July 24, 2008

ஏ ஃபார் ய கேம் Z ஃபார் zapak

கொஞ்ச நாளா டேக் யாரும் தரலையே எப்படி பதிவு போடறதுன்னு காத்திருந்தேன் . நட்சத்திரத்தை(இந்தவார தமிழ்மண நட்சத்திரம் சந்தனமுல்லை) தினம் எட்டிப்பார்த்துட்டு வந்திட்டிருந்தேன் அவங்க கூப்பிட்டுட்டாங்க..
இந்தா பிடிங்க சில தளங்களின் முகவரிகள்.. ஏபார் ஆப்பிள் மாதிரி


A----------------------agame என் பெண்ணுக்கு பிடித்த விளையாட்டெல்லாம் இங்கதான் இருக்கு பீட்சா கடை , ஹேர் ட்ரஸர், ச்யூ ஹோட்டல் , கேக் மேக்கரா எல்லாம் அவ அவதாரம் எடுக்கும் போது நாம் பார்த்து வாவ் சொல்லனும்.
B----------------------bbc english ஆங்கிலம் கற்றுக்கொள்ள அப்பப்ப எட்டிப்பார்ப்பது
E---------------------- esnips பாட்டுக்கேட்க
------------------------எப்படி எப்படி?

F---------------------- fisher price குட்டிப்பையன் விளையாட அதுவும் ஏபிசி zoo விளையாட்டுல இன்ஃபேண்ட் க்ளிக் செய்துட்டா எந்த பட்டன் தட்டினாலும் வரிசையா வருமா தானே சரியா செய்ததா நினைச்சு முன்னல்லாம் மகிழ்ச்சியாகிடுவான்..
------------------- இனிய பாடல்கள் எப் எம் வேர்ல்ட் இதுல குறிப்பா இளையராஜா சேனல்

G--------------------- கூகிளாண்டவர் தான் வேறென்ன?
H--------------------- ஹம்மபுள் ஹம்மா hummable humma இப்ப கொஞ்ச நாளாத்தான் தெரியும் இந்த தளத்தை ஆனா இப்ப அடிக்கடி பயன்படுத்தறேன்.. ஹிந்தி யும் தமிழும்.. பாட்டு கேட்க..
I ----------------------இமெம் பாட்டு கேட்க...
M------------------- ம்யூசிக் இண்டியா ஆன்லைன் பாட்டு கேட்க ( பாட்டுக்கேக்காம இருக்க முடியாதே )
O-------------------- ஆர்குட்
P---------------------- pbs kids குட்டிப்பையன் விளையாட
S----------------------- சிஃபி
T------------------------ தமிழ்மணமே தான். www.thamizmanam.com/
U------------------------அப் டு டென் குட்டிப்பையன் விளையாடறதுக்குத்தான்.. அவன் கத்துக்கலாம் விளையாடலாம். "" இப்ப என் டேர்ன் அப்பறம் உன் டேர்ன் வரும் ஓகே அம்மா .. ""
W------------------------ விக்கிபீடியா www.wikipedia.org
Y------------------------யாஹூ குடும்பத்தினர் மெயிலுக்காக
Z------------------------- zapak zuma மாதிரி விளையாட்டு.. நான் விளையாட, பையனுக்கு ரேசிங்கார்ஸ்நான் அடுத்துக்கூப்பிட விரும்புவது

சளைக்காம பதிவிட்டு தள்ளும் ஆயில்யன்
பிறந்தநாளுக்கு பதிவுகளேபரிசா குவிந்த மைப்ரண்ட் , மைப்ரண்ட்
பதிவே போடாம தப்பிச்சிட்டிருக்கற மங்கை.

வழிநெறி:
தலைப்பு :: ‘ஏ ஃபார் ஆப்பிள்
அன்றாடம் புழங்கும் தளங்களுக்கு முன்னுரிமை கொடுங்க
உங்க பதிவுக்குள் அடிக்கடி போவதால், அதை விட்டுடுங்க
இன்னும் மூணு பேரை பிடிங்க .. எழுத வைங்க..

July 13, 2008

ஒரு ஊடகத்தின் வெற்றி எதில் இருக்கிறது?

