July 22, 2007

நன்றி! நன்றி! நன்றி!

நன்றி யென்ற வார்த்தை இருக்கிறதே அது பெறுபவருக்கும் சொல்பவருக்கும் இரண்டு பேருக்குமே ஒரு மகிழ்ச்சியைத்தருகிறது. பெறுகிறவர் தன் செயலுக்கான பாராட்டுதலைப்பெறுகிறார் அதனால் மகிழ்ச்சி.. சொல்பவர் நிச்சயமாய் அந்த செயலால் நன்மை அடைந்திருப்பார் அதனால் மகிழ்ச்சி.

எனக்கும் இப்போது நன்றி சொல்லும் நேரம் வந்துவிட்டது. தமிழ்மணத்திற்கு நன்றி. நண்பர்களுக்கு நன்றி..படித்தவர்களுக்கும் ப்டித்து பின்னூட்டமிட்டவர்களுக்கும் வாழ்த்தியவர்களுக்கும் தொடந்து ஆதரவு அளித்தவர்களுக்கும் நன்றிகள் .


என் நட்சத்திரவாரம் உங்கள் எல்லாருக்கும் எத்தனை உபயோகமாக இருந்தது என்று தெரியவில்லை. எனக்கு எப்போதும் போல தோன்றியதை எல்லாம் பேசியே பொழுதைக்கழிக்கும் அதேமனப்பான்மையோடு எழுதித் தள்ளிவிட்டேன்.


பொறுத்துக்கொண்ட உள்ளங்களுக்கு நன்றிகள்.
நன்றி யை ச் சொல்வதில் அதுவும் உண்மையில் நமது தாய்மொழியில் சொல்வதற்கு தயக்க்ம் இருக்கிறது. கடையில் பொருட்கள் வாங்கிவிட்டு தேங்க்ஸ் தான் . யாராவது பாதையில் வழிசொல்லி உதவினால் தேங்க்ஸ் தான். நன்றி என்றால் திரும்பி ஒரு ஆச்சரியப்பார்வை தான். தமிழிலும் சொல்ல ஆசைதான்..


இங்கே அழகான நன்றிகள் இரண்டு,

ரிக்ஷசாவில் வந்து இறங்கும் இரண்டரை வயது மகன் பணத்தைக் கொடுத்துவிட்டு சொல்லும் "தேங்க்கோ" வைக் கேட்டவுடன் அந்த இளைஞனின் முகம் மலர்ந்துவிடும்.

ஒரு வெளிநாட்டு பெண் மகாபலிபுரத்தில் பாசிமணி மாலை வாங்கியவுடன் தேங்க்ஸ் எனசொல்ல அந்த பெண் கண்கள் சிரிக்க "டேங்குஸூ மேடம் ""

சொல்ல நினைத்து சொல்லமுடியாத நன்றி ஒன்று.

அரசு வண்டிகளில் இரவுப்பயணங்களில் தூங்காமல் கவனமாக வண்டியோட்டி வந்து நம்மை பாதுக்காப்பாக கொண்டு சேர்த்த ஓட்டுனருக்கு இறங்கிய வுடன் நன்றீ சொல்ல நினைத்தது உண்டு. கிறுக்கி என நினைப்பார்களோ என்று செய்ததில்லை. (நமக்காக நாம் ஏற்பாடு செய்யும் டாக்சியோ மற்ற வண்டிகளோ என்றால் அவரை வீட்டினுள அழைத்து பணம் கொடுத்த பின் நன்றீ சொல்வது வழக்கம் தானே)

48 comments:

அபி அப்பா said...

மீ த பஸ்ட்

மைபிரண்ட்

அபி அப்பா said...

நச்சுன்னு ஒரு நன்றி

அபி அப்பா said...

பதிலுக்கு நன்றி!

துளசி கோபால் said...

எப்பவும் அவசரம்தானா?
இன்னும் 20 மணி நேரம் இருக்கு. கொசுறா ரெண்டு பதிவை
'கூட'ப்போட்டுருக்கலாமுல்லெ?

குசும்பன் said...

சந்தேகம் இல்லாமல் உபயோகமாக இருந்தது.

முத்துலெட்சுமி said...

அபி அப்பா மற்றும் மைபிரண்டுக்கு நன்றி.

