இந்த வாரம் மகளுடைய பள்ளியில் மகன் சேர்க்கைக்கு தேர்வான முடிவு தெரிந்தது. ஆன்லைனில் ஃபார்ம் பூர்த்தி செய்து , ஆன்லைனிலேயே அழைப்புப்பார்த்து நேர்முகத்தேர்வு முடிந்ததும் ஆன்லைனிலேயே முடிவும் தெரிந்துகொண்டாயிற்று."அட அந்தக்காலத்துல நாங்கள்ளாம் இண்டர்வியூவா போனோம் " என்ற தோழமைகளிடம் " சரிதான்ப்பா நாங்களும் தான்" என்று சொல்லிவிட்டு உள்ளூர ஒருவிதமான கலக்கத்தோடு இருந்தேன்.
நாங்கள் தமிழ்நாடு செல்லவேண்டியிருந்த தினங்களில் தான் சரியாக எல்லா பள்ளிகளும் தங்கள் விண்ணப்பங்களை வாங்க வேண்டிய தேதிகளையும் திரும்ப கொடுக்கும் தேதிகளையும் வைத்திருந்தார்கள். எனவே நன்றாக தெரிந்துவிட்டது . அக்காவின் பள்ளியில் தம்பியை போட்டாலொழிய வேறு வழியில்லை. ஆனால் அவர்களும் இன்னோரு பிள்ளை தங்கள் பள்ளியில் என்றாலும் அதற்கு ஒன்றும் உறுதி அளிக்க முடியாது என்கிறார்கள். ப்ளே ஸ்கூல் டீச்சர் அறிவுரையில் நாங்கள் பள்ளி தலைமையாசிரியை இடம் அக்காவின் பெருமைகளை சொல்லி தம்பிக்கு இண்டர்வியூ கால் செய்வதை தள்ளிவைக்க சொல்லிவிட்டு சென்றோம். தன்னால் ஆனதை செய்வதாக சொன்னார்கள். அதுவே பெரிது இந்த காலத்தில்.
தில்லி திரும்பியதும் பார்த்தால் , இனி இண்டர்வியூ அழைப்பு வராது என்று இணையத்தில் போட்டிருந்த செய்தி மேலும் அதிர்ச்சி. மீண்டும் படையெடுத்து தலைமை ஆசிரியை பார்த்து இண்டர்வியூ தேதி வாங்கியாயிற்று. முதல் கட்டமாக கலரிங் .. உள்ளே நுழையவே சில குழந்தைகள் அழுது தேம்ப இவர் தலையை சொரிந்தபடி உள்ளே போய் சின்ன சின்ன நாற்காலியில் உட்கார்ந்தார். வண்ணம் தீட்டுதல் மும்முறமாக செய்யும் போது ஒரு முறை நிமிர்ந்து என்னை கவனித்தான். போதும் அவனை டென்சனாக்காதே என்ற மறுபாதியின் மிரட்டலுக்கு பயந்து தொடரவில்லை. ( வெளியே வந்ததும் " நீ என்னை பார்க்கவே இல்லையே அம்மா என்றான்" :)... ) வண்ணம் தீட்டுதலுக்கு இடையில் ஆசிரியை ஓரிரண்டு கேள்விகள் கேட்டார். ஆனால் அவை என்ன என்ன என்று சொல்லவே இல்லை இன்று வரை."குச் நஹி ஹை அம்மா"தான் பதில்.
எங்களையும் உள்ளே அழைத்து எங்கள் முன்னிலையில் ஒரு ஹெலிக்காப்டர் புதிரை கொடுத்தார்கள் அவர் தான் புதிரில் புலியாயிற்றே மேலும் அவன் ப்ளே ஸ்கூலிலும் இது பயிற்சி அளிக்கப்பட்டதே என்பதால் கண்மூடி திறப்பதற்குள் முடித்துவிட்டான். நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம். பின்னர் பேட்டர்ன் போர்ட் ..மற்றும் ஞாபகத்திறனுக்கான ஒரு சோதனை . அவன் பெயர் ப்ளே ஸ்கூல் பெயர் எல்லாம் சரியாக பதில் சொல்லிவிட்டான். நன்றி என்றபடி எங்களை வெளியே செல்ல அனுமதித்தார் ஆசிரியை. ஆனால் வரும்போதே அத்தனையும் செய்தால் மிட்டாய் கிடைக்கும் நன்றி சொல்லவேண்டும் என்று பழக்கியதால் மிட்டாய் தரவில்லையே என்று ரகசியமாக என்னிடம் கேட்டுக்கொண்டான். பின்னர் நாங்களே வெளியே வாங்கிக்கொடுத்தோம்.
