February 12, 2007

கலக்கற சந்துரு

வார இறுதியில் தில்லி தமிழ்ச் சங்கத்தில் டி.வி. வரதராஜன் அவர்களின் யுனைடட் நாடகக்குழு இரு நாடகங்கள் போட்டார்கள். முதல் நாள் நடந்த வாஸ்து வாசு பார்க்க போக இயலவில்லை. அடுத்த நாள் நடந்த
கலக்கற சந்துரு பார்க்கப் போனோம்.


லாஜிக் பார்க்காமல், பெண்களை கிண்டல் செய்கிறாரே என நினைக்காமல் அந்தந்த நேரம் மட்டுமே நினைவில் இருக்கும் நகைச்சுவைகளை ரசித்துப் பார்ப்பது என்று முடிவு எடுத்ததால் நாடகம் ஓகே.கதை வெங்கட்.
ஏற்கனவே சினிமாவில் எடுத்த பிரம்மச்சாரி ஒரு மனைவியை வாடகைக்கு எடுத்தால் எனும் கதை தான்.


அவர் தான் சஹானால வரவர் சண்டை போட்டுட்டே இருப்பாரே , லூட்டியில் வர ஆண்ட்டிமா பாட்டு பாடி எல்லாரையும் விரட்டுவாங்களே .


பின்னி ராமச்சந்திரன் அவர்தான் நாடகத்தின் கதாநாயகனோ எனும் படி அந்த வயதிலும் கீழே விழுந்து எல்லாம் நடித்தார். நடு நடுவில் எஸ். வி.சேகர் குரல் கலக்கற சந்துரு பிரமாதம் , அட நீங்களுமா கலக்கறீங்களே ன்னு ஒலிக்கிறது.


உஷா வீட்டுக்கு வீடு லூட்டியில் நடித்தமாதிரியே பாடி ஆடி நடித்தார். பார்த்து பேசிவிட்டு வரலாம் என்றால் எங்கே கதாப்பாத்திரத்தின் தாக்கத்தில் ஏமண்டி லகலகலக என்று சொல்லிவிடுவாரோ என்று பயந்து பேசாமலே வந்துவிட்டோம்.

அடாது மழை பெய்தாலும் ஆதரவு அளிப்போம் என்று மழை காற்று ஊ ஊ என்று அடிக்க குளிரிலும் கூட
தில்லி மக்கள் அரங்கு நிறைந்த காட்சி நடைபெற செய்தது
குழுவினரை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. நாடகங்களை இன்றும் ஆதரவு அளிக்கும் மக்களுக்கு மேடையில் பலமுறை நன்றி சொன்னார்கள். அடுத்து சில நாட்களில் நடக்க இருக்கும் நாடகத்திற்கும் ஆதரவு அளித்து நாடகக் கலைஞர்களை ஆதரியுங்கள் என்றார் வரதராஜன்.


எல்லாரும் பேங்கிலும் எல்.ஐ.சியிலும் வேலை பார்த்துக் கொண்டோ இல்லை என்றால் இந்த கலை தாகத்தால் விருப்ப ஓய்வு வாங்கியவர்கள் என்று அறிமுகப்படுத்தினார் வரதராஜன்.
இளைஞர்கள் மேடை நாடகத்துக்கு வருவது குறைந்துள்ளது என வருத்தப்பட்டார்.


முன்பெப்போதும் விட தற்போது அதிகமாக நிகழ்ச்சி நடப்பதாய் தோன்றுகிறது. இதுபோன்ற நாடகங்களை தமிழ் நாட்டில் இருந்தால் போய் பார்ப்போமா தெரியவில்லை. இங்கே இது ஒரு வாடிக்கையாகி விட்டது.

11 comments:

துளசி கோபால் said...

எனக்கு நாடகம் ரொம்பப் பிடிக்கும், பார்க்கறதுக்கும் நடிக்கறதுக்கும்:-)

கலக்கர சந்துருன்னு ஒரு சினிமாவேற வந்துருக்கு. புதுப்படம்தான். கார்த்திக் & ராதாரவி
நடிச்சது. பரவாயில்லை ரகம். நானும் அதைப்பத்தி எழுதலாமான்னு இருந்தேன். உங்கத்
தலைப்பை( பதிவுத்தலைப்புங்க)ப்பார்த்துட்டு வந்தா, நீங்க நாடகமுன்னு சொல்லிட்டீங்க.

