July 18, 2007

குருக்ஷேத்திரம்

குருக்ஷேத்திரம் இது தில்லியிலிருந்து அம்பாலா ,சண்டிகர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை நம்பர் ஒன்றில் இருக்கிறது.அலங்காரவளைவு தேர் காட்சியோடு வரவேற்கிறது. மகாபாரத்தில் வரும் போர் நடந்த இடம் மற்றும் பகவத்கீதை உபதேசிக்கப்பட்ட இடம் என்பதால் இது ஒரு ஆன்மீகச்சுற்றுலாத் தலமாக இருக்கிறது.

இத்தலத்திற்கு செல்வதற்கு பஸ் மற்றும் ரெயில் வசதிகள் நன்றாக இருக்கிறது. நாங்கள் எங்கள் காரிலேயே தில்லியிலிருந்து சென்றோம்..சண்டிகர் செல்லும் அந்த பாதை மிக அருமையாக லாங்க் டிரைவுக்கு வசதியான பாதை தான். போகும் வழியெங்கும் மோட்டல்களும் தாபாக்களும் வரிசையாக இருக்கின்றன. தாபாக்கள் குறிப்பாக வைஷ்ணோ தாபா அதாங்க நம்ம ஊரு சைவ ஹோட்டல் என்று கொட்டை எழுத்துக்களில் வரவேற்கின்றன.. சுத்தம் பற்றியெல்லாம் கவலை கொள்ளாமல் சுடச்சுட வைக்கிற ரொட்டியையும் சென்னாவையும் ரசிக்கவேண்டும்.ருசிக்கவேண்டும்.

நாங்கள் பார்த்தவரையில் வடக்கில் இருக்கிற எல்லா அரசு தங்குமிடங்களும் நன்றாக பாதுக்காக்கப்பட்டு தங்க வசதியாக மேலும் குறைந்த செலவில் இருப்பதாக படுகிறது. இணையம் மூலம் திரட்டிய தகவ்ல் படி நாங்கள் நீல்காந்த் அரசு தங்குமிடம் சென்று பொருட்களை போட்டுவிட்டு சுற்றக்கிளம்பினோம்.

இந்த தங்குமிடம் எல்லா இடத்துக்கும் நடுநாயகமாக வே இருந்தது வசதியாக போனது .

பகவத்கீதை போதிக்கப்பட்ட ஜோதிஸர் இடத்துக்கு(jyotisar) சென்றோம்.. (பிஹோவா ஸ்டேட் பாதை 12கிமீ). அந்த ஆலமரத்தினடியில் பளிங்கினால் செய்யப்பட்ட மேடையும் அதில் ஒரு தேர்க்காட்சியும் இருந்தது.அதில் தமிழில் கல்வெட்டு இது காஞ்சி மடத்தால் நிறுவப்பட்டது..என்கிறது. இத்தனை தொலைவில் வந்து தமிழில் கல்வெட்டு என்பதால் சந்தோஷம். இரவு எட்டிலிருந்து ஒன்பது வரை ஒலிஒளிக்காட்சி உண்டு இங்கே.



ஒலிஒளிக்காட்சி காண சென்றோம்.. நாடகப்பாணியில் எடுக்கப்பட்ட ஒலி பின்னால் ஒலிக்க... மிகப்பெரிய நீர்நிலையின் மறுபக்கம் போடப்பட்ட கேலரியில் அமர்ந்து பார்க்கவேண்டும். லேசர் ஒளியில் சில வடிவங்களைக்கொண்டு கதையை சொல்ல முயற்சி...ஆங்கிலம் அன்று இல்லையாம்.. அதனால் குடும்பத்திற்கு...ஹிந்தி கேட்டு நான் கதை சொல்லவேண்டியதாகிவிட்டது பீஷ்மர் இறக்கும் நிலையில் தண்ணீரை பாணத்தால் விழச்செய்யும் காட்சி அருமை...அது மட்டும் என் பொண்ணுக்கே புரிஞ்சிடுச்சு சொல்லாமலே..

