July 11, 2008

விஷம் நீலமா? சிவப்பா?

வார்த்தைகள் மருந்தாகின்றன,
சிலநேரம் விஷமாகின்றன,
மனிதர்களின் நிறம் போலவே.
விஷம் நீலமா? சிவப்பா?
எப்போதும் திரைப்படத்தில் சிவப்பாகவே,
சாப்பிட்டவர் பின் நீலமாய்,
பயமுறுத்தும் உடல்வண்ணமாய்.
எதிரான வார்த்தை
ஒவ்வொன்றும் பாதிக்கிறது .
இதயத்தில் நீலம் பாரிக்கிறது.
அறிந்தோர் அறியாதோர்
யார் சொல்லிலும் இருக்கும் விசமும்
சட்டென்று ஏறிவிடுகிறது.
விசம் பட்டதும்,
இது யார் சொன்னதென்று-தேடித்தேடி
அறியாதோரையும் அறிந்து கொண்டபின்
அதில் என்ன வேறுபாடு?

45 comments:

ஆயில்யன் said...

முன்னாடி போட்ட இந்த கமெண்ட்டு

:((((((((((((((((((

இங்கயும் போட்டுக்கிறேன் :))

Thekkikattan|தெகா said...

//விசம் பட்டதும்,
இது யார் சொன்னதென்று-தேடித்தேடி
அறியாதோரையும் அறிந்து கொண்டபின்
அதில் என்ன வேறுபாடு? //

இந்த வரிகளுக்காக இரண்டாவது முறையாக இந்த விஷத்தை நுகர வேண்டிருந்தது :-)), அறிந்த பின் கிடைச்ச ரசம் இதுதான்...

எப்படியோ விஷம் தீண்டினது தீண்டியதுதான், அறிந்து கொண்டு மட்டும் என்ன மாற்றம் கிடைச்சிடப் போகுது, அப்படித்தானே?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

போன போஸ்ட் கருவிப்பட்டை தெரியாததால் திரும்ப பதிவிட்டேன்.. தமிழ்ப்பிரியனுக்கு நன்றீ..

ஆயில் அதே கமெண்டா.. ஏன் சோகம்..போன வருடம் எழுதிய பதிவு .. ட்ராப்டல பாவமா கிடந்தது பாவமேன்னு போட்டுட்டேன்..இப்ப படிக்கிறவங்க பாவமா இருக்கபோறாங்க..:)

சென்ஷி said...

கவிதை ரொம்ப நல்லாருக்குதுக்கா...

//அறிந்தோர் அறியாதோர்
யார் சொல்லிலும் இருக்கும் விசமும்
சட்டென்று ஏறிவிடுகிறது.
விசம் பட்டதும்,
இது யார் சொன்னதென்று-தேடித்தேடி
அறியாதோரையும் அறிந்து கொண்டபின்
அதில் என்ன வேறுபாடு?
//

:(((

முத்துலெட்சுமி/muthuletchumi said...

எழுதியதும் எனக்கும் அந்த வரிதான் பிடித்தது... மகிழ்ச்சி..
சொல்லமுடியாது.. வார்த்தை பின் மருந்தாவும் ஆகுதே.. அதனால் அறியவேண்டியதும் அவசியமா இருக்குமோன்னு இப்ப திரும்ப கவிதை வாசிச்சா தோன்றுகிறது :))

சென்ஷி said...

ஆயிலுக்கு என் கடும் கண்டனங்கள்...

நான் என் கமெண்ட அங்கயே போட்டுட்டேன். இங்க புதுசா வேற போட்டுக்கறேன்..

என்னக்கா.. ஏதும் உடம்புக்கு சொகமில்லையா :((

ஏன் இத்தினி சோகம்.. வர்றவங்களையும் அழ வுடுறீங்க :((

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சென்ஷி யும் சோக ஸ்மைலியா?

Thamiz Priyan said...

அக்கா! ஏனிந்த விஷப் பதிவு.... பயமா இருக்கு... :(

MyFriend said...

எதுக்கு இந்த விரக்தி திடீர்ன்னு??????????

Thamiz Priyan said...

//கயல்விழி முத்துலெட்சுமி said...

