April 23, 2007

தில்லியில் ஒரு சந்திப்பு

பாபா மெயிலில் வந்து சொன்னார் வலைப்பதிவு சந்திப்பு ஒன்று தில்லியில் நடத்தலாம் ஆயத்தமாகுங்கள் என்று. அன்றைக்கு ஆரம்பித்தது பந்தா நாங்களும் சந்திப்பு நடத்தறோம் தில்லியில் என்று. பெரிசா தலைக்கு மேல ஒளிவட்டம் சுற்றத்தொடங்கிடுச்சு.. மீட்டிங் இருக்கு மீட்டிங்க் இருக்குன்னு விட்ட பந்தால வீட்டுக்காரர் ஆமா நாங்கள்ளாம் எத்தன மீட்டிங் பார்த்துருக்கோம், நீங்க போடற மீட்டிங்க்கு இத்தன ஆர்ப்பாட்டமான்னு வேற கேட்டாங்க..அடங்கினமா, இல்லயே...

இடத்தை முடிவு செய்வதில் ஏற்பட்ட தாமதத்தால் பாஸ்டன் பாலாவுக்கு கன்ப்ர்ம் செய்யவும் தாமதமாகிவிட்டது. தில்லி வந்து சேர்ந்ததும் அவரும் தொடர்பு கொள்வதாகச் சொல்லி இருந்தார் ஆனால் அவருக்கு என்ன பிரச்சனையோ இது வரை எந்த செய்தியும் இல்லை. வெள்ளிக்கிழமை மதியம் வரவங்கள வச்சு மீட்டிங் எப்படியும் நடத்தலாம் அப்படின்னு முடிவு செய்தோம். பின்னூட்ட நாயகன் சென்ஷி , மங்கை , நான் ,சிவமுருகன் அப்புறம் அயன் உலகம் என்ற பதிவை எழுதும் நண்பர் வருவதாக சென்ஷியிடம் சொல்லி இருந்தாராம் ஆனால் வேலைப்பளு வர இயலவில்லை.

தில்லியில் துளசி , அருணா போன்ற பெரிய பதிவர்களுடன் சந்திப்பு நடத்தி இருந்தாலும் இது தில்லி தமிழ் வலைப்பதிவாளர்களின் முதல் சந்திப்பு .

வீட்டுல கட்டிடவேலை நடப்பதால் வீட்டுக்காரரை லீவ் போட்டு மேற்பார்வை பார்க்கச் சொல்லிவிட்டு மகளுக்கு என்ன என்ன செய்யவேண்டும் என்று இன்ஸ்ட்ரக்ஷன் கொடுத்துவிட்டு..பையனை ஒருவழியாகத் தூங்கவைத்துவிட்டு 2 மணி சந்திப்புக்கு 2.15 க்கு லேட்டாகப் போகிறோமே என்ற கவலையோடு மங்கையும் நானும் போய் நின்றால், ரெஸ்ரணட் வாசலில் இருந்து போய் போன் செய்தால், வரவேண்டிய மற்றவர்களான சிவமுருகன் ஆபிஸிலேயே மாட்டிக்கொண்டதாகச் சொல்கிறார். சரி சென்ஷியாவது வருவார் என்று உள்ளேபோய் உட்கார்ந்தோம்.

என்ன வேண்டும் என்ற பேரரரிடம் லெமன் ஜூஸ் என்றதும் சாப்பிடற நேரத்தில் வெறும் ஜூஸா என்று ஒருமாதிரி பார்த்தார் ..இல்லப்பா நண்பருக்குக் காத்திருக்கிறோம் அப்புறமா சொல்கிறோம் என்றோம். சென்ஷி க்கு போன் செய்தால் டிராபிக்க் பஸ் ஓடலை அப்படி இப்படி ன்னு சாரி சாரி கொஞ்சம் வெயிட் பண்ணுங்க என்று பதில் வந்தது. நாம தான் தினமும் போனிலேயே வலைப்பதிவுகளைப் பற்றிப் பேசறோமே நம்மளை இப்படி ஹோட்டல்ல பேசவிட்டுட்டாங்களே என்று புலம்பிக்கொண்டே பல முக்கிய முடிவுகளை எடுப்பது பற்றிப் பேசிக்கொண்டு இருந்தோம். அது என்னவா?, அப்பறம் சொல்றேன்.

நேரம் ஆக ஆக நாளைக்கு இந்த சந்திப்பு பற்றி எழுதினா "ஏப்ரல் ஒன்று ஏப்ரல் 20 ல் வந்தது " , ''வருகிறார் வருகிறார் சென்ஷீ வருகிறார்" இப்படி எல்லாம் தலைப்பு வச்சால் என்ன என்று யோசனை. முதல் 2 மணி நேரம் மங்கையும் நானும் தான் சந்திப்பு நடத்தினோம். அடுத்த மூணாவது மணிக்குத் தான் சென்ஷி வந்தார். ஜோடியாக யாராவது வந்தால் அட சென்ஷிக்கு யாரோ செட்டாகி சந்திப்புக்கே கூட்டி வந்துட்டார் போலயே என்று பார்த்தோம் கடைசியில்.

