January 14, 2010

எங்க வீட்டு மஞ்சகொத்து


இந்த முறை எங்க வீட்டுத்தோட்டத்துலயே வளர்ந்த மஞ்சள் கொத்து, பொங்கலுக்கு தயாராக.. கொஞ்சம் எடுக்கும் போது மஞ்சள் துண்டுகள் உடைந்து விட்டது.. கண்டுக்காதீங்க..
வருவரா மாட்டாரா என்று நினைத்த சூரியனார் வந்து சிறப்பித்துவிட்டார்.. எல்லாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

இயற்கை வளங்களை வணங்கிப் போற்றுவோம்- இயற்கை
வளமுடன் வாழவைக்கட்டும் நம்மை...

35 comments:

ஹுஸைனம்மா said...

ஓ, பொங்கல் பானையைச் சுத்திக் கட்டுறதுக்குத்தான் மஞ்சள் குலையா? அது ஏன் பொங்கல்ல மட்டும் மஞ்சள் குலை விப்பாங்கன்னு தெரியாம இருந்துது. நானும் அதை அரைச்சு தேச்சு குளிக்கிற்துக்குத்தான் வாங்குவாங்கன்னு நினைச்சேன்!!

டெல்லிப் பொங்கல் நல்லாருந்துதா?

Muruganandan M.K. said...

மஞ்சள் கொத்து சமாசாரம் சுவையாக இருக்கு. பொங்கலும் அப்படித்தானே?
தைத்திருநாள் வாழ்த்துக்கள்.

நிஜமா நல்லவன் said...

பொங்கல் வாழ்த்துக்கள் அக்கா. மஞ்சகொத்து நல்லா இருக்கு. ஆமா நீங்க மண்பானைல பொங்கல் வைக்க மாட்டீங்களா

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஹுசனைம்மா சூரியனார் வந்ததால் டெல்லி பொங்கல் நல்லாவே இருக்குதுங்க.. :)
----------------
டாக்டர் நன்றி உங்களுக்கும் வாழ்த்துக்கள்.
பொங்கலும் நல்லா வந்திருக்கு , பலகாய் சாம்பாரும் கொதிச்சு ரெடியாகிடுச்சு.
:)
--------------------
நல்லவரே எங்க வீட்டுல வெங்கலப்பானை பொங்கல் தாங்க..;)

தெய்வா said...

இந்தியாவின் தென்கோடியிலிருந்து
வடகோடிக்கு...
பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

டவுசர் பாண்டி... said...

மஞ்சள் கிழங்கு உடையாமல் பறித்தெடுக்க ஊசி மண்வெட்டியை பயன்படுத்துவார்கள்.

இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள்.

cheena (சீனா) said...

அன்பின் முத்துலெட்சுமி

வீட்டிலேயே விளைந்த மஞ்சள் கொத்து

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்

வெங்கலப்பானை சூப்பர்

டவுசர் பாண்டி... said...

தில்லி வடகோடியா....தெய்வா(மே)!

ராஜேந்திரன் said...

ஆஹா நல்ல பொங்கல் பானை. உங்களுக்கு பொங்கல் வாழ்த்துகள்

pudugaithendral said...

பளிச் பானை, பச்சை பசேல் மஞ்சள் கொத்து சூப்பர் கயல்

பொங்கல் நல் வாழ்த்துக்கள்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி தெய்வா.. உங்களுக்கும் வாழ்த்துக்கள்..
:)
-----------------------
பாண்டி சார்.. நன்றீங்க சார்..அடுத்தமுறையில் உடையாம எடுக்க முயற்சி செய்யறேன்..இந்த முறை ஒரு கத்தி வச்சி ட்ரை செய்தேன்..:)
அப்பறம் தெய்வா கமெண்ட்ல ரொம்ப லாஜிக் பாக்கறீங்க நீங்க.. அவர் திருவனந்தபுரம் போல அப்ப அவர் தென்கோடியும் இல்லைன்னு சொல்வீங்களா.. ?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி சீனா , நன்றி ராஜேந்திரன் , நன்றி புதுகைத்தென்றல் உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் பொங்கல்வாழ்த்துக்கள்.. :)

விக்னேஷ்வரி said...

பானை அழகா இருக்குங்க. கரும்பு கிடைக்குதா.... எங்கங்க... எதுவுமே இல்லாம லோடிக்குப் பொறி தின்னு காஞ்சு போய் இருக்கேன்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கரும்பு எப்பவுமே பொங்கலுக்கு முதல் பத்து நாட்களில் தமிழ்க்கடைகளில் கிடைக்கும் விக்கி.. எங்களுக்கு இரண்டு கடைகள் இருக்கின்றன இங்கே.. முதலிலேயே போனால் நல்ல கரும்பு கிடைக்கும். அப்பறம் போனா ஒல்லியா குட்டியா இருக்கும்..

Anonymous said...

சுவையான பொங்கல நம்ம கண்ணுலயே காட்ட மாட்டீங்களோ!

எங்கும் வாழும் உயிரினமனைத்துக்கும்

மங்களம் நிறைந்த பொங்கல் வாழ்த்துக்கள்.

Radhakrishnan said...

இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள். மனம் மகிழ்வாக இருக்கிறது.

சாந்தி மாரியப்பன் said...