நாம் தினம் காலையில் நாளிதழ் படிக்கிறோம். முதல் பக்கத்தில் அரசியல் செய்தி கூடவே நாலு கொலை செய்தி .. அடுத்தபக்கத்தில் சில களவு செய்திகள்.. ஒழுங்கீனங்கள் பற்றிய செய்திகள்.. கடைசியில் விளையாட்டு செய்திகள்.. நடுவே எங்கேயாவது நீங்கள் தேடினால் சில நாட்டுக்கும் வீட்டுக்கும் தேவையான நல்ல செய்திகள்.. நாட்டின் மூலையில் எங்கோ நடைபெற்றதாக சொல்லப்பட்டு இருக்கும்.. நீங்கள் அவசரக்காரராக இருந்தால் அது உங்கள் கண்ணில் படுவது மிக்க சிரமம்.

மக்களின் ரசனைக்கு தேவை ஒரு சுவையான கொலைக்கதை. நேற்றுவரை ஏறக்குறைய ஒன்றரை மாதமாக தில்லி நாளிதழ்கள் மற்றும் செய்தி வழங்கும் தொலைகாட்சிகளுக்குத் தீனி போட்டுவந்த அப்படியான ஒரு கொலைக்கதை ஆருஷி ஹேம்ராஜ் இரட்டைக்கொலை.
ஆருஷி - 13 வயது பெண். ஹேம்ராஜ் - 45 வயது நேபாளி வேலைக்காரர்.
ஆருஷியை கொலை யானதும் அவரை கொலை செய்தது நேபாளி வேலைக்காராரகத்தான் இருக்கவேண்டும் என்று போலீஸ் தேடுதல் வேட்டை நடத்தத்தொடங்க அடுத்த நாள் காலை ஹேம்ராஜின் சடலம் அதே வீட்டின் மாடியில் இருந்து எடுக்கப்படுகிறது.
உடனே கேஸின் கதை மாறியது.. இங்கே உத்திரப்ரதேச போலிஸின் கேவலமான அணுகுமுறையை ஊடகங்கள் அப்படியே ஒலிஒளி பரப்பி கதைகளை உண்டாக்கி ஒரு அசிங்கமான நாடகங்கள் அரங்கேறின.

போலிஸுக்கு எந்த ஆதாரமும் இல்லை.. ஆனால் ப்ரஸ் கான்பரண்ஸ் கூட்டி வைத்து ஊருக்கு முன் ஆருஷி ஒரு கெட்டபெண் என்றும் அவர் நேபாளி வேலைக்காரருடன் அதிகம் ஒட்டுதல் கொண்டிருந்தார் என்றும். அதனால் கோபமடைந்த அப்பா கொலை செய்தாதகவும்.. உச்சக்கட்டமாக அப்பாவுக்கும் கூட வேலை செய்யும் பெண்டாக்டருக்கும் தொடர்பு இருப்பதாகவும் அதனை எதிர்த்துவந்த ஆருஷிக்கும் வேலைக்காரனுக்கு ஒத்தக்கருத்தின் காரணமாக ஒட்டுதல் நேர்ந்திருக்கலாம் என்றும்.. தடுக்க வருவான் என்று ஹேம்ராஜை கொன்று விட்டு அவர் மகளை கொன்றதாகவும். .. இது அத்தனையும் தெரிந்தும் அம்மா உண்மைகளை மறைப்பதாகவும் கதை உண்டாக்கினார்கள்.