தமிழ்நாட்டை விட்டு வேற எங்கே இருந்தாலும் நாடகமோ, சினிமாவோ, புத்தகங்களோ,
பாட்டோ, இல்லை வலைப்பதிவுகளோ எதிலும் தமிழ்ன்னு இருக்கறதை அனுபவிக்கணும்.

எதுவுமே கிடைக்காதப்பதான் அருமை புரியும். இல்லீங்களா?

அந்த நாடக்குழுவை இங்கே அனுப்பிவையுங்க:-)

முத்துலெட்சுமி(லட்சுமி) said...

துளசி நடிக்கறதுக்குமா அப்ப நடிச்சு இருக்கீங்களா?
ஆமா தமிழ் நாட்டை விட்டு வெளியில் இருப்பதால் அருமை தான் இதெல்லாம்.

பங்காளி... said...

என்னவோ மேட்டர்னு வந்தா நாடக விமர்சனம்...

சின்ன வயசுல தூர்தர்ஷன் நாடகம் பார்த்து மெரண்டு போய்...அப்பொல இருந்து நாடகம்னாலே எகிறி குதிச்சி ஓடற வியாதி நமக்கு....ஹி..ஹி

உங்க மன தைரியத்தையும், தமிழ்சேவையையும் நெனச்சா ஒரே அளுகாச்சியா வருது...அவ்..அவ..அவ்...

முத்துலெட்சுமி(லட்சுமி) said...

நன்றி பங்காளி , சுமாரான என் பதிவு படிச்சு நீங்க பின்னூட்டம் போடறது இல்லையா அப்படித்தான்.:))
ஆனா தூர்தர்ஷன் நாடகங்கள் இப்போ இருக்கிற மத்த சானல்களின் நாடகங்களுக்கு எவ்வளவோ தேவலை.
குடும்பத்துல நடக்கற சின்ன சண்டை தான் காட்டுவாங்க. இப்ப வர கோடிகளில் புரளும் பிசினஸும் அவ வாழ்ந்துடுவாளா பார்க்கிறேன்னு சவால்களும் இருக்காதே.

இலவசக்கொத்தனார் said...

இந்த மாதிரி மூளையை ஆப் பண்ணிட்டு அந்த நேரத்தில் கெக்கே பிக்கேவென சிரித்துவிட்டு பின் ஏன் சிரித்தோமென யோசிக்க வைக்கும் நாடகங்கள் எனக்கும் பிடிக்கும். :))

முத்துலெட்சுமி(லட்சுமி) said...

வருகைக்கு நன்று, இலவசக்கொத்தானார்.
மூளையை ஆப் பண்ணிட்டுன்னு சரியாச் சொன்னீங்க. ஜஸ்ட் ரிலாக்ஸ்.
சில்லியானதுன்னு நடைமுறையில் சொல்லும் விஷயத்தைக் கூட அப்ப சும்மா ஜோக் தானேன்னு சிரிச்சு வைப்போம்.

வடுவூர் குமார் said...

நாடகங்களில் நான் மிகவும் கேட்டு ரசித்தது "வண்ணக்கோலங்கள்".
அந்த நேரத்துக்கு சிரிச்சிட்டு வெளியேறிடனும்.
அனுபவிக்கனும்,ஆராயக்கூடாது,இந்த மாதிரி நாடகங்களில்.

முத்துலெட்சுமி(லட்சுமி) said...

ஆமாம் குமார். வண்ணக்கோலங்கள் கேட்டு கேட்டு மனப்பாடமே ஆகியிருக்கும். பக்கத்துவீட்டில் எல்லா கேசட்டும் இருக்கும் அடிக்கடி போடுவாங்க.:))

சென்ஷி said...

தயவு செய்து தமிழ்சங்கத்தில் மீண்டும் இதுபோன்று ஏதேனும் நாடகம் கலைநிகழ்ச்சி நிகழ்வதாக இருந்தால் பதிவு மூலம் தெரியப்படுத்தவும்.
நானும் டெல்லியில்தான் இருக்கிறேன். விவரங்கள் சரிவர தெரிவதில்லை. நன்றி.

:((((

சென்ஷி

முத்துலெட்சுமி(லட்சுமி) said...

சென்ஷி வருத்தப்படாதீங்க. இப்ப நீங்க இணையம் மூலமாவே தெரிஞ்சுக்கலாமே.
http://www.delhitamilsangam.in/
போய் பாருங்க .:)

சென்ஷி said...

நன்றிகள் பல

சென்ஷி