அபிஅப்பா நச்சுன்னு ஒரு நன்றிக்கு நன்றீ..

பதில் நன்றிக்கு ஒரு நன்றி...
இது என்ன விளையாட்டு.

முத்துலெட்சுமி said...

துளசி கண்டுபிடிச்சிட்டீங்களே
அவசரக்குடுக்கை தான்..

இப்பவே ஒரு மாதிரி இருக்கு...போதும் போதும்ன்னு வீட்டுல எல்லாருக்கும் உடம்பு சரியில்லை ...நல்லா இருக்கு நட்சத்திரவாரம்ன்னு கண்ணு போட்டுட்டாங்க போல..(நினைப்புத்தான் என்ன)எனக்கும் ரெஸ்ட் தேவை. இத்தனை பின்னூட்டமும் பிரசுரித்து பதில் எழுதி ஆகா ...

முத்துலெட்சுமி said...

நன்றி குசும்பன் நீங்கள் உபயோகமாக இருந்தது என்றது மனமகிழ்ச்சியைத்தருகிறது..

கண்மணி said...

முத்துலட்சுமி
நன்றி க்கு வெல்கம்
இதுவரை நல்லாயில்லாமல் இருந்திருந்தா இது நல்லாயிருந்ததுன்னு சொல்லலாம்.
எப்பவும் போல நல்லாவேயிருந்தது.
வீட்டில் உள்ளவ்வர்களையும் கொஞ்சம் கவனிங்க.

நாமக்கல் சிபி said...

ஒரு வாரமா நட்சத்திரமா மின்னியதற்கு எனது மனமார்ந்த நன்றிகள்!

நாமக்கல் சிபி said...

//இப்பவே ஒரு மாதிரி இருக்கு...போதும் போதும்ன்னு வீட்டுல எல்லாருக்கும் உடம்பு சரியில்லை ...நல்லா இருக்கு நட்சத்திரவாரம்ன்னு கண்ணு போட்டுட்டாங்க //

சுத்திப் போடுங்க!

உங்க பிளாக்ல ஒரு எலுமிச்சம்பழம், ஒரு வர மிளகா எல்லாம் கட்டி வையுங்க!

திருஷ்டி படாம இருக்க தாயத்து வேணும்னாலும் இருக்கு!

முத்து said...

//அரசு வண்டிகளில் இரவுப்பயணங்களில் தூங்காமல் கவனமாக வண்டியோட்டி வந்து நம்மை பாதுக்காப்பாக கொண்டு சேர்த்த ஓட்டுனருக்கு இறங்கிய வுடன் நன்றீ சொல்ல நினைத்தது உண்டு. கிறுக்கி என நினைப்பார்களோ என்று செய்ததில்லை.//

அட ஆமாங்கக்கா..!

நைட்டு 11 மணிக்கு மேல பஸ்செடுத்து காலையில 4.30 மணிக்கு நம்ம ஊருல கொண்டு போய் எறக்கும்போது வரும் பாருங்க ஒரு சந்தோஷம்!
டிரைவரே ரொம்ப நன்றி வாங்க நம்ம "வைத்தா"ல ஒரு காபி சாப்பிட்டு போகலமுனு சொல்லததோணும், ஆனா நம்மள என்னமோன்னு நினைச்சா என்ன பண்றதுன்னு அப்படின்னு, எனக்குள்ளயே நன்றி சொல்லிக்கிட்டு, காபி குடிச்சுட்டு போயிடுவேன்..!

ஆயில்யன் said...
This comment has been removed by the author.
ராகவன் தம்பி said...

நீங்கள் சொன்னது போல ஊருக்குப் போகும்போதெல்லாம் இரவுப் பயண முடிவில் கிருஷ்ணகிரியில் வண்டி நின்றதும் ஓட்டுநருக்குத் தவறாமல் நன்றி சொல்வது உண்டு.
அவர்களும் ஒவ்வொரு முறையும் திகைத்துப்போவதும், ஒன்றும் புரியாமல் கடுகடுவென்று முகத்தை மாற்றிக்கொண்டு ""என்ன சார்... சீக்கிரம் எறங்கு சார்...'' என்று சொன்னதும் உண்டு.
ஒருமுறை அப்படி ஓட்டுனருக்கு நள்ளிரவில் நன்றி சொன்னபோது நான் ஏதோ வேறு இடத்தில் நிறுத்துமாறு கேட்கப் போகிறேன் என்று நினைத்தாரோ என்னவோ ""நன்றி எல்லாம் அப்புறம் வச்சிக்குங்க. இப்போ முதல்லே சீக்கிரம் எறங்குங்க சார்...'' என்று கடித்ததும் கனவு போல ஞாபகத்தில் வருகிறது.
எது எப்படியோ, மிகவும் அழகாக நன்றி நவின்றிருக்கிறீர்கள்.
நன்றி.

