July 20, 2007

சேதுக்கரசிக்காக

சேதுக்கரசி இந்த வார நட்சத்திரம் நீங்களா வாழ்த்துக்கள் என்றதோடு மட்டுமில்லாமல் இயக்குனரிடம் இருந்து இன்னொரு படைப்பு கிடைக்குமா என்று கேட்டுவிட்டார்கள். உண்மையில் எனக்கும் அந்த எண்ணம் இருந்தது ஆனால் முடியாத அளவு வேலைப்பளு.

என் காட்சிக்கவிதைப் பற்றிய பதிவைப்படித்திருப்பீர்கள் சேதுக்கரசி வந்து சொன்னபிறகு தான் அந்த போட்டிக்கு தயார் செய்தேன். கீழே அந்த காட்சி....




இப்போது நட்சத்திரவாரத்தில் சேதுக்கரசி யின் ஆசைக்காக ஒரு அவசரப் படைப்பு இங்கே கீழே...இன்னும் நன்றாக எடிட் செய்ய நேரம் இல்லாததால் இப்படி. பின்பு ஒரு சமயம் இதே படைப்பு மேலும் மெருகேற்றி இடுகிறேன். (இப்போது உபயோகித்த தொழிட்நுட்பத்தில் மீண்டும் மீண்டும் காட்சிகளைக் காண்பிக்கிறது மட்டுமில்லாமல் சில நல்ல காட்சிகள் கத்தரிக்கப்படுகிறது தானாகவே)

20 comments:

Jazeela said...

சென்னையில் இருக்கும் போது பார்க்கும் அன்றாடக் காட்சிகளில் ஒன்று. புதுசா ஒண்ணுமே இல்லையே?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

புதுசில்லைதான்..ஜெஸிலா! :)

சிறுமுயற்சி என்கிற பேருக்கு பொருத்தமா ஆரம்பக்கட்ட பாடமாக எனக்கு அருகில் இருக்கிற ...பேசினால் சரி என்கிற , வலையில் போட்டால் சண்டைக்கு வராத ஆளாக பார்த்து கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து சேர்த்தது. பயிற்சி தானே..

மங்கை said...

அதான, நம்ம அம்மனி யாரு... சாதிச்சிட்ட தங்கமே...

ஆனா மக்களே உங்களுக்கு இங்க ஒரு உம்ம சொல்லவேனும்..

இந்த "மேக்கிங் ஆஃப் காந்தி".. மேக்கிங்க் ஆப் ''நாளின் தொடக்கத்தில்''னே ஒரு படம் எடுக்கலாம்...

அம்மினி நாளு நாளா படம் எடுக்குறேன் பேர்வழின்னு பட்ட பாடு..
ஃபோன்ல நாங்க பேசும் போது, editing, music, upload..software..etc..etc.,ங்கிற வார்த்தைகள் மட்டும் ஆங்கிலத்துல பேசி பேசி...அலுவலக்த்துல, நான் ஏதோ என்னோட குறும்படத்த பத்தி தமிழ்ல யாரோ கிட்ட ரொம்ப அக்கறையா கலந்தாலோசனை பண்றேன்னு நினச்சுட்டு இருக்காங்க...

தமிழ் தெரியாத கூட்டத்துல இருக்குறதும் ரொம்ப வசதி தான்..:-))

அம்மனி இப்ப ஒரு கேள்வி...அது என்ன மேல நமக்கு சம்பந்தம் இல்லாத ஒன்னு சொல்லி இருக்கியே.. இது உனக்கே ஓவரா தெரியலை..

//ஆனால் முடியாத அளவு வேலைப்பளு//.

Voice on Wings said...

காட்சிக் கவிதை அருமையாக உள்ளது. "இஸ்திரி பண்ணும் ஸ்திரி" பற்றிய காட்சியும் நன்று. கொஞ்சம் சுருக்கி, repetitionஐத் தவிர்த்திருக்கலாம் (அதே காட்சிகள் இரண்டு முறை வருகின்றனவே?).

ஜெஸிலாவின் பின்னூட்டம் பற்றி: அன்றாடம் பார்க்கும் காட்சிகளை ரசிக்கவும், கலைக்கண்ணுடன் பார்க்கவும், பதிவு செய்யவும்தானே இந்த video எனப்படும் visual ஊடகமே உள்ளது? புதுசா எதை எதிர்ப்பார்க்கறீங்க? எரிமலை வெடிக்கறதையோ, இல்ல ஒரு மான் புலியால வேட்டையாடப்படறதையோ காட்டத்தான் Discovery channel இருக்கே? நம்மள போன்ற சாமானியர்களால் அன்றாடக் காட்சிகளைத்தான் எடுக்க முடியும் (and/or) நம்மள போன்ற சாமானியர்களால்தான் அன்றாடக் காட்சிகளை எடுக்க முடியும்.

முத்துலட்சுமி, இதைத் தயாரிக்க நீங்க பயன்படுத்திய வன்/மென் பொருட்களைப் பற்றிய சிறு குறிப்பு வரைஞ்சீங்கன்னா, எங்கள மாதிரி புதியவர்களுக்கு உதவியா இருக்கும்.

