November 24, 2006

வளரும் நாடுகளை குறிவைக்கிறார்கள்

வளர்ந்த நாடுகள் சிலவற்றை அறிமுகப்படுத்தி, அவற்றை தவிர்கக நினைக்கும் நேரத்தில் தான் , அவற்றை வளர்ந்த நாடுகளைப் பார்த்து வளரும் நாடுகள் கற்றுக் கொள்கின்றன. வளர்ந்த நாடுகள் பர்கர்,பீட்சா மற்றும் கோலா போன்றவற்றை குழந்தைகள் உடல் நலத்துக்கு கெடுதல் விளைவிக்கும் பொருட்கள் என்று உணர்ந்து தங்கள் நாட்டு பள்ளிகளில் விற்பதினை தடை செய்கிறார்கள். இங்கோ நம் குழந்தைகள் அவற்றுக்கு அடிமையாக ஆரம்பித்து இருக்கிறார்கள்.
கார்டூன் பாத்திரங்களின் உருவங்கள் பொறித்த விளையாட்டு பொருட்களுக்காகவும், பொம்மைகளுக்காகவும் இன்று மெக்டொனல்ட் அழைத்துச் செல்லுமாறு பெற்றோர்களை குழந்தைகள் வற்புறுத்துகிறார்கள்.எங்கிருந்து தெரிந்து கொள்கிறார்கள். மிகச்சரியாக குழந்தைகள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு நடுவில் விளம்பரங்களை ஒளிபரப்பி அவர்களைத் தூண்டுகிறார்கள்.நாம் என்னதான் தவிர்த்து வந்தாலும் இவ்விளம்பரங்கள் மூலம் எல்லாம் அவர்களுக்கு அறிமுகம் ஆகிவிடுகின்றன.
இப்போது இத்தகைய விளம்பரங்களை குழந்தைகள் நிகழ்ச்சிக்கு நடுவில் ஒளிபரப்ப வளர்ந்த நாடுகள் தடைவிதிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அவர்கள் தங்கள் வருங்கால தலைமுறைகளைப்
பற்றிக் கவலைப் படுகிறார்கள்.
அங்கே விற்பனை கெடுவதால் ஏற்படும் நட்டத்தினை சரிசெய்ய இதுபோன்ற தடைகள் அதிகம் இல்லாத வளரும் நாடுகளை நோக்கி நிறுவனங்கள் நகர்கின்றன .நம் விளையாட்டு வீரர்களும் நடிகர்களும் அதற்கு மாடல்களாக வருகிறார்கள். நானும் குடிக்கிறேன் நீங்களும் குடிங்கள் என்று.
என் குழந்தையின் பள்ளியில் நர்சரியில் கோலாகுடித்தால் பல் கருப்பாகிவிடும்
பால் குடி வெண்மையாய் இருக்கும்..ஆப்பிள் சாப்பிடு கன்னம் சிவப்பாகிவிடும் என்று சொல்லிக் கொடுத்துவிட்டு....அவர்களின் பணத்தேவைக்கு நீச்சல் பயிற்சி வகுப்புக்கு வெளியில்கோலா பானத்தையும்
சிப்ஸ்ம் விற்பனைக்கு வைத்திருக்கிறார்கள்.
இது பற்றி ஹிந்துவில்

21 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

...

சென்ஷி said...

:(

கவனிக்கப்படவேண்டிய பதிவென்பதால் இந்த பின்னூட்ட கயமை

சென்ஷி

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி சென்ஷி ...இந்த பதிவுக்குத்தான் இதுவரை பின்னூட்டம் வராமல் இருக்கேன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன்.

அபி அப்பா said...

இதை முதல்லயே சொல்லியிருந்தால் பாசமலர்களை கூட்டிகிட்டு வந்து கும்மி அடிச்சி தூள் பண்ணியிருப்போமே:-))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அபி அப்பா..உண்மையில் இது நல்ல விஷயத்தைப் பத்தி எழுதின பதிவாச்சே இதுக்கு யாரும் வரலையேன்னு கவலைப்பட்டேன்...அதுக்காக ப்ளீஸ் உங்க குடும்பத்த இப்ப கூப்பிடாதீங்க அடுத்த வாரம் ஊருக்குப்போனும் பேக் பண்ணனும் ...புரிஞ்சுக்கோங்க் ப்ளீஸ் தப்பா நினைக்கக்கூடாது.