ராகவன் தம்பி (சனிமூலை)

ராகவன் தம்பி said...

நீங்கள் சொன்னது போல ஊருக்குப் போகும்போதெல்லாம் இரவுப் பயண முடிவில் கிருஷ்ணகிரியில் வண்டி நின்றதும் ஓட்டுநருக்குத் தவறாமல் நன்றி சொல்வது உண்டு.
அவர்களும் ஒவ்வொரு முறையும் திகைத்துப்போவதும், ஒன்றும் புரியாமல் கடுகடுவென்று முகத்தை மாற்றிக்கொண்டு ""என்ன சார்... சீக்கிரம் எறங்கு சார்...'' என்று சொன்னதும் உண்டு.
ஒருமுறை அப்படி ஓட்டுனருக்கு நள்ளிரவில் நன்றி சொன்னபோது நான் ஏதோ வேறு இடத்தில் நிறுத்துமாறு கேட்கப் போகிறேன் என்று நினைத்தாரோ என்னவோ ""நன்றி எல்லாம் அப்புறம் வச்சிக்குங்க. இப்போ முதல்லே சீக்கிரம் எறங்குங்க சார்...'' என்று கடித்ததும் கனவு போல ஞாபகத்தில் வருகிறது.
எது எப்படியோ, மிகவும் அழகாக நன்றி நவின்றிருக்கிறீர்கள்.
நன்றி.

ராகவன் தம்பி (சனிமூலை)

ஒப்பாரி said...

நல்லா இருந்ததுங்க உங்க நட்சத்திர் வாரம்.

siva gnanamji(#18100882083107547329) said...

உபயோககரமான ஒரு வாரம்...
நன்றி! டேங்ஸு!!

அய்யனார் said...

ரெஸ்ட் எடுங்க முத்துலக்ஷ்மி

ரொம்ப எழுதிட்டீங்க இந்த மாசம்

:)

நானானி said...

நான் சொல்வேன் அந்த நன்றி,
முத்துலெட்சுமி!
நீண்டதூரப் பேரூந்துப் பயணம் முடிந்து
இறங்கும்போது,ஓட்டுனர் இருக்கை வழியாகத்தான் இறங்கவேண்டும்.
அப்போது அவருக்கு,'பத்திரமாக கொண்டுவந்து சேர்த்ததுக்கு நன்றி!'
எனும்போது அவர் முகத்தைப்பார்க்கவேண்டுமே!
ரயில் பயணத்தில் எஞ்சின் ஓட்டுனருக்கும் விமானஓட்டிக்கும் சொல்ல ஆசை..ஆனால் முடியாதே?

delphine said...

நாங்கத்தான் நன்றி சொல்லணும்.. முத்துலட்சுமி.. நல்ல முயற்சி.. வெற்றித்தான்.

முத்துகுமரன் said...

சிறப்பான வாரம். வாழ்த்துகள்.

//அய்யனார் said...
ரெஸ்ட் எடுங்க முத்துலக்ஷ்மி

ரொம்ப எழுதிட்டீங்க இந்த மாசம்

:) //

புலி

வருக


ரு


:-)

மங்கை said...

கலக்கலோ கலக்கல் வாரம்... கண்ணுதான் பட்டுறுச்சோ என்னமோ..

சரி சரி அடுத்த பிளாக் ரெடி பண்ணா சரி ஆயுடும்...

வாழ்த்துக்கள் லட்சுமி...ரொம்ப நல்லா இருந்துச்சு

குசும்பன் said...

