July 31, 2007

கோன் பனேகா கோரோர்பதி

என் பெண்ணோட பர்த்டே எப்பவுமே நாங்க லீவில் இருக்கும் போது தான் வரும்.அதனால இங்கே தில்லி வந்ததும் ஒரு கெட்டுகெதர் பார்டி வைப்பது வழக்கம். சும்மா எல்லாரையும் கூப்பிட்டு விளையாட்டெல்லாம் வைத்து ஜாலியா நட்பு வட்டத்துடன் இனிமையாக இருக்கும் . ஒரு மாதம் முன்னாலே இருந்தே அதற்காக தயார் செய்ய ஆரம்பித்துவிடுவாள் மகள்.

பேப்பரை வெட்டி வெட்டித்தள்ளுவாள். அதில் சிங்கத்தை போல கர்ஜனை செய்.
பாட்டியைபோல நடி என்று இன்னும் என்ன எல்லாமோ இருக்கும்.. இந்த சிட் துண்டுகள் எல்லாம் ஒரு டப்பாவில் போட்டு வைத்திருப்பாள். ஒரு பெரிய லிஸ்ட் வேறு போட்டு வைத்திருப்பாள்.அடுத்தடுத்து என்ன என்ன விளையாட்டு விளையாடப்போகிறோம் என்று. அதற்கு ஓட்டெடுப்பும் நடக்கும். அதிக பேர் ஆசைப்படும் விளையாட்டு முதலில் விளையாடப்படும்.

அவளுடைய பார்டிக்கு அவளே செய்யும் ஏற்பாடுகளை பார்த்து அக்கம்பக்கமுள்ளவர்கள் எங்கள் வீட்டு பார்டியை மேனேஜ் செய்ய அவளைத்தான் கூப்பிடணும் என சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். எவண்ட் மேணேஜ்மெண்ட் கம்பெனி ஒன்று ஆரம்பிக்கலாம் போல.


இந்த முறை வித்தியாசமாய் அதில் ஒரு விளையாட்டு . யாருக்கு ஒரு சிட் கிடைத்ததோ அது படி அவர்கள் அமிதாப்பை போல கோன் பனேக கோரோர் பதி நடித்து காண்பிக்க வேண்டும்.

அந்த சிட்டை எடுத்த பெண் என்ன கேள்வி கேட்க என்று முதலில் முழித்தாள். நானும் முதல் கேள்வி எளிதாக இருக்கும் . எனவே சிக்னலில் எந்த கலர் லைட் போட்டால் போகலாம் என்று கேள் என்று ஐடியா சொன்னேன்.
அவ்வளவுதான் அதற்கப்புறம் அவங்க கலக்கிட்டாங்க.


அமிதாப்பாக இருந்த பெண்.: எந்த கலரில் லை ட் எரிந்தால் நீங்கள் போகலாம் என்று சிக்னலில் அர்த்தம்? ஏ.பச்சை பி. மஞ்சள் சி.சிவப்பு டி. நீலம்
போட்டியாளராக வந்த பெண்: ம்..(யோசித்தபடி) எனக்கு முதல் ஆப்சன் போன் அ ஃப்ரண்டு வேணும் சார்!
(அதற்குள் சுற்றி இருக்கிறவர்கள் எல்லா ம் அய்யோ இந்த கொஸ்டினுக்கா என்றபடி ஹோ என்று கத்த ஆரம்பித்தார்கள்)

அமி : பெண் : சரி யார் உங்க ப்ரண்டு நம்பர்?( என்றவுடன் என் பெண்ணிடம் பேச போன் போடப்பட்டது)
என் பெண் போனை எடுக்க

அமி.பெண் : ஹலோ நான் தான் கோன் பனேக கோர்ரொர் பதி யில் இருந்து அமிதாப்

என் பெண்: அய்யோ அமிதாப் நான் உங்ககிட்ட பேசனும்ன்னு எத்தனை நினைச்சிருக்கேன் உங்க படம்ன்னா எனக்கு உயிர் என்ன பேசறதுன்னே தெரியலயே ! என படபடக்க

அமி.பெண்.: சரி சரி நேரம் ஆகுது உங்கள் நண்பருக்கு உதவுங்கள்.

போட். பெண் : எந்த கலரில் லைட் போட்டால் நாம் சிக்னலில் போகலாம்.

என் பெண்: அது பச்சை தான் எனக்கு நல்லாத்தெரியும் நீ பச்சையே சொல்லு சீக்கிரம்.

போட் பெண்: ஒகே நன்றி. ஆனால் அமிதாப் சார் நான் பிப்டி பிப்டி ஆப்சன் எடுக்கறேன் அடுத்தது.
(எல்லாரும் மீண்டும் ஹோ)

அமி. பெண்.: பிப்டி பிப்டி யில் உங்களுக்கு வந்த கலர் மஞ்சள் மற்றும் பச்சை.

இப்போ என்ன சொல்றீங்க?

