July 22, 2009

துவக்கப்பள்ளிக்காலம்


தோழியாக அவார்ட் குடுத்த புதுகைத்தென்றலுக்கு நன்றி . போனமுறை சுவாரசியப்பதிவு என்று பாராட்டவேண்டி இருந்ததால் அவார்டை பிரித்துக்கொடுத்தேன். இது நண்பர்களுக்கான விருது தானே..என் நண்பர்கள் அனைவரும் புரிந்துகொள்வார்கள் என்பதால் பிரித்துக்கொடுக்கவில்லை.
--------------------------------------
தொடர்பதிவுக்குன்னே இந்த தளத்தை வைச்சிடலாமாங்கற அளவு மக்கள் தொடர்ந்து தலைப்புகளை தந்தவண்ணம் இருக்க.. நானும் அம்மா தலைப்பப் பிடிச்சக் குழந்தையாக போய்க்கொண்டிருக்கிறேன். இப்போ தமிழ்பிரியனின் தொடரழைப்புக்காக என் இளமைக்காலங்களுக்குள்ளே நுழையலாம்...

நான் முதல் முதலில் பள்ளிக்கூடம் போனது ஒன்றாம் வகுப்பு. சிலர் அரைக்ளாஸ் , பேபிக்ளாஸ் எல்லாம் முடிந்து போயிருப்பீர்கள். அது ஒரு சின்னக்கிராமம் திருவெண்காடுன்னு பெயர். ...பள்ளிக்கூடம் பெயர் ... மெய்கண்டார் துவக்கப்பள்ளி. அது இப்போது இடிக்கப்பட்டு சங்கரமடம் வந்திருப்பதாகக் கேள்விபட்டேன். முதல் வகுப்பு ஆசிரியை பெயர் ஜானகியாம் .. அது என்ன ஆம் என்றால், என் அம்மாவிடம் நேற்று கேட்டு நினைவுப்படுத்திக்கொள்ள முயற்சித்தேன்.. அத்தனை நினைவாற்றல். முதல் நாள் வகுப்பறைக்காட்சி மட்டுமே என் மனதில் நிழலாடுகிறது. இருட்டான வகுப்பறையில் மேலிருக்கும் கண்ணாடிவழி ஒளிகசிய அந்த ஒளிக்கற்றைக்கு பின்னால் ஆரஞ்சு வண்ணத்தில் சேலையணிந்த ஆசிரியை.பின் ஒருநாள் நாங்கள் மாயவரத்துக்கு மாறிப்போய்விட்டபின் அவர்களை அவர்கள் வீட்டில் சந்தித்ததாக நினைவு.

இரண்டாம் வகுப்பு சுத்தமாக நினைவே இல்லை.. சோம்பேறியின் ”ஏ நீ ரெண்டாம்ப்பு பாஸ் பண்ணி இருக்கியா நினைவு வருகிறது ” பாஸ் செய்திருப்பேனாத்தான் இருக்கனும். அதற்கு ஒரு ஆசிரியர் பிரம்போடு இருப்பது போன்ற ஒரு காட்சி ஒரு நொடிப்பொழுது வந்து மறைகிறது. அப்போது என்னோடு படித்த என் தோழி ஒருத்தி இன்றும் தொடர்பில் இருக்கிறாள். அவர்கள் குடும்பமே எங்கள் குடும்பத்துக்கு நெருங்கிய நண்பர்கள் ..அந்த ஒரு காரணத்தால் தான் அந்த தோழி இன்னும் நட்பில் இருக்கிறாள். அவள் அடிக்கடி நினைவுபடுத்துவது நாங்கள் இருவரும் சிலேட்டில் எங்கள் மார்க்கைத் திருத்திக் காண்பித்தோமாம்.

