இன்றிலிருந்து 26ம் தேதி வரையிலும் நொய்டா க்ரேட் இண்டியா ப்ளேஸ் மாலில் தொடர்ந்து நான்கு நாட்கள் அவ்வை தமிழ்சங்கத்தின் இசை நடன விழா நடைபெற உள்ளது. போன வருட கொண்டாட்டத்தைப் போலவே இந்த ஆண்டும் மாலும் அலங்கரிக்கப்பட்டு வெளிமேடையில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறத்தொடங்கி இருக்கிறது.
இம்முறை உடலுறுப்பு தானத்தை விழாக்கருத்தாக தேர்ந்தெடுத்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைத்துள்ளனர். "GIVE IT YOUR BEST " என்பது நிகழ்ச்சியின் தலைப்பாகும். " DONT TAKE YOUR ORGANS TO HEAVEN. HEAVEN KNOWS WE NEED THEM HERE உடலுறுப்பு தானம் பற்றிய குறிப்புகள் விவரங்கள் பலவும் இந்நிகழ்ச்சியின் தினங்களில் சொற்பொழிவும் உண்டும்.
மோகினி ஆட்டம் , பரதநாட்டியம் , கர்நாடக சங்கீதம் மற்றும் போனமுறையே நிகழ்ச்சியை களைகட்ட செய்த கிராமிய நடனக்குழுவும் இணைந்து விழா சிறப்பித்து தர இருக்கிறார்கள்.
தமிழ்நாடு இயல் இசை நாடகமன்றம் குழுவினரின் நிகழ்ச்சி தினமும் உண்டு.
இன்று மதியம் ஒன்றிலிருந்து ஏழு மணிவரை
நாளை 24 ம் தேதி ஒன்றிலிர்ந்து எட்டு மணிவரை
25 அன்று மூன்று மணியிலிருந்து ஏழு மணிவரை
26 ம் தேதி ஒன்றிலிருந்து எட்டு மணிவரை
நிகழ்ச்சிகளைக் காணலாம்.
20 comments:
ஓக்கேகேகேகே... என் சார்பாக சென்று விழாவை சிறப்பித்து வருமாறு கேட்டுக் கொள்கிறேன் :)
உடலுறுப்பு தானத்தை கருத்தாக தேர்ந்தெடுத்தது மகிழ்ச்சியளிக்கிறது. நிறையபேருக்கு உடலுறுப்பு தானத்தைப்பற்றின புரிதல் சென்றடையவேண்டும்.
பகிர்தலுக்கு நன்றி....
முத்துலெட்சுமி,
நல்ல பதிவு.
நாங்கள் கண் தானம் மட்டும் பதிவு செய்து உள்ளோம்,உடல் தானமும்
செய்ய முடிவு செய்து உள்ளோம்.
நல்ல தகவல்....அப்படியே என்ன நடந்தது என்று ஒரு பதிவு போட்டீங்கண்ண என்னைப் போல் நாலு பேரு படிச்சி தெரிந்து கொள்வோம்...
எப்படியும் மண்ணோ நெருப்போ தின்னப்போகுது. அதை மற்றொரு ஜீவன் இன்னும் கொஞ்சநாள் வாழக் கொடுப்பதில் என்னப்பா தவறு?
நல்லதுதான். மக்களுக்கு விழிப்புணர்வு வரணும்.
நல்ல
விழாகருத்து
அட...நல்ல எண்ணம்தான்!
விழா பற்றிய கவரேஜ்-க்கு வெயிட்டிங்! :-)
நல்ல பகிர்வுக்கு நன்றி...
அண்மையில் காலஞ்சென்ற காம்ரேட் ஜோதி பாசு அவர்கள் உடல் முழுவதுமே தானமாக மருத்துவக் கல்லூரிக்குத்
தரப்பட்டது
இல்லை என்பதே இல்லை.
நாம் இல்லாத போதிலும் நமது அங்கங்கள் மற்றவர்களுக்காக பயன்படும் வகையில் நாம் ஒரு உயில் எழுதிவிட்டுச்
சென்று விடின், உண்மையிலேயே, நாம் வாழ்ந்துகொண்டே இருப்போம்.
முத்தான பதிவு.
சுப்பு ரத்தினம்.
http://vazhvuneri.blogspot.com
ஜோதிபாசு போன்றோர்களின் உடலுறுப்பு தானம் வரவேற்கதக்கது.
இதன் முலம் உடலுறுப்பு தானத்தை பற்றிய விழிப்புனர்வு அனைவரிடம் செல்வதற்கு வாய்ப்புகள் அதிகம்
உடல் உறுப்பு தானத்தை பற்றிய விழிப்புணர்வு தேவை.
நிகழ்ச்சி நடந்த விதத்தை பற்றியும் எழுதுங்கள்.
மிகவும் பயனுள்ள பதிவு...வாழ்த்துக்கள்..
\\நான் ஆதவன்☀ said...
ஓக்கேகேகேகே... என் சார்பாக சென்று விழாவை சிறப்பித்து வருமாறு கேட்டுக் கொள்கிறேன் :)
\\
ரீப்பிட்டே...அப்படியே விழாவை பற்றி பதிவு போடுங்கள் ;)
நல்ல பதிவுங்க...
தலைப்பு மிக அழகான செய்தியை கொண்டுள்ளது ...
இணைவோம்.
நல்ல பதிவு...
அப்போ நீங்களும் sign up பண்ணிட்டீங்களா? தலைப்பே உதறல் எடுக்கிற மாதிரி இருக்கே. வாழ்க! வளர்க!
இந்த சமயத்தில நான் ஒரு தட்டி வைக்கலன்னா பிசினெஸ் என்னாகுறது, பிடிங்க தட்டிய உடலுறுப்புகள் தானமா,பதறும் நெஞ்சு : Donation of Organs!
:)
நல்ல விழிப்புணர்வு பதிவு... தேவையான பதிவும் கூட..
நொய்டாவில் தமிழ் சங்கமா? கேட்கவே மகிழ்ச்சி.
தொண்ணூறுகளில் நாங்கள் இருந்தபோது தமிழ், தென் இசை எல்லாம் கரோல் பாக் , வசந்த் விஹார், ஆர் கே புரம், எப்போதாவது தான்சேன் மார்க். தமிழும் இசையும் பெரும் வளர்ச்சி கண்டு பெருமகிழ்ச்சி
அந்த குழந்தையின் முகத்திலிருக்கும் சிரிப்பு அழகு. நமக்கு அவளைப் பார்த்த உடன் போய்விடும் நம் சிரிப்பு, அவள் முகத்தில்.
Post a Comment