August 5, 2008

எதயாச்சும் எழுதணும்ல...எதாவது பெயரில் எழுதணும்ல :)

சுப்ரமணியபுரம் பார்த்தேன்... ம்.. நல்லா இருந்தது. நல்லபடம்ன்னா இப்ப கற்றது தமிழ், பருத்திவீரன் , சுப்ரமணியபுரம்ன்னு ஹிட் ஆகற எல்லாத்துலயும் ரத்தம் ரத்தம். மனசை தைரியமாக்கிட்டுத்தான் படம் பார்க்கனும்.

இந்த இயக்குனர்கள், திறமை இருக்கு நல்ல எடுக்கறாங்க, ஆனா கொஞ்சம் ரத்தம் குறைச்சு ஏ சர்டிபிகேட் வராம, குடும்பமா குழந்தைகளோடு பார்க்க அழகா நாலுபடம் செய்தா ... நல்லாருக்குமில்ல....இப்ப குழந்தைகள் இந்த படத்தைப் பார்க்கலயான்னா , பார்க்கிறாங்க ஆனா நல்லது இல்லை .

படத்தில் ஒவ்வொரு காட்சியும் கவனமா அந்த காலத்தை காட்ட முயற்சித்தது அழகு... லாட்டரி சீட்டு முன்பெல்லாம் ஆட்டோல மை க் செட் வைத்து அழகா கூப்பிட்டு வாங்க வைப்பாங்களே... அதுகூட இருந்ததே...
--------------------------------------------------------------------------
தமிழ்நதி வந்திருந்தாங்க... அவர்கள் வேலையாக வந்திருந்தாலும் எனக்காக நேரமொதுக்கி ஒரு கோடி தில்லியிலிருந்து மற்றொரு கோடிக்கு வந்து என்னை சந்தித்தார்கள்.. மங்கையும் அலுவலக வேலைப்பளுவை மறந்து வந்து சேர்ந்தார்கள். உள்ளே நுழைந்ததிலிருந்து அவங்க கேட்டது உங்களை எப்படி கூப்பிடுவது ... லெட்சுமின்னு கூப்பிட்டுக்கிட்டிருந்தோம்.. நீங்க முத்துலெட்சுமி ஆகிட்டீங்க.. சரி முத்துலெட்சுமின்னு கூப்பிட ப்ழகிக்கிட்டிருக்கறதுக்குள்ள கயல்விழிங்கறீங்க.. நான் எப்படி கூப்பிடுவது? நான் எப்படி கூப்பிடுவது ?

அப்பத்தான் அவங்க கஷ்டம் எனக்கு புரிந்தது. லெட்சுமி லக்ஷ்மியால் முத்துலெட்சுமி ஆனபோது பதிவு போட்டேன் . ஆனால் முத்துலெட்சுமி முழுப்பெயரானப்ப பதிவெல்லாம் போடவில்லை.. தானாக தெரியட்டும் என்று நினைத்துவிட்டேன். வழக்கம்போல என் பெயரின் அதிர்ஷ்டம் நானாக முழுப்பெயர் மாற்றிய நேரம் கயல்விழி வருண் வந்துட்டாங்க.. சிலர் குழம்புகிறதாக கேள்விபட்டேன் . ஆனால் அதற்காக பெயர் மாற்றுவதா என்று குழப்பம் தான். ஆனால் நதியைப்போல பலரும் கூப்பிடுவதில் முத்து முத்துக்கா என்றே பதிந்து கொண்டுவிட்டதாக சொல்லவும் தான்...
வழக்கம்போல மாற்றிவிட்டேன்..மாற்றுங்கள் என்று பதிவின் கேப்ஷன் குடுத்துவிட்டு நான் மாற்றுவது அடிக்கடி பெயரைத்தான் :)
---------------------------------------------------
தொடர்ந்து எதாவது டேக் போஸ்ட் போட்டு போட்டு வேறு எதுவும் எழுத தோணவில்லை. வேறு வேலையாக ஓடிக்கொண்டிருந்ததிலும் வேறு சில காரணத்தாலும் ஒரு டேக் போஸ்டுக்கு பழய பதிவைப்போட்டு ஓட்டிவிட்டேன். இப்போதெல்லாம் பதிவைப்படிக்க படிக்கவே சொல்லாமல் கொள்ளாமல் இணையம் வேலை யை நிறுத்திவிடுகிறது. சரி சிலநேரம் பதிவைபடிக்கவிட்டால் பின்னூட்டம் போட விடுவதில்லை. இதற்கு இடையில் பதிவைப்போட எங்கே தோன்றும்?