ஊடகத்தார் ஒன்றல்ல இரண்டல்ல பல கதைகள் உண்டாக்கினார்கள்.. அந்த பெண்ணுடய மொபைல் போன் கிடைக்கவில்லை எனவே அதனுள் எதாவது எம் எம் எஸ் இருந்திருக்க்லாம்.. கூட படிக்கும் பையன் பெண்கள் விசாரிக்கப்பட்டார்கள். அவர்களில் அடிக்கடி தொலைபேசிய பையனுடன் அவளுக்கு நெருக்கம் இருந்திருக்கலாம் என்று கதை இன்றைய சமுகத்தில் ஒரு பெண் கூட படிக்கு பெண் பையன் இருவரிடமும் வேறுபாடு இன்றி பழக முடியாது என்று தான் இன்னமும் இருக்கிறது போல.. சினிமா செல்ல அனுமதிக்காத பெற்றோருக்கு அவள் மெயில் செய்திருந்தாள் அதனை .. பையனுக்கு அனுப்பிய எம் எம் எஸ் களை வெளிப்படையாக ஊடகங்களில் உலவவிட்டு அவள் கேரக்டர் சரி இல்லை எனவே அவள் கொல்லப்பட வேண்டியவள் என்ற கருத்தை ஆணித்தரமாக சொல்ல விரும்பிய போலீஸுக்கு அரசியல் தலையீட்டால் முதல் அடி.

ரேணுகா சவுதிரி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான இந்த கருத்தை மாயவதி வரை கொண்டு சென்றார். ஊடகத்தில் இத்தனை பேசாமல் இருந்தால் ஒருவேளை அப்பாதான் கொலைசெய்தார் என்று ஒரேடியாக அவரை உள்ளே தள்ளி இருப்பார்கள்.. ஒருவகையில் ஊடகம் செய்தது சரி என்றாலும்.. ஆருஷி ஒரு நாள் தான் செத்தார். அவர் குடும்பத்தினர் தினம் தினம் செத்துக்கொண்டிருக்கிறார்கள் .

கேமிரா சகிதமாக கூட வேலை செய்த டாக்டரின் கணவரிடமே உங்கள் மனைவி பற்றீ வரும் செய்தியைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேள்வி கேட்டார்கள். அவர் அமைதியாக மறுத்தார்.

சிபிஐ விசாரணையில் பக்கத்துவீட்டுவேலைக்காரன் .. அப்பா வின் கீழ் வேலை செய்யும் கம்பவுண்டர் , மற்றும் கூட வேலை செய்த டாக்டரின் வீட்டு வேலைக்காரன் மூவரும் சேர்ந்து ஹேம்ராஜுடன் இரவு மதுஅருந்திவிட்டு இக்கொலைகளை நிகழ்த்தி இருக்க்கலாம் என்று இப்போதைய முடிவு. ஆதாரங்கள் இன்னமும் சிக்கவில்லை.. கன்பெஷன்களை கோர் ட் ஏற்றுக்கொள்வதில்லை .ஒரு மாதமாக சிறைவைக்கப்பட்ட தந்தை பெயிலில் வெளியே வந்திருக்கிறார்.

இதற்கிடையில் வெக்கம் மானம் இன்றி இந்த நாடகங்களை ஒளிபரப்பிய அதே தொலைகாட்சிகள் கேமிராவுடன் அந்த டாக்டரின் கணவரிடம் சென்றனர். முன்பு எழுதிய கதைகள் போல் நீங்களே எழுதிக்கொள்ளலாமே என்று மறுத்தது மட்டுமல்லாம் .. என் டி.டிவி மட்டும் என்னிடம் கேள்வி கேட்க தகுதி இருக்கிறது மற்ற தொலைகாட்சிகள் ஏதோ தாங்களே ஒரு இன்வெஷ்டிகேஷன் ரிப்போர்டராக மாறி நாடகங்களை நடத்தியே காட்டிய கேவலத்திற்கு திட்டி அனுப்பிவிட்டார்.

இத்தனை நடந்த பிறகும் ஊடகத்தார் மீண்டும் ஒரு பெண் மற்றும் நான்கு நண்பர்களை வைத்து மீண்டும் கொலை நடந்தது எப்படி யாக இருக்கலாம் என்று இன்றும் நாடகம் நடத்துகிறார்கள்.

July 11, 2008

விஷம் நீலமா? சிவப்பா?

