எங்க ஏரியாவில் எல்லா நாளும் யமுனா ஸ்நானமும் கங்கா ஸ்நானமும் தான் என்று சொல்லிக்கொள்ளலாம். ஆனால் அதற்காக பெருமையெல்லாம் படமுடியாது. அந்த ஆற்றையெல்லாம் பார்த்தவர்களுக்குத்தான் தெரியும். சுத்திகரிப்பு செய்து அனுப்புகிறார்கள். குடிக்க குளிக்க எல்லாமே நல்ல தண்ணிதான். வேறு தண்ணீருக்கும் வழியில்லை. அரசாங்கம் அனுப்பும் தண்ணி வரலை என்றால் குளிப்பதற்கு விடுமுறை விடவேண்டியது தான். அடிபம்பு தரையிலிருந்து மோட்டார் என்பது எதுவுமே கிடையாது.
பழைய கட்டடங்கள் என்பதால் முன்பு வைத்திருந்த வாட்டர் மீட்டர்கள் வீணாகிபோய் செயல் இழந்து விட்டன. அதற்காக வருத்தப்படாமல் எதோ குத்துமதிப்பாக (குறைவானது) தொகையைப் பெற்று வந்தார்கள். தற்போது 2015 க்கு பிறகு நிலத்தடி நீர் குறைந்துவிடும் அபாயம் வந்திருப்பதாக தில்லி நகருக்கு குடிநீர் வழங்கும் அமைப்பில் தெரிவித்திருக்கிறார்கள். அதனால் மீண்டும் மீட்டர்களை சரிபடுத்துவது புதிதாக மாற்றுவது என்று திட்டங்களை அறிவித்திருக்கிறார்கள். இதனால் மக்கள் சற்றேனும் தண்ணீர் பற்றி கவனமெடுக்கலாம் என்று எண்ணுகிறார்கள்.
யமுனையில் ஒரு காலத்தில் வெள்ளம் வந்தது என்று கேள்விப்பட்டு ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. இப்போது ஓடுவது சாக்கடை மட்டும் தான். குப்பைகளை , மாலைகளை அதில் போடக்கூடாது என்பதற்காக மிகப்பெரிய வலையை பாலங்களின் இருமருங்கிலும் அமைத்திருந்தாலும் எம்பி குதித்தாவது மாலை நிறைந்த ப்ளாஸ்டிக் பைகளை போட்டுவிட்டு செல்வதை க்டமையாக வைத்திருக்கும் மககள் இருக்கிறார்கள்.
STOP TAKING WATER FOR GRANTED
முடிந்த வரை வீட்டில் குழாய்களை சரியாக மூடிவைப்பது , வீணாக தண்ணீரை இறைக்காமல் இருப்பது போன்றவற்றை கடைபிடிப்போம்.அருகில் இருக்கும் நீராதாரங்களில் குப்பைகளை கொண்டு சேர்க்காமல் இருப்போம். இயற்கை நமக்கு தன்னலமில்லாமல் கொடுக்கிறது. அதற்கு நன்றியுடையவர்களாக இருப்போம்.மண்மரம்மழை மனிதன் பதிவு எழுதும் மரவளம் வின்சென்ட் அவர்களின் பதிவில்
ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 22 தேதியன்று உலக தண்ணீர் தினமாக உலகெங்கும் கடைபிடிக்கப்படுகிறது. இந்த வருடம் சுத்தமான நீரின் அவசியம் பற்றி மக்களிடையே “சுத்தமான நீரினால் ஆரோக்கியமான ஒரு உலகம்” என்று தலைப்பிட்டு விழிப்புணர்வை தரவுள்ளனர். அதிவேக பொருளாதாரத்தினால் நகரங்களில் ஏற்படும் மாசு மற்றும் நீராதாரங்களே காணாமல் போய்விடுதல், கிராமங்களில் இரசாயான உரம், பூச்சி கொல்லி மற்றும் களைகொல்லிகளால் நீராதாரங்களில் மாசுபாடு போன்ற காரணிகளால் நீராதாரங்கள் இயற்கையாய் புதுபித்துக்க கொள்ளும் அல்லது சுத்தமாகும் தன்மையை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறது. இதனால் நீர்வாழ் உயிரினங்களும், பறவையினங்களும் மிகுந்த பாதிப்பை அடைந்துள்ளன. அதனைப்பற்றி மக்களும் அதிகம் கவலைப்படுவதில்லை. வலைப்பதிவர்களாகிய நாம் நிறைய கட்டுரைகள், புகைபடங்கள், அனுபவங்களை அவரவர் வலைப்பூக்களில் பதிவுகள் இட்டால் இந்த விழிப்புணர்வை எளிதாக மக்களிடம் சென்று சேர்க்க இயலும் என்று எண்ணுகிறேன்’
எனக்கேட்டுக்கொண்டார்.
நான் அழைக்க விரும்புவது :
முல்லை,
நான் ஆதவன்,
முகுந்த் அம்மா