February 21, 2007

தையலில் இருந்து தமிழ்மணம் வரை

பள்ளியில் படிக்கும் போது அம்மா சொன்னாங்களே என்று
தையல் வகுப்பில் சேர்ந்தேன். கர்ச்சீப் தைக்கறதுக்குள்ள மேடத்தை ஒருவழியாக்கினேன். அம்மாவுக்கு சட்டை தைத்து தந்தேன். மேடத்துக்கு எப்போதும் ஒரு சந்தேகம் இருக்கும் அது என்னா என் கிட்ட ஒக்காந்து வெட்டும் போது மட்டும் சரியாதானே வருது நீயா வெட்டினா ஏன் தப்பு செய்யறன்னு.. நீங்க இருக்கற தைரியம் தான் அப்படின்னு சொல்லி எப்படியோ நாலஞ்சு டிசைன் தச்சாச்சு. தையல்ன்னா என்ன தெரிஞ்சுகிட்டாச்சு. போதும்ன்னு விட்டாச்சு.


அப்புறம் கல்லூரி படிக்கும் போது ஹிந்தி. அப்ப தெரியாதுங்க இப்படி டில்லியில் வந்து மாட்டுவேன்னு ,
ஏதோ அப்படி ஒரு ஆசை. அங்க போய் படிக்கறத விட அரட்டை தான் நிறைய..இருந்தும் மூணு தேர்வு முடிச்சாச்சு. அவ்வளவு தான் இதுக்குமேல தேர்வெழுத நமக்காகாது .ஹிந்தி புரிஞ்சுடுச்சு .ஹிந்தி வகுப்ப விட்டாச்சு.



பாட்டு கத்துக்கணும்ன்னு ஆசை ..என் குரலுக்கு அவ்வளவு ஆசை கூடாது தான். ஆனா அப்போ யாரும் பக்கத்துல சொல்லித் தரவங்க இல்லாததால வயலின் கத்துக்கிட்டேன். இரண்டு வருசம் பாட்டெல்லாம் வாசிக்க தொடங்கினதும் வீடு மாறிட்டோம் . தப்பிச்சார் வாத்தியார்.


போன வீட்டு பக்கத்துல ஒரு பாட்டு டீச்சர் இருந்தாங்க . சரிதான் ஆசைப்பட்டது நிறைவேத்திக்க வேண்டியது தான்னு பாட்டு கத்துக்க போய் அடிப்படை அறிவு வளர்த்துக்கிட்டு இருக்கும் போதே , கல்யாணம் ,அப்புறம் டில்லி பயணம்.


கணவரோட லேப்டாப் மகிமையால வீட்டுலயே அடுத்த பொழுதுபோக்கு ,எக்சல், வேர்டு, பவர் பாயிண்ட் எல்லாம் புத்தகமும் லேப்டாப்புமா நானே .


கொஞ்சம் வருஷம் குடும்பம் குழந்தை .அப்புறம் குழந்தை தூங்கினதும் க்ளாஸ் போக கிடைத்த சனி ஞாயிறு மதியத்து பொழுதுகள் மல்டிமீடியா போட்டோ ஷாப்புமா
கழிச்சாச்சு. கம்ப்யூட்டர் வந்தது. நெட் வந்தது. சொந்தங்கள் நட்புகள் என்று மெயில் களும் சாட்டுகளும் பின்னர் வலை போட்டு , பிடித்த தளங்களை மேய்வதுமாய் பொழுதுகள் ஓடியது.

குழந்தை வளர்ப்பும் , குழந்தைகளுக்கான தளங்களும் என்று பொழுதுகள் ஓடியது. அடுத்த கட்டம் நம்ம பொழுதுபோக்கு பென்சில் டிராயிங் மற்றும் பெயிண்டிங் சொல்லித்தரும் தளங்கள் பார்த்து  வரைந்து பார்த்தாச்சு.


இப்போ அடுத்த படி தமிழ்மணம் தேன்கூடு வலைப்பதிவு . எப்ப இது போரடிக்கப் போகுது தெரியலை. ஆங்காங்கே இருப்பது என்
பென்சில் டிராயிங்ஸ் . ஒன்று என் பெண்ணை மாடலாக வைத்து நான் வரைந்தது . அப்புறம் செடி போல் இருப்பது நெகடிவ் டிராயிங்க் வகையை சார்ந்தது.

34 comments:

பொன்ஸ்~~Poorna said...

