July 7, 2007

குப்பையை எங்கே போட்டீங்க?

வீட்டை சுத்தம் செய்து அந்த குப்பையை எங்க போட்டீங்க..
கண்ணுக்கு தெரியாத எதோ ஒரு இடத்துக்கு தானே ..ஆனா அது உங்கள விட்டு எங்கயும் போறது இல்ல நீங்க இருக்கிற இதே உலகத்தில் தானே இருக்கப்போது
எப்படி அத தூக்கிப்போட்டதா நினைச்சிக்கிறீங்க..நீங்க போட்ட அந்த குப்பை இதே உலகத்தில் எதோ ஒரு இடத்தில் உங்களுக்கு எதிரான வேலையை செய்துகொண்டுதானிருக்கப்போகிறது.. இதை அறியாமல் நான் தூர எறிந்து விட்டேன்னு நீங்க சந்தோஷமா இருக்கீங்க..

எந்த பொருளும் இல்லாமப் போகபோறது இல்லை அது வேறொன்றா மாறத்தானே வேண்டும்..மீண்டும் அது ம்ண்ணோட போகாதுன்னா அதை எப்படி மாற்றப்போறோம்னு யோசிக்காம தூக்கி எறியாதீங்க.. இன்னிக்கு எந்த ஒரு குக்கிராமத்துக்கு போனாலும் கடையில் பாலிதீன் பை தராங்க..
அதோட உபயோகம் ரொம்ப அவசியம் தான் ஆனா அது என்னவாமா மாறுது..
ஊரோட முள்காடெல்லாம் பாலிதீன் பூ பூத்திருக்கிறது.. குப்பை காடெல்லாம் பாலிதீனால் நிரம்பி வழியுது.

எனர்ஜி சேவர் விளக்குஎல்லாரும் வாங்கிப்போடறோம் அதை அப்படியே தூக்கி எறியக்கூடாதாம்..என்ன செய்ய வேண்டும் தெரியாது ? இப்படி நம்ம ஊரில் ஒரு மறு சுழற்சி முறை தெரியாமல் உபயோகித்து எறியும் பொருட்களின் எண்ணிக்கை நிறைய..

மறு சுழற்சியில் உபயோக்கிக்கும் படி செய்யமுடியாது அல்லது தெரியாது என்றால் அந்த பொருளை உபயோகிப்பதையாவது குறைத்துக்கொள்ளலாமே!
நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கோடையும் குறைந்து வரும் குளிர்காலமும் காலநிலை மாற்றத்தினை காட்டி பயமுறுத்துகிறது.. கவனியுங்கள் ...செயல்படுங்கள்.

சர்வேசன் 07/07/07 பதிவில் அவர் கேட்டுக்கொண்டதற்காக ஒரு சின்ன பதிவு.

24 comments:

பங்காளி... said...

என்ன ஆச்சு?

நல்லாத்தானே இருந்தீங்க...ஏன் இப்படியெல்லாம் கவலை...தத்துவம்

ரொம்ப கவலைபட்டா உடம்புக்கு நல்லதில்லையே!

ஹி..ஹி..

முத்துலெட்சுமி said...

ஒண்ணும் ஆகல ..எல்லாம் சர்வேசனோட இந்த பதிவப்படிச்சதால வந்தது தான்.
http://surveysan.blogspot.com/2007/07/blog-post_9191.html

கோபிநாத் said...

\\ஊரோட முள்காடெல்லாம் பாலிதீன் பூ பூத்திருக்கிறது.. குப்பை காடெல்லாம் பாலிதீனால் நிரம்பி வழியுது.\\

இங்க UAEல டீ குடுக்கும் cup எல்லாம் plastic cupல இருந்து paper cupக்கு மாத்திட்டாங்க. அது மட்டும் இல்ல....பல நாடுகளில் telephone card (recharge card) எல்லாம் paper boardக்கு மாத்திட்டாங்க.

கோபிநாத் said...

\\இப்படி நம்ம ஊரில் ஒரு மறு சுழற்சி முறை தெரியாமல் உபயோகித்து எறியும் பொருட்களின் எண்ணிக்கை நிறைய..\\

சரியாக சொன்னிங்க்கா...அதான் விளைவுகளை தெரிந்தால் கண்டிப்பாக அவர்கள் அதனை உபயோகிக்க மாட்டாங்க.

முத்துலெட்சுமி said...

