July 16, 2007

எதிர்பார்த்திருந்தது

எதிர்பார்த்தது தான்...நடந்து விட்டது ஒரு நாள். அதாங்க தமிழ்மணத்தில் ஒரு வாரம் நட்சத்திரம். நான் எழுத வ்ந்த போது நாகை சிவா நட்சத்திரமா இருந்தார்ன்னு நினைக்கிறேன். வந்தவுடனேயே நினைத்துக்க்கொண்டேன் ஒரு நாள் நாமும் வருவோமில்லை.. எடுத்த உடனேயே பெரிசா ஆசைப்படுவது என்பது பழக்கமாப் போச்சு..

குறிப்பிடத்தக்க அளவில் எழுதும் பதிவரை அதிகம் கவனம் பெறச்செய்யவும் , இன்னும் எழுத ஊக்கம் அளிக்கும் வகையும் செய்யும் நட்சத்திரவாரம் என்று தமிழ்மணக்குறிப்பு சொல்கிறது.உண்மைதான் பாருங்க கொஞ்ச நாளாக தமிழ்மணத்தின் முகப்பு பக்கம் மாற்றம் செய்த பின்னர்...அதிக நேரம் நட்சத்திர வாரத்தின் பதிவுகள் தெரிய செய்தது இன்னும் சிறப்பு.


தமிழ்மணத்துக்கு இணைக்கப்பட்ட பாடு இருக்கே சொல்லில் அடங்காது ஒரு மாசம் உண்மையில் ஒரு மாசம் இந்த ப்ளாக்கரோடு போராடி இருக்கேன். முதல்ல பதிவுன்னா என்னா ப்ளாக்கர்ன்னா என்ன அப்பறம் ஐடி கிரியேட் செய்து ஆரம்பிச்சா தமிழ்மணத்துல இணைய மாட்டேங்குது என்னமோ ஆடம் ஃபீட் அப்படிங்குது சரியில்லை ங்குது. எந்த ஆடம் ஆதாமா அவனுக்கு தான் ஏவாள் ஃபீட் பண்ணிட்டாங்களே...ஆப்பிள் குடுத்து , அதுவே இன்னும் பெரிய சர்ச்சையில் இருக்கு...இன்னும் என்ன ..ன்னு ஒரே குழப்பம்.


அப்புறம் ( க.கை. நா) * கணினி கை நாட்டான நான் எப்படியோ இந்த வியூ சோர்ஸ் என்பதை கண்டு பிடித்து அதில் போய் தமிழ்நதி அருள்குமார் போன்றோரின் ப்ளாக்கரில் என்ன என்ன இருக்குன்னு பார்த்து என்னோடத சரிபண்ணேன்னா பார்த்துக்குங்க...இது பின்னாடி பொன்ஸ் க்கு தெரிஞ்சு ஏங்க அதெல்லாம் போய் பார்த்து என்ன பண்ணீங்கன்னாங்க எப்படியோ வேலை ஆகிடிச்சு இல்ல..


தமிழ்மணம் ஹச்டிஎமெல் ,xஎம் எல் ன்னு என்ன எல்லாமோ சரி இல்லன்னு சொன்ன போதும் ,, எனக்கு எதுக்கு இதெல்லாம்.... பேசாம 500 எம் எல் பாலை காய்ச்சி குழந்தைக்கு கொடுத்தமா காபி போட்டு கணவருக்கு கொடுத்தமான்னு இல்லாமன்னு ஒரு பின்வாங்கும் எண்ணம் வரவே இல்ல...கனவுல கூட இந்த கோட் , காபி , பேஸ்ட் அது இதுன்னு வர ஆரம்பிச்சு < > / இப்படி என்ன என்ன டிசைனோ எல்லாம் தலைய சுத்தி பறக்க , பிதற்றும் நிலைக்கு வரும் முன் எப்படியோ மாயாஜாலமோ இல்லை நான் செய்த எல்லா குறுக்கு வழியில் ஒன்றோ வேலை செய்து தமிழ்மணம் இணைத்துக்கொண்டது.இதோ இந்த வாரம் ,
என்னை நட்சத்திரமாக்கிய தமிழ்மணத்துக்கு நன்றி. இதுவரைய்யிலும் தொடர்ந்த உங்கள் வாசிப்பிற்கும் மறுமொழிகளுக்கும் நன்றி நண்பர்களே!
(என்னமோ படத்தை அனுப்பினேன் அது அப்படியே பெரிதாக வ்ந்துவிட்டது பயந்துடாதீங்க)