அடுத்தநாள் காலையில் பிரம்ம சரோவர் , எத்தனை பெரிய குளம்..சுத்தியும் இருக்கும் இடம் ஆயிரக்கணக்கானோரை தங்க வைக்கக்கூடியது. எத்தனை விதமான துறவிக்கோலங்கள்..அவரவர்க்கென ஒரு இடம் அதில் ஒரு மூட்டை துணிகள் ஒரு விரிப்பு அதில் ராஜாவைப்போல படுத்துக்கொண்டு ரேடியோவில் பழைய ஹிந்தி ப்பாடல் கேட்கிறார்கள்..

வழியெங்கும் சாமியார்கள் தான் ஒரு பொரிப்பாட்டி தமிழில் பேசினார் ..அட எப்போவந்தீங்க என்றால் அது ஆச்சுங்க 40 வருடம் என்கிறார்கள். ப்ரம்ம சரோவர் பக்கத்தில் ஒரு தமிழ் இட்லிக்கடை அவங்க்ளும் வந்து ரொம்ப வருடம் ஆகிவிட்டதாம்.. சாமியார்களுக்குத்தான் முக்கியத்துவம் கடையில்..பாருங்க தினமும் காலை இட்லி உண்டு..மதியம் எல்லாக்கோயிலிலும் சாப்பாடு இலவசம். அதனால் ஹோட்டல் மூடி இருக்கும். சாயங்காலம் சாமியார்களுக்கு போண்டா பஜ்ஜி.ராத்திரி உணவு கிடையாது அவர்களுக்கு..
ம்..வீட்டில் இருந்தால் இப்படி யார் தருவா அதான் ஓடி வந்து சந்தோஷமா இருக்காங்க போல..

சன்னிஹித் சரோவர் என்னும் குளம் பிரம்ம சரோவரிலிருந்து ஒரு கிமீ தூரத்தில் இருக்கிறது . ஸ்தானேஸ்வர் சிவன் கோயில் , பீஷ்மர் மரணப்படுக்கையில் தண்ணீர் அருந்திய இடம் , லக்ஷ்மி நாராயணன் கோயில், பனோரமா சயின்ஸ் மியூசியம் கிருஷ்ணா மியூசியம் என்று பார்க்க இடங்கள் நிறைய இருக்கிறது.
. (பனோரமா மியூசியம்)



தானேஸ்வரத்தில் இருக்கும் பத்ரகாளி கோயில் இது சக்திபீடத்தில் ஒன்றாகும்.
இவையெல்லாம் தவிர ஹர்ஷரின் தோட்டம் , பாத்ரி மஜ்ஜித் ஆர்க்கியாலஜி இடங்கள் என்று இரண்டிலிருந்து மூன்று நாட்களுக்கு சுற்றலாம். நாங்கள் எடுத்த படங்களின் சிடி கைக்குக்கிடைக்கவில்லை தற்போது கூகிளே துணை.




(ஹர்ஷரின் தோட்டம்)



நீல் காந்த் தங்குமிடம் .....01744 -221615 முன் பதிவுக்கு ...
http://haryanatourism.com

28 comments:

அபி அப்பா said...

நல்ல வெவரமான பதிவு! இருங்க முழுசா படிச்சுட்டு வாரேன்!

குசும்பன் said...

நன்றாக இருக்கிறது, பார்க்கவேண்டும் என்ற ஆவலை தூண்டுகிறது.

அபி அப்பா said...

அந்த சாமியார் வாழ்க்கை என்ன ஒரு சுகமப்பா! அனுபவிக்கிறாய்ங்க! அவங்க எவனுக்கும் ரிப்போர்ட் தரவேண்டாம் 1ம் தேதி சம்பளம் அனுப்ப வேண்டாம், ஆஹா சூப்பர் வாழ்க்கை இல்ல!