\\பல நாடுகளில் telephone card (recharge card) எல்லாம் paper boardக்கு மாத்திட்டாங்க.
//

எல்லாருமாத்தினதுக்கப்புறமும்...
அங்க இருக்கற வீணான குப்பையை
கப்பல்ல போட்டு வாங்கி நம்ம ஊருல வச்சுக்கிட்டு அதுல எதாச்சும் செய்யறேன்னு ந்நாட்டை கெடுப்பாங்க..என்ன செய்ய..
மாற்றத்தின் முதல் படி நீயா இருன்னு காந்திசொல்லி இருக்கார் நம்மால ஆனது செய்வோம் கோபி.

SurveySan said...

ரொம்ப நன்றி!

நம்ம ஊர்ல 'குப்பை மேடு'ன்னு பல இடங்களில் இருக்கும். வெளியூர் மாதிரி, 'ஸார்டிங்' எல்லாம் பண்றதில்லை. எல்லார் வீட்ல இருந்தும் வரும் குப்பையை இங்க கொட்டி எரிச்சுடுவாங்க.

என்னென்ன கெமிக்கல் இருக்கோ தெரியல, எல்லாம் மழையில ஊரி, கூடிய விரைவில் ground water எல்லாம் கெட்டுப் போகும் சூழல் ஸ்பீடா உருவாயிக்கிட்டிருக்கு.

//மாற்றத்தின் முதல் படி நீயா இருன்னு காந்திசொல்லி இருக்கார் நம்மால ஆனது செய்வோம்//

கண்டிப்பா செய்வோம்! செய்யணும்!

சேதுக்கரசி said...

நல்ல பதிவுங்க.
Reduce, Reuse, Recycle செய்யவேண்டும்.
Reduce - பொருட்களின் தேவையைக் குறைத்துக்கொள்ளுதல்
Reuse - இயன்றபோது மீண்டும் அதையே பயன்படுத்திக்கொள்ளுதல்
Recycle - மறுசுழற்சி செய்தல்

http://en.wikipedia.org/wiki/Recycling

Senthil Alagu Perumal said...

நீங்க சொல்வது சரிதான் அக்கா. நாட்டில் பலர் பிற்காலத்தைப் பற்றிய கவலையின்றி குப்பைகளை கொட்டுகிறார்கள். பல நாடுகளில் பாலித்தீன் பைகளை ரீசைகிள் செய்யும் வகையில் தடிமன் அதிகமாக வைத்து உற்பத்தி செய்கிறார்கள். ஆனால் நம் நாட்டில் தான் மிகவும் மெல்லியதாய் தயார் செய்கிறார்கள். அவற்றை ரீசைகிள் செய்ய முடியாதாம்!!!

அவந்திகா said...

பெரிய விஷயம் எல்லாம் சொல்றீங்க..
ஹ்ம்ம்ம்...நல்லா இருக்கு

கண்மணி said...

நானெங்கேயும் போடலப்பா.
வீட்டுக்குள்ளேயே வச்சிக்கிட்டேன்...டமாஸு.
மக்கும் குப்பை,மக்கா குப்பைன்னு பிரிச்சி போடச் சொன்னாலும் நம்மாளு நடு ரோட்டுலத்தான் போடும்.
பாலீத்தீன்,ரப்பர் இவற்றை எரிப்பதால் உண்டாகும் புகை கேன்சரையும் வரவழைக்கும்.
சென்னையில் பேருந்துகளின் பின்னால் எழுதி எச்சரித்தாலும் மக்கள் 'போகி' அன்னைக்கு கொளுத்தி மொத்த புகையும் வீணாகாம மூக்குல வாங்கிக்கிதுங்க.

மங்கை said...

ஆஹா..ஃபுரொபைல் மாறீடுச்சே..

Anonymous said...

//நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கோடையும் குறைந்து வரும் குளிர்காலமும் காலநிலை மாற்றத்தினை காட்டி பயமுறுத்துகிறது.. //

பெரியவங்க பண்ணுற தப்புக்கு குழந்தைகள திட்டுறீங்களே....


//அங்க இருக்கற வீணான குப்பையை
கப்பல்ல போட்டு வாங்கி நம்ம ஊருல வச்சுக்கிட்டு அதுல எதாச்சும் செய்யறேன்னு ந்நாட்டை கெடுப்பாங்க//
ரொம்ப சரீங்க....

வள்ளி said...

நல்ல கருத்துங்க...
இப்படியே குப்பைய சேத்துட்டே போனா...பயமாயிருக்கு...

முத்துலெட்சுமி said...

சரியாச்சொன்னீங்க சேதுக்கரசி...இந்த மூன்றூ "R" இருந்தாலே போதும் நாடு நல்லா இருக்கும்.