லட்சுமி.. பென்சில் ஸ்கெட்ச் எல்லாம் ரொம்ப நல்லா வந்திருக்கு..

மல்டிமீடியா எல்லாம் கத்துகிட்டிருக்கீங்களா நீங்க? சகல கலா முத்து லட்சுமி தான் :)))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி பொன்ஸ், இந்த கத்துக்கற ஆர்வம் இருக்கே ஒரு வியாதி மாதிரி என்ன பிடிச்சு அப்பப்போ ஆட்டி வைக்கும் ...அதனால பொழுத போக்க இப்படி ...ஜெர்மன் கத்துக்கற வேலை கூட தனியா ஓடிக்கிட்டு இருக்கு. நமக்கு நாமே திட்டத்துல ,
புக்கும் நெட்டும் உதவி.

[ஆங்கிலமே ஒழுங்கா தெரியாது.இதுல ஜெர்மனாம்:-) ஓவரில்லை]

அபி அப்பா said...

நீங்களும் ஒன்னு விடல. ஆனா அந்த டிராயிங்ஸ் நல்லா வந்திருக்கு. கொஞ்சம் வேலையிருக்கு. பின்ன வரேன்.

துளசி கோபால் said...

யம்மாடி, சகலகலா வல்லி, இப்படி தூள் கிளப்பிக்கிட்டு இருக்கீங்க!!!!!!!

இதைத்தான் எந்தப் புத்துலே என்ன பாம்பு இருக்கோன்னு சொல்வாங்களோ?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பரவால்ல அபி அப்பா உங்க பிசி வேலைகளுக்கு இடையில் வந்து பின்னூட்டி இருக்கீங்க. ரொம்ப சந்தோஷம்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

துளசி என்ன இது இப்படி எல்லாம்...:-0 வெட்கமா போச்சு எனக்கு .

aparnaa said...

wow!!beautiful pictures!! seems like u are very talented!! kalakkareenga poonga!! ennum enna enna theramai olichu vachuerukeenga?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நீங்க வேற அபர்ணா ..டேலண்டாவது ஒண்ணாவது, பதிவ போட்ட காரணமே வேற.
ஆனா பாருங்க எந்த ஒரு விஷயத்திலயும் பெரியாளாகணும்ன்னு நினைக்கறதே இல்ல நெக்ஸ்ட் நெக்ஸ்ட்ன்னு ஏதோ போயிட்டே இருக்கறேன். மீதி திறமை பத்தி அடுத்து போட்டுடலாம்.:-)

சென்ஷி said...

//பொன்ஸ் said...
லட்சுமி.. பென்சில் ஸ்கெட்ச் எல்லாம் ரொம்ப நல்லா வந்திருக்கு..

மல்டிமீடியா எல்லாம் கத்துகிட்டிருக்கீங்களா நீங்க? சகல கலா முத்து லட்சுமி தான் :))//

அப்படியே வழிமொழிகிறேன் :)))

சென்ஷி

Anonymous said...

சகலகல வள்ளின்னு உங்களாத்தான் சொல்லுறாங்களோ!?

வல்லிசிம்ஹன் said...

நல்லப் படங்கள் வரயறீங்க முத்துலட்சுமி.
மத்ததெல்லாம் எல்லோர் சொன்னதையும் வழிமொழிகிறேன்.:-)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி சென்ஷி , நன்றி வல்லி ... சகல கலா எல்லாம் சொல்லிக்கமுடியாது. எதோ வெறுமன
கோலமும் , சமயலும் பத்தி தெரிஞ்சா புத்திசாலி ன்னு ஒத்துக்கமாட்டாங்களாம் பொண்ணுங்கள . அதான் எங்களுக்கும் தெரியும்ன்னு கொஞ்சம் காமிக்கறதுக்கு.இருக்கு லிஸ்ட் இன்னும்.என்ன பண்ண இப்படி நிருபிக்க வேண்டி இருக்குப்பா எங்க நிலமை.சும்மா உக்காந்திருக்கல வீட்டுல.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அனானி ...தயவு செய்து கையெழுத்து போட்டு எழுதுங்க.
அப்புறம் என்ன ஒரே எழுத்து பிழை?

மங்கை said...

அஹா..அம்மிணிக்கு பின்னால இவ்வளவு விஷயம் இருக்கா...

பாராட்டுக்கள்...

