சரி ஒரு கவிதைக்கு எதிர்கவிதை எழுதலாம் என்று உட்கார்ந்தால் கூட இப்படித்தான் வருதுன்னா பார்த்துக்கோங்களேன்..
கொஞ்சம் இஷ்டம் கொஞ்சம் கஷ்டம்
ஒரு நாளைக்கு ஒரு கேம் தான்
அதிகம் கணினி பார்த்தால்
கண் மூன்றாகிப்போகும் என்று
நான் சொன்ன பொய்யை நம்பி
நீ
ஆன்லைனிலேயே விட்டு வந்த
டவுன்லோட் ஆக தாமதிக்கும்
அந்த ஏஃபார் கேம்.காம்
என் நினைவையும் கம்ப்யூட்டர் மெமரியையும்
ஹேங்க் செய்துகொண்டே இருக்கிறது
இன்னமும்!
சரி பொறுத்தது போதும் பொங்கி எழுவோம் என்று ’ரீடர்ஸ் ப்ரண்ட்லி’ பதிவுகளுக்குன்னு அவார்ட் கொடுக்கறதா முடிவு எடுத்து அரட்டைப் பெட்டியின் ஸ்டேடஸில் அதை தெரிவித்து ஐடியா மணிகளுக்கு அறை கூவல் விடுத்திருந்தேன். ( முல்லை கொடுத்த அவார்ட் ஒன்றும்
பகிர்ந்தளிக்கப்பட வேண்டி இருந்தது . அவார்ட் பெயரை மாற்றி கொடுத்துவிடலாம் என்ற ஐடியா தான்)
முதல் ஐடியா மணி தமிழ்பிரியன் - சாட் பூட் த்ரி
நல்லாதான் இருக்கு .. ஆனா ரீடர்ஸ் ப்ரண்ட்லிக்கு தமிழில் என்னவா இருக்கும் என்றதும் ’பயனாளருக்கு இலகுவான்?’ என்று கேட்டுவிட்டு நகர்ந்தார். இப்படியே டமில் டமில் ன்னா நம்ம கருப்பாக்கிடுவாங்களாமே (நன்றி : கடகம் ஆயில்யன்) கருப்பு= block
இரண்டாம் ஐடியா மணி ...நான் ஆதவன் - அவசரக்குடுக்கை ( அவரில்லைங்க அவர் தந்த விருதுக்கான பெயர் ஐடியா அது)
மூன்றாவது ஐடியா அம்மணி - அப்பத்தான் எங்கருந்தோ இம்சை அரசி குதிச்சாங்க.. அவங்க எப்பேர்ப்பட்ட நகைச்சுவை வித்தகின்னு உங்க எல்லாருக்கும் தெரியுமில்லயா.. வந்ததும் ’படா பட் விருது’ ந்னாங்க.. ஆமா படாபட் ஜெயலக்ஷ்மிய யாரும் மறக்கமுடியாது. ஆனா யாராவது வந்து ஹிந்தி ஒழிக என்று சொல்லிவிட்டால் என்ன செய்வது என்று நான் இழுக்க..
சட்டென்று சொன்னாங்க ‘ வாம்மா மின்னல் விருது ‘ எப்பூடி?
சரி விருதுக்கான பெயர் கிடைச்சாச்சு .. “வாம்மாமின்னல் பதிவு விருது”
யாருக்கு குடுக்கலாம் .. அதான் நம்ம டெஸ்ட் இஞ்சினியர் வேலை அனுபவம் இருக்கே.. முதலில் மாட்டியது வல்லி சிம்ஹன் பதிவு.. சிறிது நாட்களுக்கு முன்பு அவங்க பல சோதனைகளை செய்து படம் ஏற்றி திறக்கமுடியாம இருந்து வந்தது. ஆனா இப்ப திறந்ததும் மின்னல் போல பதிவு திறந்தது. தி அவார்ட் கோஸ் டூ திருமதி வல்லி சிம்ஹன் .
சரி இன்னும் ஒருத்தருக்கும் குடுக்கலாம் என்று நினைக்கும்போது.. இந்த பதிவு
லிங்க் கிடைத்தது.. ஸோ ரசிகன் நீங்களும் ’வாம்மா மின்னல் பதிவு விருது’ பெறுகிறீர்கள்.
அதிகம் படிப்பாளிகளைப் பெற்று நீங்க நூறு நூறு ஃபாலோயர்களைப் பெற வாழ்த்துகிறேன்.