போட்:பெண்: இல்லை எனக்கு சந்தேகமா இருக்கு எதுக்கும் ஆடியன் ஸ் போல் போறேனே!
(எல்லா குழந்தைகளும் கீழே விழுந்து சிரிக்க ஆரம்பித்துவிட்டனர் இதுக்குள்)

ஆடியன்ஸ் போலுக்கு குழந்தைகள் எல்லாரும் கையில் எதையோ தட்டி கொட்டி செய்தனர்.

என் பெண்: ஆடியனஸ் போலில் 93% பச்சையும் 2% மஞ்சளும் 5% எதை சொல்றதுன்னு தெரியலன்னு வந்திருக்கு .

போட்: பெண் : அய்யோ எனக்கு குழப்பம் தீரல..வேற என்ன ஆப்சன் இருக்கு

அமி:பெண்; சாரி இனி ஆப்சன் இல்ல வெளியேறுகிறேன்னு ஒரு ஆப்சன் தான் இருக்கு.

போட்: பெண் அப்படியா சரி அப்ப கிவிட் பண்ணிக்கிறேன்.
கலே மிலோ (கட்டி பிடிச்சுக்கறது) கலே மிலோன்னு சொல்லிட்டு அமிதாப்பாக நடித்த பெண்ணை கட்டி பிடித்துவிட்டு கையை உயர்த்தி ஆட்டியபடி வெளியேறி விட்டாள் .

ஒரே கூச்சல் அட்டகாசம் . இருவருக்கும் அன்று சிறந்த ஆட்டக்காரர் விருது க்கான பரிசு முடிவில் வழங்கப்பட்டது.

32 comments:

த.அகிலன் said...

ha ha ha ha.......

முத்துலெட்சுமி said...

அகிலன் சிரித்தீர்களா? :) அன்று முழுவதும் எங்களுக்கு சிரிப்பு தான்.
வீடியோ வில் பக்கத்தில் மற்ற குழந்தைகளின் சத்தத்தின் ஒலியால் சரியாக கேட்கவில்லை அதனால் அதை இங்கே இடவில்லை.

வடுவூர் குமார் said...

இது எப்ப நடந்தது என்று தெரியவில்லை,வீடியோவாக எடுத்திருந்தா சூப்பராக இருந்திருக்குமே!!

முத்துலெட்சுமி said...

இந்த மாதம் ஒரு ஞாயிற்று க்கிழமையில் நடத்தினோம் . வீடியோ எடுத்தேன் குழந்தைகளின் ஆரவாரசிரிப்புக்கு நடுவில் ஒன்றுமே கேட்கவில்லை ஆடியோ.

சென்ஷி said...

சூப்பர்க்கா..

கலக்கலான பார்ட்டி போல.. நாந்தான் துபாயில் மாட்டிக்கொண்டேன்..

குழந்தைக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள்

சென்ஷி

முத்துலெட்சுமி said...

நன்றி சென்ஷி ..வாழ்த்துக்களை சொல்லிவிடுகிறேன்.

Boston Bala said...

:)

:))

காயத்ரி said...

குட்டீஸ் குறும்பு எப்பவும் அழகு இல்ல! ரொம்ப ரசிச்சேன். எப்ப உங்க பொண்ணுக்கு பர்த் டே?

முத்துலெட்சுமி said...

நன்றி பாலா .

முத்துலெட்சுமி said...

நன்றி காயத்ரி..ஆமா அவங்க செய்யறது ஒரு சில சமயம் ஆச்சரிய்மா இருக்கும்..ரசிக்க மனசும் நேரமும் இருக்கணும் . அவ பிறந்தநாள் 16. ஜூன்

கோபிநாத் said...

கலக்கியிருக்காங்க போல ;-)))

பெண்ணுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை சொல்லிடுங்க ;-)

குசும்பன் said...

ஹா ஹா :))

"காயத்ரி said...
குட்டீஸ் குறும்பு எப்பவும் அழகு இல்ல!"

குட்டீஸ் குறும்பு அழகு இல்லையா? என்ன சொல்றீங்க!

பத்மா அர்விந்த் said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள். இப்ப ஷாரூக்கான் நடத்தறதா படிச்சேனே. எப்படி இருக்கு?

காட்டாறு said...

முதலில் குட்டிப் பெண்ணுக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள்! புள்ளைங்க கலக்கிருக்காங்க! வேணுமின்னே போட்டியாளர் பொண்ணு அப்படி பேசினாளா? பிறக்கும் போதே நக்கல் பண்ண ஆரம்பிக்கிறது நல்லது தான். கண்முன் காட்சி விரிய சிரித்துக் கொண்டே 2 முறை வாசிச்சி முடிச்சேன். குட்டீஸ்க்கு ஹாட்ஸ் ஆஃப் சொல்லிருங்க.

முத்துலெட்சுமி said...

நன்றி கோபி...இன்னும் நிறைய கலக்கலான விளையாட்டெல்லாம் நடந்தது..இது தான் எனக்கு பிடிச்சது அதான் எழுதினேன்.