ஒரு வழியா வந்து சேர்ந்தார் ஒடிஞ்சு விழறமாதிரி இருந்தார். சாரிக்கா சாரிக்கா (எத்தனை சாரி சொல்லி இருப்பார் னு கணக்கு வைக்கலை) என்று ஆரம்பித்து நான் தான் மங்கை என நினைத்து ஆரம்பித்தார். இல்லைங்க நான் முத்து லெட்சுமி அது மங்கை என்று அறிமுகப்படுத்திக் கொண்டோம்.

ஒரு முடிவு எடுத்திருக்கிறோம் அந்த முடிவு தில்லியில் எடுத்த முடிவு என்பதால் முக்கிய முடிவாக்கும் என்றதும் என்னதுங்க அது நானும் வேணா வழிமொழிகிறேன் அப்படின்னார் வேற வழியே இல்ல வழி மொழிஞ்சு தானே ஆகணும் மெஜாரிட்டி ஒத்துக்கிட்டாச்சே...அதாங்க மொத்தமா சந்திப்புல இருந்த மூணு பேருல ரெண்டு பேர் மெஜாரிட்டி தானே.

என்னன்னா நாம ஒருத்தருக்கு போடற பின்னூட்டத்துக்கு அவங்க பதிலுக்கு நன்றி அப்படின்னு போடுவது அவசியமே...நாங்க சொல்லுவோம்.எங்களுக்கும் மத்தவங்க நன்றி சொல்லணும்ன்னு எதிர்பார்ப்போம். நன்றி சொல்லைன்னாலோ பின்னூட்டத்திற்கு பதில் சொல்லைன்னாலோ அவர்களுக்கு பின்னூட்டமிடாமல் போராட்டம் செய்வோம்.

சென்ஷி பெயர்க்காரணம் என்ன நாங்கள்ளாம் எப்படி வலைப்பதிய வந்தோம்..சந்திப்பு எந்த விதத்தில் வலைப்பதிவாளர்களுக்கு உதவியா இருக்கு. இப்படி நிறைய பேசினோம்.

மங்கை புதிதாக எயிட்ஸ் பத்தி வலைப்பதிவு தொடங்குதாக இருக்காங்களாம். அப்புறம் இப்ப எதப்பத்தி எழுதறாங்களாம்?..அங்கே எயிட்ஸ் பத்தி எழுதிவிட்டால் இந்தப்பதிவில் என்னதான் எழுதப் போகிறார்களோ பாவம்.

வெட்டி ஒட்டுவது தப்பா, மொக்கை பதிவு அதாங்க சென்ஷி யின் புள்ளிவிவரம் மாதிரி ஜோக் பதிவு எழுதுவது தவறா , கவிதை என்று கிறுக்குவது தப்பா என்று கேள்விகளாக அடுக்கினாலும் நாலு பேருக்கு அதுனால ஒரு ஆபத்து வராதுங்கற போது எதுவுமே தப்பு
இல்லன்னு முடிவு கிடைத்தது.

சென்ஷியைப்பார்த்து நீங்க வலைப்பதிவு உலகத்திற்கு என்ன செய்றீங்க என்றதும் புதுசா வரவங்கள்ளேர்ந்து எல்லாருக்கும் பின்னூட்டம் போட்டு பாரட்டுறேன். அதான் என்னால ஆன சேவை என்றார்..சென்ஷி .. தேவை உங்கள் சேவை அப்படின்னு பாராட்டினோம். மங்கையிடம் சென்ஷீ உங்க பின்னூட்டம் அதிகமா பாக்கமுடியறது இல்லயேன்னு கேட்டார் . ஆபிஸிலே தமிழார்வத்திற்கு இருக்கும் தடைப்பற்றி மங்கை கவலையைப் பகிர்ந்து கொண்டார்கள்.

பாகசவில் தலைமைப்பொறுப்பு எப்படி வந்தது , யாரவது பதவிகொடுத்தாங்களா இல்லை யாரும் இல்லாததால் தானாகவே பதவியை எடுத்துக்கொண்டாரா என்று சென்ஷியின் பதவி பற்றி ஒரு அலசல் நடந்தது.