காட்டாறு said...

அச்... அச்... அச்.... தும்மல்... தூசினாலாயோ.

அபி அப்பா said...

வந்ததுதான் வந்தோம் எங்க ஆசைக்கு கொஞ்ச நேரம் குமுறிட்டு போறோம். நீங்க பதில் சொல்ல வேண்டாம்:-))))))

Ayyanar Viswanath said...

நல்ல பதிவுங்க

அபிஅப்பா கூட KFC சிக்கன்தான்
வேணும்னு வியாழக்கிழமைகளில
ஒரே அடம்... இந்த பதிவு படிச்சாவது திருந்தராரான்னு பாப்போம்

:)

சென்ஷி said...

//முத்துலெட்சுமி said...
நன்றி சென்ஷி ...இந்த பதிவுக்குத்தான் இதுவரை பின்னூட்டம் வராமல் இருக்கேன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன். //

அப்போ பின்னூட்டம் வந்த மத்த பதிவெல்லாம் :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

@@ காட்டாறு ....

தூசியா? காட்டாறு வீடு ரினோவேசன் எல்லாம் செய்து சும்மா பளிச் பளிச் ன்னு இருக்கு பெயிண்ட் வாசமா இருக்கும் தும்மலுக்கு காரணம்...
--------
@@அபி அப்பா சொன்னா கேட்கறவங்கள நாம எல்லாம் ?

------------

@@அய்யனார் நன்றிங்க...

ஆனா சிக்கன் பத்தி எனக்கு தெரியாது..

---------

@சென்ஷி
மத்த பதிவுக்கெல்லாம் கொஞ்சமே கொஞ்சமாச்சும் பின்னூட்டம் வந்திருக்கு...இந்த பதிவு நான் பிரபலமாகாதபோது(??!! ) எழுதியது இல்லயா?

சென்ஷி said...

//@சென்ஷி
மத்த பதிவுக்கெல்லாம் கொஞ்சமே கொஞ்சமாச்சும் பின்னூட்டம் வந்திருக்கு...இந்த பதிவு நான் பிரபலமாகாதபோது(??!! ) எழுதியது இல்லயா?//

இப்போ பிரபலமாயாச்சா :)))

சென்ஷி

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஏம்பா சென்ஷி அதான் கேள்விக்குறி ஆச்சரியக்குறி எல்லாம் போட்டிருக்கேனே என்னோட பின்னூட்டத்தில அப்புறம் இதென்ன கேள்வி ....

சின்னப்புள்ளத்தனமால்ல இருக்கு...

சீனு said...

இதே முறை நம் உழவர்கள் பயன்படுத்தும் உரங்களுக்கும் பொருந்தும்.

எப்பொழுதும் பாதிக்கப்படுவது வளரும் நாடுகள் தாம். அணுமின் நிலையங்களின் ஆபத்தை கருத்தில் கொண்டு வளர்ந்த நாடுகளில் தடை செய்யப்பட்டன. ஆனால் நான் இப்பொழுது தான் கூடங்குளத்திலேயே அணுமின் நிலையங்களை அமைக்கப் போகிறோம். வேறு வழி இல்லை நமக்கு. ரிஸ்க் எடுத்தே ஆக வேண்டும். ஆனால், தவிர்க்க வேண்டியவைகளை தவிர்க்கலாம். பீட்சா இல்லை என்றால் உயிர் போய்விடாது. உயிர் காப்பாற்றப்படும். உரங்களும் இயற்கை உரங்களாக மாற்றலாம். இதை தான் இயற்கை உழவர் நம்மாழ்வாரும் பரிசோதித்து வெற்றி கண்டிருக்கிறார்.

பிரச்சினை எவ்வளவு நேரம் தூங்குகின்றோம் என்பது இல்லை. எவ்வளவு சீக்கிரம் விழிக்கிறோம் என்பது தான்.

