July 2, 2007

தண்ணீரில்லா குற்றாலம்

சீசன் ஆரம்பிச்சிடுச்சுன்னு கேள்விப்பட்டு பல முறை பெரியப்பா , மாமான்னு லீவில் யார்வீட்டுக்கு போனாலும் குற்றாலம் போயிருக்கேன். ஆனா தண்ணீரில்லாத போது பார்த்ததே இல்லை... கடையநல்லூர் புளியங்குடின்னு இந்த முறை மே கடைசியில் சுத்திக்கிட்டு இருக்கும் போது டிவி நியூஸில் தண்ணீர் வரத்தொடங்கிவிட்டது அப்படின்னு சொன்னாங்க..அதுமட்டுமில்லாம தினப்பேப்பரில் கூட தண்ணீர் கொட்டறமாதிரி படம் போட்டிருந்தது...எல்லாம் ஃபைல் பிக்சர் தான் போல..சரி தென்காசி போற வழியில் பாக்கலாமேன்னு போனா கார் உள்ள போகும்போதே தண்ணி இல்லீங்க என்று ஒரு கடைக்காரர் சொன்னார்..எதிரில் வர சிலர் நனைஞ்சாப்பல இருக்காங்க சரி குளிக்கலன்னாலும் பாத்துட்டு வருவோம்ன்னு போனா , வீட்டு பாத்ரூம் ஷவர்ல கூட தண்ணி கொஞ்சம் கூடுதலா வரும் போல , அப்படி இருக்கு..எதுக்கு இப்படி மீடியா எல்லாம் பொய் சொல்றாங்கன்னு திட்டிகிட்டே பக்கத்துல போனா.. அப்பதான் எனக்கு தெரியும் அந்த அருவி விழற இடத்துல சிவலிங்கங்கள் செதுக்கி வைக்கப்பட்டிருக்கற விஷயமே....
நிறைய சிவலிங்கங்கள். கொஞ்சமா விழற தண்ணி அதுல பட்டு அபிஷேகம் ஆகிற மாத்ரி இருந்தது...அப்புறம் தான் அப்பா சொன்னாங்க தினமும் காலையில் முன்பெல்லாம் அருவிக்கு பூஜை நடக்கும் இப்ப நடக்குதான்னு தெரியல அப்படின்னு.அந்த படங்கள் இங்கே.....

23 comments:

அபி அப்பா said...

அலுக்காம டீர் போறீங்கப்பா! எனக்கு ஏர்போர்ட்டில இருந்து மாயவரம் வரத்துக்குள்ள அலுத்துடும்!

முத்துலெட்சுமி said...

எழுத்துபிழையையும் உங்களையும் பிரிக்க முடியாது போல அபி அப்பா. அது டூர்..என்ன அவசரம்..அப்படி.

ஆமா மாயவரம் வந்ததும் ஊருக்குள்ள சுத்தறீங்க..நாங்க பக்கத்து ஊருக்கு போய் பாத்துட்டு வருவோம் ...

சிநேகிதன்.. said...

தண்ணீர் உள்ள குற்றாலம் பார்க்கலாம் வாங்க நம்ம ப்ளாகிற்க்கு..

முத்துலெட்சுமி said...

நேத்து மை கிளிக்ஸ் படம் எல்லாம் பார்த்தேன் சிநேகிதன் ..அதுக்கப்புறம் தான்..குற்றாலம் படம் எடுத்தமே அத மொதல்ல போடுவோம்ன்னு தோணுச்சு..இன்னும் இருக்கறத மெதுவா ஒன்னொன்னா போடறேன்.

வல்லிசிம்ஹன் said...

குற்றாலத்துல இப்படி லிங்கங்கள் இருக்குன்னே தெரியாது. பூஜை செய்யட்டும்னுதான் தண்ணீர் வராம இருக்கோ என்னவோ.

துளசி கோபால் said...

அடடே....இப்படி சிவலிங்கங்கள் இருக்கறது எனக்கும் தெரியாது!

ஆனா தண்ணீர் இல்லாத ஒரு மே மாசம் போயிருக்கேன். ரொம்ப தூரத்துலே நின்னு பார்த்துட்டுத்,
தண்ணி இல்லேன்னதும் கோயிலுக்குப்போயிட்டு வந்துட்டேன்.

நானானி said...

அருவி வற்றினால்தான் காலத்தின்
பதிவுகள் கண்களுக்கு விருந்து படைக்கின்றன.அற்புதம்! தென்னாடுடைய சிவனே போற்றி!!!
ஆர்ச்சை தாண்டி விழுந்ததையும் பார்த்ததில்லை...சிவலிங்கப்பாறைகளையும் பார்த்ததில்லை.
சினெகிதனுக்கும் முத்துலெட்சுமிக்கும்
நன்றி!

முத்துலெட்சுமி said...

வல்லி , துளசி மற்றும் நானானி நீங்கள்ளாம் பார்த்தது இல்லயா ? அய்யா ஜாலி உருப்படியா பதிவு போட்டிருக்கேன்பா நான் இன்னைக்கு..
நன்றி நன்றி.

@ வல்லி காலையில் போனாத்தான் பூஜை இப்பவும் நடக்குதான்னு தெரியும்...ஆனா சீசனுக்கு தானே தண்ணீர் வரும் நாங்க சீசன் ஆரம்பிக்கும் முதல் வாரத்தில் போய் பார்த்தோம் அதான் தண்ணீர் இல்லை.