"எனக்கும் ரெஸ்ட் தேவை. இத்தனை பின்னூட்டமும் பிரசுரித்து பதில் எழுதி ஆகா ... "

ஆமாம் நைட் 12 மணிக்கு எல்லாம் உட்கார்ந்து ஒரு வாரமா பின்னூட்டத்துக்கு பதில் சொன்னா அப்புறம் என்ன ஆகும்....


"முத்துலெட்சுமி said...
நன்றி குசும்பன் நீங்கள் உபயோகமாக இருந்தது என்றது மனமகிழ்ச்சியைத்தருகிறது.. "

இதுல ஏதும் உள் குத்து இருக்கிற மாதிரி தெரியுது!!! :(

பங்காளி... said...

வாழ்த்துக்கள்....மேலும் ஜொலிக்க...

கோபிநாத் said...

நட்சத்திர வாரத்தில் அனைவருக்கும் பல நல்ல தகவல்களை வழங்கியமைக்கு நன்றிகள் ;)

\\நன்றி யென்ற வார்த்தை இருக்கிறதே அது பெறுபவருக்கும் சொல்பவருக்கும் இரண்டு பேருக்குமே ஒரு மகிழ்ச்சியைத்தருகிறது. பெறுகிறவர் தன் செயலுக்கான பாராட்டுதலைப்பெறுகிறார் அதனால் மகிழ்ச்சி.. சொல்பவர் நிச்சயமாய் அந்த செயலால் நன்மை அடைந்திருப்பார் அதனால் மகிழ்ச்சி.\\

அருமையான விளக்கம்க்கா ;))

துளசி கோபால் said...

//உங்க பிளாக்ல ஒரு எலுமிச்சம்பழம், ஒரு வர மிளகா எல்லாம்
கட்டி வையுங்க!//

ஆமாமாம். அடுத்த வீட்டுக்காரருக்கு ஒரு சட்னி, சாலட்க்கு சட்னு பயன்படும்:-)

வெற்றி said...

முத்துலெட்சுமி,
நல்லதொரு வாரத்திற்கு மிக்க நன்றி. உங்களின் எல்லாப் பதிவுகளையும் வாசிக்க முடியவில்லை. ஆனால் படித்த, பார்த்த பதிவுகள் அனைத்தும் அருமை. நட்சத்திர வாரம் முடிந்தாலும் இதே வேகத்துடன் தொடர்ந்து எழுதுங்கள்.

முத்துலெட்சுமி said...

கண்மணி வீட்டுல உள்ளவங்களையும் கவனிச்சு இங்க பதிவும் போட்டு பின்னூட்டமெல்லாம பதில் எழுதி ன்னு இருந்ததால தான் .அப்படி நல்லா இருந்த நான் இப்படி டல்லா ஆகிட்டேன்..இனிமே வீட்டுல உள்ளவங்க தான் என்னை கவனிக்கனும். :)

முத்துலெட்சுமி said...

ஆகா சிபி கண்ணு பட்டுடுச்சுன்னு சொன்னத பெரிசா எடுத்துக்கிட்டு கலாய்த்தல் திணை ஆரம்பிச்சிட்டீங்களா இங்க...நாங்க உப்பு சுத்தி தண்ணிக்குள்ள போடுறோம் கொஞ்சம் வித்தியாசமா... :)

முத்துலெட்சுமி said...

முத்து ஆயில்யன் இருவரும் ஒருவரே வா...
உண்மைதான் முத்து ஆயில்யன்
இந்த நம்மள என்ன நினைப்பாங்களோங்கற பயம் தான் நன்றி சொல்லவிடாம தடுக்கிறது.

முத்துலெட்சுமி said...

ராகவன் தம்பி ...அப்படி யெல்லாமா நடந்தது ..சரிதான் ..கொஞ்சம் நின்னு பேசினாலே எங்க அதிக அட்வாண்டேஜ் எடுத்துக்குவாங்களோன்னு பயப்படறாங்க பாருங்க அவங்க.நன்றி சொல்வது எதோ லஞ்சம் குடுத்து இன்னும் எதோ லாபம் அடைவதற்காகன்னு ஆகிப்போச்சு.

முத்துலெட்சுமி said...

ஒப்பாரி , நல்லா இருந்ததா..நன்றீ.