பங்காளி... said...

குழந்தைகளை பற்றிய கவலை நியாயமானதுதான்....

இவர்களின் தாக்குதலுக்கு இலக்கான இன்னொரு முக்கியமான க்ரூப்ப மறந்துட்டீங்க...அவர்கள்...

தாய்க்குலங்கள்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

@ சீனு

விரிவான மறுமொழிக்கு நன்றி சீனு..
------
@பங்காளி என்ன சொல்லறீங்க புரியல...

சென்ஷி said...

//முத்துலெட்சுமி said...
ஏம்பா சென்ஷி அதான் கேள்விக்குறி ஆச்சரியக்குறி எல்லாம் போட்டிருக்கேனே என்னோட பின்னூட்டத்தில அப்புறம் இதென்ன கேள்வி ....

சின்னப்புள்ளத்தனமால்ல இருக்கு... //

நான் பிரபலமாயாச்சான்னு கேட்டது பதிவ. :)))))

நாங்க பல்புல்ல :))

சென்ஷி

பங்காளி... said...

வெளங்கற மாதிரி சொல்லனும்னா அது ஒரு தனி பதிவு மாதிரி ஆய்டும் லட்சுமி...

நுகர்வு கலாச்சாரத்தின் முதல் இலக்கு பெண்கள்தான்...இப்ப குழந்தைகளை குறிவைத்திருக்கிறார்கள்...

அழகுசாதன விற்பனையாளர்களால் ஆரம்பித்த தாக்குதல்தான் இந்த முதல் விசயம்.இதற்கென நமக்கு வீசி எறியப்பட்ட எலும்புதுண்டுகள்தான் நாலைந்து உலக அழகி பட்டங்கள்....சமீப ஆண்டுகளில் இந்திய பெண்கள் உலக அழகிபந்தயங்களில் எங்கிருக்கிறார்கள் என்று தேடினீர்களானால் பல உண்மைகள் உங்களுக்கு புரியவரும்....

காரியம் முடிந்தது....கழற்றி விட்டுவிட்டார்கள்..

இப்போது குழந்தைகள் வலையில் சிக்க ஆரம்பித்திருக்கின்றனர்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

@ சென்ஷி
யெஸ் பதிவு பிரபலமாகிடுச்ச்சு நன்றி.

----
@ பங்காளி
உண்மைதான் பங்காளி அதற்கு தனிப்பதிவு போடலாம்..

நான் பௌடர் கூட போடுவதில்லை எனவே இந்த விளம்பரங்கள் என்னை ஒன்றும் செய்யவில்லை.நான் என்ன எங்கள் வீட்டில் யாருமே அழகு சாதனங்கள் உபயோகிப்பதில்லை.

கருப்பாக இருப்பது நாட்டுக்கான கலர் என்பதை மறந்து கிரீம் பின்னால் அலையவைப்பதும் அழகிபோட்டியின் காரணமும் எனக்கும் புரிந்து தான் இருக்கிறது..அதைத்தான் நீங்கள் குறிப்பிடுகிறீர்கள் என்பது முதலில் புரியவில்லை .நன்றி.

துளசி கோபால் said...

ஒரு வாரம் வலைச்சரத்துலே இருந்ததாலே,
இப்படி 'மீள் பதிவு'களாப் போடறீங்களா? :-)))))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

துளசி பொழுது போகலன்னு சென்ஷி பழய பதிவெல்லாம் படிச்சு பின்னூட்டம் போட ..அதப்பார்த்து எல்லாரும் வந்து படிச்சு எல்லாம் மீள் வாசிப்புக்குள்ளாகிவிட்டது..
எனக்கு மீள்பதிவு இன்னும் போடத் தெரியாது கத்துக்கொள்ளவேண்டும்.

துளசி கோபால் said...

//எனக்கு மீள்பதிவு இன்னும் போடத் தெரியாது கத்துக்கொள்ளவேண்டும்//

அதெல்லாம் எதுக்கு? சென்ஷியே போதும்:-)))))