February 23, 2007

மிடி,மேக்ஸி, ஜீன்ஸ் குர்தா

அப்போல்லாம் கவுனு,மிடி, மேக்ஸியும் தான் ஃபேஷன்.
மாமா அவங்க பேண்ட் ஐ மிடியாக்கி தச்சு தருவாங்க.அதுக்கு மேலே போட ஆம்பளைங்க போல முழுக்கை வச்ச கட்டம் போட்ட சட்டை. கீழே உள்ளது கருப்போ சிவப்போ கொஞ்சம் நிறம் அடர்த்தியா மேலே உள்ளது வெள்ளையில் மிடியின் நிறத்தில் கோடு போட்டதாக இருக்கும்.
மேக்ஸி போட்டா இந்த பூந்தளிர்
பைகோ கிளாசிக் ல் படித்த ஷேக்ஸ்பியர் அப்புறம் சார்லஸ் கதையில் வரும் இங்கிலாந்து , ரஷ்ய பேரரசிகள் போல தோற்றமளிப்பதாக தோன்றும். பாதம் வரை வரும் அடுக்குகளும் முழுக்கை மூடிய பஞ்சு போன்ற ஆடை .மேக்ஸியில் ரெட்டை சடையை முன்னால் போட்டால் ரெபக்கா . சிறுமியா இருக்கும் போது இது எல்லாம்.கொஞ்சநாள் அப்புறமா சுடிதார் வழக்கம் வந்த போது ஆச்சி பேத்திகளை இல்லை இல்லை தாவணி தான் போடணும் என்றார்கள் . வீட்டில் கல்யாணம் வந்தால் வாங்கும் பட்டு பாவாடை தாவணி தவிரவும் மாமா முறை ஆச்சி முறைக்கு வரும் தாவணி தவிர வேறு வாங்கவே இல்லை . நன்றாகத்தான் இருக்கும் கட்டினால் ஆனால் யார் அதைப்போட்டு கொண்டு பஸ் ஏறி மற்றவர் கண் பார்வையில் விழாமல் போவது.
நைட்டியா என்னவொரு அங்கி என்று ஒன்றை சுற்றிக்கொண்டு என்பார்கள். ஊருக்கு போனால் பெரியவர்களின் பாட்டுக்களை கண்டும் காணாமல் போய்விடுவது தான். அதே ஆச்சி வயசுக்காலத்தில் தில்லிக்கு வந்துட்டு என் மருமகளுக்கு நைட்டி ரெண்டு வாங்கித்தா, பேத்திகளுக்கு சுடிதார் வாங்கித்தா வந்ததுக்கு நியாபகமா அவங்களுக்கு எதாச்சும் வாங்கிப்போனும்
என்ற போது நாங்கள்ளாம் அந்த காலத்துல வாங்கின
பாட்டு நியாபகம் வந்தது, தவிர்க்க முடியாமல்.
ஜீன்ஸ் போடனுங்கறது ஒரு கனவு. ஒருமுறை கல்லூரி சுற்றுலாவில் தோழியின் ஜீன்ஸ் போட்டு புகைப்படம் எடுத்தோம் . அது எதோ குளறுபடியாகி சரியாக வரவில்லை. அம்மாவுக்கு தான் சந்தோஷம் . நல்லவேளை விழலை.இதெல்லாம் கல்யாணம் ஆகி அந்த வீட்டில் வச்சுக்கோ. ஹ்ம். என்ன ஒரு பயம் பாருங்க.
ஏதோ பரவாயில்லை. கல்யாணத்துக்கு பெட்டிபெட்டியா
குடுத்த புடவை எல்லாம் ரிடன் ஃகிப்டா அம்மாவுக்கும் மாமியாருக்கும் போயாச்சு. இங்க சுடிதார் தான்.
தலைவர் நம்ம நாலரை அடிக்கு அது போதும்ன்னு சொல்லிட்டாங்க. ஜீன்ஸ் கனவும் நிறைவேறிடிச்சு. ஜீன்ஸ்ஸும் குர்தாவும் சீருடை ஆகிவிட்டது.
இப்போது அம்மா மூச் ...பேச முடியுமா என்ன.
காலம் மாற மாற உடைகளும் நாகரீகமும் மாறுகிறது.
அன்று கூடாது என்றது இன்று வழக்கமாகிவிட்டது. இன்று
நான் படித்த பள்ளிக்கூடப் பிள்ளைகள் எல்லாம் சுடிதாருக்கு மாறிவிட்டார்கள். என்ன எளிதாக சைக்கிள் ஓட்டி போகிறார்கள். பொறாமையாகத்தான் இருக்கிறது.
மாற்றங்களின் ஆரம்ப காலத்தில் வாழ்ந்தவர்களுக்கு இப்படி தோன்றுவது சகஜம் தானே.