வலையாசியரா இருந்தப்போ வித்தியாசமா தொடுத்ததெல்லாம் தானாவே செய்தாரா இல்லை மண்டபத்தில் எழுதி வாங்கி வந்தாரா, என்றதும் இன்னும் நிறைய ஐடியா இருக்குன்னார் சொன்னா நாங்க யூஸ் பண்ணிடுவோம்ன்னு சொல்ல மறுத்துட்டார். அநியாயம். எல்லாம் பேசி முடிஞ்ச அப்புறம், சென்ஷி கேக்குறார், அக்கா இப்ப நம்ம என்ன எல்லாம் பேசினோம், இன்னொரு தடவை சொல்லுங்க... எனக்கு மறந்துடும் இல்லைன்னா கொஞ்சம் நோட்ஸ் எழுதுங்களேன் என்றார். நல்லா இருக்கே மறந்துப்போகும்ன்னா மாணவர் தான் நோட்ஸ் எடுக்கணும் மேடத்துக்கிட்டயா நோட்ஸ் எழுதித் தர சொல்லறது ..பாவம் தனியாளா மாட்டிக்கிட்டார் சென்ஷி.

பாஸ்டன் பாலா வந்திருந்தா கேட்டுருக்கலாம், நீங்க சொல்லறது எனக்கு உடன்பாடில்லை அக்கா என்று எதற்காகவாவது நடுநடுவில் சொல்லிக்கொண்டிருந்தார். அப்பறம் அது சரி அது சரி என்று முடித்துக்கொண்டிருந்தார். ஆளுக்கு ஒரு தோசை ஒரு காப்பி ஆர்டர். [ இத்தனோண்டு ஆர்டருக்கு எங்கள அத்தன நேரம் அனுமதிச்சாங்களா உட்கார்ந்திருக்கன்னு வீட்டுக்காரருக்கு பெரிய சந்தேகம்] . சிவமுருகன் போன் செய்தார் வர்ரேன்னு, இல்லங்க நீங்க வர நேரம் ஆகும்ன்னா காத்திருக்கறது கஷ்டம் அடுத்து ஒரு ரிலாக்ஸா சண்டெ சந்திப்பு ஏற்பாடு செய்யலாம் என்று போனிலே முடிவு செய்துகொண்டோம். ஆனா அதற்கப்புறமும் கொஞ்சம் பேசிட்டு இன்னோரு காபி. இதற்கு நடுவில் வீட்டிலிருந்து மூன்று முறை மகள், வீட்டுக்காரர், மகன்( வெறுமனே அம்மா அம்மா) என்று கூப்பிட்டாயிற்று. தனிமனிதத்தாக்குதல் இன்றி மற்றவர் மனதை நோகடிக்காமல் பதிவு இட வேண்டும் என்று எல்லாருமே நினைக்கவேண்டும் என்று பேசிக்கொண்டே வெளியே வந்தோம்.கலகலப்பாக முடிந்தது சந்திப்பு.


தேசிய சந்திப்பு 1 சென்ஷியின் ரிப்போர்ட்

58 comments:

பொன்ஸ்~~Poorna said...

நல்லா இருக்கே இந்த சந்திப்பு.. பரவாயில்லை, தில்லி சந்திப்பிலாவது 33% ஒதுக்கீடு கொடுத்திருக்கீங்களே - ஆண்களுக்கு ;-)

செல்வநாயகி said...

படிக்க ஆரம்பிச்சதுல துவங்கின சிரிப்பு கடைசிவரைக்கும் கூடவே வந்துச்சு. கதை, கவிதை, இப்ப நகைச்சுவையும் ஆரம்பிச்சாச்சா?

எப்படியோ சந்திப்பு முடிச்சிட்டீங்க:))

///இத்தனோண்டு ஆர்டருக்கு எங்கள அத்தன நேரம் அனுமதிச்சாங்களா உட்கார்ந்திருக்கன்னு வீட்டுக்காரருக்கு பெரிய சந்தேகம்///

அதே சந்தேகம்தான் எனக்கும்.

///தனிமனிதத்தாக்குதல் இன்றி மற்றவர் மனதை நோகடிக்காமல் பதிவு இட வேண்டும் என்று எல்லாருமே நினைக்கவேண்டும் என்று பேசிக்கொண்டே வெளியே வந்தோம்////

ஓ! இப்படிவேற ஆசைப்பட்டிங்களா? All the best:))

Anonymous said...

அருமையான சந்திப்பு:-))

ரிப்பீட்டே!

கலக்கல்:-))

:-)))))))

அருமையான பதிவு:-))

சென்ஷி said...

அக்கா..........
(வேற எதுவும் சொல்ல வார்த்தை வரல. :))


பதிவா போட்டுடறேன்..