போன போஸ்ட் கருவிப்பட்டை தெரியாததால் திரும்ப பதிவிட்டேன்.. தமிழ்ப்பிரியனுக்கு நன்றீ..///
ஆமா தமிழ்ப்பிரியனுக்கு ஏன் நன்றி சொல்றீங்க? புதசெவி...
அன்புடன்
தமிழ் பிரியன்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சென்ஷி ஆயிலுக்கு ஏன் கண்டனம்? பதிவைப்படித்தா மட்டும் போதாது சில சமயம் பின்னூட்டத்தையும்படிக்கவேண்டும் என்று சொல்லிக்கொள்கிறேன்.. :)

இது டிசம்பருக்கு முன்பு எழுதிய கவிதை..

Thekkikattan|தெகா said...

------------அதனால் அறியவேண்டியதும் அவசியமா இருக்குமோன்னு இப்ப திரும்ப கவிதை வாசிச்சா தோன்றுகிறது :))
---------------

நல்ல வேளை நான் ஆமாம் சாமீ போடலை. ஏன்னா, தேடி கண்டுபிடிச்சி யார் அந்த விஷத்தை கக்குனான்னு அறிஞ்சிக்கிட்ட அந்த வீரியத்தை நாம் அறிஞ்சி அதுக்கு வைத்தியம் பார்த்துக்கலாம்.

நம்மளவிட நல்ல நீதி, நெறியில சிறந்தவங்க கொட்டியிருந்தா சீர் தூக்கிப் பார்த்துட்டு மாத்திக்கலாம்... இல்லைன்னா, தண்ணீர் பாம்பா நினைச்சி மறந்துடலாம். இது எப்படி இருக்கு?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

மைப்ரண்ட் தமிழ் பிரியன் .. பின்னூட்டம் படிக்கலயா நீங்களும் போனவருசம் டிசம்பர்ல எழுதினது இப்ப விமோசனம் கேட்டுச்சு ட்ராப்ட் பதிவாச்சு..

------------------
தமிழ்பிரியன் .. இலக்கணப்படி தமிழ்ப்பிரியன்னே தட்டச்சவருது என்ன செய்ய?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

தெக்கிக்காட்டான் நன்றி.. ஒரு வரியே படிக்கப்படிக்க புது விளக்கம் தருது..
விசம் சாப்பிட்டாங்கன்னு சொல்லி டாக்டர் கிட்ட போனா என்னன்னு தெரிந்து தான் மருந்து முறிக்கத்தருவாங்க அதுபோலத்தான் நீங்க சொல்றீங்க.. நான் ஆமாம் சாமி போட்டுக்கறேன்..

rapp said...

ரொம்ப நல்லா இருக்கு மேடம்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

rapp அதிரடியான அழகான உங்கள் மறுமொழிகளை பல பதிவுகளி பார்த்து அசந்துபோயிருக்கிறேன். என் பதிவில் இப்படி ஒற்றை வரி கமெண்டா.. :(
உங்க மெயில் ஐடி என்ன?

Anonymous said...

//அறிந்தோர் அறியாதோர்
யார் சொல்லிலும் இருக்கும் விசமும்
சட்டென்று ஏறிவிடுகிறது//

உண்மை. அறிந்தோர் அறியாதோர் வித்தியாசம் தெரிவதில்லை விஷத்திற்கு.

நல்ல கவிதை.

ராமலக்ஷ்மி said...

எல்லோரையும் போல எனக்கும் பிடித்தது அந்தக் கடையேழு வரிகள்!
கூடவே,
//எதிரான வார்த்தை
ஒவ்வொன்றும் பாதிக்கிறது//

விஷம் நீலமோ சிவப்போ,

//இது யார் சொன்னதென்று-தேடித்தேடி//

இப்படி, அதன் மூலத்தை தேடி

//அறியாதோரையும் அறிந்து கொண்டபின்//

மிஞ்சுவதெல்லாம் கசப்பொன்றே!

கயல்விழி said...

நல்லா இருக்கு கயல்விழி மேடம்.

சில சமயம் வார்த்தைகள் விஷத்தை விட கொடியவை.

துளசி கோபால் said...

இதோ பாருங்க ....இது நீலமா சிகப்பான்னெல்லாம் தெரியாது.
பாட்டிலில் 'விஷம்'னு எழுதி இருக்கணும்.

நாயகனோ நாயகியோ அந்த லேபிள் நமக்குத் தெரியுற மாதிரி கையில் வச்சுக்கிட்டுப் பாட்டுப் பாடணும். அட...சோகப்பாட்டுத்தாங்க.

அப்பதான் நம்புவேன். இந்திய சினிமாவில் இப்படித்தான்:-)

Anonymous said...

Ka Kavidhai nalla iruku but y sogam? :(

கானா பிரபா said...