பாட்டுகேட்பதும், பாதியிலிருந்து படம் பார்ப்பதுமாக நேரம் போகின்றது.. எனக்கு மிகவும் பிடித்த தொலைகாட்சி பொதிகை . பலநாட்களாக எங்க கேபிள் காரங்க தராமல் இழுத்தடிச்சு இப்பொழுது தான் வருகிறது. 15 வருசம் முன்னால பார்த்தமாதிரியே இன்னும் தரம் கெடாமல் இருப்பதாக தெரிகிறது. வயலும் வாழ்வும் கூட இப்பவும் ஆர்வமா பார்க்கிறேன். ஆங்கிலம் கூட சொல்லித்தராங்க.

இன்னொரு தொலைகாட்சி நிகழ்ச்சி அமரிக்கன்'ஸ் ஃபன்னியஸ்ட் ஹோம் வீடியோஸ். நீங்க பார்த்திருக்கீங்களா ?

ஒரு முறை ஒரு காட்சி..
ஒரு குழந்தை ஹாலில் விழுந்து புரண்டு அழுதுச்சு ..அவங்கம்மா அப்படியே நடந்து கிச்சன்க்குள்ள போனாங்க..குழந்தை உடனே எழுந்து அழுகையை நிறுத்திட்டு ... நடந்து போய் கிச்சனுக்கு நேரா போய் விழுந்து மீண்டும் முன்போலவே அழுதுச்சு. அவங்கமா அப்படியே நடந்து அடுத்த அறைக்கு போனாங்க.. உடனே குழந்தை மறுபடி அழுகையை நிறுத்திட்டு எழுந்து நடந்து அம்மா கண்ணில் ப்டற இடமா போய் விழ்ந்து மீண்டும் அழுகை நாடகம். அவங்கம்மா மீண்டும் கிச்சனுக்கு இந்த குழந்தை மீண்டும் .. மீண்டும் மீண்டும்..
ஆகா அழகோ அழகு.
ஒரே ப்ரசவத்தில் பிறந்த இந்த நாலு பாப்பாக்களும் அம்மா மேல படுத்துக்கிட்டு சிரிசிரின்னு சிரிக்கறத பாருங்களேன்


குழந்தைகளும் நானும் அதை பார்க்க ஆரம்பித்துவிட்டோமானால் உலகமே மறந்துவிடுவோம்.

40 comments:

Thamiz Priyan said...

புதுசா கூட்டு என்று கலவையாக எழுதுவது நல்லா இருக்குக்கா.... :)

ஆயில்யன் said...

//பலரும் கூப்பிடுவதில் முத்து முத்துக்கா என்றே பதிந்து கொண்டுவிட்டதாக சொல்லவும் தான்...///

பேசாம (சாரி பேசிக்கிட்டே! ) நீங்க முத்தக்கான்னு பைனல் பண்ணி இன்னொரு பதிவு போட்டு டிக்ளர் பண்ணிடலாம்!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

தமிழ் பிரியன் கூட்டுக்கு ஹிண்ட் தந்துட்டு இப்ப கலவை(மிக்ஸர்) ன்னு இன்னோரு ஐடியாவேற குடுக்கிறீங்களே..சரி வேறயாராச்சும் பயன்படுத்திப்பாங்க.. :)கற்றது தமிழ் பருத்திவீரன் கண்டிப்பா பாருங்க ரத்தத்தை விட்டுட்டு பார்த்தா நல்லா இருக்கும்.
-----------
ஆயில்யன் ரொம்ப சரி.. பேசிக்கிட்டே தானே ஃபைனல் செய்யனும்.. ஆனா இதான்ஃபைனலா தெரியலயே.. :))
----------------
மங்கை எல்லாம் என் நேரம்.. இரண்டாம் சொக்கன் மாதிரியே தான் ..கூடுவிட்டு கூடு பாயறது வேற பேரு மாற்றுரது வேறயா என்ன? எல்லாம் ஏறக்குறைய ஒன்னு தான் இல்ல :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\பட் அவங்கம்மா இந்தம்மா மாதிரியெல்லாம் ரொம்ப பொறுமையா இருக்கமாட்டாங்க வைச்சு சாத்திப்புடுவாங்க :))))//