*நன்றி துளசி

65 comments:

இராம் said...

அக்கா வாழ்த்துக்கள்.... :)

அபி அப்பா said...

நாங்கள் எங்கள் முதல் வாழ்த்துக்களை சொல்லிக்கறோம்!

இப்படிக்கு
மைபிரண்ட் மற்றும் பாசகார குடும்பம்!

அபி அப்பா said...

ராம் முந்திட்டியே!

சினேகிதி said...

வாழ்த்துக்கள்!!!

Anonymous said...

niyayamana aasaithan munnertathukku vazhi - unkal aasai (star pathivalar aakanum enta) niraiveriyathil santhosam -
picture neenkale varainthatha
nantaga vanthirukku -

அபி அப்பா said...

கோபி இரவு பணி என்பதால் கோபிக்கு பதிலாக இந்த வாழ்த்துக்கள்!

குசும்பன் said...

அக்கா வாழ்த்துக்கள்.... :)

இப்படிக்கு
பாசகார குடும்பம்!

தம்பி said...

கலக்குங்க...

தருமி said...

வாழ்த்துக்கள்

துளசி கோபால் said...

ஹையா............ இந்த வாரம் ஒரே கலக்கலாத்தான் இருக்கப்போகுது.
ஆமா...........க.கை.நா. வுக்கு எங்கிட்டே காப்பிரைட் இருக்கு. ஏன் முன் அனுமதி பெறலை? :-)))))
போட்டும். நட்சத்திரமா இருக்கறதாலே விட்டுறலாம்.

படம் எல்லாம் ச்சீ..ஓவியமுன்னு சொல்லணுமில்லை? அழகாவே வரைஞ்சு தள்ளி இருக்கீங்க!!!

நட்சத்திர வாரத்தை முன்னிட்டு........... "இந்த வாரம் வீட்டில் சமையல் கிடையாது. எல்லாம்
சரவணபவனில் இருந்து வருது"ன்னு அறிப்பு கொடுத்தாச்சா ரங்கமணிக்கு?

ILA(a)இளா said...

வாழ்த்துக்கள் ! கலக்குங்க பார்ப்போம். படத்தை பார்த்தா மஹாலட்சுமி மாதிரி தெரியுதே. குமரனா உங்க பையன் பேரு?

துளசி கோபால் said...

சொல்ல விட்டுப்போச்சே........

நட்சத்திர வாழ்த்து(க்)கள்.

கண்மணி said...

வாஆஆஆஆஆழ்த்துக்கள் .முத்துலஷ்மி.
இத்தனை கஷ்டப் பட்டிருக்க வேண்டாம்.என்னையக் கேட்டிருந்தா சொல்லிக் குடுத்திருப்பேனில்லை...ஹி..ஹி..நானும் க.கை.நா தான் ஆனாலும் கொஞ்சம் விவரம் ஜாஸ்தி.

அய்யனார் said...

வாழ்த்துக்கள் முத்துலகஷ்மி

சிநேகிதன்.. said...

வாழ்த்துக்கள் கலக்குங்க!!

வல்லிசிம்ஹன் said...

வாழ்த்துக்கள் முத்துலட்சுமி. படம் ரொம்ப அழகா இருக்கு. கலக்கலாப் போகப் போகுது இந்த வாரம். க.கை.நா
நாங்கள் இருக்கப்போ உங்களுக்குப் பயமே வேணாம். நீங்களாவது ஹெச்.டி.எம்.எல் னு இங்க்லீஷெல்லாம் சொல்றீங்க. நான் அதெல்லாம் எலெக்ரிகல் விஷயம்னுதான் நினைச்சுட்டு இருக்கேன்.)))

