September 17, 2007

நாட்டிய நாடகம் 'மித்தாலஜீஸ் ரிடோல்ட்"

ரசஜா ஃபவுண்டேஷன் ஜயா அப்பாசாமியின் பல விதமான பெண் கடவுள்களின் ஓவியத்தின்
அடிப்படையில் சந்த்யா ராமன் மற்றும் ரத்னா ராமன் இவர்களின் முனைப்பில் , நடனமணி பத்மஸ்ரீகீதா சந்திரன் ம்ற்றும் ராஷ்மி வைத்தியலிங்கம் இவர்களால் நடத்தப்பட்ட நாட்டிய நாடகம் 'மித்தாலஜி ரிடோல்ட்" தில்லியில் காமினி ஆடிட்டோரியத்தில் 15 .9.2007 நடந்தது.
அந்நிகழ்ச்சி பற்றி ஒரு பகிர்வு இங்கே.

ரேணுகாசவுத்ரி முன்னுரையில்.. இந்தியா சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளுக்கு பின்னாலும் பெண்களுக்கான உரிமைக்காக பேசவேண்டி இருக்கிறது அதற்காக ஆண்களே உங்களை நாங்கள் வெறுக்கிறோம் என்று நினைக்காதீர்கள். எங்களின் ஒரு பக்கத்துணையாக நீங்கள் இருக்கவேண்டும் என்று தான் விரும்புகிறோம் என்று நகைச்சுவை துணுக்குகளோடு உரையாற்றினார்.

சிவன் ,பிரம்மன் , விஷ்ணு என்று புராணங்கள் எல்லாம் புகழ்வது முன்னிருத்துவதும் ஆண்கடவுள்களைத்தான். இவர்களின் நாட்டியத்தில் பெண் கடவுள் களை முன்னிறுத்தி யதாக அமைத்திருந்தார்கள்.

சந்த்யா ராமனின் குறிப்பில்... the story we have put together here is about the origins of these gooddesses. Our attempt is not to take oru viewers into a space of ritulaized worship and adoration , but to imaginatively visualize these goodesses as symbols that have liberated m renewed and celebrated female energy from the beginnings of time - all the way to now.

அம்மாவாரா என்கிற ஒரு பெண்ணிடம் இருந்து உலகம் வந்ததாக கற்பனை செய்யப்பட்டு... ஐந்து பூதங்களையும் பெண்களாக உருவகப்படுத்தி இருந்தார்கள். இருளிலிருந்து முதலில் நீர் உலகமெங்கும் நிறைந்திருந்த காட்சியை அதிருந்து ஐந்து பூதங்களான நீர் நில நெருப்பு வான பூமி பெண்கள் எழுந்து வ்ந்து ஒவ்வொருவரும் அவரவரின் இயல்புகளை நாட்டியத்தில் உணர்ந்த்தினர்.


காட்சியும் இசையும் மிக அருமையாக பொருந்தி அனைவரையும் ஒரு புது உலகத்திற்கு அழைத்து சென்றது. அம்மாவாரா நீ எங்கே எனக் கேட்டு அரற்றும் பெண் முன் தேவி தோன்று கிறாள். பின்னாலேயே எந்த தேவியோ அந்த தேவியின் ஓவியம் சிறியதாக இறங்குறது . ஒவ்வொரு தேவியாக அவள் தோன்றுவதையும் அவள் இயல்புகளை கூறுவதும் என்று அமைத்திருந்தார்கள்.

ஹூ ஆர் யூ என்றதும் நான் தான் உஷா ... என் தோழி உஷாவா இல்லையில்லை யார் நீ ? நான் தான் ஒளியின் கடவுள் உஷா .ஆ அது சூரியன் அல்லவா நீ தான் ஒளியின் க்டவுள் என்கிறாயே எங்கே நிரூபி என்றதும் பின்னால் ஓவியத்தில் குதிரை பூட்டிய வண்டியில் இருக்கும் தேவியைப்போல்வே கற்பனை குதிரை யை ஓட்டியபடி கீதா உலகெங்கும் ஒளி நிரப்பும் காட்சி கண் முன் உண்மையிலேயே நடப்பது போன்ற காட்சியாக விரிகிறது.