சென்ஷி

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆமாமா பொன்ஸ் ஒதுக்கீடு கொடுத்தோம் ஆனா பாருங்க ஆபீஸ்ல மத்தவங்களுகு நேர ஒதுக்கீடு கொடுக்காததால அவங்களால எல்லாம் வரமுடியல..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கரெக்ட் செல்வநாயகி , சென்ஷி வேற ஏன் நகைச்சுவைப் பதிவே போடலன்னு கேட்டாச்சு , அதானே அதையேன் விட்டு வைக்கணும்ன்னு ஒரு முயற்சி ...கவனம் இது ஒரு நகைச்சுவைப்பதிவுன்னு தான் தலைப்பு வச்சேன்..சேசே இதெல்லாம் ஒரு நகைச்சுவையான்னு தோணுச்சு வேற தலைப்பு போட்டேன்...இது துன்பம் வரும்போது சிரிக்கச்சொன்ன வள்ளுவர் வார்த்தையால வந்த பதிவு..அதாங்க வரேன்னு சொன்னவங்க எல்லாம் வரலைல்ல?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அபி அப்பா இது நீங்க போட்ட பின்னூட்டமா இல்ல ??!!!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்ல வேளை சென்ஷி ...எங்க பின்னூட்டம் மட்டும் போட்டுட்டு விட்டுடுவீங்களோன்னு நினைச்சேன்.
பதிவா ப் போடுங்க .

Anonymous said...

நாந்தாங்க நம்புங்க! 4 நாளா ஒழுங்கா பதிவு போடாம கும்பி கூத்து அடிச்சுகிட்டு இருந்தனா அது பிளாக்குக்கு பிடிக்காம என்னய போட்டு கடிச்சு வச்சிடுச்சு. அதான் இப்டி அனானியா அலையுறேன். வேணுமின்னா கோட் வேர்டு கேட்டு பாருங்க சரியா சொல்லுவேன். (உங்க பொண்ணு பேர் என்னா? அபிராமி) இப்ப ஒத்துகறீங்களா?

பங்காளி... said...

தலைநகரில் வரலாறுகானாத வலைபதிவர் சந்திப்பு ...அப்படி இப்படின்னு பதிவப் போட்டு பில்டப்கொடுத்து கலக்கீறுக்கனும்...மிஸ் பண்ணீட்டீங்களே...

சரி...சரி....அடுத்த மீட்டிங் எப்பன்னு சொல்லுங்க....கலக்கீறலாம்...அவனவன் பதிவுல...தில்லி மீட் பத்தி மட்டுமே எளுதற அளவுக்கு பில்டப் கொடுத்தரலாம்.....

...ம்ம்ம்ம்ம்ம்.....இந்த ரேஞ்சுல போனா ஓட்டல்ல மூணு பேர் தனியா உக்காந்து பேசிட்டு இருந்தாக்கூட இது வலைப்பதிவர் சந்திப்பா இருக்குமோன்னு நினைக்க தோணும்...கஷ்டம்...:-))))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

என்ன கடைசியில கஷ்டம்ன்னு சொல்லிட்டீங்க.. :(

ஒருத்தர் மட்டுமே சந்திச்ச வலைப்பதிவு சந்திப்பெல்லாம் வரலாற்றில் இருக்கும் போது இதெல்லாம் பெரிய மாநாடாக்கும்.

சொன்னதுக்காகவே ஒரு தில்லியில் பெரியக்கூட்டம் நடத்திக்காண்பிச்சுருவோம் . காத்திருங்கள்.

Anonymous said...

//ஒருத்தர் மட்டுமே சந்திச்ச வலைப்பதிவு சந்திப்பெல்லாம் வரலாற்றில் இருக்கும் போது இதெல்லாம் பெரிய மாநாடாக்கும்.//

அய்யோ அது நாந்தான். இப்பவாவது நம்புங்க.ஆண்டவா இப்டி புலம்ப வச்சுட்டியே, என்னய தவிர எல்லாருக்கும் பதில் சொல்றாங்களே!

சென்ஷி said...

அக்கா பதிவு போட்டாச்சு...

மறுக்கா ஒரு ஸாரி.. பதிவு போட லேட் ஆனதுக்கு :)

சென்ஷி

மங்கை said...

பொன்ஸ், செல்வநாயகி

:-))

சிரிச்சு சிரிச்சு எனக்கு வீசிங்கே வந்துருச்சு...ஒரு நாளைக்கு நானும் லட்சுமியும் ரெண்டு தடவையாவது பேசிக்குவோம்...ஆனா என்னைக்குமே பேசறதுக்கு விஷயம் இல்லாம இருந்தது இல்லை...அன்னைக்கும் அப்படிதான்....காணாமல் போனவர்கள் அறிவுப்பு வர்ரதுக்குள்ளே நாமலே வீட்டுக்கு போயிடலாம்னு போய் சேர்ந்தோம்...

அபி அப்பாக்கு என்ன ஆச்சு...