இரண்டாம் கட்டமாக ஒரு கான்ஸ்ப்ரன்ஸ் ஹாலில் பெற்றவர்கள் அனைவரும் அமரவைக்கப்பட்டனர். ப்ரின்ஸி மற்றும் தலைமையாசிரியை முன் பெற்றவர்கள் பெயர் , படிப்பு வேலை பற்றி சிறு அறிமுகம் தரவேண்டும். மற்றொரு குழந்தை இருந்தால் அவர்கள் எங்கே படிக்கிறார்கள் என்று குறிப்பிட சொன்னார்கள்.என் வாழ்நாளில் எனக்கு இது தான் முதன் முறையாக்கும், இத்தனை பேர் முன்னிலையில் இப்படி ஆங்கிலத்தில் அறிமுகப்படுத்திக்கொள்வது.. டெக் தீபாவிடம் நேர்முகத்தேர்வுக்கு நான் தனியாக பயிற்சி எடுத்தேனாக்கும் ஸ்கைப்பில்...:) சிலர் ஆகா ஊஹூ என்று டம்பம் அடித்தார்கள். என் கம்பெனி வேல்யூ அது இது .. என் குழந்தை இந்த வயசில் இத்தனை சிறப்பா பார்க்கமுடியாது என்று .. ஆனால் அவர்களுக்கு கிடைக்கவில்லை என்பது அடுத்த நாள் கதை.
[மகளின் பள்ளி ஒரு கல்லூரியைப்போல இருக்குமே தவிர படோடபம் இருக்காது.
இதற்கான முடிவு தெரியும் முன் எதற்கும் இருக்கட்டுமென்று இன்னொரு பள்ளியிலும் போட்டுவைத்திருந்தோம் அங்கே அது பள்ளியா இல்லை ஹோட்டலா என்று எண்ணும் படி இருந்தது வரவேற்பரை.. பள்ளி ஏக்கர்களை வளைத்துப்போட்ட பெரும் இடம். 3 ஆண்டுகளாகத்தான் நடக்கிறது என்றாலும் 1870 ல் இருந்தே அவர்களுக்கு கல்விப்பாரம்பரியம் இருக்கிறது. கல்லூரி நடத்தி வருகிறார்களாம். உள்ளே நுழைந்ததும் குழந்தைகளைக்கவர சிறு வீடு,ஓக்கே ப்ளே ஐயிட்டங்கள் சறுக்கு , சீசா. அந்த சிறுவீட்டில் நுழைந்ததும் இங்கே கிச்சன் எங்கே அம்மா? என்கிறான் பையன்.. :)அங்கே இன்னும் முடிவு வரவில்லை 1 ம் தேதி தான் ஆன்லைனில் வரும்.]
பணம் கட்டும் தினத்தில் தலைமையாசிரியை மிக அழகான ஒரு உரையாற்றினார். மகளின் பள்ளி எளியோருக்கான ஒரு இலவசப்பள்ளியை நடத்திவருகிறார்கள். அதற்கான ஒரு சிறு தொகையை அளிப்பது ஆயிரக்கணக்கில் பணம் செலுத்தி நம் பிள்ளைகளின் கல்வியை தொடங்கும் நேரத்தில் மனநிறைவைத்தரும் என்றார். அவர்கள் கையில் கொண்டுவரச் சொன்ன அளவு பணத்திலே 5000 ரூ பள்ளிக்கட்டணத்தோடு அதிகமாக சொல்லி இருந்திருக்கிறார்கள் என்பதால் செக் இல்லை என்றோ பணம் இல்லை என்றோ ஆகாது. உங்களுக்கு மனநிறைவைத்தரும் என்றால் 5000ரூ தரலாம். இல்லை என்றாலும் இல்லை. ஆனால் பொதுவாக அப்படிப்பட்ட நிலையில் தருவதே ஒரே வழி. அதை மனநிறைவோடு தருகிறார்களா கட்டாயமாக நினைத்துத் தருகிறார்களா என்பது தான் வித்தியாசம்.
ஒரு தந்தை எழுந்து, நாங்கள் குழந்தைகளுக்கு உடைகள் கொண்டுவந்து தரலாமா ? என்று கேட்டார். தலைமையாசிரியை அழகாக இல்லை அது அவர்களின் தன்மானத்தை பாதிக்கும் என்றார். அவர் மீண்டும் பழைய உடைகள் அல்ல புதியவைகளே பண்டிகை மற்றும் விசேச தினங்களில் பகிர்வுக்கு மறுப்பில்லை என்றார்.
எளியவர்களின் குழந்தைகளுக்கான நேரம் மதியத்தில் தொடங்குகிறது. அவர்களுக்கு முழுப்பள்ளியிலும் நடமாட மற்றும் வசதிபடைத்தோரின் குழந்தைகள் அனுபவிக்கும் அத்தனை பொருட்களும் பங்கிடப்படுகிறது என்று கூறினார். கணினி போன்ற பள்ளியின் பொருட்கள்.அப்பள்ளியில் வாலண்டியராக ஆசிரியைப்பணி செய்ய அழைப்பு விடுக்கிறார்கள்.