முத்துலெட்சுமி said...

குசும்பன் பேருக்கேத்தமாதிரி பேசலன்னா எப்படி ..காயத்ரி பாரு பேசறாப்பலயே எழுதினா ஓட்டறாங்க.

முத்துலெட்சுமி said...

பத்மா என்ன தான் ஷாரூக்கான் நடிப்பு பிடிச்சாலும் கோன் பனெகா வோட க்ரேஸ் இப்ப இல்ல. பாக்கறதே இல்லை.

முத்துலெட்சுமி said...

ஆமாம்பா காட்டாறு வேணுமின்னே அப்படி பேசினாங்க எல்லாருமே..
எனக்கும் ஒரே ஆச்சரியம்.. இதுங்க இந்த வயசுல அப்படி எல்லாம் பேசினது...நடிப்பும் அசத்தலா அப்படியே செஞ்சாங்க.

நானானி said...

அடாடா!!குழந்தைகளின் இந்த கலாட்டாவில் நானும் கலந்துகாமல்
போய்ட்டேனே!!அடுத்தமுறை நானும் வருவேன். முத்துலெட்சுமி! சரியா?

முத்துலெட்சுமி said...

ஓ நானானி அடுத்த முறை உங்களுக்கும் ஒரு சீட்டு போட்டுடலாமா? சின்னக்குழந்தை மாதிரி ங்கா ங்கா ன்னு எதாச்சும்செய்து காட்டறமாதிரி :)

Deepa said...

அடடா.. இந்த பார்டியிலே நான் இல்லாம போய்ட்டேனேன்னு தொணவச்ச பதிவு... சூப்பர்.. உங்க பொண்ணுக்கு டபுள் சூப்பர்

முத்துலெட்சுமி said...

நன்றி தீபா..அப்ப அடுத்த பார்டிக்கு
நிறைய பேர் வருவீங்க போலயே...:)

மங்கை said...

கலக்கல் பார்டி... நானும் வரேன்

கண்மணி said...

வாரேவ் வா மாதினி உங்களைவிட நல்ல புத்திசாலி போல;)
ஆமாம் ஜூன் 16பர்த் டே இப்பத்தான் சொல்றதா?
கும்மியில ஒரு வாழ்த்துப் போட்டிருப்போமில்ல.
பிலேட்டட் வாழ்த்துக்கள் டு மாதினி.
சூப்பர்.இது போல எங்க வீட்டிலேயும் சம்மர்ல நடந்தது அப்பால பதிவிடுகிறேன்.

துளசி கோபால் said...

அட்டகாசமான பார்ட்டியா இருந்துருக்கு போல.

ஒரு மாசம் தள்ளி பார்ட்டி நடந்துனவுங்க, ஒரு அஞ்சுமாசம் முன்னாடி நடத்தி இருக்கலாமுல்லே?

ஜஸ்ட் ஃபார் சேஞ்ச்:-)))


பொண்ணுக்கு, பிறந்தநாள் வாழ்த்து(க்)கள் சொன்னேன்னு சொல்லுங்க.

இந்த க்ரோர்பதி நான் பார்த்ததே இல்லைப்பா. அதாவது இந்தியன் கோடிஸ்வரர்!

மில்லியன்பதி ( பிரிட்டிஷ்) பார்த்துக்கிட்டு இருக்கேன். தினமும், அது வர்ற ஒரு
மணிநேரம் எங்க ஜிகே, என் மடியில் வந்து உக்கார்ந்துக்கற ஸ்பெஷல் டைம்.:-)

delphine said...

:) intelligent kids

முத்துலெட்சுமி said...

நன்றீ மங்கை சின்ன பிள்ளைங்க பார்ட்டிங்றதால தான் உங்களை யெல்லாம் கூப்பிடல. அடுத்ததடவை க்கூப்பிடறேன். :)

முத்துலெட்சுமி said...

கண்மணி ரொம்ப நன்றி.
ஆமாங்க தாயைவிட புத்திசாலி குழந்தைன்னா சந்தோஷம் தானே...

முத்துலெட்சுமி said...

துளசி மில்லியன் பதி.. ம்..
அடுத்த முறை நீங்க இந்தியா வரும்போது வேணா ஒரு பார்டி வச்சிடலாம்...பொண்ணை உங்களையும் ஆட்டத்தில் சேத்துக்க சொல்றேன். :)

முத்துலெட்சுமி said...

டெல்பைன் மேடம் நன்றி...ஆமாங்க அவங்க ரொம்ப புத்திசாலித்தனமான
குழந்தைகளா இருக்காங்க.

.:: மை ஃபிரண்ட் ::. said...

:-))))

ராமலக்ஷ்மி said...

வலைச்சரம் சுட்டிய வழியில் வந்தேன்.

அட்டகாசம் கயல்விழி. குழந்தைகளைச் சொன்னேன்:)))))!