January 24, 2010

கைகளில்லை ஆனால் கவலையுமில்லை!

உங்கள் உடலுறுப்புகளை சொர்க்கத்துக்கு எடுத்துச் செல்லாதீர்கள்
போன முறை அவ்வைத்தமிழ்சங்க நிகழ்வில் , நாட்டுப்புற நடனத்தை குழந்தைகள்
மிகவும் ரசித்த காரணத்தால் அதை மிக எதிர்ப்பார்ப்போடு பார்க்கச் சென்றிருந்தோம் . இம்முறை அவர்கள் நிகழ்ச்சி ரத்தாகிவிட்டிருந்தது. ஒடிஸி மற்றும் பரதநாட்டிய நிகழ்ச்சிகள் முதலில் நடைபெற்றன. நிகழ்ச்சியில் அமர்ஜோதி என்கிற மாற்றுதிறனுடைய குழந்தைகளின் பள்ளியிலிருந்து வந்திருந்தார்கள். அமர்ஜோதி பள்ளி நிகழ்ச்சி மூன்றாவதாகத்தான் வந்தது என்றாலும் முதலில் சொல்ல விரும்புவது அவர்களைப் பற்றியே.

சக்கர நாற்காலியுடன் வந்த இரண்டு மாணவர்கள் தனித்தனியே சுழண்டும் சிலநேரங்களில் கை கோர்த்துக்கொண்டும் ஆடினார்கள். பஞ்சபூதங்களையும் வணங்கிப் பாடினார்கள். அதனனதன் நிறங்களை உடைகளில் தெரியப்படுத்தினர். முடிந்தபின் அனைவரும் எழுந்து நின்று கைத்தட்டும்படியாக இருந்தது . நடனங்கள் எளிமையானவை என்றாலும் மாற்று திறனுடைய அந்த குழந்தைகள் வாய்க்குள் எண்களை முனகியபடியும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்முறுவலுடனும் செய்த அசைவுகள் எந்த ஒரு சிறந்த நாட்டியத்துக்கும் குறைவானதில்லை.


காமிரா கண் வழியாகவே நிகழ்ச்சியைப் பார்க்க நேருவதில் எனக்கு எப்போதுமே ஒரு குறை உண்டு. அந்த நேரத்தில் மற்றவர்களைபோலவே நான் அதனை முழுதுமாக ரசிக்க இயலாதது போல ஒரு எண்ணம். இப்படி சில குழந்தைகளில் கவனம் வைத்து இருந்தபோது நடுவில் திடீரென்று சின்னதொரு மலர் பூத்தது.. அம்மலருக்கு இரு கரங்களும் இல்லை. ஆனால் மலர்ச்சிக்கு அளவே இல்லை.

அவர்கள் நினைவுப்பரிசினை உயர்த்தி தூக்கி ஹே என்று ஆர்ப்பரித்தார்கள். எனக்கு பதட்டமாகிவிட்டது .அந்த மலர் என்ன செய்யும் ? அருகில் இருந்த இன்னோரு மலர் அவளுக்காக பரிசினைத் தூக்கிகொண்டு இருகரங்களால் ஹே என்றது. பிறகு மற்றொரு குழந்தை அந்தப் பரிசை அவளுக்காக தான் ஏந்தி சிரித்தாள்.

அந்த கவிதை நொடிகளை க்ளோஸப்பில் என் பெட்டிக்குள் அடைக்க முயன்றேன். குறுக்கில் ஒருவர் வந்துவிட்டார். அந்த மூன்று குழந்தைகளும் என் தவிப்பை கவனித்திருக்கிறார்கள். உடனே சாய்ந்து காட்சிக்குள் அடங்க முயன்றார்கள்.

அந்த மலர் சாயச்சாய தடுமாறி பிடிமானம் இல்லாமல் ( அவள் எப்படி பிடிப்பாள் ) தோழிமீது சாய்ந்து விட்டாள்.அவள் முட்டுக்கொடுக்க வாய்விட்டு அவர்கள் சிரித்த நொடி நான் மறக்கவே முடியாத தருணம். இந்த நேரம் காமிரா கண் வழியே நான் பார்த்துக்கொண்டிருந்ததற்கு வருந்தவில்லை. உங்களுக்கு அதனால் தானே பகிர முடிந்தது.


அமர்ஜோதி பள்ளியைத் துவங்கிய உமா துலி பேசியபோது இவர்களைப் போன்றவர்களுக்கு இவர்களின் கைகளாய் கால்களாய் உடனிருங்கள் , அவர்களை கண்ணியமாக நடத்துங்கள் என்று கேட்டுக்கொண்டார். அந்த சிறுமலருக்கு பரிசினைத்தாங்க ஓடிச்சென்ற அக்குழந்தை அதனை செயல் வடிவில் உடனே செய்தாள் என்று தோன்றுகிறது.