மூன்றாம் வகுப்புக்கு நாங்கள் மாயவரம் வந்துவிட்டோம். சர்ச்சை சேர்ந்த ஸ்கூல் ..நர்ஸ் போன்ற வெள்ளை உடையும் தொப்பியுமாக ஜெர்மன் அம்மா தான் தலைமை.
அங்கே பல ஏழைகிராமக் குழந்தைகள் விடுதியில் தங்கிப்படிப்பது உண்டு. மூன்றாம் வகுப்பு சேர்ந்த புதிதில் நோட் வேண்டும் என்று டீச்சர் சொல்லி அதை நான் வீட்டில் சொல்லாமல் விட்டுவிட்டதால் பல நாட்கள் கழித்து புது நோட் வாங்கி என் அம்மாவே எல்லாவற்றையும் எழுத வேண்டிய நிலை வந்ததாக நினைவு. அப்போது தான் இந்த மூன்றெழுத்து ஆங்கில வார்த்தைகள் அறிமுகம்.. தரையோடு ஒட்டிய பலகைகள் நினைவுக்கு இருக்கிறது
நாலாம் வகுப்பு டீச்சரை நினைவுக்கு கொண்டுவர முடிகிறது. ஆனால் பெயர் நினைவில்லை. அவர்கள் தான் முதன் முதலில் எனக்கு கண் பார்வையில் கோளாறு இருக்குமோ என்று சொன்னது. வகுப்புப்பாடங்களை தப்பும் தவறுமாக எழுதிவிட்டு போர்டில் க்ளார் அடிப்பதாகக் குற்றம் சாட்டி வந்தேன்.

ஐந்தாம் வகுப்பு டீச்சரை நல்லா நியாபகம் இருக்கு. நித்யா டீச்சர். அவங்க தலைமை ஆசிரியராவும் இருந்ததால் அவங்களுக்கு பாடம் எடுக்கவே நேரம் இருக்காது. பல நேரம் நாங்க டாக்டர் விளையாட்டு விளையாடுவோம். எப்பவும் சபி முனிசா தான் டாக்டர்.. பசங்க எல்லாம் பெஞ்சுகளில் ஏறி குதித்து விளையாடுவார்கள். அந்த வகுப்பில் படித்த நாலைந்து பெண்கள் கல்லூரியிலும் ஒன்றாக படிக்க நேர்ந்ததால் தொடர்பில் இருக்கிறார்கள். வகுப்பருகில் இருந்த மகிழம்பூ மரம் எனக்கு மிகப்பிடித்தமானது. பலநேரம் அவற்றை தொகுத்து மாலையாக்குவோம்.

பள்ளியில் தோட்டம் இருந்தது வெண்டைக்காய் , அவரைக்காய் போன்றவற்றை அங்கே நாங்களே வளர்த்து பறித்தது நினைவுக்கு இருக்கிறது. வாத்துகள் நிறைந்த குளத்திலிருந்து தண்ணீர் கொண்டுவந்து ஊற்றுவோம். தென்னந்தோப்பிலிருந்து காய்களை இழுத்துவந்து ஓரிடத்தில் குவிப்பது, தென்னை குச்சிகளால் இடங்களை சுத்தம் செய்வது போன்ற வேலைகள் கூட செய்திருக்கிறோம். படிப்பைத்தவிர எல்லாம் நினைவுக்கு வருகிறது.

கிருஸ்துமஸுக்காக குழுநடனம் கோலாட்டம் ஆடி இருக்கிறேன். அப்போதெல்லாம் பயிற்சிக்கென்று வகுப்பிலிருந்து அழைத்துச் செல்லப்படுவோம். அது மிகப்பிடித்தமானது. அங்கே நடக்கும் கிருஸ்துமஸ் நாடகமென்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். அந்த தேவதைகளும் வழிகாட்டும் நட்சத்திரங்களும் மேய்ப்பர்களும் நேரிலேயே பெத்தலகேமில் இருந்து பார்த்த உணர்வைத்தரும்.பெத்தலகேம் பிறந்தவரை போற்றி துதி மனமே!!

எனக்கு வகுப்பெடுக்காவிட்டாலும் ஒன்னாப்பு டீச்சரை மட்டும் பள்ளிக்கே பிடிக்கும்..என் தம்பி அவர்களிடம் படித்ததால் பின்னொரு நாள் நாங்களிருவருமாய் போய் பார்த்துவந்தோம். திருமணம் செய்துகொள்ளாமல் பள்ளியிலேயே தங்கி இருந்த அவர்களை பெயர் சொல்லியாருமே அதிகம் அழைப்பதில்லை ஒன்னாப் டீச்சரென்றாலே ப்ரபலம் தான். என் தம்பி மட்டும் பேபிக்ளாஸ் படித்தான். அங்கே ஜெர்மனில் இருந்து வந்த பல விதமான விளையாட்டு ப் பொருட்கள் இருக்கும். பொம்மை பிஸ்கட்கள் இருக்கும். மதியம் பாய் விரித்துத் தூங்குவார்கள். பின்னால் தலை சீவி கையில் பிஸ்கட்களுடன் வெளியே வரும் அவர்களைப் பார்த்து நாம் பேபிக்ளாஸ் படிக்கவில்லையே என்று பல நாள் சோகமாக இருந்திருக்கிறேன்.