கோவி.கண்ணன் said...

முத்துலெட்சுமி அவர்களுக்கு வாழ்த்துக்கள் !

பாலராஜன்கீதா said...

அப்படின்னா இந்த வாரம் முழுதும் நீங்க பேசிக்கொண்டே - அதாவது எழுதிக்கொண்டே இருப்பீர்கள்தானே ?
:-)))
வாழ்த்துகள்.

நந்தா said...

வாழ்த்துக்கள். இந்த வாரம் உங்க ரவுசு கலக்கட்டும்

பங்காளி... said...

வாழ்த்துக்கள் மேடம்...

ஹி...ஹி...என்சாய்

Radha Sriram said...

வாழ்துக்கள் முதுலக்ஷ்மி!! படம் நல்லா இருக்கு.....

அருள் குமார் said...

வாழ்த்துக்கள் முத்துலெட்சுமி!

ஓவியம் மிக நேர்த்தியாய் வரையப்பட்டிருக்கிறது. வரைந்தவருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவியுங்கள்.

முத்துலெட்சுமி said...

வந்து வாழ்த்திய எல்லாருக்கும் நன்றி..

****ராம் முந்திக்கிட்டீங்களா அபி அப்பாவை பாவம் அவர்.

****பரவால்லை அபி அப்பா குடும்பத்தின் முதல் வாழ்த்து கோபி யிடம் இருந்து மெயிலில் வந்திருந்தது.

**** நன்றி சினேகிதி
**** ந்ன்றி அனானி பெயர் போடலாமே நீங்கள் படம் நான் வரைந்தது இல்லை.

**** நன்றி குசும்பன்
**** நன்றி தம்பி

**** நன்றி தருமி.

பொன்ஸ்~~Poorna said...

யக்கோவ்,
போன் பேசினபோது தெரியலை.. இப்பத் தான் புரிஞ்சது, மேட்டர் என்னன்னு..

படம் தான் ஒரே மெரசலாக்கீது... பரவால்ல, கலக்குங்க... பாலராஜன் சொல்வது போல் இந்த வாரம் பேசிட்டே இருக்கப் போறீங்க!

முத்துலெட்சுமி said...

துளசி வாங்க க.கை.நாவின் காப்பிரைட் க்கு நான் * போட்டு நன்றி போட்டுவிட்டேன். இப்ப சரிதானா ? :)

ஒரு வாரம் சரவணபவனா மயக்கமே வந்து விழுந்துடுவாங்க ரங்கமணி..அதெல்லாம் இல்லை..தோசைக்கறச்சா விதவிதமான தோசைகள் செய்து அசத்திடுவோமே

**** இளா நதியா மாதிரியா இருக்கேன்..அடடா பரவால்லயே...


***** கண்மணி வாழ்த்துக்கு நன்றி..
இனிமே கேக்கறேன் உங்ககிட்ட எதாச்சும் உதவின்னா சரியா? பீஸ் கிடையாதுல்ல

**** அய்யனார் நன்றி

**** சினேகிதன் நன்றீ

ஆழியூரான். said...

எனக்கு ஒரு நன்றி சொல்லுங்க.. ஏன்னா நானும் வாழ்த்து சொல்லப்போறேன்..

வாழ்த்துக்கள்,
வாழ்த்துக்கள்,
நட்சத்திரமா இருந்தாலும், இல்லாட்டினாலும் வாழ்த்துக்கள்..!

delphine said...

நட்சத்திர வாழ்த்துக்கள் முத்து லக்ஷ்மி.. ஜொலியுங்கள்...:)

முத்துலெட்சுமி said...