உடலுறுப்புகளின் அத்தியாவசியத்தை உணர்ந்து கொண்டால் அதனை பேணிக்கொள்வதையும் செய்வோம். நன்கு பேணிய அவ்வுறுப்புகளை நமக்கு பின் மற்றவருக்கும் அளிக்கவும் இயலும். அங்கேயே விண்ணப்பத்தாள்களை அவ்வைதமிழ்சங்கம் விநியோகித்து வந்தார்கள். பல இளைஞர்கள் படிவங்களைப ஆர்வமாய் பூர்த்தி செய்ததைப் பார்த்தேன். நானும் இன்று அதற்கான விண்ணப்பத்தாளைப் பூர்த்தி செய்கிறேன்

கொஞ்சநேரம் பேம்ப்ளெட்களை விநியோகித்துக் கொண்டிருந்த தோழிகளை சியர் அப் செய்யச் சென்றிருந்தேன் . சிலர் எதோ விற்பனை விளம்பரம் என்று நோ தேங்க்ஸ் என்று கடந்தார்கள். நாமும் பலமுறை என்னவென்றே பார்க்காமல் இப்படி எத்தனயோ தாண்டியதில்லையா? இருந்தாலும் கால்சட்டை பைக்குளிலிருந்து கையெடுக்காத கனவான்களையும், கை நீட்டி வாங்க சோம்பேறிப்பட்ட நாரீமணிகளையும் கல்லூரிக்காலப் பெண்கள் போல கிண்டல் அடித்துக்கொண்டிருந்தோம்.

ம்ற்றொரு பரதநாட்டிய குழுவினரான பாமினி சேகர் குழுவினர் முதல்நாளும் இன்றும் நடனங்களுக்கு நடுவில் உடலுறுப்பு தானம் பற்றி விழிப்புணர்ச்சியூட்டும் வகையில் காட்சிகளை அமைத்திருந்ததை அறிந்தேன். அருகிருந்து பார்க்காததால் படஙக்ளை பகிர்ந்து கொள்ள இயலவில்லை.

41 comments:

Thekkikattan|தெகா said...

Excellent, நான் வளர்கிறேனே மம்மீ :D !!

அண்ணாமலையான் said...

நல்ல பதிவு, வாழ்த்துக்கள்...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி தெகா நன்றி அண்ணாமலையான்..


இந்த அழகு மலர்களை படங்களை க்ளிக்கி பெரிதாக்கியும் பார்க்கலாம்..

மங்கை said...

உடல் ஊனமுற்றவர்களும் இந்த சமுதாயத்தில் மற்றவர்களைப்போல வளமான பங்காற்ற முடியும் என்பதை உணர்த்தியவர் உமா துலி.

அவர்களுக்கு இந்த ஊக்கம் தான் மிக முக்கியமாக தேவைப்படுது.. அவர்களுக்கு வேண்டியதை அவர்களே செய்து கொள்வது ஒன்று..அவர்களும் மற்றவர்களைப்போல சமுதாய பங்காற்ற முடியும் என்பதை உணர்த்தி அதற்கு உதவுவது இன்னொன்று..

தில்லியில் Ian Cardozoனு ஒரு ரிடயர்ட் ஆர்மி ஆஃபீசர் இருக்கார்..ஒரு விபத்துல சிக்கி ஊனமுற்றவர்.. அவரை ஒரு தடவை சந்தித்தப்போ..நான் ஊனமுற்றவர்களை குறிப்பிடுகையில்
differently abledனு சொன்னேன்..அதுக்கு அவர்,,முதல்ல handicapped சொன்னீங்க..அப்புறம் differently abled னு சொன்னீங்க..அதுக்கும் பேசாமதான் இருந்தோம்..அப்புறம் physically challenged னு சொன்னீங்க...என்ன சொன்னாலும் நாங்க நாங்க தான்..இந்த பெயர் மாற்றத்துனால ஒரு மண்ணும் ஆகப் போறதில்ல...சோ..எங்களை எப்படி வேனும்னாலும் கூபிடுங்கனு சொன்னார்..எவ்வளவு யோசிக்க வேண்டிய ஒன்று...

உமா துலிய பத்தி படிச்சது எனக்கு பழைய நியாபகங்கள் வருது...:)))

அந்த குழந்தைகள் வரைந்த வரைபடங்கள் இன்றும் அமிட்டி அறைகள்ள இருக்கு...

கபீஷ் said...

Super! 3 வது படம் கவிதை, 4 வது படம் பார்க்கும்போது சந்தோஷம் தொற்றிக்கொள்ளுது.

☀நான் ஆதவன்☀ said...