அனைவருக்கும் உணவளித்து அரவணைக்கும் அன்னபூரணியாக, வெறுப்பு இல்லாத உலகமாக அன்பும் காதலும் நிரம்பிய உலகமாகச் செய்யும் ரதி தேவியாக , அறியாமை இருள் போக்கும் வாக்குவாணியாக , என்று ஒவ்வொரு காட்சியாக விரிகிறது. இன்றைய பெண் கருக்கொலைகளையும் காட்சியாக்கி இருக்கிறார்கள்.


எத்தனையோ பெண் குழந்தைகளை கருவிலேயே கொன்று குவித்த அன்மைக்கால நிகழ்ச்சியை விவரித்து தேவியின் கோபத்தையும் மீண்டும் அவள் வரவேண்டும் என்று
"" எங்கிருக்கிறாய் அம்மாவாரா! வா!! எங்கும் தலைவிரித்தாடும் அறியாமையும் , வெறுப்பும் , ஏழ்மையும் மறைய நீ வா!! "" என்று அழுது புலம்பும் பெண் முன் தேவி மீண்டும் தோன்றி ""நான் எல்லா பெண்களுக்குள்ளும் இருக்கிறேன்"" என்கிறாள். இந்த விவேகா இந்த ஸ்வேதா ..போன்ற எல்லா பெண்களுக்குள்ளும் இருப்பது என் சக்தி தான் உணர்ந்து கொள்ளுங்கள் "
நானே அவள் அவளே நான் நான் யோசிக்கலாம் நான் எனக்கான முடிவை நானே எடுக்கலாம் நாம் யோசிக்கலாம் நாம் நமக்கான முடிவை எடுக்கலாம் என்ற பாடலுடன் முடிவடைந்தது. (we can dream we can think we can take our own decision )

கீதா சந்திரன் தில்லி டைம்ஸுக்கு தந்திருக்கும் சின்ன பேட்டி ... idont want to be called a femisit. often depcts women and their problems through dance but feels that the feminist tag puts me in a minority. mythologies retold is fictional account of a search for the feminine energy at the beginning of human histroy. Most myths speak of the male trinity of Bramha , Vishnu and Mahesh. but what about the role of the gooddessses?" . it s not just the myths - even today , goddesses are sacrificed . " It happeens when the female foetus is sacrificed in the womb , or when parliament refuses to give 33 per cent reservation to women . theis fictionalised account is a stinging critique of our times. this is an attempt ot bring to the youth an awerness of the absence of goddesses.

10 comments:

நாகை சிவா said...

தமிழ் படுத்த முடியாம ஆங்கிலத்திலே போட்டுட்டீங்க போல இருக்கே ;)

நாகை சிவா said...

வீடியோ தான் போடல. சில படங்கள் ஆச்சும் போட்டு இருக்கலாம் அல்லவா...

//இந்தியா சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளுக்கு பின்னாலும் பெண்களுக்கான உரிமைக்காக பேசவேண்டி இருக்கிறது//

இன்னும் எத்தனை வருசத்துக்கு தான் இதே ஜல்லிய அடிச்சுக்கிட்டு இருப்பாங்களோ?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\இன்றைய பெண் கருக்கொலைகளையும் காட்சியாக்கி இருக்கிறார்கள்//

இந்த வரிக்கப்பறம்கூட அவர்கள் பேசியது ஜல்லி என்றா சொல்கிறீர்கள் சிவா... இன்னமும் பெணசிசுக்கொலைகளும் கருக்கொலைகளும் , 15 வயது க்கும் குறைவான பெண்களை கிழவர்கள் மணப்பதும் என்று நடப்பது பெண்கள் சமூகத்தில் கீழ்நிலையில் வைக்கப்படுவதால் தான் என்று நினைக்கவில்லையா...

அபி அப்பா said...

