February 23, 2007

முறிந்த உடன்படிக்கை

சாலை ஓர தவம் கலைத்து,
பின்பொரு புன்னகை.
மெளனமொழி பேசி முடித்து,
பின்பொரு உடன்படிக்கை.

தவங்களும், மௌனமொழிகளும்
உணர்த்தின காதல்.
நாட்காட்டி முழுதும்,
வர்ணஜாலம்.
முகம் பார்த்த நாட்கள்.


தவங்கள் குறைந்தது,
நிஜமொழி பேசினோம்.
காணாமல் போனது காதல்.
நாட்காட்டி முழுதும்
கருப்பு புள்ளிகள்.
போர்க்கள நாட்கள்.
ஓரோர் நியாயம்.
முறிந்த உடன்படிக்கை.

கால ஓட்டத்தில் ஓடி களைத்து,
ஓர் நாள்.
எதிர்பட்டோம்.

என் கையில் உன் செல்வம் .
உன் கையில் என் செல்வம்.
நிஜமொழி சொன்னது-
நீ நலமா? நலம்.
நீ நலமா? நலம்.
மௌனமொழி சொன்னது-
நலம் கேட்கும் நிலையானதே.

உடன்படிக்கையோ ,
நிஜமொழியோ இல்லாதிருந்தால்
நன்றாயிருந்திருக்கும்.

29 comments:

பங்காளி... said...

நானும் ரெண்டு மூனு தடவ படிச்சிட்டேன்.புரிஞ்ச மாதிரியும் இருக்கு, புரியாத மாதிரியும் இருக்கு.

தாயே, கோவிக்காம கொஞ்சம் தளர்வா எளுதிப் பாருங்க....புண்ணியமாப் போகும்...

எனக்கும் புரிஞ்சிரும்ல...ஹி..ஹி...

முத்துலெட்சுமி(லட்சுமி) said...

என் நோக்கம் நிரைவேறிவிட்டது அப்படியென்றால். புரிந்த மாதிரியும் புரியாதமாதிரியும் இருக்க வேண்டும் என்றே நினைத்துக் கொண்டு எழுதியது.
[அடிக்கடி நீங்க தளர்வா எழுதுங்க நெகிழ்வா எழுதுங்க ன்னு சொல்லறீங்க இதுக்கும் முன்னால அப்படி பட்ட கவிதையும் எழுதி இருக்கேன். அந்த அந்த கவிதையின் நிகழ்வு களம் தான் அதனை தீர்மானிக்கிறது. இதனுடையது விரக்தி .இதில் அதெல்லாம் எதிர்பார்க்க முடியாது.]

சென்ஷி said...

தவமொழி மௌனம்
பேச்சு சாபம்
வரங்கள் மழலை
வாழ்க்கை போகுது
அதன் இஷ்டத்திற்கு.........

சென்ஷி

Anonymous said...

லட்சுமி அம்மா,
இதெல்லாம் விக்காதுங்க.உடன் படிக்கை முறிவு-தேசீய ஜல்லிகளின் சதின்னு பதிவு போடுங்க.அப்புறம் பாருங்க,செல்லிங்கை!நம்ப வாந்தி பேதி பதிவெல்லாம் எப்படி ஹிட்டாகுதுன்னு லுக் விடுங்க.புரியுதுங்களா!
அது சரி,இப்படி எழுதினால்தான் பின் நவீனமா!??
அன்புடன்
ப.பாண்டியன்
மும்பாய்

முத்துலெட்சுமி(லட்சுமி) said...

ஆமா சென்ஷி,
வாழ்க்கை போகும் அதன் இஷ்டத்திற்கு சில சமயம் கல்லும் முள்ளும் சில சமயம் பனித்துளியும் மணம்வீசும்பூக்கள் கூடிய புல்வெளியுமாக ...

முத்துலெட்சுமி(லட்சுமி) said...

வருகைக்கு நன்றி பாண்டியன் மும்பை.
ஐடியா எல்லாம் சூப்பரா கொடுக்கறீங்க!
அந்த சாமார்த்தியம் எல்லாம் இல்லீங்க எனக்கு. ம் அப்புறம் இந்த பின்நவீனத்துவம் அப்படின்னா என்னங்க? அந்த அளவுக்கு அறிவாளி இல்லீங்க நான். இப்போ தான் ஏதோ கேள்வியே படறேன்.

Anonymous said...

Kavithai nalla than irukku..aana innum konjam puriyara thamil la iruntha innum nalla irukkum.