வல்லி வாழ்த்துக்கு நன்றி..
படம் நல்லாருக்கா ஆபிஸ் டே யில ஒரு பையன் எல்லாரையும் உட்கார வச்சு வரஞ்சு குடுத்தான் ஆடாம அசையாம அதும் பேசாம உட்காரரது கொடுமையில் கொடுமைன்னு அப்பத்தான் தெரிஞ்சுகிட்டேன்..

****நன்றி கோவிக்கண்ணன்

**** நன்றி பாலராஜன் கீதா

**** நன்றி நந்தா

****நன்றி பங்காளி

*** நன்றி ராதா

**** நன்றீ அருள் ..ஆமாம் உண்மையிலேயே அருமையா வரஞ்சான் அந்த பையன்...பாவம்வரிசையில் நின்று வரஞ்சுகிட்டோம்..கைவலிச்சுருக்கும்..

****நன்றி பொன்ஸ் பின்னூட்டம் எல்லாத்துக்கும் கலரில் போடலாம்ன்னு பார்த்தேன் அதான் கேட்டேன்...சரி அனுப்புங்க நாளைக்கு போடறேன்..ஆசையா இருக்குல்ல..வண்ணத்தில போடறது...

செல்வேந்திரன் said...

வாழ்த்துக்கள் முத்துலெட்சுமி... அசத்திடுங்க..

வெற்றி said...

அடடா! முத்துலட்சுமி!
நீங்களா இவ்வார நட்சத்திரம்?!

வாழ்த்துக்கள்!!!!!

வாசிப்புப் பிரியர்களுக்கு இந்த வாரம் ஒரு நல்ல வாரமாக அமையும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

Chandravathanaa said...

வாழ்த்துக்கள்.

இளவஞ்சி said...

நட்சத்திர வாழ்த்துக்கள்! :)

முத்துகுமரன் said...

நட்சத்திர வாழ்த்துகள். தொடர்ந்து அசத்துங்கள்

மணியன் said...

வாழ்த்துக்கள்!!

மோகன்தாஸ் said...

நட்சத்திர வாழ்த்துக்கள்! ;)

//எல்லாத்துக்கும் கலரில் போடலாம்ன்னு பார்த்தேன் அதான் கேட்டேன்...சரி அனுப்புங்க நாளைக்கு போடறேன்..ஆசையா இருக்குல்ல..வண்ணத்தில போடறது...//

ஹிஹி

ஜெஸிலா said...

நட்சத்திர வாழ்த்துகள்.

முபாரக் said...

சுடரோட்டத்தப்பவே தெரியும் நீங்களும் கூடிய சீக்கிரம் நட்சத்திரமாவீங்கன்னு.

வாழ்த்துக்கள்!!!

ஓவியம் நீங்க வரைஞ்சதா! அற்புதம்

வேறு ஓவியங்கள் இருந்தாலும் வலையேத்துங்க!

முத்துலெட்சுமி said...

ஆழியூரான் இந்தாங்க பிடிங்க உங்களுக்கு ஒரு நன்றி..

----------

டெல்பின் வாழ்த்துக்கு நன்றி சொலிக்கறதா? எதோ பளிச் பளிச்சுன்னு ரெண்டு மினிக்கிடுச்சுன்னா போதாதா இந்த நட்சத்திரம்.

---------

நன்றி செல்வேந்திரன் நீங்க அசத்திட்டீங்க சிறுகதையெல்லாம் போட்டு..

--------

வெற்றி ரொம்ப புகழரீங்களே.நன்றி நன்றி..

-----------

சந்தரவதனா நன்றி

__--------
நன்றி இளவஞ்சி

------
நன்றி முத்துக்குமரன்
----------
நன்றி மணியன் .

------
நன்றி ஜெஸிலா

----
நன்றி மோகன் தாஸ் .
(போட்டுட்டேன்ல பச்சைவண்ணத்தில என் பின்னூட்டத்தை..)

♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

//படம் தான் ஒரே மெரசலாக்கீது...//

ரிப்பீட்டே.... வாழ்த்துக்கள்...