பள்ளிக்கும் எங்களுக்குமான தொலைவு அதிகமென்பதால் அங்கே வாலண்டியராக இணைந்து செயல்பட தற்போது இயலவில்லை . ஒருவேளை மெட்ரோ எங்கள் பகுதியில் வந்துவிட்டால் முயற்சிக்கலாம் என்று ஒரு எண்ணம்.
புதிய தலைமையாசிரியை வந்த இவ்வருடத்தில் எளியவருக்கான பள்ளியின் சில குழந்தைகளில் மிக அறிவார்ந்த பிள்ளைகள் பகல் பள்ளிக்கு மாற்றப்பட்டிருக்கிறார்கள் என்பது எங்களுக்கு புதிய செய்தியாக இருந்தது.
வீட்டுக்கு வந்ததும் மகளிடம் முதல் கேள்வியாக அவர்களைப்பற்றியே கேட்டேன். மகளின் பதில் கேட்டதும் மிக ஆச்சரியமாகவும் அதே சமயம் மகிழ்ச்சியாகவும் இருந்தது. மேல் வகுப்பில் தான் இந்த புது சேர்க்கை நிகழ்ந்திருக்கிறது என்று அந்த அக்காமார்களின் பேச்சில் மகிழ்ச்சி இருந்ததாகவும்.. இந்த எளியவர்களின் குழந்தைகளின் மிக அன்பான கனிவான அணுகுமுறையை அவர்கள் இதற்கு முன் அவர்கள் வகுப்பின் தோழிகளிடமிருந்து கூட் பெற்றதில்லை என்றும் சொன்னார்களாம்.
உனக்கு இடம் கிடைத்துவிட்டதுடா ! என்ற குதூகலத்தைப்பார்த்து அவனுக்கு ஆச்சரியம். அவன் சொன்னது என்னவென்றால்...
அம்மா ஏக் நஹித்தோ தூஸ்ரே மே பேட்டூங்கா , ஜஹாத்தோ ஹே ன்னா... பர் மே ஆகே பேட்டூங்கா" ("அம்மா அங்கே நிறைய இடம் இருந்ததே ஒன்று இல்லாவிட்டால் இன்னோன்று.. உட்கார்ந்துக்குவேனே.. ஆனா நாம் முன்னாடி உக்காந்துக்குவேன்.. ")
47 comments:
அருமையா எழுதியிருக்கீங்கக்கா.. ஏதோ நேர்ல பேசிக்கேட்டா மாதிரியே ஒரு ஃபீலிங்..
தம்பிக்கு பதிலா உங்களுக்கு டெஸ்ட் வச்சிருக்கனும்:-)))
நாங்கல்லாம் ஸ்கோல்ல ஜாயின் செய்யறச்ச இவ்ளோ கஷ்டப்பட்டதில்ல. வலது கையால தலைய சுத்தி காத தொடுடாம்பாரு வாத்தியாரு. நாங்கல்லாம் ஈசியா தொட்டு அட்மிசன் வாங்கிட்டோம். இப்ப இவ்ளோ கஷ்டமா?!
கோபி சொன்னாப்ல கல்யாணத்த பத்தின யோசனைய மறு ஆய்வு செய்யணும் போலருக்குது :)
தம்பி மாயவரம் போய் வந்த கதை எல்லாம் எழுதுங்க மேடம்!!
சபரியோட டிரெயினிங் அப்படி.. அதான் கலக்கிட்டான்.. :)
///சென்ஷி said...
நாங்கல்லாம் ஸ்கோல்ல ஜாயின் செய்யறச்ச இவ்ளோ கஷ்டப்பட்டதில்ல. வலது கையால தலைய சுத்தி காத தொடுடாம்பாரு வாத்தியாரு. நாங்கல்லாம் ஈசியா தொட்டு அட்மிசன் வாங்கிட்டோம். இப்ப இவ்ளோ கஷ்டமா?! ////
ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டே
//சென்ஷி said...
அருமையா எழுதியிருக்கீங்கக்கா.. ஏதோ நேர்ல பேசிக்கேட்டா மாதிரியே ஒரு ஃபீலிங்..
//
பதிவு ரொம்ப பெருசாயிருக்குன்னு உள்குத்து வச்சு பேசறேன்னு யாரும் நெனைச்சுடக்கூடாதுன்னு இந்த பின்னூட்டத்த போட்டுட்டு போறேன் :)
அண்ணாத்தைக்கு இனிய வாழ்த்து(க்)கள்.
அந்த இலவசப்பள்ளி கான்ஸப்ட் அருமையா இருக்கேங்க. கூடுதல் காசு அஞ்சாயிரமுன்னாலும் உன்மையில் மனநிறைவு தருது இல்லையா?
அங்கங்கே சில பள்ளிகளில் அநியாயத்துக்கு ஃபீஸ் வாங்கறாங்கன்னு படிச்சேன்.
அக்காவின் 'பெருமைகளுக்கு' ஒரு ஓஓஓஓஓஓஓஓஓ போட்டுக்கவா?:-))))
முத்து சிஸ்டர்..