வார்த்தைகள் மருந்தாகின்றன,
சிலநேரம் விஷமாகின்றன,
மனிதர்களின் நிறம் போலவே.
விஷம் நீலமா? சிவப்பா?
எப்போதும் திரைப்படத்தில் சிவப்பாகவே,
சாப்பிட்டவர் பின் நீலமாய்,
பயமுறுத்தும் உடல்வண்ணமாய்.
எதிரான வார்த்தை
ஒவ்வொன்றும் பாதிக்கிறது .
இதயத்தில் நீலம் பாரிக்கிறது.
அறிந்தோர் அறியாதோர்
யார் சொல்லிலும் இருக்கும் விசமும்
சட்டென்று ஏறிவிடுகிறது.
விசம் பட்டதும்,
இது யார் சொன்னதென்று-தேடித்தேடி
அறியாதோரையும் அறிந்து கொண்டபின்
அதில் என்ன வேறுபாடு?

July 10, 2008

காத்திருந்தகாதலி-7 ம் பாகம்

இப்போதெல்லாம் தொடர்ந்து டேக் பதிவு தான் போடறேன். ஜிலேபி யோ ஜாங்கிரியோ லெவலுக்கு சுத்து சுத்துன்னு சுத்தி விட்டுருக்காங்க கதையை.. அதுவும் கிரி ரொம்பவே சுத்திட்டார். டிபிசிடிதான் கதைய சரியான பாதைக்கு கொண்டுவந்ததா கதையை ஆரம்பித்துவைத்த வடகரை வேலன் சொல்றார். இனி நாங்க கதையை ஒத்தையடிக்கு கொண்டுபோவோமா இல்ல ஹைவேக்கு கொண்டுபோவோமான்னு தெரியல ..அதனால் பார்த்து கவனமா போங்க இந்த கதைப்பாதையில்...
தில்லிக்கு கதையை இழுத்துப்போக முடியாது. கிரி கோபிக்கு கூட்டிட்டுபோய் ஜாலியா ஊர்சுத்திப்பாத்துக்கிட்டார். அதனால் சொன்ன சொல்லுக்காக தில்லி என்ற பெயர் மட்டும் வலுக்கட்டாயமாக கதையில் புகுத்தப்பட்டிருக்கிறது.
மேலே கதை....
------------------------------------

அன்றைக்கு என்ன நடந்தது என்று நினைத்துப்பார்த்துக்கொண்டிருந்த சங்கருக்கு கொஞ்சம் கொஞ்சமாக வலி அதிகரிப்பது தெரிய ஆரம்பித்துவிட்டது. அவனின் முனகல் கேட்டு அறையின் ஓரத்தில் நாவல் படித்துக்கொண்டிருந்த நர்ஸ் உடனே டாக்டருக்கு தொலைபேசினாள்.

" சார் நீங்க சொன்னமாதிரியே அவர் வலியில் முனகுகிறார் ... ஆனால் அவரால் தெளிவாக பேசமுடிகிறது. தூக்கமாத்திரை குடுக்கனுமா டாக்டர்."

மறுமுனையில் குடுக்க சொல்லி ஆணை வந்ததும் அவள் தண்ணீரும் மாத்திரையுமாக அவன் அருகில் சென்றாள். சங்கர்
" சிஸ்டர் எனக்கொரு உதவி .. இது என்ன தூக்க மாத்திரையா .. எனக்காக வெளியில் யார் காத்திருக்கிறார்கள் ? என்றான்.
"" இப்ப யாருமில்ல உங்க நண்பர் கார்த்திக் ஊருக்குப் போயிருக்கார் .. கௌரின்னு அந்த பொண்ணு வீட்டுக்கு போயிருக்காங்க. ஏன் ?""
" இல்ல சிஸ்டர் கார்த்திக் வந்தா உள்ள விடவேண்டாம் .. கௌரிக்கிட்ட சொல்லுங்க , நான் முழிச்சிருக்கற நேரமா வரச்சொல்லி, தொலைபேசியில் அவங்களுக்கு மெஸேஜ் தர்ரீங்களா ? ""
அவள் ,பெரிய மருத்துவரின் நண்பர் குடும்பம் என்பதால் என்ன எல்லாம் செய்யவேண்டி இருக்கிறது என்று மனதில் நினைத்தபடியே சரி என்று சொல்லிவைத்தாள் .
---------------------------------------
""அப்பா இருதயராஜ் அங்கிள் தில்லியில் இருந்து ஸ்பெஷலிஸ்ட் வராங்கன்னு சொன்னார் . நாளை மறுநாள் தேதி கொடுத்திருக்காங்களாம்""