//...கஷ்டம்...:-))))//

இதுக்கு என்ன அர்த்தம்...அந்த உம்ம எனக்கு இப்ப்ப்ப்ப்ப்ப தெரிஞ்சாகனும்

கோபிநாத் said...

முத்துக்கா அருமையான சந்திப்பு ;-)))

ரிப்பீட்டே! - இது சென்ஷிக்கு

கலக்கல்:-)) - இது மங்கைக்காவுக்கு

கோபிநாத் said...

\\என்னன்னா நாம ஒருத்தருக்கு போடற பின்னூட்டத்துக்கு அவங்க பதிலுக்கு நன்றி அப்படின்னு போடுவது அவசியமே...நாங்க சொல்லுவோம்.எங்களுக்கும் மத்தவங்க நன்றி சொல்லணும்ன்னு எதிர்பார்ப்போம். நன்றி சொல்லைன்னாலோ பின்னூட்டத்திற்கு பதில் சொல்லைன்னாலோ அவர்களுக்கு பின்னூட்டமிடாமல் போராட்டம் செய்வோம்.\\

அக்கா ரொம்ப நல்ல முடிவு தான் ;-)))

துளசி கோபால் said...

ஆமாம், இதே நாளில் பாபா ச்சென்னை வலைப்பதிவர் சந்திப்புலே கலந்துக்கிட்டு இருக்காரே.
ஒருவேளை அங்கே தில்லி வரேன்னு சொன்னது அவரோட 'ஜுருவா பாய்?'


என்னங்க இது.?

//தில்லியில் துளசி ,
அருணா போன்ற பெரிய பதிவர்களுடன் ....//

பெரிய ?

அருணா - ரொம்பச் சரி

துளசி- இது கொஞ்சம் ஓவர் இல்லையோ? ( நெல்லுக்கிறைத்த நீர்?)

எப்படியோ தோசை காபி நல்லா இருந்துச்சா?

காட்டாறு said...

பங்காளி சொன்ன மாதிரி ஒரு பில்டப் கோடுத்திருந்தா கூடுதல் நகைச்சுவையா இருந்திருக்கும். இப்பவும் குறைந்து போகல...

சென்ஷிக்கு இப்படி ஒரு கொடுமையா? ;-) பெண்கள் மெஜாரிட்டி இருக்க்கும் இடத்தில் அவரு அடங்கி ஒடுங்கி அக்கா போட்டது சரி தான்னு படுது.... வாழ்க உங்கள் தொண்டு!

அபி அப்பா said...

நான் தாங்க அபிஅப்பா! இன்னும் ஒரு கமெண்ட் பப்ளிஷ் பண்ணவேயில நீங்க:-((

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஓகே அபி அப்பா நம்பறேன்..நீங்க தான்னு...லேட்டா பப்ளிஷ் பண்ணிட்டேன் அவ்வளவு தான்.
\\அருமையான சந்திப்பு:-))

ரிப்பீட்டே!

கலக்கல்:-))

:-)))))))

அருமையான பதிவு:-)) //

அது என்ன ஒரே பின்னூட்டத்தில் நாலு பின்னூட்டம் போட்டு ருக்கீங்க..

நாங்க வீட்டுக்கு போயிருந்தோம்ன்னா
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு நடத்திய உங்களைப்போல இன்னொரு தனி சந்திப்பு தான் நடத்தி இருக்கணும் சென்ஷி ...அவ்வளவு லேட்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆமா மங்கை சிரிச்சு சிரிச்சு இருமல் வேற.....அதுவும் சென்ஷி வந்ததும் இன்னும் சிரிப்பு . நாகேஷ குருவா நினைக்கிறவர் ஆச்சே.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கோபி நல்ல முடிவா அப்பாடா
மக்கள் ஆதரவு இருக்கு..சந்தோஷம்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

துளசி 20 இங்கே சந்திப்புக்கு வரதா சொன்னார்..22 சென்னை சந்திப்பு..வந்திருந்தா வலைப்பதிவுகளை ப் பத்தி நிறைய அவரைக் கேள்விக் கேட்டு துளைச்சு எடுத்து இருப்போம் . தப்பிச்சுட்டார்.
ப்ளைட் பிடிச்சு போயிருப்பார். ஆனா அவர் காண்டாக்ட் நம்பர் மிஸ் பண்ணிட்டாராம்.