(இந்த மேலுள்ள வரியை கமா இல்லாமல் படிச்சு பாருங்க..
ஒப்பாரி யை எல்லாம் யாராவது கேட்டு ஆகா என்னமா பாடுறாங்கன்னு சொன்னா நல்லாவா இருக்கும்.அந்த சிச்சுவேஷனுக்கு..)

முத்துலெட்சுமி said...

சிவஞானம் ஜி ..டேங்க்ஸூ ஜீ.

முத்துலெட்சுமி said...

அய்யனார் ரெஸ்ட் எடுக்கத்தான் வேணும்..
ஆனா உங்க பதிவுக்கு அப்புறம் எப்படி பின்னூட்டம் போடறது...

முத்துலெட்சுமி said...

நானானி துணிஞ்சு சொல்லி இருக்கீங்க நன்றீ பரவாயில்லையே ..பாருங்க ராகவன் தம்பி எத்தனை பட்டிருக்கார்ன்னு...சொல்ல தயக்கமா மட்டும் இருந்தது இப்ப பயமாவும் இருக்கே. :)

முத்துலெட்சுமி said...

டெல்பைன் நன்றிங்க..நீங்கள்ளாம் வந்து படிக்கறதே சந்தோஷம்.

முத்துலெட்சுமி said...

நன்றி முத்துக்குமரன்..

ஆமா நானும் சொல்லிக்கறேன்..வருக வருக அய்யனார். :)

முத்துலெட்சுமி said...

மங்கை ரொம்ப நன்றிப்பா..

முத்துலெட்சுமி said...

வீட்டுல உள்ளவங்க பத்தாதுன்னு குசும்பன் நீங்களுமா கொடுத்த வேலைய சரியா செய்ய வேணாமா...

உள்குத்தா அப்படின்னா? இந்த விசயத்தில் உள்குத்து வைத்தா அது எனக்கு நானே சரியில்லைன்னு அர்த்தமாகிடாதா.. :)

முத்துலெட்சுமி said...

நன்றி பங்காளி.

முத்துலெட்சுமி said...

நன்றி கோபி...

இந்த பதிவுக்கு ஒரு ஐடியா கொடுத்ததற்கும் நன்றீ.

முத்துலெட்சுமி said...

துளசி இப்படி ஒரு வழி இருக்கோ.அதெல்லாமா சட்னி சாலடுக்கு எடுப்ப்பாங்க சரியான கஞ்சபிசினாறி போலவே பக்கத்துவீட்டுக்காரர்.

முத்துலெட்சுமி said...

நன்றி வெற்றி ..தொடர்ந்து நல்ல பதிவுகளைத்தர முயற்சிசெய்வேன்.

அறிவியல் பார்வை said...

நன்றி.. நன்றி பற்றி நன்றாக எழுதியதற்கு நன்றி

ulagam sutrum valibi said...

//நன்றி யென்ற வார்த்தை இருக்கிறதே அது பெறுபவருக்கும் சொல்பவருக்கும் இரண்டு பேருக்குமே ஒரு மகிழ்ச்சியைத்தருகிறது//
உண்மையான வார்த்தை முத்து லச்சுமி அவர்களே.

முத்துலெட்சுமி said...

அறிவியல் பார்வை மற்றும்
உலகம் சுற்றும் வாலிபி உங்கள் மறுமொழிக்கு நன்றி.

நாஞ்சிலான் said...

இந்தியருக்கு பொதுவாய் நன்றி என வாய் விட்டு சொல்லும் வழக்கம் குறைவு என்ற குறைவை நிறைவு செய்துவிட்டீர்கள். நன்றி.

முத்துலெட்சுமி said...

நாஞ்சிலான் மறுமொழிக்கு நன்றி .

பொதுவாக இந்தியர்கள் நன்றி என்பது வேற்றுமனிதர்களுக்கு சொல்வதுபோல் என்று நினைத்து சொல்வதில்லைய்யோ என்று நினைக்கிறேன். தண்ணீர் குடுத்தாலோ உணவு வைத்தாலோ ந்ன்றி சொன்னால் இது என்ன வேற்று ஆளா என்ன என்று கேட்பார்கள்.ஆனால் பதிலுக்கு கண்டிப்பாக வேறு செயலால் நன்றியை தெரிவித்துவிடுவார்கள் எப்படியும்.. :) சரிதானே.