-----

@துளசி நீங்க விட்டத நான் பார்த்துட்டேன் இனிமே வந்தா போய் பாருங்க...அந்த சிவன் மேல பட்டு விழும் அபிஷேக நீர் தான் எல்லாரும் குளிப்பது இல்லையா.

----

@ நானானி நீங்க நெல்லைக்காரங்க தானே பாத்தது இல்லயா...அது சரி பக்கத்துல இருக்கறவங்க பக்கத்த்ல இருக்கற இடத்தை அத்தனை கூட்டமா இருக்கும் நேரம் பாக்கமாட்டாங்க.

ஜி said...

ஆஹா... அக்கா.. பேசுறது மாதிரியே தினமும் ஒரு பதிவுப் போட்டா நாங்க எப்படி படிக்குறது?? படிச்சுட்டு எப்படி பின்னூட்டம் போடுறது??

நான் இந்த வாரம் குற்றாலம் போறேனே... ;))

முத்துலெட்சுமி said...

ஏம்பா ஜி விஷயம் இருந்தா போடறது தான் பதிவு...(அப்ப ஜி போடலன்னா விஷயம் அந்த பக்கமில்லன்னு அர்த்தம் இல்ல :) )

குற்றாலம் ...போறீங்களா? ஒரு இடத்துல இருக்கறது இல்ல..என்ஜாய்.

கோபிநாத் said...

அக்கா படங்கள் எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு ;))

முத்துலெட்சுமி said...

கோபி நன்றி நன்றி..கொஞ்சம் கொஞ்சமா மத்த படங்களையும் போடறேன்.

மங்கை said...

ஒரு தடவை தான் போயிருக்கேன்.. அதுவும் பீக் சீசன்ல..அதுனால இது எல்லாம் பார்க்கலை..

17 வருஷமா ஒருத்தருக்கு நேரம் கிடைக்கலை என்ன அங்க கூப்டுட்டுக்கு போறதுக்கு..:-))

காட்டாறு said...

யக்கோவ்...வருஷா வருஷம் ஒரு வாரம் குரங்குகளோட குரங்க லூட்டி அடிச்சத ஞாபகப் படுத்தீட்டீங்க....

முத்துலெட்சுமி said...

மங்கை முதல்ல உங்களுக்கு லீவ் கிடைக்குதா பாருங்க..அடுத்த முறை வேனா நம்ம ரெண்டு பேரும் போலாம்.

நாகை சிவா said...

//அலுக்காம டீர் போறீங்கப்பா! எனக்கு ஏர்போர்ட்டில இருந்து மாயவரம் வரத்துக்குள்ள அலுத்துடும்! //

வயசான அப்படி தான் தொல்ஸ்... என்ன பண்ணுறது சொல்லுங்க..

நாகை சிவா said...

நீங்க மெயின் அருவி மட்டும் தான் போனீங்களா, செண்பக அருவி,தேன் அருவி ல கூடவா தண்ணீர் இல்ல....

ம்ம்ம்ம் பல தடவை போன இடம், இப்ப போய் பல காலம் ஆச்சு.....

சரி பதிவுல ஏன் நடுவுல இடைவெளி விட்டு இருக்கீங்க...

முத்துலெட்சுமி said...

அபி அப்பா சொ.செ.சூ செய்திகிட்டீங்களே....எல்லாரும் உங்க வயசே ஒரு விஷயமா பேசிட்டிருக்காங்க..

நாகை சிவா, நாங்க மெயின் மட்டும் தான் பார்த்தோம் இந்த தடவை..நேரமின்மை இரவு தென்காசியில் தங்க வேண்டி இருந்தது.

பதிவு இடையில் நிறைய இடம் ..பத்தி பிரிக்கற வேலை தான் அது..சில சமயம் டிராப்ட் ல இடம் இருக்கறமாதிரி இருக்கும் அப்புறம் பதிவுல எல்லாம் பக்கத்துல இருக்கும்...எதோ படிக்க வந்த நீங்கள் எல்லாம் கண்வலிக்குது ன்னு சொல்லிடுவீங்களோன்னு தான்..முன் ஜாக்கிரதை பண்ண்ப்போய் இந்த முறை இப்படி ஆகிடுச்சு.

நாகை சிவா said...

Compose pannitu space kudukurathuku edit html use pannunga... sariya irrukanu, preview patha pothum....

illa nan padam ethum pottu athu varalaiyo endru ketten... its ok..

முத்துலெட்சுமி said...

நன்றி புலி ... அப்படியே செய்யறேன் இனிமே...
இதெல்லாம் செய்தும் சில சமயம் மாறாம இருந்து கொழப்பி இருக்கு என்னை அவசரமா போஸ்ட் போட்டேன்னா..இப்படித்தான்..

இம்சை அரசி said...

என்னைய கூட்டி போகாம விட்டுட்டு போயிட்டீங்க இல்ல... :'(

முத்துலெட்சுமி said...

இம்சை வருத்தப்படாதேடா தங்கம்...அடுத்த முறை ஊர் சுத்தும்போது கூப்பிடட்டா ...ஒரு மாசம் லீவ் சொல்லிக்கோ ஆபிசுல..
:) சரியா?

இம்சை அரசி said...

// முத்துலெட்சுமி 덧글 내용...
இம்சை வருத்தப்படாதேடா தங்கம்...அடுத்த முறை ஊர் சுத்தும்போது கூப்பிடட்டா ...ஒரு மாசம் லீவ் சொல்லிக்கோ ஆபிசுல..
:) சரியா?
//

கண்டிப்பா வரேன்... :)))