நல்ல அனுபவந்தான்.. டெல்லின்னு இல்ல.. திண்டுக்கல்லகூட இப்ப இப்படித்தான்.. ப்ரீ கே.ஜி. சேர்ப்பதற்கு அப்பா, அம்மாவின் பயோ-டேட்டாவை வாங்கிப் படித்துவிட்டு, அம்மா ப்ளஸ்டூ என்றவுடன் சீட் இல்லை என்று சொல்லிவிட்டார்கள். நண்பன் கொதித்துப் போய் காரணம் கேட்க வெறும் ப்ளஸ்டூ வரையிலும் படித்திருக்கும் ஒரு அம்மாவினால் எங்க ஸ்கூல் செலபஸிற்கு வீட்டுப் பாடம் சொல்லித் தர முடியாது.. ஸாரி.. நீங்க வேற ஸ்கூல் பார்த்துக்குங்க என்றார்களாம்..
இதெல்லாம் ஒரு முப்பத்தியஞ்சு வருஷத்துக்கு முன்னாடி செஞ்சிருந்தா நானெல்லாம் ஸ்கூலுக்கே போயிருக்க முடியாது..
எங்கம்மா கைநாட்டு.. எங்கப்பா அஞ்சாவது.. சூப்பரா இருக்குல்ல சிஸ்டர்..
//தலைமையாசிரியை மிக அழகான ஒரு உரையாற்றினார். மகளின் பள்ளி எளியோருக்கான ஒரு இலவசப்பள்ளியை நடத்திவருகிறார்கள். அதற்கான ஒரு சிறு தொகையை அளிப்பது ஆயிரக்கணக்கில் பணம் செலுத்தி நம் பிள்ளைகளின் கல்வியை தொடங்கும் நேரத்தில் மனநிறைவைத்தரும் என்றார்///
அருமையான விசயம்!
இருப்பவர்கள் தம் பிள்ளைகளை நன்றாக படிக்கவைப்பதோடு இல்லாதவர்களுக்கும் மறைமுகமாக உதவியதில் ஒரு திருப்தி இருக்கும்!
வாழ்த்துக்கள் பள்ளிக்கும் அதில் பயிலபோகும் சபரிக்கும்! :))))
//சென்ஷி said...
அருமையா எழுதியிருக்கீங்கக்கா.. ஏதோ நேர்ல பேசிக்கேட்டா மாதிரியே ஒரு ஃபீலிங்..
///
ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்
//சென்ஷி said...
அருமையா எழுதியிருக்கீங்கக்கா.. ஏதோ நேர்ல பேசிக்கேட்டா மாதிரியே ஒரு ஃபீலிங்..
//
//அபி அப்பா said...
தம்பி மாயவரம் போய் வந்த கதை எல்லாம் எழுதுங்க மேடம்!!
//
என்னது?
அமீரகமே ஒரே உள்குத்து வைச்சு கமெண்டியிருக்கற மாதிரி தெரியிது (இதுல நான் ஒரு உள்குத்தும் வைச்சு பேசலைப்பா!!!)
//சென்ஷி said...
நாங்கல்லாம் ஸ்கோல்ல ஜாயின் செய்யறச்ச இவ்ளோ கஷ்டப்பட்டதில்ல. வலது கையால தலைய சுத்தி காத தொடுடாம்பாரு வாத்தியாரு. நாங்கல்லாம் ஈசியா தொட்டு அட்மிசன் வாங்கிட்டோம். இப்ப இவ்ளோ கஷ்டமா?!
//
ஆமாம்ண்ணே!!!
உங்க காலத்தில எல்லாம் அப்படித்தான் இருந்து அப்புறம் எங்க காலத்துல மாத்திட்டாங்க எண்ட்ரன்ஸ் எக்ஸாமா?
:))))))
வாழ்த்துக்கள் முத்துலெட்சுமி!!
சமத்துப் பையன் இல்லையா!! நேர்முகத்தேர்வு என்றாலே ஒருவித பரபரப்பு நம்மைத் தொற்றிகொள்ளவது உண்மை!! :-)
//சென்ஷி said...
நாங்கல்லாம் ஸ்கோல்ல ஜாயின் செய்யறச்ச இவ்ளோ கஷ்டப்பட்டதில்ல. வலது கையால தலைய சுத்தி காத தொடுடாம்பாரு வாத்தியாரு. நாங்கல்லாம் ஈசியா தொட்டு அட்மிசன் வாங்கிட்டோம். இப்ப இவ்ளோ கஷ்டமா?! //
:-))
வாழ்த்துகள் முத்துலக்ஷ்மி.
தம்பி நல்லாப் படிச்சு அதே எளியவர்களுக்கு ரொம்ப நல்லது செய்வான். அதான் முதல் பெஞ்சில உக்காரப் போறேன்னு சொல்லிட்டானே:)
எனக்கும் பள்ளிக்கூடத்துக்கும் மீண்டும் ஒரு தொடர்பு ஏற்படுத்திக் கொடுத்துவிட்டீர்கள். :)
//எளியவருக்கான பள்ளியின் சில குழந்தைகளில் மிக அறிவார்ந்த பிள்ளைகள் பகல் பள்ளிக்கு மாற்றப்பட்டிருக்கிறார்கள்//
இது பாராட்டுதலுக்குரிய விஷயம். அப்படிச் சேர்ந்த மாணவியரைப் பற்றி மற்றவரின் மதிப்பீடாக உங்கள் மகள் சொல்லியிருந்தது நெகிழ்ச்சியானது.