முக்கியமா புதிய வலைப்பதிவாளர்களுக்கு இந்த சந்திப்புகள் உதவுதுன்னா அது அவங்களுக்கு இருக்கற தயக்கத்தையும் பயத்தையும் போக்கிறுது. ஒரு அன்னியோன்யமான நட்பு கிடைக்கறதால தயக்கமின்றி தெரிஞ்சதை எழுத வைக்குது...எனக்கு நீங்க எல்லாம் முதல் சென்னை ச்ந்திப்புல எத்தனை உதவியாப் பேசினீங்க...
நீங்க பெரிய ஆள் இல்லயா ?? தன்னடக்கமாக்கும்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

காட்டாறு சொல்லாம மனசுக்குள்ள பந்தா விட்டதுக்கு இத்தன சின்னதா போச்சு ....பதிவெல்லாம் போட்டு பந்தா விட்டு நடக்கலன்னா நல்லா இருந்து இருக்குமா...விடுங்க ..இதெல்லாம் நாட்டுல சகஜம்..தானெ.

அக்கா போட்டார் தான் சென்ஷி ஆனா தப்புன்னா தப்புன்னு நக்கீரர் மாதிரி சவுண்டு விடுவார்...இல்லக்கா நீங்க சொல்றது தப்புன்னு... :)

சென்ஷி said...

//முத்துலெட்சுமி said...
என்ன கடைசியில கஷ்டம்ன்னு சொல்லிட்டீங்க.. :(

ஒருத்தர் மட்டுமே சந்திச்ச வலைப்பதிவு சந்திப்பெல்லாம் வரலாற்றில் இருக்கும் போது இதெல்லாம் பெரிய மாநாடாக்கும்.//

அதானே :))

சென்ஷி

சென்ஷி said...

//முத்துலெட்சுமி said...
ஆமா மங்கை சிரிச்சு சிரிச்சு இருமல் வேற.....அதுவும் சென்ஷி வந்ததும் இன்னும் சிரிப்பு . நாகேஷ குருவா நினைக்கிறவர் ஆச்சே. //

:))))

//காட்டாறு said...
பங்காளி சொன்ன மாதிரி ஒரு பில்டப் கோடுத்திருந்தா கூடுதல் நகைச்சுவையா இருந்திருக்கும். இப்பவும் குறைந்து போகல...

சென்ஷிக்கு இப்படி ஒரு கொடுமையா? ;-) பெண்கள் மெஜாரிட்டி இருக்க்கும் இடத்தில் அவரு அடங்கி ஒடுங்கி அக்கா போட்டது சரி தான்னு படுது.... வாழ்க உங்கள் தொண்டு! //

:((( என்ன சொல்றது.. போனதே லேட்டு.. எத்தன் ஸாரி சொன்னேன்னு ஒரு போட்டியே வச்சிருக்கலாம். அதுக்கு மேல தனியா உக்கார வச்சிட்டா என்ன பண்றது...

//முத்துலெட்சுமி said...
காட்டாறு சொல்லாம மனசுக்குள்ள பந்தா விட்டதுக்கு இத்தன சின்னதா போச்சு ....பதிவெல்லாம் போட்டு பந்தா விட்டு நடக்கலன்னா நல்லா இருந்து இருக்குமா...விடுங்க ..இதெல்லாம் நாட்டுல சகஜம்..தானெ.

அக்கா போட்டார் தான் சென்ஷி ஆனா தப்புன்னா தப்புன்னு நக்கீரர் மாதிரி சவுண்டு விடுவார்...இல்லக்கா நீங்க சொல்றது தப்புன்னு... :) //

நம்புங்கக்கா..

நான் ரொம்ப நல்லவங்க்கா :)

Osai Chella said...

எண்ணிகையில் மட்டுமாஎல்லாம் இருக்கிறது.எண்ணன்களின் சந்திப்பு தானெ சுவாரசியம்! அழகான பதிவு!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நான் நல்லவன்னு சொன்னா நக்கீரர் கெட்டவரா? என்னப்பா இது..
தப்புன்னு தெரிஞ்சா தைரியமா எடுத்துச் சொல்றார் சென்ஷி ன்னு
சொன்னது கூட நல்லவர் சென்ஷி ங்கற
அர்த்தத்துல தானே.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி ஓசை செல்லா அவர்களே...
இப்படி ஒரு வரியில சொன்னாலும்
நல்லதோர் கருத்தைச் சொன்னீங்க..
பாருங்க யாருக்கும் புரிய மாட்டேங்குது..அப்பறம் தில்லியில் தமிழில் எங்களுக்கு தெரிந்து இருக்கற பதிவர் களே 6 தான் மூணு பேர் சந்திச்சா பாதிக்கு பாதி பங்கெடுத்த சந்திப்பு இல்லயா...சென்னையில் இருக்கற பதிவர்கள் அளவுக்கு 40 அவங்களுக்கு பெரிய சந்திப்பு.

சென்ஷி said...