துளசி கோபால் said...

அருமையான விவரம்!!!!

பஜ்ஜி போண்டா மட்டும்தானா? வடை இல்லையா? (-:

எப்படியோ எனக்கு இடத்தைக் காமிச்சுக் கொடுத்ததுக்கு நன்றிங்க.

சோத்துக் கவலை இல்லாம சாமியை நினைச்சுக்க இப்படி ஒரு இடம், ம்ம்ம்ம்
கொடுத்து வச்சுருக்கணும்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

படிக்க ஆரம்பிக்கும் போதே என்ன விவரமான பதிவுன்னு ஒரு கமெண்ட் அபிஅப்ப்பா.நானே இன்னும் விவரமா எழுத முடியலையேன்னு வருத்தப்பட்டுட்டு இருக்கேன்..
ஆமாம் அபி அப்பா அங்கே நிறைய தமிழ்க்குரல்கள் சாமியார்கள் நடுவில்ல்..ஒரு கோயிலில் அண்டர்கிரவுண்டில் ஒரு காட்சியகம் இருக்கிரதாம் நாங்க வெளியேறுவதை பார்த்த ஒரு தமிழ் சாமியார் (பிச்சையும் எடுப்பார்கள் இந்தவகை சாமியார்கள்) அம்மா அங்க 2 ரூ டிக்கெட் எடுத்து போய் பாருங்கன்னு சொன்னார் திரும்பி வரும் போது அவருக்கு ஒரு 10 ரூ குடுத்து எல்லரும் பிரிச்சிக்க சொன்னோம். நல்லா இருந்தது இல்லயா அதான்.
---------
குசும்பன் நன்றி கண்டிப்பாக

பாருங்கள்

------
ஆமாம் துளசி சாப்பாட்டுக்கு கஷ்டமில்லை..ஆனால் அவர்களை எல்லாம் பார்த்ததும் எனக்கு தோன்றியது நம்பியவர்களை தூக்கிப்போட்டுவிட்டு வந்தவர்கள் என்று தான் ஒரு வித கோபம் வந்தது..தாயோ தந்தைய்யோ மனைவியோ குழந்தைகளோ கஷ்டப்பட்டிருப்பார்கள் இல்லையா ?

siva gnanamji(#18100882083107547329) said...

இரவு 11 க்கு பின்னூட்டம் போட்டேன்;
111/2 க்கு பதிலூட்டம் போட்டீங்க.

காலை 51/2 க்கு புதுசா போட்டோ பதிவு;

இப்ப 11 க்கு குருஷேத்ரம்!

என்ன பொட்டி பக்கத்திலேயே இருக்கீங்க்ளா?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

தவறு சிவஞானம்ஜி போட்டோ பதிவு போட்டது இரவு 12 மணிக்கு..அப்புறம் தூக்கம் .
காலையில் 10.30 க்கு குருக்ஷேத்திரம்.
சும்மாவே வேலைக்கு நடுவில் தமிழ்மணம் என்றிருக்கும் நான் நட்சத்திரவாரம் என்பதால் இப்போ தமிழ்மணத்துக்கு நடுவில் வேலை பார்க்கிறேன். :)

ramachandranusha(உஷா) said...

பேசாம வயசானதும் அங்கப் போய் செட்டில் ஆயிடலாம்னு தோணுது, சரிதானே துளசி :-)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

உஷா நாமள்ளாம் அப்படி போற ஆளுங்களா என்ன..சொல்றது தான்..
துளசிக்கு பாருங்க ஜிகே மேல மொதக்கொண்டு ஒரு இது இருக்கே விட்டுட்டு போக முடியுமா..என்ன சொல்லுங்க.

Anonymous said...

நல்ல பயனுள்ள பதிவு லட்சுமி...

அப்பப்ப இந்த மாதிரி பயண பதிவுகளை போட்டு மனுசன் வயித்தெரிச்சல கொட்டிக்கறீங்க...