ஆமா ஆயில்யன் அவங்க கையில் இப்படி வீடியோ கேமிரா இருந்து அதை குடுத்தா காசு பரிசு கிடைக்கும்ன்னு தெரிஞ்சா சாத்தி இருக்கமாட்டாங்க.. :)
--------------------
//ஒரு முறை ஒரு காட்சி..
ஒரு குழந்தை ஹாலில் விழுந்து புரண்டு அழுதுச்சு ..அவங்கம்மா அப்படியே நடந்து கிச்சன்க்குள்ள போனாங்க..குழந்தை உடனே எழுந்து அழுகையை நிறுத்திட்டு ... நடந்து போய் கிச்சனுக்கு நேரா போய் விழுந்து மீண்டும் முன்போலவே அழுதுச்சு. அவங்கமா அப்படியே நடந்து அடுத்த அறைக்கு போனாங்க.. உடனே குழந்தை மறுபடி அழுகையை நிறுத்திட்டு எழுந்து நடந்து அம்மா கண்ணில் ப்டற இடமா போய் விழ்ந்து மீண்டும் அழுகை நாடகம். அவங்கம்மா மீண்டும் கிச்சனுக்கு இந்த குழந்தை மீண்டும் .. மீண்டும் மீண்டும்..
ஆகா அழகோ அழகு.///


இது நான் நிறைய தடவை பார்த்திருக்கேன் எங்க தெரு பக்கதுலயே ஒரு குட்டி இப்படித்தான் எப்ப பார்த்தாலும் ”ஓ”ன்னு அழுதுக்கிட்டே இந்த மாதிரி பண்ணும்!

பட் அவங்கம்மா இந்தம்மா மாதிரியெல்லாம் ரொம்ப பொறுமையா இருக்கமாட்டாங்க வைச்சு சாத்திப்புடுவாங்க :))))
------------------
\\தமிழன்... said...

முடிவா என்ன பெயரில எழுதப்போறிங்க...:)//
நல்லவேளை முடிவா என்னதான் எழுதலாம்ன்னு இருக்கீங்கன்னு பதிவில் விசயம் இருக்குமான்னு கேக்கலை.. :)
கூட்டு டேக் அப்ப நல்லா இருக்குங்கறீங்க...
சமையல் சாப்பாடு தானே மனுசனுக்கு மிக முக்கியமானது அத மறந்துட்டு வேறென்ன செய்யமுடியும்...
--------------------

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வல்லி... வல்லி ... ரெண்டும் சேர்ந்து தான்ங்க முழுப்பேரு .. முழுப்பேரை இப்ப திருப்பி போட்டிருக்கேன்.. இந்த பெயரின் கதை கேட்டு பாவம் தமிழ்நதி கூட அன்னைக்கு மயங்கி விழப்போனாங்க..

சென்ஷி said...

:)

சந்தனமுல்லை said...

ஒரு சந்தேகம்..ரெண்டுமே உங்க பேரான்னு..ஏன்னா, முத்துலட்சுமியா நீங்க எழுத ஆரம்பிச்சதிலிருந்து படிக்கறேன். நடுவுல கயல்விழியையும் சேர்த்துட்டீங்களா..உங்க அம்மா பேரோன்னு நினைச்சேன்..?! அப்புறம், பொதிகை அப்படியேதான் இருக்கு!! ஆனா, செய்திகள் மட்டும் பார்க்கறதோட சரி..

சுப்ரமணியபுரம் - நீங்க சொன்னத ஒத்துக்கிறேன். பாதி படம் நல்லா போன மாதிரி இருக்கும்போது, திடீர்னு யாராவது ஒருத்தர் செத்துகிட்டே இருக்காங்க...அதுவும் ரத்தம் தெறிக்க..தெறிக்க..

ஹோம் வீடியோஸ் - சுட்டி டீவி லேர்ந்தா?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சென்ஷி :)
---------------
சந்தனமுல்லை ரெண்டுமே சேர்ந்து தாங்க முழுபெயர்..கையெழுத்துபோடுங்கன்னு யாராவது சொன்னா நான் போட ரொம்ப நேரம் ஆகும்.. இவ்வளவு பெரிசா எழுதனும் இல்ல..

அந்த வீடியோ எங்களுக்கு ஹிந்தியில் sab ன்னு ஒரு டிவி வருது அதுல வரும் லின்க் இருந்தா தேடி தருகிறேன்.