""அப்பா உங்ககிட்ட அங்கிள் எதாவது சொன்னாரா என்கிட்ட எதுவும் சொல்லமாட்டேங்கிறார் .. சங்கருக்கு எது ஒன்னுன்னாலும் சொல்லுங்கப்பா ....
சங்கர் நினைவு திரும்புவரை அங்கே காத்திருக்கலாம் என்றால் கேட்டரிங் ஆபிஸிலிருந்து தொடர்ந்து ஆர்டர் குடுத்தவங்க போன் ...
என்ன நடந்ததுன்னும் தெரியல.""

""கௌரி மனசு போட்டு குழப்பிக்காதே.. நீ கிளம்பும்மா நம்ம ஆபிசை நான் பாத்துக்கறேன்.. நீ சங்கர் ஆபிஸிலேயே இரு.""

கௌரி கிளம்பியதும் அவள் மறந்து விட்டுச் சென்ற கைத்தொலைபேசியில் குறுஞ்செய்தி...

கார்த்திக் தான் காரணம் நேரில் பேசவேண்டும். பார்வையாளர் நேரத்துக்கு முன்பே வரவும் - சங்கர்
கௌரியின் அப்பா படித்ததும் ... வண்டியை எடுத்துக்கொண்டு மருத்துவமனை விரைந்தார்.

---------------------------------------------------------------------
அப்பா அம்மா வை அழைத்துக்கொண்டு காலை ரயிலில் வந்து இறங்கியதும் நேராக அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துப்போக முடியாது என்பதை பக்குவமாக சொல்லி அறைக்கு கொண்டு போய் இறக்கிவிட்டான் , கார்த்திக்.
கௌரி க்கு போன் அடிக்கலாமா வேண்டாமா என்று யோசித்துக்கொண்டிருக்கும்போதே அவளிடம் இருந்து வந்துவிட்டது கால்.
''ஹலோ என்ன நேற்று எல்லாம் கூப்பிட்டால் ஆஃப் ல யே இருந்ததே ? அம்மா அப்பா எப்படி இருக்காங்க ஊரில்?'' என்று தடதடவென ஆரம்பித்தாள் கௌரி.
""கௌரி, அப்பா நல்லாதானிருக்கார்.சங்கரை பார்க்கனும்ன்னு ரொம்ப தொந்திரவு செய்தார் அழைத்து வந்திருக்கேன்.. அம்மா அப்பா இப்ப அறையில் இருக்காங்க. குளிச்சு காலை உணவு முடித்து மருத்துவமனை பார்வையாளர்கள் நேரத்திற்கு அழைத்துவரேன்""... என்ற கார்த்திக் தொலைபேசியை அணைத்துவைத்த காரணத்தை பக்குவமாக சொல்ல விட்டுவிட்டான்.

""கார்த்திக் இங்க வாப்பா !! ""
""என்ன அம்மா !""
""உனக்கும் சங்கருக்கும் நடுவில் எதுவும்பிரச்சனை இல்லையே?""
""ஏம்மா இப்படி கேக்கறீங்க?""
""எப்பவும் அவனுக்கு அடுத்த இடத்தில் இருப்பதில் உனக்கு சங்கடம் இருப்பது எனக்குத் தெரியும். கொஞ்ச நாளா தொழில் விசயங்களில் நீ அதிகம் ஈடுபாடு காட்டாம இருப்பதா சங்கர் சொன்னான். அவன் மருத்துவமனையில் இருக்கும் நேரம் நீ இப்படி பொறுப்பில்லாமல் இருக்கிறாயே? சங்கர் சொல்லும்போதெல்லாம் நான் அவனிடம் உனக்காகத்தான் பரிந்து பேசுவேன். ""
""அன்று என்ன நடந்தது என்று நீ சொல்லவே இல்லையே எப்படி இந்த விபத்து?""
""அம்மா நேரமாகுது அப்பறம் சொல்றேன் கிளம்பி இருங்க.""
"" எனக்கு ஒரு சின்ன வேலை கொஞ்சம் வெளியே போயிட்டுவரேன்.""
---------------------------------
மருத்துவமனை ஒன்றாம் எண் வாசலில் கௌரியின் அப்பா கார்நுழைந்த அதே நேரம் கார்த்திக் கார் இரண்டாம் எண் வாசல் வழியாக நுழைந்தது. இருவரும் வேறு வேறு படிக்கட்டுகளில் சங்கர் அறையை நோக்கி ஏறிக்கொண்டிருந்தார்கள்.
-----------------------------------------------------
கொஞ்சநாட்களாக கதையே எழுதாமல் தப்பித்துக்கொண்டிருக்கும் மைஃப்ரண்ட் இதனைத்தொடர்வார்.