முத்துலெட்சுமி said...

நன்றி முபாரக்...சுடரோட்டத்தப்பவே நினைச்சீங்களா நன்றி ..போன மாசமே வந்திருக்க வேண்டியது..அழைப்பு அனுப்பினார்கள்..அந்த சமயம் விடுமுறையில்ஊரில் இருப்பேன் என்பதால் தான் இந்த வாரம் கொடுக்கப்ப்ட்டது..
நான் வரைந்தது இல்லை இந்த படம்.
நான் வரைந்த சில படங்கள் ஏற்கனவே வலையேற்றி இருக்கிறேன்..தையலில் இருந்து தமிழ்மணம் வரை என்னும் பதிவில்

Deepa said...

வாழ்த்துக்கள்..

முத்துலெட்சுமி said...

வாழ்த்துக்களுக்கு நன்றி தீபா..
மற்றும் இன்னொரு நன்றி பின்னூட்டத்தில் வண்ண எழுத்துக்களை போட உதவியமைக்கு.

mayooresan said...

நட்சத்திரத்திற்கு வாழ்த்துக்கள்...
கலக்குங்க!!

வைசா said...

நட்சத்திர வாழ்த்துகள்

வைசா

முத்துலெட்சுமி said...

பாலபாரதி வாழ்த்துக்களுக்கு நன்றி..
படம் தானே இதப்போட்டத்துக்கே ஏங்க அவசியமான்னு கேக்கறாங்க நண்பர்கள்..

----------

நன்றி மயூரேசன்..

----
நன்றி வைசா

மங்கை said...

பக்கத்துல இருக்குறவங்க தான் எப்பவும் லேட்டா வருவாங்க..ஹ்ம்ம்
பாருங்க என்னோட வாழ்த்து கடைசியில..ஹ்ம்ம்

வாழ்த்துக்கள் அம்மனி..

கலக்கப் போறீங்க எப்பவும் போல..

மங்கை said...

//இந்த வாரம் வீட்டில் சமையல் கிடையாது. எல்லாம்
சரவணபவனில் இருந்து வருது"ன்னு அறிப்பு கொடுத்தாச்சா ரங்கமணிக்கு?//

துளசிக்கா...உங்களுக்கு எப்படி...!!??

:-)))

Anonymous said...

வீர, தீர, தைரியத்துடன்
இந்த வார நட்சத்திரமாக
ஜோளிக்கப் போகும்
முத்துலஷ்மிக்கு வாழ்த்துக்கள்.

கப்பி பய said...

வாழ்த்துக்கள்! :)

முத்துலெட்சுமி said...

வாங்க வாங்க மங்கை கடைசியில்வந்தா என்னவாம் ..பாருங்க அதுனால தானே துளசிக்கு எப்படி தெரியும் ன்னு கேட்டுருக்கிங்க...இல்லப்பா இல்ல வீட்டு சாப்பாடு தான் இந்த வாரம்..நீங்கள்ளாம் சொன்னதுக்காகவே...ஸ்பெசலாவே செய்து சாப்பிடுவோம்.

------

அனானி அவர்களே என்ன அது வீர தீர அப்படின்னெல்லாம் போட்டுக்கிட்டு நான் என்ன அப்படி எல்லாமா எழுதறேன்?

------

நன்றி கப்பி..

கோபிநாத் said...

அக்கா வாழ்த்துக்கள்.....;))))

கலக்குங்க ;))))
(நான் தான் 50)

கோபிநாத் said...

படம் எல்லாம் கலக்குது ;))))

அபி அப்பா ரொம்ப நன்றி

சென்ஷியின் வாழ்த்துக்கள் ;))))

சின்னக்குட்டி said...

நட்சத்திர வாழ்த்துகள்

சென்ஷி said...

//பொன்ஸ்~~Poorna said...
யக்கோவ்,
போன் பேசினபோது தெரியலை.. இப்பத் தான் புரிஞ்சது, மேட்டர் என்னன்னு..