பரிசல்காரன் said...

அருமையாக இருக்கு முத்தக்கா.

இந்த மாதிரியே அடிக்கடி எழுதுங்க..

ப்ளீஸ்..

பரிசல்காரன் said...

//இந்த இயக்குனர்கள், திறமை இருக்கு நல்ல எடுக்கறாங்க, ஆனா கொஞ்சம் ரத்தம் குறைச்சு ஏ சர்டிபிகேட் வராம, குடும்பமா குழந்தைகளோடு பார்க்க அழகா நாலுபடம் செய்தா ... நல்லாருக்குமில்ல....இப்ப குழந்தைகள் இந்த படத்தைப் பார்க்கலயான்னா , பார்க்கிறாங்க ஆனா நல்லது இல்லை .//

இதை கன்னாபின்னாவென வழிமொழிகிறேன்.

மீராவுக்கு க்ரியேட்டிவிட்டி அதிகம். அவளுக்கு அட்வர்டைசிங் ஃபீல்டுல டைரக்டராகணும்ன்னு ஆசை. அதுனால நான் போற எல்லா படத்துக்கும் குடும்பத்தோட போக ஆசைப்படுவேன்.

சுப்பிரமணியபுரம் பாக்கறதுக்காக மீரா, மேகாவை கோவைல ப்ரதர் இன் லா வீட்டுல விட்டுட்டு, போனேன்! (லக்கிலுக் விமர்சனத்துல குழைந்தைகளை தவிர்க்கச் சொல்லீருந்தார்)

படத்துல சில சீன்ல, உமாவே கண்ணை மூடி உக்கார்ந்துட்டா!

அந்தப் பாட்டைப் பத்தி சொல்லவே இல்லியேக்கா நீங்க?

பரிசல்காரன் said...

//மாற்றுங்கள் என்று பதிவின் கேப்ஷன் குடுத்துவிட்டு நான் மாற்றுவது அடிக்கடி பெயரைத்தான்//

:-)))))

மிக ரசித்தேன்!

பரிசல்காரன் said...

//வேறு வேலையாக ஓடிக்கொண்டிருந்ததிலும் வேறு சில காரணத்தாலும் ஒரு டேக் போஸ்டுக்கு பழய பதிவைப்போட்டு ஓட்டிவிட்டேன். //


உங்க பங்களிப்பு இருக்கணும்ன்னு நெனச்சேன். அது எந்தமாதிரி இருந்தாலும் சரி.

பெரிய எழுத்தாளர்கள் கிட்ட, நேரமின்மையால் அவங்க பழைய சரக்கை வாங்கித்தான் பத்திரிகைகள் போடும்!

பரிசல்காரன் said...

//குழந்தை மீண்டும் .. மீண்டும் மீண்டும்..
ஆகா அழகோ அழகு//

குழந்தைகள் எப்போதுமே அழகுதான்..
இன்று அதைத்தான் கவிதை செய்ய முயன்றிருக்கிறேன் நான்...

MyFriend said...

எல்லாம் கலந்து எழுத ஆரம்பிச்சிட்டீங்களே? நல்லா இருக்கு..

அப்புறம் உங்க பேரை முத்துலெட்சுமி-கயல்விழிங்கிறதுக்கு பதிலா "முத்துக்கா"ன்னு போடுங்க. எங்களுக்கு எல்லாம் பிடிச்ச பெயர் அதான். :-)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பரிசல்காரரே தினம் பதிவு போட்டு வாங்கிய பின்னூட்டத்துக்கெல்லாம் சேர்த்து மொய்யா..
\\பெரிய எழுத்தாளர்கள் கிட்ட, நேரமின்மையால் அவங்க பழைய சரக்கை வாங்கித்தான் பத்திரிகைகள் போடும்!//
என்னது இது ? கோபமிருக்கலாம் அதுக்காக இவ்வளவு இருக்கக்கூடாது. :)

பாட்டுபத்தி தான் எல்லாரும் சொல்லிட்டாங்களேன்னு விட்டுட்டேன் போல...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

america's funniest home videos போய்ப்பாருங்க

அதுவும் ஒரே ப்ரசவத்தில் பிறந்த இந்த நாலு பாப்பாக்களும் அம்மா மேல படுத்துக்கிட்டு சிரிசிரின்னு சிரிக்கறத பாருங்களேன்

Anonymous said...

