----------------------------------------------------------
தென்னிந்தியா வந்தாச்சு.. சுண்டைக்காய் குழம்பு சாப்பிட்டாச்சு.. லிஸ்ட்ல ஒரு டிக் அடிச்சாச்சு..
அரைக்கீரை கூட்டு , அரைக்கீரை கடைசல் ,அரைக்கீரை பொரியல்ன்னு வகைக்கொன்று டிக் அடிச்சாச்சு..



பக்த கோடிகளை அம்மன் அருள் பெற அழைக்கும் ஆட்டோக்களுடன் ஊர் (மாயவரம் என்னும் மயிலாடுதுறை ) இன்னமும் பழமையை மறக்காமல் இருக்கிறது. கடைகளிலெல்லாம் ஒல்லிபிச்சான் சுடிதார் பெண்கள் பாவமாய் வேலை செய்கிறார்கள்.. பெண்கள் எல்லாம் இன்னமும் ஜல் ஜல் கொலுசுடன் நடக்கிறார்கள்.. குட்டிப்பிள்ளைய பின்னாடி கேரியரிலும் ஒயர் கூடையை ஹேண்ட்பாரிலும் வச்சிக்கிட்டு கடைக்கு போகும் அம்மாக்கள்.. இதெல்லாம் ஊருல ( தில்லியில்) பார்க்கமுடியாதில்ல..:-)
பள்ளி கல்லூரித் தோழிகளின் அம்மா வீட்டிற்கு தொலைபேசி புது எண்களை வாங்கி வழக்கம்போல எல்லாரையும் நலம் விசாரிக்க தொடங்கியாயிற்று.. வழக்கம்போல அவர்களும் பக்கத்து ஊரில் இருக்கும் தோழிகள் எண்களை என்னிடமே வாங்கிக்கொண்டார்கள்.. அழைப்பார்களோ இல்லை மீண்டும் அடுத்தமுறை நான் வரும்வரை காத்திருந்து அவர்களின் நலம் விசாரித்துக்கொள்வார்களோ தெரியவில்லை... :)
பூம்புகார் பீச்சுக்கு போயிட்டு தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல் சாப்பிடாமலா அதையும் டேஸ்ட் செய்தாச்சு..
கடற்கரையே இல்லை. பாறைகள் போட்ட இடம் வரை அலைகள் வந்து கொண்டிருந்தது. வெகுதூரம் நடந்து சென்று தான் கடற்கரை உள்ள கடலில் விளையாட முடிந்தது.. :( கடலம்மா இன்னும் எத்தனை நிலத்தை உணவாக்க இருக்கிறாளோ தெரியவில்லை..