பங்காளி... said...

ஆர்வம் பாராட்டுக்குறியது....

எடிட் செய்தால் நல்லதொரு டாக்குமெண்ட்டரியாக வாய்ப்புள்ள காட்சி துண்டுகள்....

காக்காய்...சைக்கிள் சோத்துச்சட்டி...அயர்ன் பாக்ஸ்...மேலேறும் படிக்கட்டுகள்....வீடுகளில் துணி சேகரிக்கும் சிறுமி...வெயிலில் துணி தேய்க்கும் நிதர்சனம்....அவசரமாய் சாப்பிடும் தாய்....

ஹி..ஹி..நான் இப்படி எடிட் பண்ணீருப்பேன்னு சொல்ல வந்தேன்...பேக்கிரவுண்ட் ம்மீசிக் சரியில்லல...ஒரு மாதிரி சோம்பலை முன்னிறுத்துகிறது...உழைப்பு...வெயில்...அவலம் இதை தூக்கி நிறுத்தும் வேறொரு இசையினை சேர்க்க வேண்டும்....

எதிர் வரும் முயற்சிகளில் நல்லா செய்வீங்க என நம்புகிறேன்....

வாழ்த்துக்கள் லட்சுமி...

காட்டாறு said...

ஆத்தீ... நல்ல முயற்சி!

என்ன காட்சி என்பது பெரிதல்ல....
எந்த காட்சியும் நமக்கு புதிதல்ல...
நோக்கம் ஒன்றே தேவை
அது உங்களிடம் இருக்குது!

வாழ்த்துக்கள்!

காட்டாறு said...

அது சரியக்கோவ்.... சேதுக்கரசியக்காவுக்கு அவங்க சொன்னதால நீங்க செய்துட்டீங்க? அப்படியே அவங்க எப்போ பதிவெழுத போறாங்கன்னு கேட்டு சொல்லு கண்ணு.

சேதுக்கரசி said...

நாளின் தொடக்கத்தில்னு தலைப்பு போட்டிருந்தாக் கூட நாலு பேர் வந்து வாசிச்சிருப்பாங்க.. இப்படியா என் பேரைத் தலைப்புல போட்டு சொ.செ.சூ வச்சுக்குவீங்க, அதுவும் நட்சத்திர வாரமும் அதுவுமா? :D ஒலகம் தெரியாத பொண்ணா(?) இருக்கீங்களே! :)

சிறுமுயற்சின்னாலும் நன்முயற்சி. வாழ்த்துக்கள்.

வெற்றி said...

நல்ல முயற்சி முத்துலெட்சுமி.

முதலாவது ஒளிப்படம், கவிதை, பின்னணி இசை மனதை வருடிச் சென்றது.

இரண்டாவது படக்காட்சிகளும் இசையும் மனதில் ஒரி இனம்புரியாத சோகத்தை உண்டுபண்ணியது.

இன்னும் தொடருங்கள்.

கோபிநாத் said...

அருமை !

பின்னனி இசை நல்லா இருக்கு ;)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

மங்கை,\\அது என்ன மேல நமக்கு சம்பந்தம் இல்லாத ஒன்னு சொல்லி இருக்கியே.. இது உனக்கே ஓவரா தெரியலை..

//ஆனால் முடியாத அளவு வேலைப்பளு//. //

அதற்கு அர்த்தம் என்னன்னா சரியா செய்ய முடியாத அளவுன்னு அர்த்தம்.
செய்யமுடியாது ன்னு ஒன்னு தான் நம்ம அகராதியில் இல்லையே சரிதான் மங்கை.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஹ்ம் நன்றி வாய்ஸ் ஆன் விங்ஸ்.ரிப்பிடேஷனுக்கு காரணம் பிக்சர் பேக்கேJ சாப்ட்வேர்.
நான் இன்னொரு தளமான http://click1click.blogspot.com இதில் என்னுடைய கேமிராவின் படத்தை போட்டிருக்கிறேன் பாருங்கள். இதனோட வந்த சாப்ட்வேர் பிக்சர் பேக்கேஜ் மூவி மேக்கர். அதற்கு முதலில் என் கேமிராவிலேயே எடுத்த படங்களை கேமிராவிலேயே வேண்டாததை வெட்டி வைத்துக்கொண்டு இணைக்கவேண்டும் வரிசை மாற்றி.அது சில ஸ்டைல் பேக் வைத்திருக்கிறது ப்ளாக் அண்ட் வொயிட். இல்லையென்றால் ஸ்லோ ஸ்ப்பீடு என்றூ அதை கண்டிபாக உபயோகித்தே ஆகவேண்டி ஆகிற்று.
அதனால் ரிப்பிடேஷன் வருகிறது.அதில் அப்படித்தான் வரும்.

