
பேசாத வார்த்தைகளின் அழுத்தத்தில்
இதயம் கனத்துப்போகிறது.
உள்ளுக்குள் ஓடும் ஒலிகளின் பேரிரைச்சலில்
அருவிக்கரையாக காதடைக்கிறது.
பலமணித்துளிகள் காத்திருந்து திரை நீங்கிய
இறைகாட்சியாக கண்கள் மயங்குகிறது.
தன்னிச்சையாக ஓடும் சுவாசம்கூட
நீண்டு நீண்டு சிரமப்பெருமூச்சாய்.
இதயம் கனத்துப்போகிறது.
உள்ளுக்குள் ஓடும் ஒலிகளின் பேரிரைச்சலில்
அருவிக்கரையாக காதடைக்கிறது.
பலமணித்துளிகள் காத்திருந்து திரை நீங்கிய
இறைகாட்சியாக கண்கள் மயங்குகிறது.
தன்னிச்சையாக ஓடும் சுவாசம்கூட
நீண்டு நீண்டு சிரமப்பெருமூச்சாய்.
மௌனம் கலை.
வார்த்தைகளை விடுதலை செய்..
எழுத்துக்கூட்டியேனும் பேசிவிடலாம்.
அந்த பேசாத வார்த்தைகள்
பின்னெப்போதாவது ஒரு மாலைநேரம்
வார்த்தைகளை விடுதலை செய்..
எழுத்துக்கூட்டியேனும் பேசிவிடலாம்.
அந்த பேசாத வார்த்தைகள்
பின்னெப்போதாவது ஒரு மாலைநேரம்
எதிரில் உட்கார்ந்து கொண்டு
அன்றைக்கு ஏனப்படி
அன்றைக்கு ஏனப்படி
மௌனியாயிருந்தாயென்று
பாடாய்படுத்தாமல் இருக்கட்டும்.
நிலவு நேரத்தில் ஆந்தையைப்போல
உறக்கம் தொலைத்து அலைவானேன்?
மௌனம் கலை.
25 comments:
கலைச்சுட்டேன்!
எல்லாரையும் உங்களை போல பேச சொல்றீங்க அப்படித்தானே! குட் நல்ல விஷயம்,
பேசாத வார்த்தைகள் மட்டும் விடுதலையானால் பூமி என்ன ஆகும்...
உங்கள் வார்த்தைகளே நிறைய எண்ணங்களை எழுப்பி விட்டு,
அவை உறங்கப் போய்விட்டன.
அழகா இருக்கு முத்துலட்சுமி.
நல்ல முயற்சி முத்து.
//நிலவு நேரத்தில் ஆந்தையைப்போல
உறக்கம் தொலைத்து அலைவானேன்?// அழகான கேள்வி. ஆனாலும், மௌனம் கலைக்கவும் ஒரு தைரியம் வேணுமில்ல?
மௌனம் கலை ஆனால்
மெய்மையை உணர்த்தும்
மௌனம் கலை ந்தால்
மாயையில் வீழ்த்தும்.
அது சரி... வாய் ஓயாம பேசற உங்ககிட்டேர்ந்து மௌனம் கலை. :))
குட் காம்பினேஷன்
துபாயிலிருந்து
சென்ஷி
உதிர்த்த வார்த்தைகளை விட, உதிர்க்காத வார்த்தைகளிக்கு சக்தி அதிகம் முத்து லெட்சுமி. அழகா எழுதிட்டு வர்றீங்க!
அபி அப்பா முதல்ல வந்தீட்டீங்களா இன்னிக்கு...
பேசரதுல என்னவிட வல்லவராச்சே நீங்க ...உங்களுக்கு மௌனம் காக்க அப்படின்னு தான் கவிதை எழுதணும்.
--------
வல்லி அட்டகாசமா சொல்லி இருக்கீங்க ..ம்...:) நன்றி.
-------
கண்டிப்பா லக்ஷ்மி மௌனம் கலைக்க ரொம்ப தைரிய ம் வேணும் தான் ..
-------
அருள்வாக்கு தரும் அனானி சாமியாரா நீங்க..( இதுக்குமுன்னாடி யும் பின்னூட்டம் போட்டிருக்கிறீர்களோ)
ரொம்ப சரி மௌனம் கலைந்தால் மாயையில் வீழ்த்தும் தான் ..
---------
இன்று ரிப்பீட்டே இல்லாமல் சொந்தமாக பின்னூட்டம் போட்ட சென்ஷிக்கு ஒரு
ஓ !.
-------
உதிர்க்காத வார்த்தைகளின் சக்தி தானே உள்ளே இருந்து படுத்துகிறது முதல் பாரா பூரா அதானே ...காட்டாறு..
அழகான கருத்து முத்துலட்சுமி,
ஆயிரம் வார்த்தைகளில் புரியா உணர்வுகளையும்,ஒரே ஒரு நோடியில் உணர்த்தும் மௌனம்!!!
வாழ்த்துக்கள்...
அன்புசிவம்
http://anbusivamtamil.blogspot.com/
\\நிலவு நேரத்தில் ஆந்தையைப்போல
உறக்கம் தொலைத்து அலைவானேன்?
மௌனம் கலை.\\
தலைப்பே அருமையாக இருக்கு....கவிதையும் கூடதான்.
அன்பு சிவம்...நன்றீ..