பேசாம முத்தக்கான்னு மாத்திருங்க. அப்படித்தான் எல்லாரும் உங்களை கூப்பிடறாங்க

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சின்ன அம்மிணி... அப்ப என்ன விட பெரியவங்க என்ன செய்வாங்க..(ஏற்கனவே பெரியவங்கள்ளாமும் அக்கான்னு தான் கூப்பிடறாங்க ) :)

குசும்பன் said...

பேசாமல் பேருக்கு பின் 1434356223222335454542321664654564 என்று சுருக்கமாக உண்மைதமிழன், டோண்டு போல் டக்குன்னு மனதில் பதியும் படி பெயருக்கு பின் 32 டிஜிட்டில் நம்பர் சேர்த்துக்கிட்டா குழப்பம் தீர்ந்துவிடும்:)))

Anonymous said...

நீங்கதான் சொர்ணா அக்கான்னு சொன்னங்களே!

rapp said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......................நீங்க கூட எனக்கு ஒரு வார்த்தை சொல்ல மாட்டேங்கறீங்களே இன்னைக்கு புதுப் பதிவு போட்டிருக்கேன்னு(நான் ஒரு தடவையாவது மீ த பர்ஷ்டு போடனும்னு பாக்கறேன், ம்ஹூம்)

rapp said...

சுப்பிரமணியப்புரம் நல்லாத்தான் இருந்திச்சி, ஆனா எக்கச்சக்க தடவை பார்த்த கதையே திரும்ப பாக்கிற மாதிரி இருந்திச்சி. வர வர பாசக்கார பயகன்னா நாலு பேரை போட்டுத்தள்ளிட்டு குற்ற உணர்ச்சி இல்லாம சுத்திக்கிட்டு இருக்கறவங்களோன்னு ஒரு சந்தேகத்தை இப்போ நெறைய படங்கள் ஏற்படுத்துது.

rapp said...

நீங்க இங்க கொடுத்திருக்க பெயர் விளக்கம் பின்நவீனத்துவ வாதியா நீங்க மாறிக்கிட்டு வரீங்களோன்னு எனக்கு பயமாகி இருக்கு, அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.................

rapp said...

நீங்க பொதிகய பிடிக்காதுன்னு டைரக்டா சொல்லிருக்கலாம், இப்படி தரம் நிரந்தரம்ங்கர ரேஞ்சுல பயங்கர உள்குத்தோட நக்கலடிச்சிருக்கீங்களே

கோவை விஜய் said...

பயங்கரவாதத்தை விட மனித இனத்திற்கு அதிக அழிவைத்தர காத்திருக்கும் "குளோபல் வார்மிங்" பற்றிய

விழிப்புணர்வுக்காக நாளை ( 08-08-2008) இரவு எட்டு மணிக்கு எட்டு நிமிடங்கள் மின்சார

விளக்குகளையும்,மின் சாதனங்களையும் உபயோகிப்பதை முற்றிலும் தவிர்ப்போம்.

உலகில் வெப்பமயமாதலின் தீமைகளை எதிர்க்க அணி திரள்வோம்


ஒன்றுபடுவோம்
போராடுவோம்
தியாகம் செய்வோம்

இறுதி வெற்றி நமதே


மனிதம் காப்போம்
மானுடம் காப்போம்.

இயற்கை அன்னையை வணங்கி மகிழ்வோம்.


கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/

ராமலக்ஷ்மி said...

சுஜாதாவின் "கற்றதும் பெற்றதும்" வாசித்த மாதிரி ஒரு ஃபீலிங். இந்தப் பாணி அருமை. தொடரட்டும்.

ராமலக்ஷ்மி said...

//அம்மா கண்ணில் ப்டற இடமா போய் விழ்ந்து மீண்டும் அழுகை நாடகம்.//

:))! இந்த நாடகத்தை அனுபவித்துச் செய்யும் பல குழந்தைகளைக் கண்டு ரசித்திருக்கிறேன்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

குசும்பன் ...பாதிப்பேரை படிச்சிட்டு அவசரமா ஓடறவங்க நம்பரைத்தானா சரியா கவனிக்கப்போறாங்க. ஆனா நிலமை அந்த அளவுக்கு போகுமான்னு பொறுத்து இருந்து தான் பார்க்கனும் ..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\ நீங்கதான் சொர்ணா அக்கான்னு சொன்னங்களே!//