//போன போஸ்ட் கருவிப்பட்டை தெரியாததால் திரும்ப பதிவிட்டேன்./

உங்களுக்கு அடிக்கடி இதுமாதிரி ஏற்படுகின்றது. நிச்சயம் சர்வதேச சதி இருக்க வாய்ப்பிருக்கின்றது.

விஷம் கவிதை தேன்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வடகரை வேலன் ரொம்ப நன்றிங்க..
நன்றி ராமலக்ஷ்மி.. எல்லாருக்கும் அந்த வரிகள் பிடித்தது எனக்கு மிக்க மகிழ்ச்சி..

----------
நன்றி கயல்விழி..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாங்க துளசி.. சரியா சொன்னீங்க.. பாட்டு உண்டு.. சோகமா பாடறாங்கன்னு நமக்கு தெரியும்..ஆனா பாக்கறவங்க பலருக்கு தெரியாதுங்கறமாதிரி கூட சில பாட்டு வரும்.. ஒருத்தர் அழறது தெரியாம சிரிச்சிக்கிட்டு இருப்பாங்க கூட இருக்கறவங்க என்ன கொடும துளசி அதெல்லாம்..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி ஸ்ரீ பயம் வேண்டாம். சோகம்பத்தி கவிதை எழுதினா எப்படி இருக்கும்ன்னு ஒரு சோதனை தான்..
-------------
நன்றி கானா
வெளிநாட்டு சதியா உள்நாட்டுசதியா?
ஆமாங்க அதுவும் கவிதைக்கும் பாட்டுக்கும் மட்டும் இப்படி சதி செய்வது நடக்குதுன்னா கவனிக்கனும் என்னன்னு :))

கோபிநாத் said...

\\இது யார் சொன்னதென்று-தேடித்தேடி
அறியாதோரையும் அறிந்து கொண்டபின்
அதில் என்ன வேறுபாடு?
\\

அருமை ;)

rapp said...

மேடம் என் கவிதைய படிச்சுமா என்கிட்டே இருந்து கவித ரசனைய எதிர்பார்க்கறீங்க? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்............ நாங்கெல்லாம் கவிதைய ரசிச்சு இதுக்கு மேல பெருசா பின்னூட்டம் போட்டோம்னா, கலாய்க்கறோம்னு அர்த்தம். இந்தளவோட கவித ரசனைய நிறுத்திட்டோம்னா, எதிராளிக் கவிதைய பார்த்து மரியாதைய காப்பாத்திக்க பின்வாங்கிட்டோம்னு அர்த்தம்:):):)

சென்ஷி said...

//rapp said...
மேடம் என் கவிதைய படிச்சுமா என்கிட்டே இருந்து கவித ரசனைய எதிர்பார்க்கறீங்க? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்............ நாங்கெல்லாம் கவிதைய ரசிச்சு இதுக்கு மேல பெருசா பின்னூட்டம் போட்டோம்னா, கலாய்க்கறோம்னு அர்த்தம். இந்தளவோட கவித ரசனைய நிறுத்திட்டோம்னா, எதிராளிக் கவிதைய பார்த்து மரியாதைய காப்பாத்திக்க பின்வாங்கிட்டோம்னு அர்த்தம்:):):)
//

அப்ப உங்களுக்கு போட்டியாத்தான் முத்துக்காவோட கவுஜ இருக்குதுன்னு சொல்ல வர்றீங்க இல்லையா :))

சென்ஷி said...

//கயல்விழி முத்துலெட்சுமி said...
சென்ஷி ஆயிலுக்கு ஏன் கண்டனம்? பதிவைப்படித்தா மட்டும் போதாது சில சமயம் பின்னூட்டத்தையும்படிக்கவேண்டும் என்று சொல்லிக்கொள்கிறேன்.. :)
//

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.... என்னைப்பார்த்து இந்த வார்த்தைய சொன்னதுக்கு :(((

பின்னூட்டத்துக்கு பதில் சொன்னா மட்டும் போதாது. பின்னூட்டம் எதை குறிக்குதுன்னும் யோசிக்கணும் :))

சென்ஷி said...