வடகரை வேலன்.காத்திருந்தகாதலி 1
பரிசல் காரன் காத்திருந்தகாதலி 2
வெயிலான் காத்திருந்தகாதலி 3
கிரி காத்திருந்தகாதலி 4
ஜெகதீசன் காத்திருந்தகாதலி5
டிபிசிடி காத்திருந்தகாதலி 6

July 2, 2008

கேள்வி-பதில்..பதிலுக்கு கேள்வி...

கேள்விபதில் சுடராக ஏற்கனவே கையில் வந்து போனது..இப்போது மீண்டும் சென்ஷி ..
கேள்விகள் எல்லாமே என் கண்களுக்கு அவுட் ஆஃப் சிலபஸ் மாதிரியே தெரிகிறது . வழக்கம்போல தேர்வில் எழுதுவது போலவே இறுதிக்கேள்விக்கு முதலில் பதில்..

4. தமிழ்மணத்தில் கலக்குகின்ற (என் போன்ற) புதிய பதிவர்களுக்கு மூத்த பதிவராய் தங்களின் மேலான ஆலோசனை என்ன?
முழு சோற்றை பூசணிக்காயில் மறைப்பது போல இருக்கே.. நான் நவம்பர் மாதம் தான் பதிவே ஆரம்பித்தேன்.. . செப்டம்பரிலேயே ஆரம்பிச்சது உங்க பதிவு .. ஆக கேள்வியே தப்பு.. அப்பப்ப மொக்கைப்பதிவு போடுவதெப்படி ? பதிவெழுத ஐடியா தருகிறேன் என்று தலைப்பு வைக்கும் பதிவுகளையெல்லாம் ஓடிப்போய் எட்டிப்பார்க்கும் என்னைப்போய் ... எந்த தலைப்பை சொன்னாலும் ,,, இல்ல சேட்டிலே பேசிய பேச்சை.. இல்லையா புள்ளி வைத்தால் கூட அதை புள்ளி விவரமாக மாற்றி தடாலடியா பதிவு போட்டு கலக்கும் நீங்களெல்லாம் அறிவுரை கேட்டால் எப்படி? சின்னவங்களைப்பார்த்து அண்ணன்னு கூப்பிட்டு வயசை மறைக்க நினைப்பது போல மூத்தபதிவரான தாங்கள் என்னை அப்படி சொல்வது சிரிப்பாத்தானிருக்கு..
அது மட்டுமில்லாம புரியாமல் பதிவு போடும் கூட்டத்தில் ஐக்கியமாகிவிட்ட பின்னர் மீத பர்ஸ்டு போடுவதில் கூட கணக்கு தப்புகிறது.... சரியை தப்பாக , தப்பை சரியாக செய்வதும் தான் பி.ந ஆமே அப்படியா ?

நான் மூத்தபதிவரில்லை இல்லை. குசும்பனின் பதிவுக்கு பின்னர்.. நான் வெறும் ஸ்மைலி போடுவதைக்கூட மாற்றிவிட்டேன்.. அது கூட இதுவரை போட்டுக்கொண்டிருந்தற்கு காரணம் பயந்தாகொள்ளித்தனம் தான்.


3. உலகத்திரைப்படங்களை பற்றிய உங்கள் பார்வை எவ்வளவு தூரம்?