Sankar Ganesh S
New Delhi

முத்துலெட்சுமி said...

வருகைக்கு நன்றி சங்கர் கனேஷ்,
என்னங்க புரியாத தமிழா..அவ்வளவு கஷ்டமான வார்த்தைகளா சேர்த்திருக்கிறேன். விடுபட்டதாக நினைக்கும் இரண்டு வரி சேர்த்திருக்கிறேன். சொல்லாத காதலே வாழும்.அப்படிங்கறதே கருத்து.
நிஜமொழிங்கறது பேசும் பாஷை.மௌனமொழி கண் பேசும் பாஷை. உடன்படிக்கை அப்படிங்கறது
பேசிய காதல்.

[கோனார் நோட்ஸ் கேக்கறாங்களே மக்கள்..] ஏதோ நாலு பேர் படிக்கிறீங்களே பெரிய விஷயம்

Anonymous said...

செல்வம் பற்றிய இரண்டு வரி மட்டும் இன்னும் என் மர மண்டையில இறங்க மாட்டேங்குது. செல்வம் என்பதன் பொருள் தடையா இருக்கான்னு தெரியல. நீங்க சாதாரண செல்வத்தை குறிப்பிடலை இல்லையா ...

ஆனா அதுக்கெல்லாம் கவலப் படாம, அருமையான இந்த முடிவு வரிகளில் லயிக்க வச்சிட்டீங்க.
//உடன்படிக்கையோ ,
நிஜமொழியோ இல்லாதிருந்தால்
நன்றாயிருந்திருக்கும்.//

என் மச்சான் சொல்லிருக்கு உடன்படிக்கை ஊருக்காக ...
நிஜமொழி பற்றி இன்னும் தர்க்கம் உண்டு. நிஜமொழியில் வேணாம்னு பெரிய இவளாட்டம் நான் அடிக்கடி பேசுனாலும், ஆசையா நாலு வார்த்தை பாராட்டா நாப்பது வார்த்தை கிடைக்காதானு தினைக்கும் மச்சானை அல்பமா பாக்குற ஆளு நான் ஹி ஹீ. தலைவரும் இன்னைக்கு வரைக்கும் ஏமாத்தலை! ;)

Anonymous said...

அய்யோ //சொல்லாத காதலே வாழும்.அப்படிங்கறதே கருத்து.// இதைப் பாக்கலையே ...
அப்ப நான் சொதப்பிட்டனா என் புரிதல்ல? ...

ஏங்க இப்படி சோகமாக்கிட்டீங்க ...
காதல் சொல்லாமலும் வாழும் அப்படின்னு கொஞ்சம் மாத்துனா அடி கிடைக்குமா வாசிப்பாளருக்கு?! :)

முத்துலெட்சுமி said...

ஹ்ம் மதுரா,,இப்படி ஒன்னு ஒன்னா நானும் எல்லாம் சொல்லிட்டேன்.
ஆமாங்க செல்வங்கள் சாதாரண செல்வங்கள் இல்லங்க..குழந்தை செல்வங்கள்.

பாராட்டுக்கு அது பொய்யுன்னு தெரிஞ்சாலும் ஏங்காதவங்க மனுசங்களே இல்லங்க .

முத்துலெட்சுமி said...

சரிங்க இன்னோன்னு சொல்றேன். சிச்சுவேசன் ரெண்டுங்க.ஒன்னு கல்யாணம் ஆகி பிரிஞ்சவங்களோ இல்லை காதல் நிலையிலேயே பிரிஞ்சவங்களோ சொல்லறது இதுன்னா புரியுமா?

நாகை சிவா said...

கவிதையில் நமக்கு அவ்வளவா ஞானம் கிடையாதுங்க.

இருந்தாலும் நல்லா இருக்கு(மரபு கவிதை போல் இருக்கு) சரியா?

செல்வம் என்பது குழந்தைகளை தான் குறிக்கின்றது என்பது புரிகின்றது.

அங்கு முற்று புள்ளி வைத்து இருக்கீங்களே அது தான் கொஞ்சம் குழப்பத்தை ஏற்படுகின்றது.

முத்துலெட்சுமி said...

அடடா நாகை சிவா, நீங்க வேற இதெல்லாம் கவிதையில் சேர்த்தியான்னே எனக்கு தெரியாது.இதுல மரபு கவிதைங்கறீங்க.
உங்களப்போல கவிதை தெரியாதுன்னு
சொல்றவங்க இருக்கற தைரியத்தில் தான் நான் இன்னும்
இப்படி கிறுக்கிட்டு இருக்கேன்.