Anonymous said...

/* ஆமாம் துளசி சாப்பாட்டுக்கு கஷ்டமில்லை..ஆனால் அவர்களை எல்லாம் பார்த்ததும் எனக்கு தோன்றியது நம்பியவர்களை தூக்கிப்போட்டுவிட்டு வந்தவர்கள் என்று தான் ஒரு வித கோபம் வந்தது..தாயோ தந்தைய்யோ மனைவியோ குழந்தைகளோ கஷ்டப்பட்டிருப்பார்கள் இல்லையா ?*/

என்ன இப்படி சொல்லிட்டீங்க. அவங்களுக்கு அங்க 2 வேள சாப்பாடு கிடைக்குதுன்னதும் அவங்க சந்யாசம் உங்களுக்கு கிண்டலா போச்சில்ல?

இதெல்லாம் ரெம்ப ஓவருங்க. அந்த மாதிரி சாமியார்களிடம் உக்கார்ந்து பேசிப்பாருங்க. பல விஷயம் புரியவரும். எல்லாரும் ஏதோ குடும்பத்த நட்டாத்துல விட்டுட்டு வந்து இங்க ஏதோ 5 ஸ்டார் ஹோட்டல் ரேஞ்சுகு வாழ்கையை அனுபவிக்கரமாதிரி ஒரு ஸ்டேட்மண்ட் விட்டுட்டீங்களே?

அக்கா உங்களுக்கே இது நல்லா இருக்கா?

Deepa said...

சாமியாரா போகிரதெல்லாம் நமக்கு ஒத்துவராது.. ஆனா.. என்னிக்கி தலையை பிச்சுகிட்டு "எங்கேயாவது " போகணும் போல ஒரு வெறி வருமே.. அன்னிக்கி... இந்த இடத்துக்கு .. சும்மா அப்படி நடந்து போகிர தூரத்திலே இருக்கணும்.. அதே மாதிரி.. எனக்கு எப்பொ திரும்பி வரணும்ன்னு தோணுதோ.. அப்போ தான் வாபஸ் வருவேன்.. சும்மா.. நொய் நொய்ன்னு எங்கே இருகே - எப்போ வருவே..ன்னெல்லாம் கேட்டு தொந்தரவு பண்ணாம இருக்க இப்படி ஒரு இடம் கிடைக்காதா :(

கொஞ்சம் அதிகமாவே ஆசைப்படுறேனோ ? ? :-?

லக்ஷ்மி said...

பதிவும் படங்களும் அருமையா இருந்துச்சு முத்து.
// நம்பியவர்களை தூக்கிப்போட்டுவிட்டு வந்தவர்கள் என்று தான் ஒரு வித கோபம் வந்தது..தாயோ தந்தைய்யோ மனைவியோ குழந்தைகளோ கஷ்டப்பட்டிருப்பார்கள் இல்லையா ?// ஒருவர் சன்னியாசம் வாங்கிக்கணும்னா முக்கியமான விஷயமே அவர் பிரம்மச்சாரியா இருந்தா தாயிடமும் க்ருஹஸ்தராயிருந்தால் மனைவியிடமும் முழு மனசா சம்மதம் வாங்கியிருக்கணும். ஆதி சங்கரர் கூட தன் தாயின் அனுமதி வாங்கறதுக்காக முதலை வாயில போய் அகப்பட்டுக்கிட்ட கதை தெரியும்தானே? இந்த கட்டுப்பாட்டோட முக்கிய காரணமே அவங்க யாரையும் தவிக்க விட்டுட்டு வரக்கூடாதுன்றதுக்காகத்தான். ஆனா யாரு அதையெல்லாம் மதிக்கறாங்க? கடன் தொல்லை தாங்க முடியாம சாமியாரானவங்கதான் நம்ம நாட்டுல அதிகம்.

அறிவியல் பார்வை said...