பைபிள் க்ளாஸ் உண்டு . அதில் பரிட்சை உண்டு. பரமண்டலத்திலிருக்கிற பரமபிதாவே என்று ஆரம்பித்த ப்ரேயர் உண்டு. ஆற்றுமணலாகக் குவிந்த முன் திடலும் மாமரங்களும் கூரைவேய்ந்த சாப்பாடுகூடமும் நினைவுக்கு வருகிறது. ஒன்றே ஒன்று தான் பள்ளியில் பிடிக்காதது. அது கழிப்பறை. மிகக்கொடுமையானதாக இருக்கும். அத்தனை குழந்தைகளுக்கு அது போதுமானதாக இருந்ததில்லை. மேலும் மிகத்தொலைவும் கூட.
----------------------------------------------

யாருக்கேனும் தொடர ஆசை இருந்தால் பின்னூட்டத்தில் தெரியப்படுத்துங்கள்.

July 15, 2009

தங்கமாவோ $ ஆகவோ கொடுத்திருக்கலாம்ல.....முன் குறிப்பு 1 : அவார்ட் என்றதும் ஆசிப் மீரானின் பட்டாம்பூச்சிக்கு பதிலான கரப்பான் பூச்சி அவார்ட் தான் எனக்கும் நினைவுக்கு வருகிறது. இனி எதிர்பதிவு மட்டுமல்ல தொடர்பதிவும் கேட்டுத்தான் போடவேண்டும் என்று கண்டிப்பான ரூல்ஸ் போடவேண்டுமோ.. ( கேட்டா மாட்டேனுவாங்கன்னு தானே கேக்காம தராங்க இப்ப நான் மட்டும் என்ன கேட்டுட்டாப் பேரைப்போடரேன்)

போனமுறை பட்டாம்பூச்சிக்கு தப்பினேன் .. ராப் விருதை கேக்காமலே அறிவிச்சிட்டபடியால் ஏற்றுக்கொண்டேன்.

1. ச்சின்னப்பையன் - எனக்கு பிடித்த மாது சீனு வச்சு நாடகம் எழுதியதற்காக மட்டுமல்லாமல் காமெடி போஸ்ட்களுக்காக..

2.கோமா - ஹஹஹா ஹாஸ்ய தலைப்பில் நகைச்சுவையில் ரசிக்கும்படியாக சுவாரசியமாக பதிவிடுகிறார்.

3. அவந்தி - முன்பு மிக சுவாரசியமாக ஜென்கதைகள் குடுத்துக்கொண்டிருந்தார். படிப்பில் பிசியாகிவிட்ட அவருக்கு அவார்ட் ஒரு ஊக்கமாக இருக்குமே என்று குடுத்திருக்கிறேன்.

4 . துளசி - 30 நாள் டூர் போய்விட்டு 45 பதிவு பயணக்கட்டுரை :) போடுபவர்கள் பதிவில் சுவாரசியத்துக் குறைச்சலே இல்லை.

5.ராமலக்‌ஷ்மி - முத்துசரத்தில் அழகான கவிதை முத்துக்களை தருவது அதில் நல்ல கருத்துக்களை அடுக்குவது எனக்குப் பிடித்தமானது.

6. தெகா - மிக சுவாரசியமாக சில நேரங்களில் என்னதான் சொல்லவருகிறார் என்று மண்டைய குடைய வைக்கும்படியாக வரிகளை சுத்தி சுத்தி ஜாங்கிரியாக ஆனால் பின்நவீனத்துவ பாணியும் இல்லாமல் ஒரு விதமாக (puzzle? ) எழுதி ஏன் இப்படி என்று கேட்கும் பதிவுகள் எழுதுவதால்.. :)July 13, 2009

இது என்ன இடம்?