25 comments:

பங்காளி... said...

ஃப்ளாஷ் பேக்..க்கு சரியான தமிழ் வார்த்தை என்ன?

வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன் said...

உணவு, உடை, உறைவிடம் மூன்றுமே நாகரீகத்தின் தொடக்கத்திலிருந்தே நமக்கு முக்கியமாக இருந்தது. உலகம் சுருஙி கலாச்சாரங்கள் ஒன்றோடொன்று நெருங்கி உருமாற, அதுக்குப் பிறகுதான் நமக்கு இட்லி, தோசை, பிஷ்ஷா, கட்லட், சேலை, உள்ளாடைகள், சுடிதார், மிடி, ஜீன்ஸ், மாளிகை, பங்களா எல்லாமே அறிமுகமாகி பிடித்த மாற்றங்கள் நீண்ட நாளுக்கு நிலைக்கத் தொடங்கியது.

இப்பொ நமக்கு "F TV"யில உடம்புல நூலைச்சுற்றிக்கொண்டு நடைபழகும் பெண்களின் உடுப்புகள் வேடிக்கையாக, ஆபாசமாக இருந்தாலும் வருங்காலத்தில் அதுவே தேசிய உடையாக மாறினாலும் ஆச்சர்யமில்லை. இப்போ உங்க அம்மா பேசுவதைப் போல நீங்க உங்க பொண்ணுகிட்ட பேசவும் நிறைய வாய்ப்பிருக்கு. குறிச்சு வச்சுக்கோங்க!

இந்த பதிவைப் படிக்கும்போது நான் எழுதிய ஒரு நறுக் கவிதை நினைவுக்கு வருது...
"பரிணாம வளர்ச்சியா?
பரிதாப வளர்ச்சியா?
துப்பட்டாவாக தாவணி!"

முத்துலெட்சுமி said...

பங்காளி,சரியான தமிழ் வார்த்தை என்ன தெரியாது...திடீரென தோன்றும் பழய நினைவு என்று பொருள் படுகிறது. நான் நினைவலை அப்படின்னு வகைப்படுத்தி இருக்கேன்.
திடீரென வரதில்ல நான் எழுதறது.
அலை யைப் போல அடிக்கடி தொடர்ச்சியா நினைவுக்கு வரதெல்லாம் அந்தப் பகுதியில் .

மங்கை said...

gஹ்ம்ம்ம் ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு ஆசை..
நான் அந்தந்த கால கட்டத்துல அந்தந்த உடைகளை போட்டு அழகு பார்த்திருக்கேன்.. காலேஜ்ல படிக்கும் போது....வெள்ளிக்கிழமை.. பட்டுப்பாவாடை கட்டி தாவனி..ஹி ..ஹி...நாங்க 5 பேர்..கலக்கீட்டு இருப்போம்..அந்த அழகே அழகு.... இப்பவும் காட்டன் புடவை..வளையல்..கால் சலங்கை..பூ இதெல்லாம் யாராவது காமிச்சு என்ன ஈசியா கடத்தீட்டு போயிரலாம்.. :-)))

இங்க வந்து தான் பூ வைக்கிற ஆசையெல்லாம் அடக்க வேண்டியிருக்கே

லட்சுமி இதெல்லாம் உங்களுக்கே நல்லா இருக்கா...ஏன் இப்படி என்ன கிளப்பி விடறீங்க...:-)))

முத்துலெட்சுமி said...

வத்திராயிருப்பு சார், நறுக் என்ற கவிதை கொஞ்சம் சுருக்' என்று படுகிறது. என்ன பரிதாபம் அதில்..
வசதியும் பாதுகாப்புமாய் இருக்கும் உடை எனத்தோன்றுகிறது.

நீங்க சொல்வது தேசிய உடையாக வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது
உடலைமூடிய உடை எந்த காலத்து ஃபேசனானாலும் போட தடைசெய்வதில்லை மகளை.என் அம்மாவை பொருத்தவரை அவர்கள் மூடிய உடையையும் பேசன் என்றாலும் தடுத்தார்கள். நல்ல மாற்றங்களை ஏற்றுக்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம் என்பதே என் கருத்து.

மங்கை said...

//நீங்க சொல்வது தேசிய உடையாக வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது
உடலைமூடிய உடை எந்த காலத்து ஃபேசனானாலும் போட தடைசெய்வதில்லை மகளை.என் அம்மாவை பொருத்தவரை அவர்கள் மூடிய உடையையும் பேசன் என்றாலும் தடுத்தார்கள். நல்ல மாற்றங்களை ஏற்றுக்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம் என்பதே என் கருத்து./ /

ஹ்ம்ம் உண்மை

முத்துலெட்சுமி said...