//வெறுமன கோலமும் , சமயலும் பத்தி தெரிஞ்சா புத்திசாலி ன்னு ஒத்துக்கமாட்டாங்களாம் பொண்ணுங்கள . அதான் எங்களுக்கும் தெரியும்ன்னு கொஞ்சம் காமிக்கறதுக்கு.இருக்கு லிஸ்ட் இன்னும்.என்ன பண்ண இப்படி நிருபிக்க வேண்டி இருக்குப்பா எங்க நிலமை.சும்மா உக்காந்திருக்கல வீட்டுல//

:-))

வடுவூர் குமார் said...

புதுசு புதுசா கத்துக்கனும் என்று தோனுவது நிச்சயம் ஒரு வியாதி தான். :-))
தப்பிப் தவறி எந்த மருத்துவரிடமும் காட்டிவிடாதீர்கள்.
இது உடம்புக்கு வேண்டிய வியாதி.
படம் ஸ்கேன் பண்ணியதா? அல்லது கேமராவில் எடுத்ததா?கொஞ்சம் சரியாக வரவில்லை என்று நினைக்கிறேன்.
உங்கள் பெண் இடது கையை இன்னும் கொஞ்சம் உங்கள் கற்பனையை ஏற்றிருக்கலாம்.
பின்குறிப்பு: எனக்கு வரைய தெரியாது.

கோபிநாத் said...

ஆஹா...லட்சுமி அக்கா..

பல விஷயங்களை கத்துக்கிட்டு கலக்கிருக்கீங்க...

மல்டிமீடியா, பென்சில், வயலின்....எப்பா சாமி ஆனாலும் உங்களுக்கு தன்னடக்கம் அதிகம் தான்

வாழ்த்துக்கள்...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாங்க மங்கை , அம்மணிக்கு பின்னால நிறைய விஷயம் இருக்குங்க.
அப்புறம் அதுக்கு அப்பா அம்மா இப்ப புருஷன் புள்ளக்குட்டின்னு நிறைய ஊக்கம் தரவங்களும் இருக்காங்க.
[ஒரு சில சமயம் இவங்களே தடைக்கல்லாவும் ]:-)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆமாங்க வடுவூர்குமார் , ஸ்கேனர் இல்லீங்க. கேமரால எடுத்தேன். கொஞ்சம் டல்லடிச்சுது bright செய்து போட்டேன்.
அப்புறம் வரய தெரியலன்னாலும் பார்த்து தப்பு கண்டுபிடிச்சு சொல்லலாம் தப்பு இல்லை. ரியல் மாடல வரஞ்சது இது முதல் முயற்சி அதுமட்டும் இல்லாம அவ டிவி பாத்துட்டு இருந்தா நான் ஒடனே கையில் கிடைத்த கோடு போட்ட நோட்டுல வரஞ்சிட்டேன் .அப்புறம் கட் பண்ணி என்னோட கலெக்ஷனில் சேர்த்துட்டேன்.அதனால் வேற சரியா தெரியல.கை கொஞ்சம் சரியா வரல தான்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி கோபி நாத். தன்னடக்கமா இருந்தா எப்படின்ங்க குப்ப கொட்டறது.அதான் கொஞ்சம் தம்பட்டம் அடிக்க வேண்டியதா ஆகிடுச்சு.

செல்வநாயகி said...

///தன்னடக்கமா இருந்தா எப்படின்ங்க குப்ப கொட்டறது.////

:))

great work.

வடுவூர் குமார் said...

ஏங்க உங்கள் நிரல்(Template Code) யார் எழுதியது?
ஒரு ஆணின் பெயர் மட்டும் நீலக்கலரில்!!
நீங்களும் இப்படி கலர் பார்ப்பீர்கள் என்று தெரியாது.
:-)))
கோச்சுக்காதீங்க.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வருகைக்கு நன்றி செல்வநாயகி.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வடுவூர் குமார் நீங்க கேட்டது எனக்கு புரியல.:(

Nirmala. said...

லட்சுமி... உங்க பதிவுகளைப் படிக்கும் போது நீங்க பேசிக் கேட்கிறது போல இருக்கு. உங்க குரலும் அந்த லொடலொடா பேச்சும்! ரொம்ப பிடிச்சிருந்தது. keep goin.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நிர்மலா நீங்க போட்ட பின்னூட்டம் பிளாக்கர் காட்டவே இல்லை.மெயிலில் பார்த்தேன் இப்போது தான்.பொன்ஸ் உதவி செய்யறேன்னு சொல்லி இருக்காங்க சில பின்னூட்டங்களை ப்ளாக்கர் சாப்பிட்டுது போல. உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

நிர்மலா சொன்னது:-
\\ லட்சுமி... உங்க பதிவுகளைப் படிக்கும் போது நீங்க பேசிக் கேட்கிறது போல இருக்கு. உங்க குரலும் அந்த லொடலொடா பேச்சும்! ரொம்ப பிடிச்சிருந்தது. keep goin. //

வடுவூர் குமார் said...