உலகசினிமா ...சரி.. அது என்ன பார்வை தூரம்.. உலகசினிமா பத்தி சொல்லுங்கன்னா சொல்லிட்டுப் போயிருப்பேன் இல்லையா.. பார்வை தூரம்ன்னா எனக்கு தூரத்துல இருக்கறதெல்லாம் தெரியாது .. அதுகுத்தான் பவர் அதிகமான கண்ணாடி போட்டிருக்கேன்.. அதைகிண்டல் செய்யறயோன்னு தோணுது.. என்னைப்பொறுத்தவரை நடப்பதை அப்படியே காண்பிக்கற இல்லாட்டி நாலு பாட்டு நாலு பைட் இல்லாமல் சில நிகழ்வுகளையோ அல்லது உணர்வுகளையோ மையமா வச்சுக்கிட்டு உலகத்துல இருக்கற எல்லாரும் மொழியே புரியலைன்னாலும் பாத்து புரிஞ்சுக்கமுடியறதா இருந்தா அது உலகசினிமான்னு சொல்லிக்கலாம்.. உண்மையில் உலகசினிமாக்கான அர்த்தம் என்னனன்னு எனக்குத் தெரியாது எங்கயும் படிச்சதில்லை.. பொழுதுபோகாம இருக்கறவங்க பார்க்க சிறந்த படம் உலகசினிமா... ஓடறதை ... நடக்கறதை யோசிக்கறதை எல்லாம் காட்டுவாங்க..

2. தசாவதாரத்தில் தங்களை கவர்ந்த அவதாரம் எது, ஏன்?
இதுவரை தமிழ்மணத்தில் எல்லாரும் இந்த படம் பத்தி எழுதிட்டாங்க.. நான் எழுதாத ஒரே ஆள் என்று சாதனை செய்யலாம்ன்னு இருந்தேன் அது எப்படியோ தெரிஞ்சு அதை முறியடிக்கனும்ன்னு இப்படி கேள்வி கேட்டதை கண்டிக்கிறேன்.. இருந்தாலும் சொல்றேன்..
பூவராகன் தான் .. இயற்கை பத்தி கவலைப்படற ஒரு நியாயம் நேர்மைனு பேசற ஆளா வந்திருக்காரே அது ஒரு காரணம்..இன்னோன்னு இயற்கையாவே அப்படி ஒரு மனிதன் வாழ்ந்திருப்பது போல அவர் அந்த படத்தில் வந்திருக்க்காரே அது ஒரு காரணம்.. அவர் மற்ற அவதாரங்களைப் போல அதிகம் ப்ளாஸ்டிக் வேலைகள் செய்யவே வேண்டாம்.. தன் நடிப்பால் சின்ன சின்ன வித்தியாசம் காண்பிக்கிறாரே அதுவே போது நாம் அவரை பாராட்ட ரசிக்க.. .. இறந்த பின்னும் கூட அந்த அவதாரம் உபயோகப்படுது பாருங்க.. ஒரு தாய்க்கு தன் குழந்தையாக ..... அருமையான கதாப்பாத்திரம். தனியா அவரை வைத்து ஒரு படம் செய்ய சொல்லிக் கேக்கலாம் ..

1. கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் என்ற விஷயத்தில் தலைமுறைகள் இழந்ததாக எதை நீங்கள் கருதுகிறீர்கள். உங்களால் மீட்க முடியும் என்ற என்ற சக்தியிருந்தால் எந்த விஷயத்தில் கவனம் செலுத்துவீர்கள். (திண்ணையை தவிர..)
கலாச்சாரம் பாரம்பரியம் இதெல்லாம் கொஞ்சம் கொஞ்சம் மாறத்தான் செய்யும்.. நல்லவற்றை மறக்காம பிடிச்சிக்கணும். எல்லாவற்றையும் இது தேவையில்லைன்னு தூக்கிப்போடக்கூடாது. நான் இன்றைக்கு நம்ம தலைமுறைல தொடர்ந்து கடைபிடிக்கனும்ன்னு ஆசைப்படற ஒரு விசயம் ..யாரையும் பார்க்கும் போது வணக்கம் சொல்றது தான்.. இப்பன்னு இல்ல நான் 25 வருடம் முன்ன பள்ளிக்கூடப்பிள்ளையா இருந்தபோதே வணக்கம் சொல்ல வெக்கப்படுவேன்.. கல்யாண வீடுகளிலோ மற்ற இடங்களிலோ பெரியவர்களை காண்பித்து இவர் எனக்கு இன்ன முறை வேண்டும் உனக்கு தாத்தா ..வணக்கம் சொல்லு என்று அம்மா கை கூப்பி சொல்லச் சொல்லும் போது வேண்டா வெறுப்பாக சொல்லுவேன். இங்கே தில்லியில் மக்களிடம் இன்னமும் அந்த பழக்கம் தொடர்கிறது..