மங்கை...நாங்களும் வாரத்தில் ஒரு நாள் சேலையோ தாவணியோ அணிவோம்.
பூ எல்லா நாளுமே. தில்லியில் பூ வா மூச். காசுக்கு கேடு.

வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன் said...

//வத்திராயிருப்பு சார், நறுக் என்ற கவிதை கொஞ்சம் சுருக்' என்று படுகிறது. என்ன பரிதாபம் அதில்..//
நான் தாவணியையும் துப்பட்டாவையும் அதன் பயன்பாட்டை வைத்து ஒப்பிட்டதில் தான் பரிதாபம் என்று சொன்னேன். தாவணிக்கு பயன்பட்ட துணி தான் தற்போது துப்பாட்டாவாக சுடிதாரில் பயன்படுகிறது. தாவணியில் அது அவசியமான ஒன்று. ஆனால் சுடிதாரில் அதன் முக்கியத்துவம் சற்று குறைந்து விட்டதல்லவா???.

//உடலைமூடிய உடை எந்த காலத்து ஃபேசனானாலும் போட தடைசெய்வதில்லை மகளை//
பிரச்சனையே அதில்தானே! உடலைமூடிய உடை என்பதும், ஆபாசத்தின் எல்லைக்கோடு என்பதும் காலத்திற்குக் காலம் மாறுபட்டுக்கொண்டேயல்லவா இருக்கிறது உடைகளின் "ஏற்றத்தாழ்வுகள்" அனைவராலும் ஏற்றுக்கொள்ள முடியாமலிருப்பது தானே இதில் பிரச்சனையே!

முத்துலெட்சுமி said...

அடடா துப்பாட்டாவின் துயரம் பற்றியா எழுதினீர்கள்/ சரி.சரி.

உடலைமூடிய என்பதற்கான புரிதலில் எனக்கோ என் பெண்ணிற்கோ இதுவரை வேறுபாடு வரவில்லை.
அவள் சரியாகவே புரிந்துகொள்கிறாள்.
அல்லது சரியாகவே அவளுக்கு உணரச்செய்கிறேன் என்று நினைக்கிறேன். மாற்றங்களில் நல்லமாற்றங்களை ஏற்றுக்கொள்ளவேண்டும். தாமதமாக என் ஆச்சி நைட்டியையும் சுடிதாரையும் ஏற்றுக்கொண்டது போல என் அம்மா என் ஜீன்ஸையும் குர்தாவையும் ஏற்றுக்கொண்டது போல இல்லாமல் காலத்தின் கட்டாயமாக வேறு ஏதேனும் நல்ல உடை வந்தால் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் எனக்கிறுக்கிறது.நல்லதை தெரிவு செய்யும் பெண்ணாகவே அவள் வளர்வாள் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. :-)

மங்கை said...

ஆஹா... கவுதமன்...எங்கேயோ போயிட்டீங்க..:-))

வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன் said...

அருமை! இவ்வளவு தெளிவு ஒவ்வொருவருக்கும் இருந்தால் (ஆண்களுக்கும் சேர்த்துத்தான் சொல்கிறேன்) போதுமே! எத்தனை நாகரீக மாற்றங்கள் வந்தாலும் கண்ணியத்திற்கு இழுக்கு வராது... பெண்ணியத்திற்கும் தான்!

பங்காளி... said...

இது மாதிரியே ஒரு பதிவு பாதி எளுதி பப்ளிஷ் பண்ணாம வச்சிருந்ததை இப்பத்தான் பார்த்தேன்....

முந்திட்டீங்க....ம்ம்ம்ம்

வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன் said...

//ஆஹா... கவுதமன்...எங்கேயோ போயிட்டீங்க..:-)) //

இதோ வந்துட்டேன் மங்கை! :-)

முத்துலெட்சுமி said...

மங்கையும் வத்திராயிருப்பு சாரும் மாத்திமாத்தி பின்னூட்டம் போட்டு முகப்பில் இருக்க வைப்பதற்க்கு நன்றி.

முத்துலெட்சுமி said...

\\பங்காளி... said...
இது மாதிரியே ஒரு பதிவு பாதி எளுதி பப்ளிஷ் பண்ணாம வச்சிருந்ததை இப்பத்தான் பார்த்தேன்....

முந்திட்டீங்க....ம்ம்ம்ம் //
என்ன சொல்றீங்க
எனக்கு ஒன்னும் புரியல.

gurusri said...