முத்து தோழிக்கு வணக்கம்,சுற்றுளா கட்டுரை மிக நன்று,வர்ணனையும் புகை படங்களும் நேரில் சென்று பார்த்த அனுபவத்தை தந்தது, நன்றி

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பங்காளி வயித்தெரிச்சல் ஏன் வருது இந்தாருக்க மதுரைக்கு போகாம் அழிச்சாட்டியமா வேலை செய்யறீங்க அதுக்கு என்ன பண்றது நாம தானே கிளம்பிபோகணும்..முயற்சி எடுங்க ...:)
----------
\\ஏதோ 5 ஸ்டார் ஹோட்டல் ரேஞ்சுகு வாழ்கையை அனுபவிக்கரமாதிரி ஒரு ஸ்டேட்மண்ட் விட்டுட்டீங்களே?

அக்கா உங்களுக்கே இது நல்லா இருக்கா? //

நல்லாதான் இல்ல என்ன பன்ண :)எந்த தம்பிப்பா நீங்க? பேரைப்போடலயே?
எப்படியும் பொறுப்பிலிருந்து விடுதலை என்பது அவர்களுக்கு சந்தோஷம் தான் இல்லயா...முடிவெடுத்தது அவர்கள் எனவே கஷ்டப்ப்டுவதாக இருந்தால் போகலாம் யாரும் கட்டாயப்படுத்தவில்லை எனவே சொந்த விருப்பு மற்றும் சந்தோஷம் தானே தொடர்ந்து சாமியார்களா அலைய வைக்கிறது..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

தீபா ரொம்பத்தான் ஆசைப்படறீங்க
ஆனா ஆண்கள் தான் அப்படி எல்லாம் எங்கே வேண்டுமானாலும் இருக்க முடியும்... :(

-----

லக்ஷ்மி சரியாச்சொன்னீங்க..கடன் தொல்லையோ கோபமோ அந்த காலத்தில் இருந்தே இது ஒரு சாக்கு ஓடிப்போக...சாமியார் ஆகிடுவேன்னு
-------

நன்றி அறிவியல் பார்வை..
சுற்றுலா போவதும் பிடிக்கும் அதைப்பற்றியே பேசிக்கொண்டிருக்கவும் பிடிக்கும்.

Jazeela said...

நல்ல பதிவு முத்து. என்னைய அழைச்சிட்டு போறீங்களா? :-)

மங்கை said...

//ஜெஸிலா said...
நல்ல பதிவு முத்து. என்னைய அழைச்சிட்டு போறீங்களா? :-)///

என்னையும் சேர்துக்கோப்பா ...ப்ளீஸ்ஸ்ஸ்

ரொம்ப நல்லா இருக்கு

சென்ஷி said...

//முத்துலெட்சுமி said...
தீபா ரொம்பத்தான் ஆசைப்படறீங்க
ஆனா ஆண்கள் தான் அப்படி எல்லாம் எங்கே வேண்டுமானாலும் இருக்க முடியும்... :(//

//Deepa said...
சாமியாரா போகிரதெல்லாம் நமக்கு ஒத்துவராது.. ஆனா.. என்னிக்கி தலையை பிச்சுகிட்டு "எங்கேயாவது " போகணும் போல ஒரு வெறி வருமே.. அன்னிக்கி... இந்த இடத்துக்கு .. சும்மா அப்படி நடந்து போகிர தூரத்திலே இருக்கணும்.. அதே மாதிரி.. எனக்கு எப்பொ திரும்பி வரணும்ன்னு தோணுதோ.. அப்போ தான் வாபஸ் வருவேன்.. சும்மா.. நொய் நொய்ன்னு எங்கே இருகே - எப்போ வருவே..ன்னெல்லாம் கேட்டு தொந்தரவு பண்ணாம இருக்க இப்படி ஒரு இடம் கிடைக்காதா :(//

தீபாவுக்கு, எனக்கு தெரிஞ்சு ஒரு இடம் சேது படத்துல விக்ரமை கட்டி வச்சுருக்கற கோயில் திருவிடைமருதூர்ல இருக்கு.. :))

துபாயிலிருந்து
சென்ஷி

காட்டாறு said...

