரு கர்மயோகியைப்போல செய்துவருகிறது. சிரித்தபடியே மேகத்திடம் தன் துன்பத்தை மறைத்துப் பழகுகிறது.

உள்ளூர மற்ற கொக்குகளைப்போல எளிய வேலை தனக்கு அமையவில்லை என்கிற எண்ணம் கொண்டு இருந்தாலும் துன்பத்திலிருந்து காப்பாற்றிக்கொள்ள நண்பனை விட்டு அது விலகவில்லை . கொக்கின் சிரிப்பும் மேகத்தின் நொடிக்கொன்றான முகபாவங்களும் ரசிக்கத் திகட்டாத ஒன்று. அடி , இடி படாமல் இருக்க கவசங்கள் அணிந்து வரும் கொக்குக்கு மின்சாரம் வெளிப்படுத்தும் மீனைப் படைத்துத் தருகிறது மேகம். தொடர்கிறது வாழ்க்கை அதன் போக்கிலே..

கதையில் மட்டுமல்ல நிஜத்திலும் தொடர்கிறது வாழ்க்கை அதன் போக்கிலே ...

யார் சொன்னது வரைபட அசைபடங்கள் குழந்தைகளுக்கானது என்று ? அது பெரிய குழந்தைகளுக்குமானது தான். பெரியவர்களுக்குள்ளும் குழந்தைகள் உண்டு தானே.போட்டி நிறைந்த உலகத்தில் தோல்விகளை சந்திக்காத வயதினரே இருக்கமுடியாது. வெற்றிகளை விடவும் தோல்விகள் வாழ்வினை முழுமையாகப் புரிந்துகொள்ள வாய்ப்பு அமைத்துக் கொடுப்பதுண்டு. குழந்தைகளுக்கு தோல்வி என்பதும் ஒரு அனுபவமே என்று கற்றுக்கொடுக்க நினைக்கிறோம். மாற்ற இயலாத் தருணங்களின் நேர்மறை பக்கத்தை காணவும் , அச்சூழலில் மனத்திண்மை கொண்டு எழுந்து நிற்கவும் பழக்க நினைக்கிறோம். இவ்வாறான படங்கள் அவ்வேலையை எளிதாக்குகிறது. கற்றுக்கொடுக்கும் நேரத்தில் நாமும் கற்றுக்கொள்வோம்.

-------------
நன்றி : ஈழநேசன். ( இது ஈழநேசனுக்கா எழுதிய பிகசர் பற்றிய கட்டுரையின் ஒரு பகுதி)

19 comments:

கலை said...

Pixar short films எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. குறும்படங்கள் எல்லாம் சேர்த்து தனி dvd வந்திருக்கிறது. மகள் வாங்கி வைத்திருக்கிறாள். இங்கே முதலாவது ஒளிப்படம் வரவில்லை :(.

சிங்கக்குட்டி said...

நல்ல தன்னபிக்கை தரும் விசையம்.

ரொம்ப நல்லா இருக்கு :-)

goma said...

பெரியவர்களுக்குள் உறங்கும் சிறு குழந்தகளைத் தட்டி எழுப்பும் இந்த அசைபடங்கள்.

அண்ணாமலையான் said...

கத்துக்கிட்டா போச்சு..

Sanjai Gandhi said...

wow+wow :)

கோபிநாத் said...

\\அது பெரிய குழந்தைகளுக்குமானது தான். பெரியவர்களுக்குள்ளும் குழந்தைகள் உண்டு \\

PIXER படங்களில் அருமையாக இருக்கும்...நானும் என்னோட அம்மாவும் சேர்ந்து finding nemo பார்த்தோம். என்ன ஒரு என்ஜாய் சூப்பராக இருந்துச்சி ;))

Anonymous said...

சபரி கூட சேந்து நிறைய குழந்தைகள் படம் பாக்கறீங்கன்னு தெரியுது :)

சந்தனமுல்லை said...

நல்ல அறிமுகத்திற்கு நன்றி! :-)

சாந்தி மாரியப்பன் said...

நெறைய ஃப்ரீ டைம் இருக்குபோல தெரியுது.

பொங்கலுக்கு எங்க வீட்டுக்கு வாங்க..

http://amaithicchaaral.blogspot.com/2010/01/blog-post_12.html

மாதேவி said...

"அது பெரிய குழந்தைகளுக்குமானது தான்" எமக்கும் பிடித்தமானது.:))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அது யூ ட்யூங்க உங்க ஊருல வரலையா.. இங்க தெரியுதே.நீங்க தான் டிவிடியே வச்சிருக்கீங்களே. ..:)

------------------
சிங்ககுட்டி நன்றிங்க..:)

---------------
ஆமா கோமா சில சமயம் அவங்க எந்திரிச்சு போனாலும் நாம உக்காந்து பாப்பமில்ல.. :)

----------------
நன்றி அண்ணாமலையான் ..

sathishsangkavi.blogspot.com said...

நல்ல விசயம்...

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி காந்தி ( சஞ்சய்ன்னா அடி போடுவாங்கன்னீங்களே :) அதான் )
--------------------
கோபி குட் :)
--------------------

சின்னம்மிணி அவனுக்கு காமிக்கத் தேடியப்ப சேகரிச்ச விவரம் தான் ..:)
----------------------------
நன்றீ சந்தனமுல்லை..
----------------------------
சாரல் வந்தேன் வாழ்த்தும் பெற்றேன். சூப்பர்..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி மாதேவி :)
--------------
நன்றி sangkavi உங்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்கள். :)

அமுதா said...

அருமை. ரொம்ப கலக்கலா சுவையா எழுதி இருக்கீங்க. தொடர்ந்து நல்ல விஷயங்களை பகிர்வதற்கு நன்றி

அம்பிகா said...

நிறைய விஷயங்களை பகிர்ந்து கொள்கிறீர்கள். நன்றி, முத்துலெட்சுமி
உங்களுக்கு என் இனிய பொங்கல்வாழ்த்துக்கள்.

ராமலக்ஷ்மி said...

//கதையில் மட்டுமல்ல நிஜத்திலும் தொடர்கிறது வாழ்க்கை அதன் போக்கிலே ...

யார் சொன்னது வரைபட அசைபடங்கள் குழந்தைகளுக்கானது என்று ? அது பெரிய குழந்தைகளுக்குமானது தான். பெரியவர்களுக்குள்ளும் குழந்தைகள் உண்டு தானே.போட்டி நிறைந்த உலகத்தில் தோல்விகளை சந்திக்காத வயதினரே இருக்கமுடியாது. வெற்றிகளை விடவும் தோல்விகள் வாழ்வினை முழுமையாகப் புரிந்துகொள்ள வாய்ப்பு அமைத்துக் கொடுப்பதுண்டு. குழந்தைகளுக்கு தோல்வி என்பதும் ஒரு அனுபவமே என்று கற்றுக்கொடுக்க நினைக்கிறோம். மாற்ற இயலாத் தருணங்களின் நேர்மறை பக்கத்தை காணவும் , அச்சூழலில் மனத்திண்மை கொண்டு எழுந்து நிற்கவும் பழக்க நினைக்கிறோம். இவ்வாறான படங்கள் அவ்வேலையை எளிதாக்குகிறது. கற்றுக்கொடுக்கும் நேரத்தில் நாமும் கற்றுக்கொள்வோம்.//

வெகு நன்று!

அன்புடன் அருணா said...

பூங்கொத்து!

சென்ஷி said...

பிடிச்ச பதிவுகள்ல இதுவும் ஒண்ணுக்கா