July 18, 2007

க்ளிக்க்ளிக்

என்னுடைய பொழுதுபோக்கான புகைப்படமெடுப்பதை மேம்படுத்திக்கொள்ள தனியாக ஒரு பதிவு தொடங்கி இருக்கிறேன். இன்னமும் தமிழ்மணத்தில் இணைக்கவில்லை. புகைப்படக்கலை வகுப்பில் ஒரு போட்டி வைத்திருக்கிறார்கள். அதில் மற்றவர்கள் போஸ்ட் செய்து இருக்கும் படங்களின் பக்கத்தில் என் படங்கள் நிற்கக்கூட முடியாது என்று தெரிகிறது.

இருந்தாலும் ஒரு பார்வை பார்த்துவிடுங்கள்.

6 comments:

கோபிநாத் said...

மீண்டும் ...நான் தான் பர்ஸ்ட் :)))))

(இதுக்கு தான் இரவு வேலை வேணுங்குறது ;))

கோபிநாத் said...

யக்கா...பெரிய ஆளு தான் நீங்க !!!!!

படத்தில் உங்களின் பெயரை இன்னும் கொஞ்சம் பெருசா போடுங்க. இல்லைன்னா எங்களை மாதிரி ஆளுங்க எடுத்து நாங்க தான் போட்டே பிடிச்சோம்ன்னு சொல்லிடுவோம் ;)))))

முத்துலெட்சுமி said...

நடு ராத்திரி போஸ்ட் போட்டா முதல்ல வரதுக்கு கண்டிப்பா இரவு வேலையாத்தான் இருக்கணும்..

பெயரை போடறதுக்காக போட்டோஷாப் எல்லாம் எடுத்த்து தூசி தட்டி இருக்கேனாக்கும்.. ஒன்னுமில்லாததா இருந்தாலும் நான் எடுத்ததாச்சே ..

ஜெஸிலா said...

முத்து, சிறு முயற்சின்னு தலைப்பு வச்சிக்கிட்டு முயற்சி பண்ணாமலிருந்தா எப்படி. அனுப்புங்க போட்டிக்கு காசா பணமா ? ;-)

முத்துலெட்சுமி said...

நீங்க வேற ஜெஸிலா நான் முதல்ல "க்ளிக்க்ளிக்" புது பதிவின் லிங்கை அங்க போட்டிக்கு குடுத்துட்டுத்தான் மறுவேலை பார்த்தேன்..ஆனா போட்டிக்கு குடுக்கலங்கறமாத்ரியே தொனி இருக்கறதால அப்படி நினைச்சிட்டீங்க..செல்லாவும் அப்படிநினைச்சு ஒரு பதிவு "பதிவர் முத்துலெட்சுமிக்கு கண்டனம்"ன்னு போட்டு அதிர வச்சுட்டார்ல. :)

சென்ஷி said...

இதன் பெயர் பின்னூட்ட கயமை
படங்கள் நன்றாக இருப்பதால் இது :)

துபாயிலிருந்து
சென்ஷி