//("அம்மா அங்கே நிறைய இடம் இருந்ததே ஒன்று இல்லாவிட்டால் இன்னோன்று.. உட்கார்ந்துக்குவேனே..//
அதானே:))!
//ஆனா நாம் முன்னாடி உக்காந்துக்குவேன்.. ")//
குழந்தைகளுக்கே உரிய இன்னொஸன்ஸ். ஸோ க்யூட்!
நன்றி சென்ஷி.. பதிவு பெரிசுங்கறதை அழகா சொல்லிட்டாப்லயே.. ம்.. நடத்து..
---------------------
அபி அப்பா அவனுக்கு என்ன பயம் அவனுக்கு தெரிஞ்சதையெல்லாம் அவன்பாட்டுக்கு செய்துட்டான் .. நான் தானே பயந்துட்டு இருந்தேன் எனக்கு டெஸ்ட் போல..மாயவரம் தானே போட்டுரலாம் கண்டிப்பா.. நடராஜ் பத்தி கேக்க ஆவலோ...?
----------------
தமிழ்பிரியனும் அப்ப நீங்களும் தாத்தா சென்ஷியோட கூட்டாளியா.. தலையை சுத்தி காது தொட்டா சேர்ந்தீங்க பள்ளிக்கூடத்துல...:)
உண்மை துளசி ,அது எதோ சட்டம் கூட போட்டாங்களாம் ..சரியாத்தெரியல மற்ற பள்ளிகள் அதை வேற விதமா செய்யறதாவும் இவங்க முழுமையா இறங்கி செய்யறதாவும் கேள்விபட்டேன்.. எங்க பள்ளி நடத்தறமோ அங்க இருக்கறவங்களை முன்னேற்ற கொஞ்சமேனும் இந்த பப்ளிக் ஸ்கூல்கள் உழைக்கனும்..
--------------
உண்மைத்தமிழன் ..நீங்க சொல்றதும் சரிதான். இப்ப கூட ஒரே வதந்தி ..இண்டர்வியூ டைம்ல ஒருத்தர் வந்து கணவரைப்பார்த்து சார் நீங்க வெறும் பி.ஈ யா.. போஸ்ட் க்ராஜூவெட் தான் கேக்கறாங்களாமேன்னும் ஒருத்தங்க இந்த வருசம் நம்ம ஸ்கூல்ல ஹவுஸ் ஒய்ஃப் ன்னா குடுக்கறதில்லயாமேன்னு டென்சனை ஏத்திவிட்டுட்டு போனாங்க..:) 3000 ல இருந்து 4000 வரை அப்ளிகேசன் போட்டா பள்ளியின் 240 சீட்டுக்கு எப்படித்தான் அவர்களும் வடிக்கட்டுவது..
ஆயில்யன் .. அவங்க அவங்க சொல்லவந்ததை உள்குத்தா ஒரு தடவை ..உள்குத்து இல்லைன்னு ஒரு தடவை பின்னூட்டறாங்க.. அப்ப நீங்க?
--------------
நன்றி சந்தனமுல்லை.. ஆமா ரொம்ப சமத்தா இருந்தான் ... வீட்டுலதான் எல்லா சேட்டையும் போல..
-------------------
நன்றி வல்லி.. நிச்சயம் அவனுக்கும் அந்த உதவும் குணம் அந்த பள்ளியினால் வளரும்...
ராமலக்ஷ்மி நிஜம்மாவே எனக்கு அதை கேட்டு நெகிழ்ச்சியா இருந்தது ..மட்டுமில்லாமல் எல்லா பேரண்ட்ஸ்ம் இந்த ஒரேமாதிரி நடத்துறதுங்கறதை நல்லவிதமா எடுத்துக்கனுமேன்னு இருந்தது எனக்கு...
ம்ம்ம்... இந்த மாதிரி சிறுசுகளுக்கு நுழைவுத் தேர்வெல்லாம் வைச்சு பீதியக் கொளப்புறதப் பார்த்தா குழந்தை பெத்துக்கிற ஆசையே போயிடும் போலவே...
பதிவப் படிக்கும் பொழுது நானே நேர்முகத்தில உட்கார்ந்து ஏதோ ஒரு பெரிய பொறுப்பை என் தலையில சுமத்தப் போறாங்களோங்கிற மாதிரி டென்ஷனா இருந்துச்சு. பாவம் பசங்க.
எனிவே, வாழ்த்துக்கள் பொடியனுக்கு!
மிகுந்த மன உளைச்சலை தந்த பதிவு...