ஃபாலோவர்ஸ் ஃபாலோ திஸ் லிங்க் ப்ளீஸ்.. :)

July 7, 2009

இசையின் அலைகள்

இரவு கவிழ்ந்த நேரத்தில் நிலவு கசியும் ஒளியில் கடலலையில் கால் நனைத்திருக்கிறீகளா? கரைக்கும் நிலவுக்கும் நடுவில் ஒரு வெள்ளை ஒளிப்பாதை ..
இரவின் அமைதியில் அதுபோல ஒரு ஒலிப்பாதை எங்கோ கொண்டு செல்கிறது.

பொள்ளாச்சியில் இரண்டு வாரங்கள். இரவெல்லாம் இசையலையில் கால்நனைத்தபடி கழிந்தது. ஒருவேளை தூங்கிவிட்டால் என்பதற்காக எப்பொழுதும் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு அலாரம் வைத்தபடி பாடல்களைக் கேட்டுக்கொண்டிருந்தேன்.
“ அம்மா எதற்கு ரேடியோ கேட்க உனக்கு பிடிக்கிறது . உன்னிடம் தான் சிடிக்கள் இருக்கிறதே!..”

” ரேடியோவில் தானே அடுத்தப்பாடல் என்னவரும் என்பது ஒரு சர்ப்ரைஸ் . அடுத்தடுத்த ஆச்சரிய அலைகளில் தொடர்ந்து நனைந்தால் எப்படி இருக்கும் அப்படித்தான் இதுவும்... ஓ இந்தப்பாடல் .. அடுத்த அலை பெரிசா வருது .. அந்தா பாருன்னு எப்படி கடல் அலுக்கவே அலுக்காதோ அது மாதிரி இல்லையா”
மகள் சரிதான் என்று தலையசைத்தபடி தூங்கிவிட்டாள்.

காலையிலிருந்தே அந்த எஃப் எம் இந்த எஃப் எம் என்று மாற்றிக்கேட்டுக்கொண்டிருந்தாலும் காலை நேரத்தில் இந்த ரேடியோ ஜாக்கிகளின் தொல்லையும் ..அவர்களுக்குத் தொல்லை பேசுபவர்களின் தொல்லையும் தான். ஊரில் சரிபாதி ஜாக்கிகளாகவும் சரிபாதி தொலைபேசுபவர்களாகவும் இருப்பார்களோ ?

ஒரு நாள் கோவையில் சிறுவாணியில் தண்ணீர் குறைகிறது என்ற செய்தித்தாள் செய்தியை வைத்துக்கொண்டு .. மழை என்று வருகிற பாடல்கள் எல்லாம் தொடர்ந்து தொகுத்தளித்தார்கள்..அன்று இசைமழையே பெய்தது. அவர்களின் இசையாகம் அன்றைக்கு இரவே எல்லாப்பக்கமும் மழை தான். சிலர் தொலைபேசி பிடித்தமழைப்பாடல்களை சொன்னார்கள். எங்கள் ஊரில் மேகம் திரள்கிறது என்றோ சிறுதுளிகள் பெய்தது என்றோ சொன்னால் .. எல்லாரும் மகிழ்ந்தார்கள்.

சிலர் வணக்கம் சொல்லும் முன்னமே ஒரு கவிதை(கவுஜ) சொல்லிவிட்டுத்தான் தன் பெயரையே சொல்கிறார்கள். அய்யோ பாவம் ஆர்ஜே.. இரவுகளில் கொஞ்சம் இந்த தொல்லை குறைவு . இட்ஸ் ஹாட் மச்சி ரேடியோ மிர்சி இரவில் நல்ல பாடல்கள் தந்தார்கள். இன்றைய மெலடிகள் தவிர்த்து மிட் டைம் மெலடிகள் போட்டது எனக்கு மிகவும் பிடித்தது. சில நேரம் மாற்றி கோவை வானொலியும் ரசித்தேன். இங்கே அந்த கடலலையின் சிறுதுளிகள்..ரசிக்கத்தெரியுமே தவிர இது இன்னார் எழுதியது இன்னார் இசை என்று வகைப்பிரித்துச் சொல்லத்தெரியாது. பாடியவர்களை மட்டும் பிரித்து அறியமுடியும்.சில பாடல்கள் ரசிக்கும்போது அதன் வார்த்தைகள் மறைந்து வெறும் பி.ஜி. எம் மட்டுமே சுற்றிக்கொண்டிருக்கும்..மயக்கும். சில பாடல்களுக்கு யார் நடித்தார்கள் , காட்சி என்ன என்பதெல்லாம் நினைவுக்கு வராமல் இருப்பதே மகிழ்ச்சி. டிவியில் சிலபாடல்களைப் பார்க்க நேரும் போது தான் தெரியும் அய்யோ எத்தனை அழகான பாடல் .. என்ன கொடுமையான காட்சி அமைப்பு , நடனம். ..