ஏங்க புள்ளிக்கு கூடவாங்க விளக்கம் ...எனக்கு நல்லா வேணும் யாருக்கும் புரியக்கூடாதுன்னு நினைச்சதுக்கு இப்படித்தான் ஆகும்.

ஆனா நல்லா இருக்குன்னு சொன்னீங்க பாருங்க ரொம்ப நன்றிங்க..அப்ப ப்ப வந்து இப்படி சொல்லுங்க அப்பத்தான் ஊக்கமளித்தவர்கள் அப்படிங்கற மற்றொரு பதிவுல உங்கள எல்லாம் நான் நினைச்சு பாத்து நன்றி சொல்லுவேன்.

Anonymous said...

எல்லோரும் புரியவில்லை என்று எழுதியிருக்கிறார்கள்.
பேருந்து நிறுத்த காதல் பின்பு திருமணம் பிறகு அலைவரிசை மோதல் பின் பிரிதல் இவற்றைப் பற்றித்தானே எழுதியிருக்கிறீர்கள். இது சரிதானே? இதற்கு மேல் இதில் புரியாத விஷயம் என்ன இருக்கிறது?

பொன்ஸ் said...

லட்சுமி,
கவிதை நல்லா இருக்கு.. கோனார் நோட்ஸ் எல்லாம் தேவைப்படாமயே நல்லா வந்திருக்கு.. சமீபகாலமா கவிதை படிக்கிறதில்லைன்னு முடிவெடுத்திருக்கிறதால காலை பார்த்தும் பார்க்காம போய்ட்டேன்.. இப்போ பின்னூட்டங்களைப் பார்த்து, என்னடா, இதுவும் மதுரா பதிவு மாதிரி ஆகிட்டிருக்கேன்னு வந்தேன் :-D ஹி ஹி..(அதான், நோட்ஸ் கேட்டு, கொடுத்து :-D)

அருளோட கவிதை ஒண்ணு இதே பொருளில் வரும்.. படிச்சி பாருங்க.. பிடிக்கலாம்..

முத்துலெட்சுமி said...

சரிதாங்க உமாசங்கர்' வருகைக்கு நன்றி.
அவங்கள எல்லாம் குத்தம் சொல்ல முடியாது.நான் நடுவில் தான் ரெண்டு வரி சேர்த்தேன்.அது இல்லாம பாவம் அவங்க எல்லாம்குழம்பிட்டாங்க.ரெண்டு சிச்சுவேஷன் குடுத்துருக்கேன்.ரெண்டுக்கும் பொருந்தும்.
முதல் சிச்சுவேசன் கல்யாணம் ஆகி பிரிஞ்சவங்கன்னா ஒரு பிள்ளை ஒருத்தர்கிட்ட இன்னொரு பிள்ளை ஒருத்தர் கிட்ட.
காதலிலேயே பிரிந்திருந்தால் அவங்க குழந்தைய இவங்களும் இவங்க குழந்தைய அவங்களும் வச்சுகிட்டு நலம் விசாரிச்சு இருப்பாங்க.

முத்துலெட்சுமி said...

பொன்ஸ் ஏன் அப்படி கவிதை படிக்கறது இல்லன்னு ?:-( விதிகளை தளர்த்திக்கொண்டு வந்து படித்தது மகிழ்ச்சி.
அப்புறம் எப்படிங்க நியாபகம் வச்சு லிங்க் எல்லாம் குடுக்கறீங்க.
பார்த்தேன்.ரொம்ப நல்லா இருந்தது .

மதுரா பதிவுக்கு போன பாதிப்பு இன்னும் கொஞ்சம் அகலத்தான் இல்லை.:-)

S. அருள் குமார் said...

நல்லா இருக்குங்க கவிதை.

//நானும் ரெண்டு மூனு தடவ படிச்சிட்டேன்.புரிஞ்ச மாதிரியும் இருக்கு, புரியாத மாதிரியும் இருக்கு.//

கவிதையை படிக்கும் முன்பே அதன் பொருள் தெரிந்திருந்ததால் எனக்கு எளிதாய் புரிந்துவிட்டது என நினைக்கிறேன் :)

//அப்புறம் எப்படிங்க நியாபகம் வச்சு லிங்க் எல்லாம் குடுக்கறீங்க.//

பொன்ஸ் ஒரு நடமாடும் blog directory - ங்க. இப்படி பல link எனக்கும் கொடுத்திருக்காங்க.

முத்துலெட்சுமி said...