நாகரிகம் மாறலாம்.பன்பாடு மாற‌க்கூடாது.

முத்துலெட்சுமி said...

வருகைக்கு நன்றி குருஸ்ரீ.
நாகரீகத்தைப் போலவே பண்பாடு வளர்ச்சியையும் மாற்றத்தையும் ஏற்றே வருகிறது.நினைத்ததைப் போலவே இதனை விவாதப்பொருளாக்கியே பின்னூட்டம் வருகிறது.
பண்பாடு என்று நீங்கள் கருதும் உடைகளை வேண்டாமென்று விலக்கவில்லை. கூடவே நல்ல உடைகளை நம் பண்பாட்டோடு சேர்த்து ஏற்றுக்கொள்வதில் என்ன இருக்கிறது. பாதுகாப்பான எந்த உடையும் பண்பாட்டை கெடுக்காது என நினைக்கிறேன்.

வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன் said...

//மங்கையும் வத்திராயிருப்பு சாரும் மாத்திமாத்தி பின்னூட்டம் போட்டு முகப்பில் இருக்க வைப்பதற்க்கு நன்றி.//
கண்டிப்பாக இது திட்டமிட்ட சதி அல்ல! குறிப்பு: வத்திராயிருப்பு சார் பெயர் கவுதமன் :-)

வல்லிசிம்ஹன் said...

நல்லா எழுதி இருக்கீங்க. லட்சுமி.

மனப் பக்குவம் வந்துட்டா உடைப் பொருத்தம் நல்லா இருக்கும்.

இங்கே வந்து குளிரில் அவஸ்தைப் படும்போது , புடவை, கோவிலுக்கு மட்டும் தான்.
மற்ற நேரம் சுடிதாரொ, பாண்டோ தான் போட வேண்டி இருக்கிறது.
கௌரவம் குறையாமல் எதையும் உடுத்தலாம்.

வடுவூர் குமார் said...

அடுத்தது ஆம்பிளைக்கா?
50 வயசுக்கு மேல் உள்ளவர்கள் டிராயர் போடுவது வரும் என்று நினைக்கிறேன்.
:-))

முத்துலெட்சுமி said...

கௌரவம் குறையாமல் .... சரிதான் வல்லி நீங்க சொன்னது.
ஆமா குளிர் பக்குவப்படுத்துது பாருங்க :-)

முத்துலெட்சுமி said...

வடுவூர் குமார் , வரவர உங்க பின்னூட்டம் ஒன்னும் நேரடியா எனக்கு புரிய மாட்டேங்குது.நீங்க தான் புரியர மாதிரி எழுதறதில்லயா இல்ல எனக்குத் தான் வயசாகிப் போச்சா தெரியல.

டெம்ளேட் பத்தி கேட்டது புரியல.
இப்ப சொன்னது ம் தான்.

சின்னப்பசங்க எல்லாம் பேண்ட் க்கு மாறிட்டாங்க .வயசானவங்க லுங்கிக்கு பதிலா கால் சட்டைக்கு மாறிட்டாங்க.
யார் போடப்போறா ஆம்பிளைங்க நினைவலைகள் ..பார்ப்போம்..உடனுக்குடன் பதிவு போடுவது இப்போ ஃபேசன் ஆச்சே.

முத்துலெட்சுமி said...

வடுவூர் குமார் , வரவர உங்க பின்னூட்டம் ஒன்னும் நேரடியா எனக்கு புரிய மாட்டேங்குது.நீங்க தான் புரியர மாதிரி எழுதறதில்லயா இல்ல எனக்குத் தான் வயசாகிப் போச்சா தெரியல.

டெம்ளேட் பத்தி கேட்டது புரியல.
இப்ப சொன்னது ம் தான்.

சின்னப்பசங்க எல்லாம் பேண்ட் க்கு மாறிட்டாங்க .வயசானவங்க லுங்கிக்கு பதிலா கால் சட்டைக்கு மாறிட்டாங்க.
யார் போடப்போறா ஆம்பிளைங்க நினைவலைகள் ..பார்ப்போம்..உடனுக்குடன் பதிவு போடுவது இப்போ ஃபேசன் ஆச்சே.

பாலராஜன்கீதா said...

// ஃப்ளாஷ் பேக்..க்கு சரியான தமிழ் வார்த்தை என்ன? //

வலைப்பதிவர் செல்வராஜ் அவர்கள் தன் பதிவில் "நனவிடைத் தோய்தல்" என்று எழுதியிருந்தார்.

:-)

முத்துலெட்சுமி said...

வருக்கைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி பாலராஜன்கீதா.
நன்றாக இருக்கிறது ,
'நனவிடைத் தோய்தல்'....ம்.