//தில்லியில் தமிழில் எங்களுக்கு தெரிந்து இருக்கற பதிவர் களே 6 தான் மூணு பேர் சந்திச்சா பாதிக்கு பாதி பங்கெடுத்த சந்திப்பு இல்லயா...சென்னையில் இருக்கற பதிவர்கள் அளவுக்கு 40 அவங்களுக்கு பெரிய சந்திப்பு.//


:))))

ரிப்பீட்டே

சென்ஷி said...

//முத்துலெட்சுமி said...
நான் நல்லவன்னு சொன்னா நக்கீரர் கெட்டவரா? என்னப்பா இது..
தப்புன்னு தெரிஞ்சா தைரியமா எடுத்துச் சொல்றார் சென்ஷி ன்னு
சொன்னது கூட நல்லவர் சென்ஷி ங்கற
அர்த்தத்துல தானே.//

புல்லரிக்குதுப்பா :))

சென்ஷி said...

கலந்துகிட்ட இன்னோரு பதிவரோட பதிவ காணோம்னு எல்லோரும் தேடப்போறாங்க. இந்திய வலைப்பதிவர் சந்திப்புல முதன்முறையாக கலந்துக்கிட்ட எல்லோருமே பதிவு போட்ட முதல் மீட்டிங்கற பேரு வர்றதுக்காகவாச்சும் மங்கைஅக்காவ பதிவு போட சொல்லுங்க. :)

Boston Bala said...

சந்திப்பு நல்லாப் போனது சந்தோஷம் :D
வர இயலாமல் குளறுபடியானதற்கு வருத்தம் :(

விரிவான கவரேஜுக்கு நன்றீங்கோ :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இவ்வளவு தூரம் வந்துட்டு சந்திப்புக்கு வரமுடியலங்கறது ரொம்ப வருத்தம்..
:(
சார்ட் ட்ரிப் நீங்களும் தான் என்ன செய்வீங்க..

நெல்லை சிவா said...

அடடே,,இதுதானா சென்ஷி சொன்ன அந்தச் சந்திப்பு. சூப்பருங்கோ.

Anonymous said...

தலைநகர் சந்திப்புக்கு வராமல் போன பாபாவுக்கு ஒரு 10 பின்னூட்ட இம்போசிஷன் குடுங்கக்கா..

முதல் பின்னூட்டம் சூப்பர்...

//நல்லா இருக்கே இந்த சந்திப்பு.. பரவாயில்லை, தில்லி சந்திப்பிலாவது 33% ஒதுக்கீடு கொடுத்திருக்கீங்களே - ஆண்களுக்கு ;-)//

தலைநகர பா.க.ச கிளை சிறப்பாக செயல்படுவதற்க்கு நீங்கள்ளாம் ஒரு காரணம் இல்லையாக்கா

இந்தாங்க புடிச்சுக்குங்க ஒரு பின்னூட்டம்.

உங்க மொகல் கார்டன் நினைவுகள் பதிவு அருமை...

அப்துல் கலாமே இன்விட்டேஷன் வச்சாராமே !!!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி நெல்லை சிவா தலைநகரில் நடந்தது இல்லையா சூப்பராத்தானே இருக்கும்...சரி எல்லாரும் இங்க வந்து ஒரு தடவை இந்தியாவில் இருக்கற அத்தனை தமிழர்களுக்குமான விழாவைக் கொண்டாடலாமே.எப்படி ஐடியா?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

என்ன ரவி இத்தன லேட்டாக் கேக்கறீங்க..தலைநகர் தமிழ் ப்ளாகர் இல்லயா அதான் கலாமே கூப்பிட்டு கவுரவிச்சார் ...:) என்ன இருந்தாலும் இருக்கும் இடத்தில் ஒரு மதிப்பு இருக்கத்தானே செய்யும்.

நாகை சிவா said...

ஊர்ஸ்,

நீங்க எல்லாம் டில்லியில் இருப்பது நமக்கு தெரியாது(அப்ப)

இரு முறை வந்தேன், டிசம்பர், பிப்ரவரி..... மறுபடியும் டில்லி வருவேனா என்று தெரியல....

சந்திப்பு நல்லப்படியாக நடந்தை குறித்து மிக்க மகிழ்ச்சி....

மாலன் said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

அக்கா, உங்களை கேபினட் மந்திரியாக்கலாம்னு நினைக்கிறேன். சோனியாஜி கிட்ட கேக்கவா ?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கண்டிப்பாக இன்னொருமுறை வாங்க , இங்க பார்க்க வேண்டிய இடம் எத்தனை இருக்கு நாகை சிவா,

அப்படியே அகில இந்திய தமிழ்ப்ளாகர்ஸ் மீட்டிங்க் ஒன்னு போடலாம். :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அதே அனானியா நீங்க... சிங்...
நீங்கப்போய் அக்கான்னுட்டு.