வயதானவர்கள் சம வயதினரோ தமக்கு சிறியோரோ பார்த்ததும் நமஸ்தே .. ராம் ராம் என்று ஒன்றைச் சொல்லி வணங்கிக்கொள்கிறார்கள்..சிறு குழந்தைகள் கூட அதை வழிமொழிந்து விட்டு தங்கள் வலக்கையால் அவர்கள் காலில் விழுவது போன்றதொரு பாவனை செய்வார்கள்.. அது அந்த தை பெரியவர்களின் முட்டி வரை சென்று மீளும்.. அதற்குள் அந்த பெரிவர்கள் தடுத்து : ஜீத்தேரஹோ - நல்லா இருக்கனும் என்கிற அர்த்தத்துடன் ஆசி வழங்குகிறார்கள்.. அது மட்டுமா இந்த குழந்தைகள் நம்மீது மதிப்புடையவர்களாக இருக்கிறார்களே என்று ஒரு மகிழ்வான கர்வம் கூட அவர்கள் முகத்தில் அந்நேரம் வந்து போகும்.

தமிழ்மணத்தில் வந்ததாலும் கூகிள் அரட்டையின் தமிழ்ச்சேவையாலும் நான் மீண்டும் வணக்கம் சொல்லுவதை வழக்கமாக்கிக்கொண்டிருக்கிறேன்.. இப்போது வெக்கமாக இருப்பது இல்லை.. அக்கம்பக்கம் இருப்பவர்களிடம் கூட புன்னகை மறந்து போன நகரத்தில் ... இன்னமும் பூங்காவில் சந்திக்கும் வயதானவர்கல் யாரென்றே தெரியாம நமஸ்தே பேட்டே ... பாத்து பாத்து குழந்தையைக் கூட்டிட்டுபோன்னு சொல்லும் அந்த அக்கறையை என்ன சொல்ல.. அந்த அக்கறையும் பாசமும் அடுத்த தலைமுறைக்கும் வரணும் என்பதே என் ஆசை.

----------------------------------------------------------------------------
பதில் சொல்வது கூட எளிதாக இருக்கும்போல... கேள்வி கேட்பது தான் சிரமமாகத் தோன்றுகிறது.. என்னடா இது தருமியைவிட மோசமான நிலைமை.. ம்.. எப்படிக் கேட்டாலும் குறைஞ்சபட்சம் தெரியாதுன்னாவது சொல்லுவேன்னு உறுதிமொழி கொடுத்ததால ஜீவ்ஸைக்கேக்கறேன்..

1. வெண்பா எழுதினதா சொல்லிக்கறாங்க.. திண்ணையில் எழுதினதா சொல்லிக்கறாங்க.. ஆனா இப்ப சத்தமில்லாம இருக்கீங்களே வெறும் புகைப்படம் எடுத்துக்கிட்டு .. ... ?

2. பெரிய அரசியல் வாதிகளில் யாரையாவது ஒரு நாள் முழுக்க கூடவே இருந்து படம் எடுத்துத்தள்ள அனுமதி கிடைத்தால் அது யாரா இருக்கனும்..

3. ஆபிஸில் ஒரு மாசம் லீவ் தரோம்.. என்ஜாய் ! இந்த ஆபிஸே உன் தலையில் ஓடுதுன்னு நினைக்காம வீட்டுக்குப்போ அப்பா .. ன்னு சொன்னா.. என்ன செய்வீங்க??

4. கிராமமா நகரமா எதில் வாழ்வது சிறப்பு..