விண்டோஸ் மூவி மேக்கரில் என்ன கோளாறோ அதன் மூலம் ஒவ்வொன்றக இணைக்கலாம் என்றால் அது ஹேங்க் ஆகி ஆகி படுத்துகிறது. வேறு சாப்ட்வெர் தான் பாக்கவேண்டும்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பங்காளி அடுத்தமுறை படம் எடுக்கும் போது டிஷ்கஷனுக்கு கூப்பிடறேன்..ம்யூசிக் பூபாள ராகம் தேடினேன் ..கிடைக்கலை ..ஆனால்
ஃப்ளூட் தான் போடனும்ன்னு இந்த இதை தேர்ந்தெடுத்தேன்... இப்படியெ பழகி ஒரு நாள் பெரியாளாகிடணும் அதான் கனவு.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

காட்டாறு ம்..இதற்கே அந்த இஸ்திரிக்காரங்க பாவமே போனாப்போது தினமும்துணிக்கொடுக்கறவங்கள்
ப்பகைச்சுக்க வேனாம்ன்னு ஓக்கேன்னாங்க
பேசி எல்லாம் எடுக்கலாம்ன்னு எழுதி வச்சிருந்தேன் கேள்வி..
அவங்க அதுக்கெல்லாம் நேரம் இருக்காதேன்னு டாங்க..சரி நீங்க பாட்டுக்கு செய்யுங்க நான் பாட்டுக்கு எடுத்துக்கிறேன்னேன். 7.15 வருவேன்னாங்க அப்ப்பலேர்ந்து அவங்க வரக்காட்சிய எடுக்கனும்ன்னு நிக்கறேன் அவங்க வரலை ..அப்புறம் வீட்டுல பிள்ளைங்க கணவரை பாக்கணுமே திருப்பி ஓடு அப்பறம் போய் 8 மணிக்குபார்த்து கொஞ்சம்..10.30 சாப்பிடுவாங்க அப்ப கொஞ்சம்ன்னு ..சேர்த்தா காட்சிப்பா.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சேதுக்கரச்சி..பெண்ணா? அப்படின்னு கேள்விக்குறி போட்டிருக்கீங்களே மனசுக்குள்ள எப்போதும் பொண்ணு தாங்க... பதிவைப்போட்ட நேரம் அப்படி அதுக்காக உங்க பேரைபோட்டா வரமாட்டாங்களா என்ன..

பாருங்க அப்படியே உங்களுக்கு வேண்டுக்கோள் எத்தனை பேர் வைக்கிறாங்க ...சேதுக்கரசிக்காக ...அவர் எழுதும் வரை உண்ணாவிரதம் மாதிரி எதோ பண்ணுறாங்க் போலன்னு வருவாங்க சிலபேர்..ஏன் நீங்களே க்விதை தலைப்பு மௌனம் கலைன்னவுடனே யோசிச்சீங்களா இல்லையா?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வெற்றி நன்றி .முதல் காட்சிக்கவிதை இரண்டாம் பரிசு வாங்கியதே தெரியுமா?
இரண்டாவது அவசரக்கோலம்.
------
கோபி இசை நல்லாருக்கா...அது காபிப்பா ...

காட்சி அதுவும் சாதராண நிகழ்வுதான்..
எடுத்தவிதம் பத்தி சொல்லக்கூடாதா?

Deepa said...

முத்துமுத்தாய் 2 காட்சி போட்டு அசத்திட்டீங்க.. Your efforts deserve to be applauded =d> =d>

மலைநாடான் said...

முத்துலெட்சுமி!

உங்கள் நட்சத்திர வாரத்திற்கும், குறும்பட முயற்சிக்கும் இனிய வாழ்த்துக்கள்.
குறும்படத் தயாரிப்புக்கான உங்கள் குறிப்புக்கள் மிகவும் பயனுள்ளவை. உங்கள் காட்சிப்படுத்தலும், பொருத்தமான இசைத் தேர்வுகளும் கூட நன்று. தொகுப்பில் மட்டும் சில தவறுகள். அதற்கான காரணத்தை சொல்லியுள்ளீர்கள். எல்லாவற்றுக்கும் மேலாக அந்தத் தவறு உங்களுக்குகுதெரிகிறது. :) ஆகவே திருத்திக் கொள்ள முடியும். உங்களோடு இத்துறைசார்ந்து பேச நிறைய உண்டு. பின் ஒரு தருணத்தில் அல்லது தனிமடலில் பேசலாம். எனது நட்சத்திர வாரத்தில் நான் செய்த குறும் படத்தினை
இங்கே காணலாம்.

மீண்டும் முயற்சிக்கு வாழ்த்துக்கள். படைப்புக்கு நன்றிகள்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

தீபா ரொம்பவும் நன்றி..உங்களைப்போன்ற நண்பர்களால் தான் நான் மேன்மேலும் வளர இயலும்.

------

மலைநாடன் உங்கள் விவரமான பதிலுக்கு நன்றிகள்.
உங்கள் குறும்படத்தைப் பார்த்தேன் மிகவும் அருமையான காட்சி அமைப்பு. கைகள் இணைகின்ற காட்சியில் மெய்சிலிர்த்தது. இணைப்பைத்தந்ததற்கு நன்றிகள்.

தருமி said...

உங்கள் கைக்கேமிரா ஜாக்கிரதை. சூரிய ஒளிக்கு நேராக வீடியோ கேமிராவைக் காண்பிக்கக் கூடாதென்பார்கள்.