//கானா பிரபா said...
//போன போஸ்ட் கருவிப்பட்டை தெரியாததால் திரும்ப பதிவிட்டேன்./

உங்களுக்கு அடிக்கடி இதுமாதிரி ஏற்படுகின்றது. நிச்சயம் சர்வதேச சதி இருக்க வாய்ப்பிருக்கின்றது.
//

:((

என்ன கொடும சார் இது.. அக்கா பதிவுக்கு கூட எதிர்ப்பு அலையா.. அது என்ன சர்வதேச சதி.. ஏதோ நாங்க மலேசியா, சார்ஜா, ஆஸ்திரேலியாவோட கூட்டு சேர்ந்து கவுக்கறாமாதிரில்லா இருக்குது... :))

பரிசல்காரன் said...

//அறிந்தோர் அறியாதோர்
யார் சொல்லிலும் இருக்கும் விசமும்
சட்டென்று ஏறிவிடுகிறது.//

எவ்வளவு நிதர்சனமான வரிகள்!!

பதிவுக்கேற்ற புகைப்படத்துக்கு டபுள் சபாஷ்!

rapp said...

//அப்ப உங்களுக்கு போட்டியாத்தான் முத்துக்காவோட கவுஜ இருக்குதுன்னு சொல்ல வர்றீங்க இல்லையா //
அப்ப நான் எழுதினது கவிதைனு ஒத்துக்கறீங்களா சென்ஷீ???????????????
:):):)

rapp said...

//இதோ பாருங்க ....இது நீலமா சிகப்பான்னெல்லாம் தெரியாது.
பாட்டிலில் 'விஷம்'னு எழுதி இருக்கணும்.

நாயகனோ நாயகியோ அந்த லேபிள் நமக்குத் தெரியுற மாதிரி கையில் வச்சுக்கிட்டுப் பாட்டுப் பாடணும். அட...சோகப்பாட்டுத்தாங்க.

அப்பதான் நம்புவேன்//

:):):)

Kavinaya said...

நல்ல கவிதைங்க, கயல்விழி. சமயத்துல விஷமும் மருந்தாகுறது உண்மைதானே :)

யாரோ said...

கவிதை நன்கு ....சரள நடை பிடித்திருக்கிறது
நானும் ஒரு வலைப்பதிவு செய்துள்ளேன் பாருங்களேன்
valaikkulmazhai.wordpress.com
- கார்த்தி

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அய்யோ இது என் கவிதையா இப்பல்லாம் எழுதவே வரதில்ல.. யாரோ போட்ட கமெண்டால இன்னிக்கு இதை படிக்கிறேன்..

சென்ஷி.. :))
கோபி நன்றி
ராப்... தயக்கமில்லாம சென்ஷி யைப்போல கமெண்டலாம் .. நோ ப்ராப்ளம்..
-----
கவிநயா நன்றிங்க.. இருந்தாலும் நாம் நல்லதை விட தீயதைதானே பெரிசா எடுத்துக்கறோம்..

----------
யாரோ நீங்க எவரோ .. உங்க பின்னூட்டத்துக்கு நன்றிங்க.. வந்து பார்க்கிறேன் ..

சென்ஷி said...

:)

நான் ஒண்ணும் சொல்ல போறதில்ல..

சென்ஷி said...

//யாரோ நீங்க எவரோ .. உங்க பின்னூட்டத்துக்கு நன்றிங்க.. வந்து பார்க்கிறேன் ..//

ஆஹா..

கவுஜ..கவுஜ..

சென்ஷி said...

//ப்... தயக்கமில்லாம சென்ஷி யைப்போல கமெண்டலாம் .. நோ ப்ராப்ளம்..//

ஆமாம். ஆனால் நீங்க கவிதைய மாத்திரம் உங்க ஷ்டாய்ல்ல தான் எழுதணும் :)

மங்களூர் சிவா said...

ம். சிந்திக்க வேண்டிய வரிகள்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

மங்களூர் சிவா , நன்றி நன்றி.. :)

Iyappan Krishnan said...

nallarukku.

IMHO - romba vasana nadaiyaa irukku -

may be just me

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஜீவ்ஸ் இந்த லேபிள்ள இருக்கர விசயத்தை எல்லாம் பெரிசா எடுத்துக்காதீங்க... வசனமா இருந்தாலும் நல்லாருக்குன்னு ஒரு வார்த்தை போட்டீங்கள்ள அதான் வேணும் .. :)

சந்தனமுல்லை said...

நல்லாருக்கு மேடம்.
முன்னாடியே உங்க பதிவுல படிச்ச மாதிரி ஃபீலிங்!! உணர்ந்து படிச்சேன்!!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

முன்னாடியே எழுதினது தான் முல்லை..யாரோ ங்கறவர் போட்ட பின்னூட்டத்தில் மீண்டு வந்துவிட்டது.. :)