வர வர நானும் உங்களை மாதிரியே ஆகிட்டு வரேன். அந்த மலர் பற்றி படிச்சதுல கொஞ்சம் கண்ணு கலங்கிடுச்சு.

நல்ல நிகழ்ச்சி & நல்ல பகிர்வுக்கா

சுடுதண்ணி said...

மனதைத் தொடும் பகிர்வு. புகைப்படங்களில் சிறைப்பிடித்த தருணங்கள் அழகு. மனிதம் இன்னும் மிச்சமிருப்பது குழந்தைகளிடம் மட்டும் தான் போல.

நாடோடி said...

புகைப்படங்கள் அனைத்தும் அருமை. பகிர்வுக்கு நன்றி

Deepa said...

//மாற்று திறனுடைய அந்த குழந்தைகள் வாய்க்குள் எண்களை முனகியபடியும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்முறுவலுடனும் செய்த அசைவுகள் எந்த ஒரு சிறந்த நாட்டியத்துக்கும் குறைவானதில்லை.//
அற்புதம்.

பகிர்வுக்கு மிக்க நன்றி முத்துலெட்சுமி.

செல்வநாயகி said...

நல்ல பதிவு.

சாந்தி மாரியப்பன் said...

அழகான மலர்களை காட்டி,அவர்களின் உற்சாகம் எங்களையும் தொற்றிக்கொள்ள செய்து விட்டீர்கள்.wonderful job.

Chitra said...

நடுவில் திடீரென்று சின்னதொரு மலர் பூத்தது.. அம்மலருக்கு இரு கரங்களும் இல்லை. ஆனால் மலர்ச்சிக்கு அளவே இல்லை. ...........குறையொன்றும் இல்லை. சந்தோஷத்துக்கும்.

பழமைபேசி said...

பகிர்வுக்கு நன்றி!

Anonymous said...

படங்கள் அழகு. சின்ன வயதிலேயே உறுப்புக்கள் தானம் பற்றி குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுப்பது மிகவும் நல்ல விஷயம்.

நட்புடன் ஜமால் said...

தன்னம்பிக்கை :)

துளசி கோபால் said...

அட்டகாசம் போங்க!!!!!1

அருமை என்பதற்கு வேறு சொல் இருக்கா?????

மலர்களே..... மலர்களே...

உயிரோடை said...

ந‌ல்ல‌தொரு ப‌திவு முத்துலெட்சுமி

சந்தனமுல்லை said...

மிகவும் நெகிழ வைக்குது முத்து! அழகான பகிர்வு!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

மங்கை உமா துலியின் பள்ளியுடன் இணைந்து பணியாற்றிய உங்களுக்கு பழைய நினைவுகளை சுழலவிட்டதுக்கு மகிழ்கிறேன்..:)

------------------

கபீஷ் பாருங்க அவளைப் பார்க்கிறவங்களுக்கு எல்லாம் உற்சாகம் தொத்திக்க செய்யறா.. அவள் பெயர் நிஷிகா போல, அமர்ஜோதி தளத்தில் அவ காலால் நோட் பிடித்து அழகாக எழுதுகிற படம் இருக்கு.
----------------------------
ஆதவன் , நம்ம கஷ்டத்துக்கு கண் கலங்கினாத்தான் நல்லா இருக்காது. அடுத்தவங்க கஷ்டத்துக்கு கண் கலங்குறதும்,உணர்ந்தோம்ங்கறதே உயர்ந்த விசயம் தானே..
------------------------
சுடுதண்ணி உதவிக்குப் போன அந்த குழந்தை உமாதுலியின் உறவாக இருக்கலாம்ன்னு நினைக்கிறேன்.. அவளுக்கும் அந்த சேவை உணர்வு இளவயதில் தோன்றிவிட்டதோன்னு நினைக்கிறேன்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி நாடோடி

நன்றி தீபா

நன்றி செல்வநாயகி

நன்றி அமைதிச்சாரல்

நன்றி சித்ரா

நன்றி பழமைபேசி

ஆமா சின்னம்மிணி நிகழ்ச்சியில் நடித்துக் காட்டிய குழந்தைகள் அதைப்பற்றி அறிந்துகொள்கிறார்கள்.. நிகழ்ச்சியைப்பார்த்த குழந்தைகள் அறிந்துகொள்கிறார்கள்.. வேகம் வேகமென்று ஓடும் இளைஞர்கள் படிவம் பூர்த்தி செய்கிறார்கள்.. சங்கத்தின் குறிக்கோள் சரியாகப் போய்சேர்வது பாராட்டப்படவேண்டியது.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஜமால் சரியாச் சொல்லிட்டீங்க.. கைகள் இருக்குது தன்னம்பிக்”கை”

----------------------------
நன்றி துளசி
-------------------
நன்றி உயிரோடை லாவன்யா
-------------------------
நெகிழ்ந்த மனதுக்கு நன்றி முல்லை.