படம் தான் ஒரே மெரசலாக்கீது... பரவால்ல, கலக்குங்க... பாலராஜன் சொல்வது போல் இந்த வாரம் பேசிட்டே இருக்கப் போறீங்க!//


டிரிபிள் ரிப்பீட்டே..

துபாயிலிருந்து சென்ஷி

முத்துலெட்சுமி said...

ஏம்பா கோபிநாத் என்னவிட கணக்குல புலியோ நீங்க...50 நானேதான் ...
51 தான் நீங்க..ந்ம்ம ஊருல 51 101 இதுக்கெல்லாம் தான் மரியாதை அதால 51 வதா போட்டதுதான் சிறப்பு ஓகெவா..

------
சின்னக்குட்டி வாழ்த்துக்குநன்றி.

-----

சென்ஷி ரிப்பீட்டே இல்லாம களைக்கட்டவே இல்லை வந்தாச்சா ரொம்ப நன்றி..

சென்ஷி said...

பதிவு சூப்பர்....

இன்னும் தொட‌ருங்க‌ள்...

அருமையான‌ வார்த்தை பிர‌யோக‌ங்க‌ள்...

ரிப்பீட்டே


ட‌புள் ரிப்பீட்டே


டிரிபிள் ரிப்பீட்டே..

நான்தான் ஃப‌ர்ஸ்ட்டா...

மை பிர‌ண்டுக்காக‌ அபி அப்பாவுக்கே பிராக்ஸி கொடுக்கும் சென்ஷி

பாச‌க்கார‌ குடும்ப‌த்தின‌ர் இங்கு கும்மி அடிக்க‌லாமா?

அருமையான‌ ப‌திவு..

பின்ன‌ என்ன‌ ப‌ண்ற‌து. இன்னும் ஒரு வார‌த்துக்கு நெட்க்கு வ‌ர‌ முடியாது. அத‌னால‌, அப்ப‌ப்ப‌ போடுற‌த‌ அப்ப‌டியே போட்டுட்டேன். சோ, ப‌டிச்சுட்டு திட்டாதீங்க‌

துபாயிலிருந்து
சென்ஷி

முத்துலெட்சுமி said...

திட்டறதா எதுக்கு..
எல்லாப்பதிவுக்குக்கும் இதெல்லாம் எடுத்துக்கிறேன்..
10 இருக்கே..அப்ப பத்துபதிவு போடணுமா?

சுதர்சன்.கோபால் said...

வாழ்த்துகள் :-)

வெட்டிப்பயல் said...

வாழ்த்துக்கள்...

கலக்குங்க

கதிரவன் said...

நட்சத்திர வாழ்த்துக்கள் முத்துலெட்சுமி !!

நாமக்கல் சிபி said...

Star Week Wishes!

Let Me Read One By One!

சேதுக்கரசி said...

அட.. நீங்களா! வாழ்த்துக்கள் இயக்குநர் முத்துலெட்சுமி! இந்த வாரம் நீங்க டைரக்ட் செஞ்ச படம் எதுனாவது வெளிவருமுங்களா? ;-)

முத்துலெட்சுமி said...

சுதர்சன் கோபால் ,நன்றி

---
வெட்டிப்பயல் நன்றி..

----
கதிரவன் நன்றி..
----
நன்றி சிபி...மெதுவா ஒன்னோன்னா படிங்க
----
ஆமாம் சேதுக்கரசி ஆகியாச்சு நட்சத்திரமா ..இயக்குனரா இன்னொரு போஸ்ட் போட ஆசைதான் ஆனா டைமே இல்லை வீட்டுல எல்லாருக்கும் உடம்பு சரியில்லை..அதான்:(

அருட்பெருங்கோ said...

தாமதமான வாழ்த்துக்கள்!!! :)

சேதுக்கரசி said...

உங்க பதிவில் + / - தமிழ்மண ரேட்டிங் வேலை செய்யமாட்டேங்குது.. சரிபாருங்க..