யாரோ என்ன? வாலு துர்க்கா... நீதானே சொல்லிட்டுக்கிருந்த..:)

---------------------
ராப் பொதிகையைப்பிடிக்காது ன்னு சொல்லி இருக்கலாமா.. அப்படி சொலல்லையே நல்லா இருக்கு இன்னமும்ன்னு சொன்னேன்.. ஒரு வேளை இப்பயும் பிடிக்குதுன்னா வயசாகிடுச்சோ எனக்கு ... :)
மீ த பர்ஸ்ட் போட எல்லாம் சேட் ல அவள்யபிளா இருக்கனும்..
-------------------------
ராமலக்ஷ்மி என்னப்பா இது ? என்னென்னவோ எழுதி இருக்கீங்க.. கூட்டு அப்பப்ப செய்யலாம்..ஆனா நாலுபதிவு விசயத்தை ஒரு பதிவா போடறாதான்னு தான் யோசனை.. ;)

துளசி கோபால் said...

தில்லி விமான நிலையத்தில் பொழுதுபோகாம உக்கார்ந்து இருந்தப்ப,

அங்கே இருக்கும் ஒரு சுவரில் 'முத்துலட்சுமி வீட்டுக்குப் போகும் வழி'ன்னு வரைபடம் போட்டுவச்சுட்டு வந்ததுக்கு நல்ல பலன் இருக்குபோல இருக்கே:-))))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஓ துளசி அப்படியா விசயம்... சரி சரி.. அப்ப பெயரை திருப்பிப்போட்டதும் நல்லதுன்னு சொல்லுங்க..இல்லாட்டி யாரோ எவரோன்னு விட்டிருப்பாங்க முத்துலெட்சுமி வீட்டுக்குவழின்னில்ல எழுதி இருந்திருக்கீங்க..

உமா said...

i too liked amazing videos of kids

உமா said...

எதையாச்சும் இப்ப Tag ல எழுதுங்க!

Anonymous said...

சரி முத்துஅக்கா, நாங்க இனி இப்படியே கூப்பிடறோம்!

அன்பு தம்பி
அபிஅப்பா

முத்துலெட்சுமி/muthuletchumi said...

உமா மறுமொழிக்கு நன்றி.. எழுதியே நாளாகிப்போனதால் பேப்பர் பேனாவில் எழுத டச் விட்டுப் போனதுமாதிரியே இதுவும் ஆகிடக்கூடாதுல்லயா ..எதயாச்ச்சும் எழுதித்தான் ஆகனும்.. :)
----------
தம்பி அபி அப்பா.. வாங்க.. எல்லாபேருக்கும் போட்டி வந்தா உங்களமாதிரி சபரி அம்மான்னு வச்சிக்கறேன்..

கானா பிரபா said...

ஆஹா 43 பேர் பின்னூட்டியும் என் கண்ணில் படாமப் போச்சே இந்தப் பதிவு.

நீங்க இப்படி பாகம் பாகமா பரிமாறும் பதிவு சமையல் சிறப்பா இருக்கு.

சுப்ரமணியபுரம் நானும் கடந்த வாரம் பார்த்தேன் இன்னும் பாரம் இறங்கவில்லை. அதனால் தான் வீடியோ போஸ்ட் போட்டு ஆத்திக்கிட்டேன்.

பொதிகையில் வயலும் வாழ்வும், வெள்ளி வரும் ஒலியும் ஒலியும், நாடகத்தனம் இல்லாத பேட்டிகள் பார்க்க எனக்கும் பிடிக்கும். ஆனா நான் இருப்பது பொதிகை இல்லாக் காடாச்சே

Anonymous said...

//பரிசல்காரன் said...
அருமையாக இருக்கு முத்தக்கா.

இந்த மாதிரியே அடிக்கடி எழுதுங்க..

ப்ளீஸ்..//

repeateeeeeeee

கோபிநாத் said...

நான் 46..;))

அக்கா..நீங்க என்ன பெயர் வச்சாலும் எங்களுக்கு கவலை இல்ல..எங்களுக்கு அக்கா தான் ;)

பதிவும் கலக்கல்....நல்ல ஸ்பீடு ;)

மங்களூர் சிவா said...

நல்லா இருக்கு அவியல்.
குசும்பன் சொன்னதை ட்ரை பண்ணலாம்
:)

மங்களூர் சிவா said...

குடும்பத்துடன் பார்க்கும்படியான சினிமா எடுப்பது எப்படி