//இந்தியா சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளுக்கு பின்னாலும் பெண்களுக்கான உரிமைக்காக பேசவேண்டி இருக்கிறது//

இன்னும் எத்தனை வருசத்துக்கு தான் இதே ஜல்லிய அடிச்சுக்கிட்டு இருப்பாங்களோ?\\

சிவா ஒரு பொண்ணா இருந்து அந்த கொடுமைய அனுபவிச்சாதான் தெரியும்ப்பா உங்கள்ளுக்கு:-((

அபி அப்பா said...

மத்தபடி இந்த பதிவு எப்போதும் போல அருமையான பதிவுங்க!

கோபிநாத் said...

\\முத்துலெட்சுமி said...
\\இன்றைய பெண் கருக்கொலைகளையும் காட்சியாக்கி இருக்கிறார்கள்//

இந்த வரிக்கப்பறம்கூட அவர்கள் பேசியது ஜல்லி என்றா சொல்கிறீர்கள் சிவா... இன்னமும் பெணசிசுக்கொலைகளும் கருக்கொலைகளும் , 15 வயது க்கும் குறைவான பெண்களை கிழவர்கள் மணப்பதும் என்று நடப்பது பெண்கள் சமூகத்தில் கீழ்நிலையில் வைக்கப்படுவதால் தான் என்று நினைக்கவில்லையா...\\

அக்கா சிவா சொன்னது மேல உள்ள வரிகளுக்கு...இந்த வரிகளுக்கு அல்ல...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

மறுமொழிகளுக்கு நன்றி அபி அப்பா..

-----
கோபி அது என்ன மேலே ஒரு வரிக்கு ஒரு கமெண்ட் கீழே இருக்கற விசய்த்துக்கு வேற கமெண்டா வரும்..

மொத்தமா என்ன கமெண்டோ அதை போடுங்கப்பா இன்னும் சில கிராமங்களில் தீண்டாமை இருக்குன்னு கண்டுபிடிச்சு சொன்னா இன்னும் முழுமையா தீண்டாமை ஒழியலன்னு ஒத்துப்பீங்களா இல்லையா?
அதுமாதிரி இன்னும் பெண் அடிமையும் அவர்களுக்கு எதிரான நிலையும் நகரங்களை விடுத்து இருக்கத்தான் செய்கிறது... நீங்கள் ஒத்துக்கொள்ளாவிட்டாலும்.

மங்கை said...

ரிப்போர்ட் எல்லாம் படிச்சேன்பா... வித்தியாசமா இருந்திருக்கும் போல..

துளசி கோபால் said...

என்னங்க, ரொம்ப அட்டகாசமா இருந்துருக்கும்போல இருக்கே.
பதிவைப் படிச்சவுடனே கொஞ்சம் 'புகை' வந்துச்சு:-)

பெண்ணும் ஆணும் சரிசமம்னு அர்த்தநாரீஸ்வரரைக் கொண்டாடும்
நம்ம ஜனங்களுக்கு 33% தர மனசில்லை பாருங்க(-:

நியாயமாப் பார்த்தா 50% தரவேணாமா?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

மங்கை துளசி ஆமாம்பா ரொம்பவே வித்தியாசமா இருந்தது.. புகை வருதா அது சரி நீங்க தினம் ஒரு படம் பாக்கறீங்க நான் எத்தனை ஃபீல் செய்யறேன் தெரியுமா ? துளசி.

50% என்ன எவ்வளவு வேணா நீங்களே முயன்று வாங்களேன்னு சொல்றாங்க ...
ஆனா ரொம்பநாளா அடைச்சு வச்சிருந்ததால முதல்ல தானா உரிமையை எடுத்துக்க தெரியல பெண்களுக்கு
இட ஒதுக்கீடு இருக்கு வாங்க ன்னா கண்டிப்பா பதவிக்கு வந்து எதாச்சும் செய்வாங்கன்னு பாக்கறோம். குடுத்தா எங்க நாம் பர்சண்டேஜ் கேக்கற நிலைமை வருமோன்னு அவங்களுக்கு பயம் ...