July 5, 2009

கடமை 32..

32 ல வெட்டீஸ் வெர்சன் எழுதலாமான்னு பார்த்தா.. இத்தன நாளுக்கப்பறமா எழுதினா இந்த பதிவே வெட்டீஸ் வெர்சனாத்தான் இருக்கும்ன்னு நினைச்சு, மாசம் ஒரு பதிவு போடும் கோபி அழைத்ததன் பேரில் இங்கே கேள்வி 32.. சில கொஸ்டின் கடைசியில் கைவலிச்சதுனு வழக்கம்போல விட்டாச்சு..

1.உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

எங்கப்பாக்கு தமிழ் பெயர் வைக்கனும்ன்னு ஆசை.. கயல்விழின்னு வச்சாங்க.. தாத்தாபாட்டி பேரை பேத்திங்களுக்கு பேரன்களுக்கு வைக்கிற பழக்கத்தையும் விட மனசில்லாததால் ரெண்டுபக்கப் பாட்டி பேரை சேத்து முத்துலெட்சுமி எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்.. (முத்தம்மாள் - வீரலெட்சுமி)
என் பெயர் எனக்கு ரொம்ப பிடிக்கும். பரிட்சை மற்றும் பெரிய லிஸ்ட்களில் தேட ஈஸியா இருக்கும் .


2.கடைசியாக அழுதது எப்பொழுது?
பசங்க படம் பாத்துட்டிருக்கும்போது..
3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
பிடிக்கும் . ஆனா ஒரு பாராவுக்கு மேல அதே அசிங்கமானதும் பிடிக்காது.4.பிடித்த மதிய உணவு என்ன?
ரசம் சாதம் பீன்ஸ் பொரியல்


5.நீங்கள் வேறு யாராவதாக இருந்தால் உங்களோட நட்பு வச்சுக்குவீங்களா ?
பேசறதை கேக்கமட்டுமே பிடிக்குமா இருந்தா நட்பு வச்சிக்கிடலாம்.. நான் பேசனுன்னு ஆசை இல்ல நானே பேசனும்ன்னு பேராசை பிடிச்சவளா இருக்கறதால கஷ்டம் தான்..


6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
கடல் காலை நனைக்கமட்டும் தான்.. அருவி தான் அருமை.அது சுருளி மாதிரி டமால் டிமீல்ன்னு விழறதுல இருந்து சின்ன அருவி வரை ..எதுன்னாலும்.


7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
முகம் . சில சமயம் வந்துட்டு போனாங்களே அவங்க் அந்த மாடல் தோடு ..இந்த மாதிரி ட்ரஸ் ந்னு யாராவது திரும்ப நினைவுப்படுத்த முயற்சித்தால் .. என்ன போராடினாலும் அதை நான் கவனிச்சதா நினைவே இருக்காது..


8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
பிடிச்ச விசயம் ... ப்ரண்ட்லியா இருக்கறது..
பிடிக்காத விசயம்.. பொறுப்பா நடந்துக்காம இருக்கிறது.


9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
எல்லாத்துலயும் பெர்ஃபெக்டா இருக்கிறது.
பிடிக்காததும் அதேதான்.. பின்ன எங்களுக்கு கில்டியா இருக்குமில்ல..

13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
பச்சை

14.பிடித்த மணம்?

மண்வாசனை,மருதாணி வாசனை

15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?

யாரையும் அழைக்கப்போறதில்ல.

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?
கோபி போடறமாசம் ஒரு பதிவில் .. என்ன செலக்ட் செய்யரது ?
வேறயாரும் கூப்பிட்டாங்களான்னு தெரியல.. பதிவுகள் படிச்சு ஒரு மாசம் ஆகுது.