-----------

வாங்க அழகு பெருமாள் ..முதல்வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி..உண்மை நம்ம ஊருல பாலித்தீன் பை படுத்தும் பாடு சொல்லி முடியாது .முன்னாடி மஞ்சப்பை மஞ்சப்பைன்னு ஒன்னு இருந்தது எல்லாரும் கடைக்கு எடுத்துட்டு போவோம்..இப்ப ஜகஜக ஸ்டைல்லுன்னு எல்லாரும் பாலிதீன்ல போட்டு வாங்கிட்டு வராங்க..வீட்டுல இருந்து பேஷனா பேக் எடுத்துட்டு போவேண்டியது தானே...

முத்துலெட்சுமி said...

அவந்தி , எல்லாம் உங்கள மாதிரி பிள்ளைங்க நாளைக்கு கஷ்டப்படக்கூடதேன்னு ஒரு கவலை தான்...

முத்துலெட்சுமி said...

\\ கண்மணி said...
நானெங்கேயும் போடலப்பா.
வீட்டுக்குள்ளேயே வச்சிக்கிட்டேன்...//
சரியாத்தானே சொல்லி இருக்கீங்க கண்மணி...வீட்டுலேயே மக்க வச்சு செடிக்கு போடற பழக்கம் நல்லது தானே கொல்லை என்று ஒரு இடமும் குப்பை மக்க செய்வது நடந்த ஊரு தானே நம்மளது..இன்னிக்கு தான இந்த பச்சை டப்பா நீல டப்பா காலம் வந்துருக்கு ...

முத்துலெட்சுமி said...

ஆகா அனானி நீங்க ரொம்ப புத்திசாலியாட்டமிருக்கு..
ஆனா கையெழுத்தைப் போடலையே..
\\பெரியவங்க பண்ணுற தப்புக்கு குழந்தைகள திட்டுறீங்களே....//
ஆமா நம்ம பெரியவங்க செஞ்ச தப்பு தான் இன்னைக்கு நமக்கு விடிஞ்சிருக்குன்னாலும் அவங்க அறியாம செய்திருப்பாங்க நாம அறிஞ்சே செய்யறோமோன்னு தான் .....

முத்துலெட்சுமி said...

வாங்க வள்ளி முதல் வருகைக்கும்
மறுமொழிக்கும் நன்றி.

Anonymous said...

//ஆமா நம்ம பெரியவங்க//
அவங்க ரொம் நல்லவங்க.
நா சொல்லுறது உலகத்து பெரியவங்க.....
அவங்க செயிறத செஞ்சுக்கிட்டேதான் இருப்பாங்க.....
நாம வாரத அனுபவிச்சேதான் ஆகனும்னு.........
மனச தேத்திக்கிங்க...

முத்துலெட்சுமி said...

அனானி சாமியாரே ... வந்து வருவது வந்தே தீருன்னு அனுபவிப்பது தான் ந்ம் கடமைன்னு சொன்னா எப்படி உங்க பேரு சொல்ல மாட்டீங்களா?

Friendly Fire said...

ப்ளாஸ்டிக் குப்பையை பயன்படுத்தி தார் ரோடு போடுவது பத்தி கேள்விபட்டிருப்பீங்க. இன்னைக்கு ஹிண்டு பேப்பர்ல இது பத்தின கட்டுரை வந்திருக்கு. பாருங்க.

முத்துலெட்சுமி said...

ப்ரெண்ட்லி ஃபையர் ஆமா அது பற்றி நானும் படிச்சிருக்கேன்..ஆனா அதுக்கும் அந்த ப்ளாஸ்டிக்க் குப்பையஎல்லாம் தனியா ஒரு இடத்துல ஒன்னா சேர்த்து போட்டாத்தானே ஆகும்..இங்க தான். உபயோகித்த எண்ணை. டாய்லெட் பண்ண டையபர் ன்னு எல்லாத்தையும் குப்பையில் போடும்போது கூட கவரில் போட்டுத்தானே போடறாங்க..அது எடுத்து ரோடு போடமுடியற மாத்ரியா போடறாங்க.. என்ன செய்ய..

Anonymous said...

//அனானி சாமியாரே//

நன்று! நன்று!!..

உங்கள் பெயருக்கு,,,,

நன்றி! நன்றி!.....

ulagam sutrum valibi said...

முத்துலச்சுமி,
உங்களை சின்ன வேலை. 8க்கு அழைக்கிறேன்.
பதிவைப் பார்க்கு மாறு வேண்டுகிறேன்.நன்றி.