ஆரம்பபள்ளியின் சேர்க்கைக்காக இத்தனை முஸ்தீபுகள் தேவைதான என்பதை பற்றி தீவிரமாய் சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோமென்றே நினைக்கிறேன்.
மேல்தட்டு பள்ளிகளின் இத்தகைய வடிகட்டும் கலாச்சாரம் இப்போது மிகவேகமாய் அடுத்தடுத்த நிலை பள்ளிகளிலும் பின்பற்றப்பட துவங்குவது அத்தனை ஆரோக்கியமானதாயிருக்காது என்பதே எனது எண்ணம்.
எது எப்படியாகிலும்...வாழ்த்துகள் கவி.முத்துலட்சுமி (உங்களை இப்படி அழைப்பது நான் ஒருத்தனாய்தானிருக்கும். அதற்காகவாவது அவ்வப்போது கவிதை(!) பதிவுகள் போடுங்கள்.)
மு. க. (அதாங்க முத்துலக்ஷ்மி கயல்விழி ) இது எல்லாம் எத்தனாவது படிக்கரதுக்குங்க ? ஒன்னவதா ?
இன்ஜினியரிங் Entrance'a விட ரொம்ப கஷ்டமா இருக்கும் போல இருக்கே ?
சபரிக்கு வாழ்த்துக்கள்! :)
சேரும்போதே இத்தனை இண்டர்வியூ, டெஸ்ட் வெக்கறதெல்லாம் ரொம்பவே ஓவரு!!
\\அருமையா எழுதியிருக்கீங்கக்கா.. ஏதோ நேர்ல பேசிக்கேட்டா மாதிரியே ஒரு ஃபீலிங்\\
ரிப்பிட்டே
தெக்கிக்காட்டான் , பசங்களுக்கு இதில் என்ன ப்ரச்சனைங்க..அழாம ப்ளே ஸ்கூலில் கத்துக்கிட்டதை செய்து காமிச்சாலே போதுமே... நமக்கு மட்டும் தான் எல்லாமே..
-------------------
யட்சன்.. இது பற்றி பெரிய விவாதமே செய்யலாம்..
1.ஒரு பெற்றோருக்கு படிப்பு மட்டும் முக்கியம். இன்னொரு பெற்றோருக்கு எக்ஸ்ட்ராகரிக்குலர் முக்கியம்.
2. வீட்டுக்கு பக்கத்தில் இருந்தால் கண்டிப்பா கொடுக்கனும்ன்னு சொல்லிட்டாங்கன்னு வைங்க..வீட்டுக்கு பக்கத்தில் இருக்கறவங்களால இவங்க கட்டிவச்சிருக்கற ஸ்விம்ம்பூலுக்கும் அதுக்கும் காசு தரமுடியலன்னோ இஷ்டமில்லன்னோ வைங்க.. பள்ளிக்கு நஷ்டமில்லையா..
3. முன்னைப்போலயா வெறும் படிப்பு போதுமா இப்ப..ட்ராமடிக்ஸும் அதுவும் இதுவும் ( எதையும் அவங்களை கஷ்டப்படுத்தி இல்லைங்க வருசாவருசம் ஆக்டிவிட்டிய மாத்திக்கலாம் குழந்தையோட இஷ்டம் தான் உனக்கு செஸ் வேணுமா ஓஒகே நெக்ஸ்ட் இயர் டேபிள் டென்னிஸ் ஓகே )
( அட நானும் உங்களெல்லாம் மாதிரி பேசினவ தான் ஆனா என் குழந்தைக்கு எல்லாம் கிடைக்கனும்ன்னு தோணும்போது அவங்க தேர்ந்தெடுக்கும் முறையில்லாட்டி இதெல்லாம் கிடைக்கப்போவதில்லை)
வாங்க எஸ்கே.. இது ஒன்னாவது கூட இல்லைங்க எல்கேஜி தான். ஆனா இனி 12 வரை கவலை இல்லயே.. ஏன் இங்க படிச்சா காலேஜுக்கும் கூடகவலை இல்லை.. எதுவுமே திடீர்ன்னு வராதே..
கிராமத்துல படிக்கிறதுக்கும் நகரத்தில் படிக்கறதுக்கும் வித்தியாசம் இருக்கறமாதிரி தானே இதுவும்..என்ன சொல்றீங்க?
ஐஐடி ல சேர தனியா எண்ட்ரன்ஸ் வைக்கிறதுல்லயா.. பேரு பெத்தபேருன்னா அதுக்குத்தகுந்த விலையும் உண்டுல்லயா.. நம்ம ஊருல பிள்ளைங்களுக்கா பஞ்சம்.. அக்காவை சேர்த்துட்டு பாருங்க தம்பிக்கும் சீட் கேட்டு போயிட்டோமே...