17. பிடித்த விளையாட்டு?
zuma கம்ப்யூட்டர் கேம்...


18.கண்ணாடி அணிபவரா?
ஆமா .. கவச குண்டலம் போல

19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?
ஆர்ட் பிலிம் மாதிரி இருக்கிற படம். மணல் கயிறு மாதிரி ஜோக் படம்

20.கடைசியாகப் பார்த்த படம்?
பசங்க21.பிடித்த பருவ காலம் எது?
தில்லியில்ன்னா நவம்பர் .. மிதமான குளிர்


22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்?
வ.உ.சி எழுதிய ஆற்றலுக்கு வழி அமைதிக்கு வழி..23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
இல்லை.

24.உங்களுக்கு பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

தெரியல.
25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

சிங்கப்பூர்
26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
தெரியல.

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
முன் கோபம்

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

மலை சார்ந்த இடங்கள் (கூட்டமில்லாம)

July 4, 2009

தாயே பராசக்தி எல்லாரையும் காப்பாத்தும்மா!

முருகா முருகான்னு நானும் நாலு நாளா முருகன் கோயிலுக்கு போயிட்டுவந்ததை எழுத நினைச்சு க்ரியேட்டை க்ளிக் செய்துவிட்டு ஒரு புள்ளி கூட வைக்கமுடியாமல் வெளியேறிவிட்டேன். இன்னைக்கு இந்த முருகா முருகா பதிவைப் படிச்சு ,அய்யோ என்னால சிரிப்பை அடக்கவே முடியலை.

ஆனா இதே மாதிரி நானும் பல விசயத்தை செய்து பாத்துட்டேன் . என்ன முருகாவுக்கு பதிலா .வேண்ணா தாயே பராசக்தி சொல்லுவேன்.
ஆனா அடி ஒன்னைத்தவிர இதுங்க எதுக்கும் பயப்படறதா தெரியலயே.. சொல்ற பேச்சை கேளேண்டாவை . நான் ரிங்க் டோன் ஏறுமுகமா அலர்ரமாதிரி படிப்படியாக சத்தம் உயர்த்தி சொல்ல ஆரம்பிச்சேன்..இப்ப அவன் சிம்பு தனுஷ் மாதிரி “ சொல்ற பேச்சை கேளேம்ம்மா””ங்கறான்.

ஆனா இப்ப படிச்ச ஒருபுத்தகத்தில், நீங்க அடிக்கடி குழந்தைகளிடம் நேராகவே “சொல்ற பேச்சை நீ என்னைக்குத்தான் கேட்டிருக்க”ன்னு எதிர்மறையா சொல்லாதீங்கன்னு சொல்றாங்க.. இப்போது எனக்கு தேர்வு அதுல தான் . எதிர்மறை வார்த்தை என்ன யூஸ் செய்யறேன்னு யோசிச்சு பார்த்து சரி செய்கிறேன். நான் எதயாவது சரி செய்து வழி கண்டுபிடிக்கிறதுக்குள்ள அவன் பெரியவனாகவே ஆகிவிடுவானோ?

முந்தாநாள் தான் பசங்க படம் பார்த்தேன். அந்த காலத்துப் படம் மாதிரி நல்லா இருந்தது. அழகா நெகிழ்வா. வாத்தியார், ஹீரோ அப்பான்னு ஒவ்வொரு கேரக்டரும் அழகா நடிச்சாங்க..குட்டிப்பையன் அடிக்கிறதை ..அடிவாங்கினவர் பொண்டாட்டியே வாய் பொத்தி சிரிச்சி ஹய்யோ படம் ஒரு கவிதைங்க..
வாத்தியார் பேசற சீனிலிருந்தே கண் கலங்கிடுச்சு. ஆமா அறிவுரை எளிது. கேட்கும் போது கூட நல்லாதான் இருக்கிறது. நடைமுறையில்.. ஹ்ம். வெகுநாட்களுக்குப் பிறகு குழந்தைகளோடு சேர்ந்து பார்க்க ஒரு அழகான படமா இருந்தது. அதை ஊரிலேயே தியேட்டரில் பார்க்கவிட்டுப்போனது ஒரு வருத்தம்.