பிடிச்சவங்க பிடிக்காதவங்களுக்கு உங்களை சீக்கிரமே யாராச்சும் கூப்பிடனும்ன்னு நேத்து ஒரு தோழி அதிரடியா ஆசைப்பட்டாங்க.. வாக்கு உடனடியா பலிச்சுருச்சு ரொம்ப நாளே தியானத்திலிருந்த
வெட்டிஆபிசர் ராப் தியானத்தை கலைச்சு போஸ்ட் போட்டிருக்காங்க . ராப் கூப்பிட்டு பதிவு போடாம இருக்கலாமா?
பிடிச்சவங்கன்னு நானா ஒரு சிலரை இது இதுனாலல்லாம் பிடிக்குதுன்னு நினைச்சிட்டிருப்பேன். அவங்களோட இன்னோரு பக்கத்தை யாராவது சொன்னா தெரிஞ்சுகிட்டு அடடா ந்னு ஆகிடும் சில சமயம்.
பிடிக்காதவங்கன்னு சிலரை நினைச்சிருப்பேன் அவங்களோட இன்னோரு முகத்தைப் பார்த்து அட இவங்களுக்குள்ள இப்படி ஒரு நல்ல குணமான்னு நினைச்சுக்கறதும்.. நிறை குறை இருக்கவங்க தானே மனுசங்கன்னு மனசைத் தேத்திக்கிட்டதும் உண்டு.
பிடிச்சது பிடிக்காததை நம் சரிபாதிங்களுக்கு தெரிஞ்சுருக்கனும்ன்னு சில போட்டிகள் நடத்தறாங்களே.. அது எப்படி முடியும் ? நமக்கே நமக்கு பிடிச்சது பிடிக்காதது எதுன்னு சரியா முடிவெடுக்கமுடியலயே.. என்று எனக்கு இப்ப செம குழப்பமாகிடுச்சு.. எதோ தோணினதை எழுதிட்டேன்.
அரசியல் தலைவர்
பிடித்தவர்:திருமாவளவன், நல்லகண்ணு (இவங்களப்பத்தி எல்லாம் ரொம்ப ஓவரா திட்டி எங்கயும் படிக்கல) இறந்துபோனவங்க தமிழ்நாட்டைவிட்டு வெளியே இருக்கவங்களையும் சொல்லலாம்ன்னா (இந்திராகாந்தி)
பிடிக்காதவர்:மத்தவங்க எல்லாருமே
கவிஞர்
பிடித்தவர்: தாமரை, நாமுத்துக்குமார் (பட்டுக்கோட்டை)
பிடிக்காதவர்: அப்படி சொல்லத்தெரியல
நடிகர்
பிடித்தவர்:வடிவேலு, ரஜினி,ப்ரகாஷ்ராஜ் ,ஈரம் ஆதி ( ரங்காராவ், தங்கவேலு)
பிடிக்காதவர்: தியாகு,எஸ் எஸ் சந்திரன் ரெண்டுபேரு காமெடி பிடிக்காது
நடிகை
பிடித்தவர்: சரளா,சரண்யா பொண்வண்ணன் ,பத்மபிரியா( பண்டரிபாய், ஜமுனா)
பிடிக்காதவர்:யாரும் அப்படி சொல்ல நினைவுக்கு வரல
பாடகர் :
பிடித்தவர்: ஹரிஹரன்,எஸ்பிபி, டி எம் எஸ்
பிடிக்காதவர்: நினைவுக்கு வரல
பாடகி
பிடித்தவர் : கல்யாணி, ஜென்சி
பிடிக்காதவர்: அனுராதா ஸ்ரீராம்
எழுத்தாளர்
எஸ்.ரா படிப்பதுண்டு. பலரோட புத்தகங்களை படிச்சுட்டு சூப்பர்னு நினைச்சுட்டு அப்படியே புத்தகத்தை யும் அவங்களையும் மறந்துடற என்னோட மோச்மான நினைவாற்றலால் பிடித்தவங்களையும் சரி பிடிக்காதவங்களையும்சரி , சரியா குறிப்பிட முடியல..
இதை தொடர அழைக்க விரும்புபவர்கள்
மிஸஸ் தேவ்சின்னம்மிணி