---------------
கப்பி , நாம அவங்க நிலைமையில் இருந்தா செலக்ஷன் பொஸிசன் பார்க்கனும்.. பாருங்க ஒரு பெற்றவர் டம்பமா பேசினார்.. கொடுக்கலை இல்ல சீட். அவங்க எல்லாம் கவனிப்பாங்க.. நாட்டின் நாளைய தூண்களை வளர்ப்பவர்கள் எப்படி என்று.. காசுமட்டும் பார்க்கும் இன்னமும் பெரிய பள்ளிக்கள் இருக்கிறது.. 75 000 கொடுத்தால் ஏசி பஸ் ஏஸி வகுப்பறைகள்.. அவற்றின் ப்ரோஸீஜர் எனக்குத் தெரியாது.
---------------------
முரளிக்கண்ணன் .. எனக்கு பேசத்தாங்க தெரியும் அவ்வளவா எழுதத்தெரியாது :)
நல்லா எழுதி இருக்கீங்க. இப்ப தான் பெங்களுரு பள்ளியில் என் மகனை சேர்க்க பட்ட பாட்டில், திரும்ப ஏதாவது ஒரு மேலை நாடு போய் விடலாமான்னு யோசிச்சுக்கிட்டு இருக்கோம்!
என்ன சுந்தர் அங்க இப்படி எதுவுமேயா இல்லை.. பப்ளிக் ஸ்கூல் மற்றும் மற்ற ஸ்கூல்களுக்கான வேறுபாடும் மற்றும் சிலவிசயங்களை என் நாத்தானார் சொல்லிக்கேள்விப்பட்டேனே.. (ப்ளோரிடா)
இதுக்காகவெல்லாம் அங்க போகவேண்டாம்.. :)
சபாஷ் , உங்களுக்கும் நம்ம வி.ஐ.பிக்கும்..
////பி.ஈ யா.. போஸ்ட் க்ராஜூவெட் தான் கேக்கறாங்களாமேன்னும் ஒருத்தங்க இந்த வருசம் நம்ம ஸ்கூல்ல ஹவுஸ் ஒய்ஃப் ன்னா குடுக்கறதில்லயாமேன்னு டென்சனை ஏத்திவிட்டுட்டு போனாங்க..:) //
MBBS கூட கிராஜுவேட் தான். அப்போ டாக்டர் பைய்யனுக்கு குடுக்கமாட்டாங்களோ ???
வாழ்த்துக்கள் சபரிக்குட்டிக்கு... :)
yakkav, athu enna school-ngakkav?
school pera sollungalen..
யப்பா...எனக்கு மயக்கமே வருது...இதுதான் நீ புதுசாக போற பள்ளின்னு சொன்னாங்க அம்புட்டு தான் எனக்கு எல்லாம்.
சபரிக்கு வாழ்த்துக்கள் ;)
ஆஹா..எனக்கே ஒரு பெரிய பெருமூச்சு வந்துடுச்சு.. அம்மனிக்கு இருந்த டென்ஷன் அப்படி....
வாழ்த்துக்கள் சபரி
ஹா ஹா ஹா, இதை படிச்சப்புறம்தான் உங்களோட டென்ஷனுக்குக் காரணம் புரியுது. நான் படிச்ச ஸ்கூலில் இந்தக் கொடுமை உண்டு ஆனாலும், எங்கம்மா அங்கே பிஸ்தா டீச்சர், அதனால நான் தப்பிச்சேன்:):):)
// ஆனால் அவர்களுக்கு கிடைக்கவில்லை என்பது அடுத்த நாள் கதை.
//
நானும் இந்த மாதிரி சூழ்நிலைகளில் இப்படிப்பட்ட ஜில்பான்ஸ்களை நோட் பண்ணி, ரிசல்ட் வரும்போது அவங்களுக்கு பாதகமா இருந்தா பயங்கரமா திருப்தி பட்டுக்குவேன்:):):) நீங்களும் அப்படியா, சேம் பின்ச் :):):)
//அங்கே அது பள்ளியா இல்லை ஹோட்டலா என்று எண்ணும் படி இருந்தது வரவேற்பரை.. பள்ளி ஏக்கர்களை வளைத்துப்போட்ட பெரும் இடம். 3 ஆண்டுகளாகத்தான் நடக்கிறது என்றாலும் 1870 ல் இருந்தே அவர்களுக்கு கல்விப்பாரம்பரியம் இருக்கிறது. கல்லூரி நடத்தி வருகிறார்களாம். உள்ளே நுழைந்ததும் குழந்தைகளைக்கவர சிறு வீடு,ஓக்கே ப்ளே ஐயிட்டங்கள் சறுக்கு , சீசா//
இந்த மாதிரி சீன் போடற நர்சரி ஸ்கூலில் டீச்சரா வேலைப் பாக்கனுங்கறது என்னோட வாழ்நாள் கனவு. ஏன்னு காரணம் தெரியாது.