Thamiz Priyan said...

நல்ல பதிவு, அவர்களுக்கு ஆதரவு தருகின்றோமோ இல்லையோ பொது இடங்களில் நட்பாக நடந்து கொண்டாலே அது அவர்களுக்கு செய்யும் குறைந்தபட்ச உதவியாக இருக்கும்.

ராமலக்ஷ்மி said...

மூன்று மலர்களும் மனதில் நிற்கிறார்கள். மிக நல்ல பகிர்வு. நன்றிகள் முத்துலெட்சுமி.

மணியன் said...

நல்ல மலர்ச்சியூட்டும் பதிவு.படங்கள் அருமை. வாழ்த்துகள் உங்களுக்கும்,அமர்ஜோதிக்கும் அச்சிறு மலர்களுக்கும் !!

அகஆழ் said...

பதிவு மிக அருமை!

’கரம் இல்லை என்றாலும்
சிகரம் தொட முடியும்’
என்று உண்ர்த்துகிறது.

கண்ணகி said...

அந்தக்குழந்தையின் தன்னம்பிக்கை செவிட்டில் அடித்த்துபோல் இருந்த்து

நல்லபதிவு.முத்துலெட்சுமி..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி நல்ல கருத்து தமிழ்பிரியன்

நன்றி ராமலக்‌ஷ்மி


நன்றி மணியன்

நன்றி அக ஆழ் .. அழகான கருத்து.

நன்றி கண்ணகி ..அத்தகைய நம்பிக்கையை அவர்களுக்கு அளித்த உமா துலியைப் பாராட்டுவோம் .

கோமதி அரசு said...

நெகிழ்வான பதிவு,முத்துலெட்சுமி.

//அந்த சிறு மலருக்கு பரிசினைத் தாங்க ஓடிச்சென்ற அக்குழந்தை அதனை செயல் வடிவில் உடனே செய்தாள் என்று தோன்றுகிறது.//

படங்கள் அருமை.

தன் குறையை மறந்து மலர்ந்து சிரிக்கும் மலர் அழகு.

sathishsangkavi.blogspot.com said...

நல்ல பதிவு,
புகைப்படங்கள் அனைத்தும் அருமை...

அமுதா said...

நல்ல பகிர்வு. மனம் நெகிழ்ந்தது. பகிர்வுக்கு நன்றி

விக்னேஷ்வரி said...

இவ்ளோ சீக்கிரமா பதிவும் போட்டாச்சா... குட்.

நல்லா எழுதிருக்கீங்க முத்து லெட்சுமி.

pudugaithendral said...

நெகிழ்வாக இருக்கிறது. புகைப்படமும், பதிவும் அம்புட்டு அருமை.

கோபிநாத் said...

நல்ல பதிவு ;))

அந்த குழந்தைகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ;)))

அமிர்தவர்ஷினி அம்மா said...

நீங்க விவரிச்ச விதம் என்னை மிகவும் ஈர்த்தது. அந்த மலரின் முகம் மனதை விட்டு அகல நாட்களாகும் போல.

ஹுஸைனம்மா said...

அவங்க முகங்கள்ல என்னா சிரிப்பு!! பெரிய குறைகளையும் ஒதுக்கி வாழப் பழகிட்டாங்க. நமக்கு பாடம்.

சுந்தரா said...

பதிவு மனதை நெகிழ வைத்தது.

அந்த மலர்களைப் பார்க்கையில் கண்கள் கலங்கத்தான்செய்கிறது.

பகிர்வுக்கு நன்றிங்க!

மாதேவி said...

நல்ல பகிர்வு. குழந்தைகளின் உற்சாகமும் களங்கமில்லாச் சிரிப்பும் மனத்தைக் கவர்கிறது.

அம்பிகா said...

மலர்கள் சந்தோஷமாய் சிரித்தாலும்
நமக்கு மனதில் வலிக்கிறது..
அருமையான பகிர்வு, முத்துலெட்சுமி.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கோமதி அரசு ,சங்கவி , அமுதா,விக்கி ,தென்றல், கோபி, அமிர்தவர்ஷினி அம்மா,ஹுசைன்ம்மா, சுந்தரா, மாதேவி,நசரேயன், அம்பிகா அனைவரின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

ரிஷபன் said...

நமக்குள் ஏதோ கண் விழிக்கும் நேரம்..
அந்த சிரிப்புக்கும் மகிழ்ச்சிக்கும் எதை ஈடு சொல்ல..
படங்களும் வர்ணனையும் மனசுக்குள் இப்போது

சென்ஷி said...

சூப்பர்!