ஆகா இத சொன்ன நல்ல நேரம் நான் அவ்வளவு பெரிய இடத்துக்கு போயிடுவேனா .? போதுமப்பா
உங்க சொல்வாக்கு . உருப்படியா இருக்கறது பிடிக்கலயா?

அபி அப்பா said...

இந்த நாள் இனிய நாள் - மே 1 சென்ஷி தம்பி பிறந்த நாள்!!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அப்படியா??

சென்ஷி said...

அபி அப்பா..
இன்னிக்கு இதுதான் வேலையா உங்களுக்கு :))

அன்புத்தோழி said...

கலக்கிட்டீங்க போங்க. சூப்பர் சந்திப்பும் டிபனும் அமரக்களம் முத்துலெட்சுமி

அன்புத்தோழி

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அபி அப்பா ரொம்ப நன்றி.
இனிமே எல்லாரும் அபி அப்பாக்கிட்ட
ரகசியமா உங்க பிறந்த நாள் மற்றும் விசேஷங்களை தெரியப்படுத்துங்கள்
அவர் இலவசமாக விளம்பரம் செய்து தருவார் நண்பர்களுக்காக.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அன்புத்தோழி நன்றிகள் நன்றிகள்.
இன்னொரு கலக்கல் சந்திப்பு வந்துகொண்டு இருக்கிறது...காத்திருங்கள்.

அபி அப்பா said...

//சென்ஷி said...
அபி அப்பா..
இன்னிக்கு இதுதான் வேலையா உங்களுக்கு :)) //

//முத்துலெட்சுமி said...
அபி அப்பா ரொம்ப நன்றி.
இனிமே எல்லாரும் அபி அப்பாக்கிட்ட
ரகசியமா உங்க பிறந்த நாள் மற்றும் விசேஷங்களை தெரியப்படுத்துங்கள்
அவர் இலவசமாக விளம்பரம் செய்து தருவார் நண்பர்களுக்காக//

முதல்ல ஒரு சிரிப்பான் போட்டுக்கறேன்:-))

சென்ஷி! நான் சேட்ல உங்க கிட்ட சொன்னதையே இங்கும் பதிகிறேன்!

தனிமை சில சமயம் வலிக்கும். நல்ல நாள் விஷேஷ நாள்ல அப்பா, அம்மா சொந்த பந்தம் வீடு அருகாமை கோயில் நண்பர்கள் இதெல்லாம் விட்டு தனியா டெல்லியிலே இருக்கும் நீங்கள் எப்படி இருந்திருப்பீங்கன்னு என்னால உணர முடியும். ஏன்னா நான் அதை இங்கு அந்த வலியை அனுபவித்து கொண்டிருப்பவன். உங்களை லேசாகா ஆக்கவே மத்தவங்க கிட்ட சொன்னேன். தவிர சந்தாஷம் பகிந்துகிட்டா பெருகும், அது போல் துக்கம் பகிர்ந்துகிட்டா குறையும். நான் உங்க சந்தோஷத்தை பெருக்கினேன் அவ்வளவே:-))))))

எப்புடி?மடக்கிட்டேன்:-)))

மங்கை said...

ஹை நான் தான் பிபிடிங்கோவ் (50) ..:-))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆமாங் ....நன்றிங் ... அம்மணி.

அபி அப்பா said...

எங்கே என் பின்னூட்டம். நான் ஸ்ட்ரைக் பண்ண போறேன்:-))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

மன்னிக்கணும்..மெயிலில் அந்த பின்னூட்டத்தை கவனிக்காமல் விட்டு விட்டேன். சமாளிப்பஸ் சூப்பர்...அபி அப்பா...

அபி அப்பா said...

மிக நல்ல சந்தேகம்! பல்பு பத்தி கேட்டது. நான் அதுக்கு சென்ஷி கிட்டே சேட்ல கூட பதில் சொன்னேன். நாளை விள்க்கமாக சொல்லட்டுமா? இன்று வார விடுமுறை. ஆனாலும் ஆணி அதான் ப்ளீஸ்!!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பதிவாப் போடப்போறீங்களா?/

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சென்ஷி ஒரு விசயம் புரியுதா?சிவமுருகனவிட அவர் மனசாட்சி கொஞ்சம் வாயைத்திறந்து பேசற டைப் போல... :)

சென்ஷி said...

//முத்துலெட்சுமி said...
சென்ஷி ஒரு விசயம் புரியுதா?சிவமுருகனவிட அவர் மனசாட்சி கொஞ்சம் வாயைத்திறந்து பேசற டைப் போல... :)//

ஆனா சிவமுருகன் பதில் வந்தது இந்த பதிவுல இல்லையே :))


உங்க அழகு பதிவுல.. ஏன்ன அதுல சாமி போட்டோ இருக்குதுல்ல :)

சென்ஷி