//வெளியே வந்ததும் " நீ என்னை பார்க்கவே இல்லையே அம்மா //
so cute
//எங்களையும் உள்ளே அழைத்து எங்கள் முன்னிலையில் ஒரு ஹெலிக்காப்டர் புதிரை கொடுத்தார்கள் அவர் தான் புதிரில் புலியாயிற்றே மேலும் அவன் ப்ளே ஸ்கூலிலும் இது பயிற்சி அளிக்கப்பட்டதே என்பதால் கண்மூடி திறப்பதற்குள் முடித்துவிட்டான். நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம். பின்னர் பேட்டர்ன் போர்ட் ..மற்றும் ஞாபகத்திறனுக்கான ஒரு சோதனை . அவன் பெயர் ப்ளே ஸ்கூல் பெயர் எல்லாம் சரியாக பதில் சொல்லிவிட்டான்//
ஐயயே விட்டா அப்டிட்யூட் டெஸ்ட், க்ரூப் டிஸ்கஷன், ஹெச் ஆர் போங்குன்னு பீதியக் கெளப்புவாங்க போலருக்கு, அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்..................
// மகளின் பள்ளி எளியோருக்கான ஒரு இலவசப்பள்ளியை நடத்திவருகிறார்கள். //
நல்ல விஷயம். இந்தப் பள்ளியில் படிப்பதற்கு உங்க பிள்ளைகளுக்கு வாழ்த்துக்கள்:):):)
இங்க இப்படி இல்லை. பட் வேறு சில ரெஸ்ட்ரிக்ஷன்ஸ் இருக்கு(அதாவது பள்ளிக்கு பக்கத்தில் இருக்கும் ஏரியாவில் வீடிறிந்தால்தான் அந்தக் குறிப்பிட்ட பள்ளியில் பயில முடியும், இதுக்காவே சிலக் குறிப்பிட்ட ஏரியாக்களில் ஸ்டுட்யோ அப்பார்ட்மென்ட் கூட வாடகைக்கு கிடைக்காது, இன்னும் சிலக் குறைகள் உண்டு, மற்றபடி பெருசா வேறெதுவும் இங்கு எனக்குத் தெரியவில்லை)
எங்கக்கா பையன் சபரியப் போலத்தான், ஜாலியா போய் இண்டர்வ்யூ எல்லாம் அட்டெண்ட் பண்ணிட்டு சீட்டும் வாங்கிட்டு வந்துட்டான். யு.எஸ்ஸில் ஆறு வயது குழந்தயிடம் நடத்தப்படும் இண்டர்வ்யூ/நேர்காணல், தேர்வு இதெல்லாம் நம் ஊரில் ப்ரி.கே.ஜி சேரும் முன் நடத்தப்படுபவைப் போலத்தான் இருக்குன்னு எங்கக்கா சொல்றாங்க. எனக்கு நேரடியா தெரியாததால சொல்லமுடியலை.
அட அம்மாவும் அப்பாவும் டாக்டர் ன்னாலும் கிடைக்காத ஒரு பையனைப்பற்றிக்கூட ஒரு தோழி சொன்னாங்க தீபா..
-----------------------
காயத்ரி நன்றிப்பா..
:)
-----------
அனானி.. பேரைச்சொன்னாலும் ஊரைச்சொல்லக்கூடாதுங்கறமாதிரி தான் பள்ளியும் சொல்ல வேண்டாம்ன்னு விட்டேன் :)
நன்றி கோபி நன்றி மங்கை..
----------
ராப் எட்டிப்பார்க்கலையான்னு கேட்டேன்.. எக்கச்சக்க கமெண்ட் போட்டுட்டீயே..
ஆமா முதல் வேலையா அந்த பந்தா பரந்தாமனுக்கு கிடைக்கலைன்னு தெரிஞ்சதுக்கப்ப்றம் தான் நிம்மதியே!சரி அக்காவை அந்த ஊரு ஸ்கூல் விசயத்தை எழுத சொல்லுப்பா..
:)
Madam,
I'm moving from chennai to delhi next year, hence curious to know about the school name...
Could u help in letting know the school? I'll have enquire for my son's 1st grade admission..
- Prabhakar
தூயா நன்றி :)
----------
மிஸ்டர் ப்ராபாகர்.. நீங்கள் உங்கள் மெயில் ஐடியை பின்னூட்டத்தில் இடுங்கள்.... டில்லியில் உள்ள பள்ளிகளின் விவரங்களை உங்களுக்கு மடலிடுகிறேன்.ஏனென்றால் உங்களுக்கு அலுவலகம் எங்கே இருக்கப்போகிறது நீங்கள் வீடு எங்கே எடுக்கப்போகிறீர்கள்? இவை எல்லாமும் பள்ளியை தேர்ந்தெடுக்க காரணிகளாக அமையலாம் அல்லவா.. பொதுவாக தில்லியில் வேலை என்று தான் கிளம்பிவருவோம் எதற்கு சொல்கிறேன் என்றால் பொதுவாக தில்லியின் பார்டர்களான ஹரியானாவிலும் உத்திரப்ரதேசத்திலும் தான் பெரிய கம்பெனிகள் இருக்கிறது. ஒவ்வொன்றும் 2 மூன்று மணி நேர இடைவெளி .:)
Post a Comment