வீட்டுல வளத்த மஞ்சக்குலையா?... சூப்பர்.. நீங்களும் நம்ம கேஸ்தானா!!!!

கானா பிரபா said...

மஞ்சக் கொத்து கலக்கல்ஸ், இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

goma said...

பொங்கல் வாழ்த்துக்கள்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\\Anonymous said...
சுவையான பொங்கல நம்ம கண்ணுலயே காட்ட மாட்டீங்களோ!

எங்கும் வாழும் உயிரினமனைத்துக்கும்

மங்களம் நிறைந்த பொங்கல் வாழ்த்துக்கள்.//

நன்றிங்க.. உங்களுக்கும் வாழ்த்துகள்.
-----------------------------

வே.ராதாகிருஷ்ண்டன் நன்றி :)
-------------------------------
சாரல் உங்க வீட்டு மஞ்சள் பாத்தேன்.. நீங்க பெரியாளா இருப்பீங்க போல.. :)
----------------------------
கானா கோமா இருவருக்கும் நன்றி .. உங்களுக்கும் வாழ்த்துக்கள்..:)

அன்புடன் அருணா said...

சூரியன் வந்தாரா?...ஜெய்ப்பூரில் வரவேயில்லையே!

அண்ணாமலையான் said...

வாழ்த்துக்கள்....

Thekkikattan|தெகா said...

அய்! கரும்பு...

பொங்கல் மற்றும் இன்னுமொரு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

கோபிநாத் said...

மனமார்ந்த பொங்கல் வாழ்த்துக்கள் அக்கா ;))

மஞ்சகொத்து வச்சி கலக்கிட்டிங்க ;))

Anonymous said...

பொங்கல்/மாட்டுப்பொங்கல் வாழ்த்துக்கள்

Sakthi said...

happy pongal

Thamiz Priyan said...

பொங்கலோ பொங்கல்! மஞ்சள் கொத்து பானையில் கட்டுவதை இப்பதான் பார்க்கிறேன். எங்கள் ஊர்களில் பூஜையில் வைப்பார்கள், மாட்டுக்கு கழுத்தில் கட்டுவார்கள்.

anujanya said...

பொங்கல் வாழ்த்துகள்

அனுஜன்யா

பா.ராஜாராம் said...

அடுத்த பொங்கள் வாழ்த்துக்கள்!

தாமதமாயிருச்சு..

:-)

R.Gopi said...

அட....

மஞ்சள் உடைந்தாலும் மஞ்சள் தானே..

பரவாயில்லை, நன்றாக தான் இருக்கிறது முத்துலெட்சுமி...

வெங்கலபானை பொங்கல் பலே போல் இருக்கிறது...

லேட்டா கேக்கறேன்... நல்லா ஜமாய்ச்சீங்களா... சுட்டெரிப்பவர் வந்து உங்களின் கொண்டாட்டத்தில் பங்கு கொண்டது குறித்து மிக்க மகிழ்ச்சி... (சுட்டெரிப்பவர் என்றால் “சூரியன்”...)..

//முதலிலேயே போனால் நல்ல கரும்பு கிடைக்கும். அப்பறம் போனா ஒல்லியா குட்டியா இருக்கும்..//

விக்னேஷ்வரியிடம் நீங்கள் சொன்னது... நீங்க முன்னாடியே போய், நல்லா குண்டான கரும்பை வாங்கினீர்கள்தானே!!??

பொங்கலோ பொங்கல்...

மங்கை said...

பொங்கள் வாழ்த்துக்கள்...
//இந்த முறை எங்க வீட்டுத்தோட்டத்துலயே வளர்ந்த மஞ்சள் கொத்து, பொங்கலுக்கு தயாராக//

இதான் சந்தோஷம்..வாழ்த்துக்கள்

கோமதி அரசு said...

நானும், எங்கள் வீட்டு தொட்டியில் வைத்து வளர்த்த மஞ்சள் கொத்து தான் பொங்க பானைக்கு கட்டினேன்.

சூரிய ஒளியால் இயற்கை அன்னை அளித்த காய்கறிகளை போட்டோ எடுக்கவில்லையா?

இயற்கை வளங்களை வணங்கிப் போற்றுவோம்.
இயற்கை வளமுடன் வாழவைக்கட்டும் நம்மை .
வாழ்க வளமுடன்.

சந்தனமுல்லை said...

வாவ்...கலக்கல்! இயற்கை வாசியா மாறிட்டீங்களா! :-)

ராமலக்ஷ்மி said...

முன்னரே உங்க தோட்டத்தை பதிவொன்றில் காட்டியிருந்தீர்களே? தேவதையும் பாராட்டியிருந்ததே? அங்கே விளைந்ததுதானே மஞ்சகொத்து:)?

வெண்கலப் பானை.. எங்க வீட்டிலும் இதே இதே பானையே:)!

சூரியனார் தலை காட்டி சிறப்பித்து விட்டதில் சந்தோஷம்.

//இயற்கை வளங்களை வணங்கிப் போற்றுவோம்- இயற்கை
வளமுடன் வாழவைக்கட்டும் நம்மை...//

அதே அதே சொல்லி நானும் வாழ்த்திக்கறேன் தாமதமானாலும் இனிய பொங்கல் வாழ்த்துக்களைச் சொல்லி.

சென்ஷி said...

ஹாப்பி பொங்கல் அக்கா :)