தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு புகைப்படப் போட்டியின் ரன்னர் அப் புகைப்படங்கள் இங்கே .இப்போதானே வாக்கெடுப்பே தொடங்கியிருக்கு என்று யோசிக்கிறீர்களா? எப்போதும் உலக அழகிப் போட்டிக்கு உள்ளூர், குப்பம் இப்படி சில போட்டிகள் வைத்து அப்புறம் தானே போட்டிக்கு போவாங்க. அப்படி
எங்க வீட்டில் நடந்த போட்டியில் ரன்னர் அப் ஆக வந்த புகைப்படங்கள் இங்கே.
போட்டிக்கு பெயர் குடுத்த நாளே வீட்டில் இருந்த வெங்காயம் , தக்காளி வைத்து இரவே எடுத்தது .
அதற்காக அன்று இரவு சமையலுக்கு விடுமுறை வாங்கிக் கொண்டு (தொலைபேசி டோர் டெலிவரி உணவு) வேலையை ஆரம்பித்தேன்.
வீடியோ எடுக்கும் பெட்டி புகைப்படம் எடுக்க அத்தனை
சிறந்தது இல்லை. மேலும் இருட்டில் எடுக்க இது சரியல்ல எனும் தீர்மானத்திற்கு வருவதற்குள், ஒரு முழு மெழுகுவர்த்தி தீர்ந்து விட்டது.
அதற்குள் சின்னவரின் சேட்டையை சமாளிக்க தடுமாறிய கணவரை ரிலீவ் செய்ய வேண்டியும் பகலில் எடுக்கணும் என்று முடிவெடுத்தும் ஒத்திப் போட்டேன். இங்கு இருப்பது முதல் சுற்று . அடுத்தசுற்று புகைப்படங்களை இப்போது
போட்டால் போட்டியில் எது என் படம் என்று தெரிந்து விடும். போட்டி விதிகளுக்காக 20 தேதி அவற்றை பதிவிடுவேன்.
நீங்கள் உங்கள் வாக்குகளை சேர்த்துவிட்டீர்களா?
சர்வேசன் புகைப்பட வித்தகர் போட்டிக்கு இங்கே கிளிக்குங்கள்.
8 comments:
:))) முதல் படம் நல்லாருக்கு...
நான் கடைசியில் எடுத்து, சர்வேசன் கொடுத்திருந்த மெயில் ஐடியைத் தப்பா போட்டு.. ஒரே சொதப்பல் தான் போங்க :((
நன்றி பொன்ஸ்.
எப்படியோ அனுப்பிட்டீங்க தானே?!!
லிங்க் போட்டியோட தளத்தில் எப்படி குடுக்கறதுன்னு பார்த்தேன் ஆனா திறக்கவே மாட்டேங்குது .
:-)))))))))
உங்கள் புகைப்படந்தானுங்கோ தோழி!
இங்கே க்ளிக்கவும்
எப்படி வந்திருக்கிறது?
என்ன துளசி எப்போவும் எதாச்சும் சொல்லிட்டு தானே சிரிப்பானை போடுவீங்க. இது என்ன வெறும் சிரிப்பான்??
செல்லா உங்கள் கருத்தை சொல்ல வருவீங்கன்னு நினைச்சேன்.ஆனா இது என்ன படத்தை அப்படியே சூப்பரா மாத்திடீங்க. photoshop??
ஆமாங்க தோழி. இது பயர்வொர்க்ஸ் எனும் மென்பொருள். நம்ம தொழிலே இணையத்தை அழகுபடுத்தல் தாங்க! ( வார்த்தைகளால் வறுத்தாலும் அழகை வார்த்தெடுப்பது தானுங்க தொழில்! )
:) விளம்பரத்துக்கு ரொம்ப நன்றி!
போட்டி முடிந்த பிறகு எல்லோரையும், மற்ற புகைப்படங்களும் அனுப்ப சொல்கிறேன், ஒரு சூப்பர் கலவை கிடைக்கும் :)
Post a Comment