பின்னூட்டம் அல்ல.
நான் சொல்லவந்தது,
அன்று உங்கள் பதிவில் பின்னூட்டம் இடுபவரின் எல்லா பெயர்களும் டெக்ஸ்ட் கலரில் வந்தது.என்னுடையது மட்டும் நீலக்கலரில் தெரிந்தது.அதைத்தான் அப்படி சொல்லியிருந்தேன்.ஆனால் இன்று பார்க்கும் போது எல்லாம் ஒரே கலரில் இருக்கிறது.
ஒரு வேளை ஆண்கள் பெயர் நீலக்கலரில் தெரியும் மாதிரி ஏதாவது CODEடில் மாறுதல்கள் செய்துள்ளீர்களா? என்று கேட்டிருந்தேன்.:-))
அவ்வளவு தான்.
வெவ்வேறு மானிட்டரில் வெவ்வேறாக தெரிகிறது.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

உங்கள் பின்னூட்டத்தில் உள்ள உங்கள் லிங்க் மூலமாக உங்கள் தளத்துக்கு போனேன். அதனால் அது கலர் மாறி இருந்தது. உபயோகித்த லிங்க் கள்
நீலமாகும் படி பாண்ட் கலர் செட்டிங் செய்துள்ளேன். இப்போது புரிந்தது.

Unknown said...

சிறு முயற்சி என்கின்ற தலைப்பைப் பார்த்ததுமே அவையடக்கம் தெரிகிறது தொடர்ந்து படித்தேன் அதில் உங்கள் திறமைகள் வெளிப்பட்டது வாழ்த்துக்கள்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அப்படி இல்லை இலக்கியன் . என்னை விட நாலும் தெரிஞ்சவங்க எல்லாம் நிறைய பேர் வீட்டுல சும்மா இருக்காங்க. அரைக்குடம் தளும்புதுன்னு சொல்லுவாங்க அது மாதிரி நான். இப்படி எல்லாம் சொல்லவேண்டிய நிலைமை சொல்லிக்கிட்டென்.
உண்மையிலேயே இதெல்லாம் சிறுமுயற்சிதானேங்க. கடல் போல இருக்கு விஷயங்கள்.

சினேகிதி said...

\\நன்றி பொன்ஸ், இந்த கத்துக்கற ஆர்வம் இருக்கே ஒரு வியாதி மாதிரி என்ன பிடிச்சு அப்பப்போ ஆட்டி வைக்கும் \\ :-))

unmai unmai :-)) sketch ellame nalla iruku..enaku keera varathu but photoshop oda naal muluka irunthiruken.innum puriyatha visayangal iruku photoshop la..ipathan yarida help kekalam endu therinjudchue :-))))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

என்ன சினேகிதி பழசெல்லாம் படிச்சு பின்னூட்டம்?/
நீங்க வேற போட்டோஷாப் படிச்சு ஒரு 7 வருஷம் ஆகிடுச்சு ..இப்போ அதோட எத்தனாவது வர்ஷன் நீங்க யூஸ் பண்ணறது...?
ம்...நானும் படிச்சேன் ..ஒருகாலத்துல.

செல்லி said...

பென்சில் ட்றோயிங் மிக மிக நல்லா இருக்கு. உங்களுக்கு நல்ல திறமை இருக்கு தொடர்ந்து கீறுங்க.

அத்துடன்
இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
அன்புடன்
செல்லி

முத்துலெட்சுமி/muthuletchumi said...

செல்லி நன்றி ...அப்பப்ப வரையறது தான். ஆனா பாருங்க ஒரு விஷயத்துல நிலையா இருக்கறது இல்ல இப்பத்தான் கதை எழுதறமே..

முதன் முதலா நீங்க தான் புத்தாண்டு வாழ்த்துக்கள் சொல்லிருக்கீங்க.நன்றி.
உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Anonymous said...

Kayal..........Gandhi thatha romba naala Athey yidatthil ninnnukkitirukkar.........Avara konjam utkara sollunga....

Nandhu