August 1, 2007

வெற்றிபெற வாழ்த்துக்கள்

ப்ளாக்கர் சேவைகள் ஆங்கிலத்தில் தொடங்கி பத்துவருடங்களுக்கும் மேலாக நடந்துகொண்டு இருப்பதாக விக்கிதளத்தில் சொல்லப்படுகிறது.பல நாடுகளில் பல மொழிகளில் எழுத ஆரம்பித்து மிக வேகமாக வளர்ந்து வந்து கொண்டிருக்கும் இந்த ப்ளாக் வலைப்பதிவு என்கிற ஒன்று தமிழில் தொடங்கிய பின் வளர்ச்சி இருக்கிறது தான் என்கிற போதும் எத்தனையோ கோடி மக்களுக்கு என்று பார்க்கும் போது எண்ணிக்கை அளவில் குறைவுதான்.


ரேடியோ டிவியைப்போன்று இணையதளம் இல்லாத வீடுகள் இனி இருக்காது என்கிற அளவுக்கு இப்போது நடுத்தர குடும்பங்களிலும் இணைய சேவை நுழையத்தொடங்கி இருக்கிறது. தங்கள் படிப்பிற்கும் உறவினர்களுடன் தொடர்பு கொள்வதற்கும் என்று தொடங்கி இருக்கும் இந்த தொழிட்நுட்ப வாசலை இன்னும் விரியத்திறந்து இணையத்தில் உலவும் மக்கள் இப்படி வலைப்பதிவுகளை வாசிக்கவும் அதன் பயனைப்பெறவும் இன்னும் சிறப்புற வலைப்பதிவுகள் உண்டாவதற்கும் வழி செய்யவேண்டும் என்ற ஆவலில் பட்டறை என்ற ஒன்று சென்னையில் (ஆகஸ்டு 5, 2007 ஞாயிற்றுக் கிழமை 09:30 - 05:30 சென்னைப் பல்கலைக் கழக தமிழ்த் துறையின் அரங்கு - மெரினா வளாகம் Marina Campus ) நடத்தப்பட இருக்கிறது.பட்டறை என்ற வார்த்தையின் லிங்கில் நீங்கள் பட்டறை பற்றிய மேல் விவரங்கள் அறியலாம்.


அவர்களின் முயற்சிக்கு முதலில் வாழ்த்துக்கள். முதற்கட்டமாக அவர்கள் மாணவர்களை நோக்கி தங்கள் பயணத்தைத் தொடங்கி இருக்கிறார்கள்.
சென்னை பல்கலைக்கழகத்தோடு இணைந்து செய்கிறார்கள். இதனால் மாணவர்கள் கவனம் இதில் திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


வலைப்பதிவுகள் என்றால் என்ன என்பதிலிருந்து எப்படி ஆரம்பிப்பது என்பதற்கான எல்லா வழிமுறைகளையும் திரட்டி சேவை வசதிகள் பற்றியும் செயல்முறை விளக்கத்துடன் நடத்த இருக்கிறார்கள். இதன் வெற்றிக்கு பின்னர் இது போன்ற பட்டறைகள் தொடர்ந்து நடத்தப்படலாம் . இது ஒரு பட்டறைக்கான விளம்பரப்பதிவு.

10 comments:

வெற்றி said...

/* இது ஒரு பட்டறைக்கான விளம்பரப்பதிவு. */

OK. உங்களின் விளம்பரப் பதிவை தமிழ்மணத்தின் முகப்பில் தெரிய வைப்பதற்கான பின்னூட்டக் கயமை இது. :-))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆகா நன்றி வெற்றி ...வெற்றி பெற வாழ்த்துக்கள் என்றதும்..வெற்றி வந்துவிட்டாரே :)

அபி அப்பா said...

இது பின்னூட்ட கடமை:-))

கோபிநாத் said...

\\அவர்களின் முயற்சிக்கு முதலில் வாழ்த்துக்கள். முதற்கட்டமாக அவர்கள் மாணவர்களை நோக்கி தங்கள் பயணத்தைத் தொடங்கி இருக்கிறார்கள்.
சென்னை பல்கலைக்கழகத்தோடு இணைந்து செய்கிறார்கள். இதனால் மாணவர்கள் கவனம் இதில் திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\\

பதிவர் பட்டறைக்கு பாராட்டுகளும், வாழ்த்துக்களும் ;-)))

- யெஸ்.பாலபாரதி said...

விளம்பரத்துக்கு நன்றி!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி க்கு நன்றி..பாலபாரதி.

தி. ரா. ச.(T.R.C.) said...

நல்ல முயற்சி. புதிய பதிவாளர்கள் கிடைப்பார்கள்

காட்டாறு said...

ரொம்ப நாளா தமிழ்மணத்தில நுழையாம, ரீடர் வழியா வாசிக்கும் எனக்கு, பட்டறை பற்றிய விவரம் அறிந்து கொள்ள வசதியா இருந்தது. நன்றி முத்து லெட்சுமி யக்கோவ்!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அப்பப்ப பிசின்னாலும் வந்து தலைய காட்டிட்டு வரும் நாளில் ரெண்டு பதிவுக்காவது ப்பின்னூட்டி பாசமழை பொழியும் காட்டாறு நன்றிப்பா...

காட்டாறு said...

யக்கோவ்... உங்களுக்கு இல்லாம யாருக்கு எழுதப் போறேன். நன்றியெல்லாம் சொல்லி தள்ளி வச்சிராதீங்க. ஆமா.. சொல்லிட்டேன்.