யக்கோவ்வ்வ்வ்..... டீச்சரு எழுதுன மாதிரி இருக்குது.... சாரி... மனசுல உள்ளதை சொல்லிட்டேன். ஆனாலும் குஷியாத்தான் வாசிச்சேன். ஜெஸிலா, மங்கையோட ஆட்டத்துல என்னையும் சேத்துக்கோப்பா. நல்லபிள்ளையா வருவேன்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஜெஸிலா மங்கை ரெண்டு பேரும் போகனுமா சரி வாங்க எல்லாருமா ஒரு டூர் போடுவோம்..

(மங்கை நீங்க அடிக்கடி அந்த பாதையில் பாதி வழி போறீங்களே!பானிபட் சோனிபட் என்று)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

காட்டாறு ஏன் பயந்துக்கறீங்க டீச்சர் என்றால் துளசியத்தானே குறிப்பிடுகிறீர்கள் அவர்கள் தானே என் மானசீக குரு.. மிக்க சந்தோஷம்.
வாங்க டூரில் கலந்துக்குங்க ஜாலியா..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அடப்பாவமே சென்ஷி இது என்ன அவங்க தலைய பிச்சுக்கன்ன வுடனே அந்த படமா நியாபகம் வருது!பாவம் தீபா ..டென்சன் ஏறினா ரிலாக்ஷேசனுக்கு கேட்டா ...டென்சன் எகிறர இடம் சொல்லறீங்களே.

கோபிநாத் said...

முத்துக்கா பதிவும் போட்டோவும் வழக்கம் போல கலக்கல் ;)))

கோபிநாத் said...

\\ஜெஸிலா said...
நல்ல பதிவு முத்து. என்னைய அழைச்சிட்டு போறீங்களா? :-)\\

\\மங்கை said...
//ஜெஸிலா said...
நல்ல பதிவு முத்து. என்னைய அழைச்சிட்டு போறீங்களா? :-)///

என்னையும் சேர்துக்கோப்பா ...ப்ளீஸ்ஸ்ஸ்

ரொம்ப நல்லா இருக்கு\\


\\காட்டாறு said...
யக்கோவ்வ்வ்வ்..... டீச்சரு எழுதுன மாதிரி இருக்குது.... சாரி... மனசுல உள்ளதை சொல்லிட்டேன். ஆனாலும் குஷியாத்தான் வாசிச்சேன். ஜெஸிலா, மங்கையோட ஆட்டத்துல என்னையும் சேத்துக்கோப்பா. நல்லபிள்ளையா வருவேன்.\\


அக்காஸ் எல்லாத்துக்கும் என்ன ஆச்சு? நானும் வருவேன்....நானும் வருவேன்னு....அந்த அளவுக்கு வாழ்க்கை போர் அடிக்குதா!!!!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கோபி அக்கா எல்லாரும் ஊர் சுற்ற வாராங்கன்னு இல்ல நான் நினைச்சேன்..இல்லயா அந்த சாமியார்கூட்டத்துல சேருரதுக்கா வரேன்னாங்க அடப்பாவமே !

காட்டாறு said...

//முத்துலெட்சுமி said...
கோபி அக்கா எல்லாரும் ஊர் சுற்ற வாராங்கன்னு இல்ல நான் நினைச்சேன்..இல்லயா அந்த சாமியார்கூட்டத்துல சேருரதுக்கா வரேன்னாங்க அடப்பாவமே ! //

யக்கோவ்.. நீங்க கரீட்டா தான் நெனச்சீங்க. நாங்க சாமியாரை திருத்தலாமின்னு இருந்தா... நீங்க கவுத்திட்டீங்களே... கோபியோட சேராதீங்க.

Unknown said...

நல்லா படம் காட்றீங்க... :)