-----
கோபிநாத் நன்றி..கவிதை என்றதும் ஓடாமல் படித்ததற்கே இத்தனை பேரையும் பாராட்டனும்.
ஓஓஓஓஓஓஓஓஓஓ கவிதையா?
நல்லா இருக்கு.
மெளனம் (ஒரு)கலை.
அது நமக்கெங்கே இருக்கு?
( எல்லாம் வாயால் கெடும் case )
அது போட்டும். படம் அருமை.
அது சொல்லும் விஷயம் என்னவோ?
முத்துலட்சுமி,
நல்ல அருமையான கவிதை.
/*அந்த பேசாத வார்த்தைகள்
பின்னெப்போதாவது ஒரு மாலைநேரம் எதிரில் உட்கார்ந்து கொண்டு
அன்றைக்கு ஏனப்படி மௌனியாயிருந்தாயென்று பாடாய்படுத்தாமல் இருக்கட்டும் */
ம்ம்ம்ம்... இப்படிச் சில சந்தர்ப்பங்களில் பேசாமல் இருந்த வருத்தம் எனக்கு இப்போதும் உண்டு. :-)
//பேசாத வார்த்தைகளின் அழுத்தத்தில்
இதயம் கனத்துப்போகிறது//
நான் ஏதாவது தவறு செய்துவிட்டால் அதை மறைக்கவே எனக்கு தெரியாது. அப்படி ஒரு பேக்கு நான். இதனால் ஒரு நாள் சொல்லாமல் பார்க்கலாம் என்று நினைத்தால் கூட, அது சொல்லிவிட்டு திட்டு வாங்கும் வரை மனசு படபட என்றிருக்கும். அதனால் மௌனத்தை விட அதை கலைப்பதே மேல்.
நன்றாக எழுதியிருக்கிறீர்கள் முத்துலெட்சுமி. நட்சத்திர பதிவிற்கு என் வாழ்த்துக்கள்
//பேசாத வார்த்தைகளின் அழுத்தத்தில்
இதயம் கனத்துப்போகிறது.//
அனுபவித்ததில் கனம் முள்ளாய் தெய்த்தது!
//மௌனம் கலை.
வார்த்தைகளை விடுதலை செய்..
எழுத்துக்கூட்டியேனும் பேசிவிடலாம்.
அந்த பேசாத வார்த்தைகள்
பின்னெப்போதாவது ஒரு மாலைநேரம்
எதிரில் உட்கார்ந்து கொண்டு
அன்றைக்கு ஏனப்படி
மௌனியாயிருந்தாயென்று
பாடாய்படுத்தாமல் இருக்கட்டும்.//
சென்ற மாதம் தாங்கள் கலந்துகொண்ட சென்னை வலைப்பதிவர் சந்திப்பின் தாக்கம்தானே இந்தக்கவிதை ?
:-)
நல்லா இருக்கு....
நீங்க கவிதையும் எழுதுவீர்கள் என்று
இப்பதான் அறிந்தேன்.......
நல்லா வந்திருக்கு முத்துலக்ஷ்மி
தலைப்பைப் பார்த்து பயந்தடிச்சு ஓடியாரேன்.. எனக்குத் தான் ஏதோ அட்வைஸ் பண்றீங்களாக்கும்னு :D கவிதை நல்லாருக்குதுங்க..
துளசி ..இதான் உங்க டச்.
பாருங்க மௌனம் ஒரு கலைன்னு என்ன அழகா சொன்னீங்க..அது நம்க்கு வராது ...அதானே எதுக்கு அது..
படம் சொல்லுவது நிலவு நேரத்துக்காட்சி..
நிலவு நேரம் என்கிற சொல்லாடல் இங்கே கவிதையினூடே வருகிறது என்பதால் ..:)
வெற்றி சில சமயம் பேசாத வார்த்தைகள் வருத்தத்தை க் கொடுக்கும் சில சமயம்...நிம்மதியை கொடுக்கும்..இரண்டும் நிகழும்.
--------
அன்புத்தோழி வாழ்த்துக்கு நன்றி.
ம்..பேசாமல் இருக்க முடியாது நம்மால். :)
_--------
நன்றி ஜீவா கவிதையாகவே பின்னூட்டமா?
\\சென்ற மாதம் தாங்கள் கலந்துகொண்ட சென்னை வலைப்பதிவர் சந்திப்பின் தாக்கம்தானே இந்தக்கவிதை ?// பாலராஜன் கீதா ஆனாலும் உங்களுக்கு நல்ல நகைச்சுவை உணர்வு தான். ;)
--------
சிவஞானம்ஜி இதுஎன்ன வகைகளில் பாருங்கள் கவிதை தான் நிறைய எழுதி இருக்கிறேன்.
-------
அய்யனார் நன்றி.
சேதுக்கரசி ,பயமா... அட்வைஸ் இதுவரைக்கும் எத்தனை பேர்செய்தாயிற்று..உங்கள் பொல்லா மவுனம் தான் பாடாய்படுத்துகிறதே.
//அந்த பேசாத வார்த்தைகள்
பின்னெப்போதாவது ஒரு மாலைநேரம்
எதிரில் உட்கார்ந்து கொண்டு
அன்றைக்கு ஏனப்படி
மௌனியாயிருந்தாயென்று
பாடாய்படுத்தாமல் இருக்கட்டும்//
இந்த வரிகள் எனக்கு ரொம்ப பிடிச்சது அக்கா! நல்லாருக்கு..
Post a Comment