நன்றி அருள். முன்பே சொன்னது போல நடுவில் ஒரு வரி சேர்த்தேன்.சேர்க்கும்முன் அங்கே எல்லாரும் கொஞ்சம் குழம்பிப்போய் விட்டார்கள்.

மங்கை said...

பெண்ணே..
பிரிவு
நான் உன் கனவில் வருவதற்காக..


(சரி சரி அவ்ளோதான்...டென்ஷன் ஆகிறாதே முத்து... இதுக்கு மேல நமக்கு நோ சான்ஸ்..:-))..
ஆனா ஒன்னு லட்சுமி... யாருக்கும் புரியாத ஒன்னு எனக்கு புரிஞ்சுடுத்து.. புரிஞ்சுடுத்து)

முத்துலெட்சுமி said...

மங்கை நீங்க நினைக்கிறது இல்லவே இல்லை. மு.உமாசங்கர் சொன்னமாதிரி
அலைவரிசை ஒத்துவராமலோ சரியான புரிதல் இல்லாமலோ பிரிந்தவர்கள் கதை.

மங்கை said...

ஓ அப்படியா...

நமக்கும் எதோ புரிஞ்சுறுச்சுன்னு கொஞ்ச நேரம் சந்தோஷப்பட்டுட்டேன்
கவிதை வேற எழுதி கடைசியில அது
'கதை'(உடான்ஸ்) ஆயிடுச்சு...
சரி..சரி வாபஸ்

துளசி கோபால் said...

கவிதைக்கும் நமக்கும் காத தூரமுங்கோ.............

என்னமோ எழுதி இருக்கீங்க. எதுக்கும் 'நல்லா இருக்கு'ன்னு
ஒத்து ஊதிட்டுப்போறேன்:-)))))

நானும் கவிதை எழுதலாமான்னு சிலசமயம் யோசிப்பெனுங்கோ..........
அப்புறம் அது எனக்கே புரியலைன்னா.........?

முத்துலெட்சுமி said...

மங்கை உங்க கவிதை நல்லாதாங்க இருக்கு.இப்படித்தான் முயற்சி செய்யுங்க. :-)

முத்துலெட்சுமி said...

துளசி கண்டும் காணாம போகாம வந்து பின்னூட்டம் போட்டது ரொம்ப சந்தோஷம் . பின்ன ரசிக பெருமக்களை இழந்துட்டோமோன்ன கவலை வரவிடாம செய்யறீங்க இல்லையா?புரியலைன்னா தான் சிறந்த கவிதைன்னு சொல்லிட்டு சும்மா எழுதுங்க நாங்க வந்து பின்னூட்ட புரட்சி செய்யமாட்டமா என்ன? :-)

வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன் said...

உணர்வுகளால் நிச்சயிக்கப்பட்ட காதல், உறவுகளுக்காக மீண்டும் ஒருமுறை நிச்சயிக்கப்படுவதில் தான் புரிதலில் குழப்பம் தொடங்குகிறது. உடன்படிக்கை என்பதே நம்பிக்கையின்மையை எழுத்துப்பூர்வமாக பதிவது தானே?. அங்குதான் காதலுக்கான சோதனை ஓட்டம் தொடங்குகிறது.

//நிஜமொழி சொன்னது-
நீ நலமா? நலம்.
நீ நலமா? நலம்.
மௌனமொழி சொன்னது-
நலம் கேட்கும் நிலையானதே.//

வரிகள் வலி மிகுந்தது. கவிதையின் வலிமையும் அந்த வரிகள்தான். தொடர்ந்து எழுதுங்கள் லட்சுமி.

முத்துலெட்சுமி said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ,
வத்திராய்ப்பு கவுதமன்[எவ்வளவு நீளப்பெயர்]
ம்.. சோதனை ஓட்டம் சரியான சொற்றொடர் தான்.அங்கே தெரிந்துவிடும் எல்லாம்.

வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன் said...

//வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ,//
வரவேற்புக்கு நன்றி!

//வத்திராய்ப்பு கவுதமன்[எவ்வளவு நீளப்பெயர்]//
என்ன செய்வது? ஊர் விட்டு ஊர் வந்து பத்து வருசத்துக்கு மேல ஆயிடுச்சு. என்னோட ஊர்க்காரங்க என்னை மறந்துடக்கூடாது இல்லயா? அதுபோக இந்த பெயரிலேயே பத்திரிக்கைகளில் எழுதிப் பழகிட்டேன். வத்திராய்ப்பு இல்ல, வத்திராயிருப்பு.