November 6, 2008

காசி பயணத்தொடர்

சுமார் ஐந்து வயதிருக்கும் போதே காசிக்கு சென்றிருக்கிறேன். இது மூன்றாவது முறை. தில்லியிலிருந்து சிவகங்கா எக்ஸ்ப்ரஸ். இரவு கிளம்பி காலை வாரனாசி. தீபாவளி சமயத்தில் விசேஷமாக இருக்குமே தீபாவளிக்கு பிறகு கிளம்புகிறீர்களே என்று தான் எல்லோருமே கேட்டுக்கொண்டிருந்தார்கள். கூட்டம் என்றால் எங்க குடும்பத்துக்கு கொஞ்சம் அலர்ஜி.

வாரனாசியில் இறங்கியதும் ப்ரீபெய்டு ஆட்டோ ஒன்றை பிடித்து நாட் கோட் சத்தர் போய் இறங்கினோம். என்ன பார்க்கிறீர்கள்? அதாங்க நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரம். ஊரில் நல்ல ப்ரசித்தம். போனமுறைக்கு இந்த முறை சத்திரம் நல்ல மாற்றம். லிப்ட் வசதி வந்திருக்கிறது. அறைகளும் புது முறைப்படி டைல்ஸ் வைத்து பெரிய கட்டிலிட்டு இருந்தது. பாத்ரூம்களும் வசதியாக ஹோட்டல் அறைகளைப்போல நல்ல முறையில் டைல்ஸ் வசதிகளோடு செய்திருந்தார்கள். முக்கியமாக சத்திரத்தை நாடுவதன் காரணம் ( ராப் கவனிச்சுக்கோ) தென்னிந்திய உணவு தான்.


நேராக அலுவலக அறையில் திரு. பனப்பனை சந்தித்தோம்.
என்னவெல்லாம் வசதி வேண்டுமோ நான் செய்துதருவேன் உங்கள் தேவை என்ன சொல்லுங்கள் என்று அமைதியாக விசாரித்தார்.

" சும்மா சாமி கும்பிடவா வேறு எதுவும் வேலை இருக்கிறதா ? "என்றார்.
" சாமி கும்பிடத்தாங்க ஆனா ஒரு சிரார்த்தம் கூட கொடுக்கனும்" என்றதும்
"அதாங்க வேற வேலைன்னு கேட்டேன். சரி எத்தனை நாள் தங்குவீர்கள்?"
" அது இரண்டு நாளுங்க.. "
"அப்ப சொல்றதைக் கேளுங்க போய் குளிச்சி கிளிச்சி ரெடியாகி ரெஸ்டு எடுங்க.. மதியம் ப்ரீ சாப்பாடு தான் சாப்பிடுங்க.. 2 அரை மணிக்கா வாங்க ,ஒரு பையனை அனுப்பறேன் நடந்தே போகக்கூடிய நாலு கோயில் பார்த்துட்டு வாங்க. பின்ன சாயங்காலம் கங்கா ஆரத்திப்பார்த்துடுங்க."

"சரிங்க அப்படியே ராத்திரி கோயிலிருந்து புறப்படும் நகரத்தார் கட்டளைக்கு பாஸ் வேணுங்களே! .. "

அதுக்கென்னா ராத்திரி சாப்பாட்டுக்கு 20 ரூ டோக்கன் இப்பவே வாங்கிக்கோங்க சாப்பிடவரும் போது பாஸ் வாங்கிக்கோங்க நாளை காலையில் வாங்க போட்க்கும் அய்யருக்கும் ஏற்பாடு செய்துடலாம் பின்ன சாரநாத் மற்ற இடங்களுக்கும் வண்டி வேண்டுமென்றால் ஏற்பாடு செய்வேன்.."

கடகட என நமக்கான திட்டத்தை அவரே சொல்லிமுடித்துவிட்டார். குறுக்கே கேட்க அவசியமே இல்லை.

மதியம் சாப்பாடு சாம்பார் ரசம் காய் என்று வீட்டில் சாப்பிடுவது போல நிம்மதியாக சாப்பிட்டுவிட்டு மீண்டும் ஒரு ரெஸ்ட். இரண்டரை மணிக்கு கிளம்பினோம்.

கேமிரா , போன் ஏன் பேனாவுக்குக்கூட அனுமதி இல்லை. என்பதால் மனதே இல்லாமல் கேமிரா இல்லாமல் கிளம்பினேன்.
முதலில் துண்டி விநாயகர். பின்னர் அன்னபூரணி, பின்னர் காசி விஸ்வநாதர் மற்றும் விசாலாட்சி கோயில்.
photo by simona ( google தந்த படம் தான் அவருக்கு ஒரு நன்றி சொல்லிக்கலாம்)
தெருக்கள் மதுரை மீனாட்சி கோயில் மேல மாசி வீதி சந்துக்களையும் விட சிறியது. சாந்தினிசவுக் சந்துக்களையும் விட சிறியது.பெரிய டவுன் கடைத்தெருவில் கூட கார்கள் நிறுத்த அனுமதி இல்லை. இருசக்கரவாகனங்களை நிறுத்தி ரோட்டி ன் நடுவில் டிவைடராகவும் பார்க்கிங்க் ப்ளேசாகவும் இருமாதிரியும் பயன்படுத்துகிறார்கள். துண்டி விநாயகர் அருகிலுருந்தே போலீஸ் காவல் தான்.


நுழைவு வாயில்



தங்க கோபுரம்


சுயம்பு லிங்கம் சுற்றிலும் வெள்ளியால் கட்டப்பட்ட தடுப்பு.

நம் தென்னிந்தியா போலல்லாமல் இங்கே சிவனை தொட்டு வணங்க அனுமதி உண்டு என்பது தான் வட இந்தியாவில் சிறப்பு. நாம் 5 ரூபாய்க்கு பால் ( பாதி தண்ணீர்) மண் குடுவையில் வாங்கிக்கொண்டு கூட்டத்தின் இடிகளுக்கிடையில் சிந்தாமல் அபிஷேகம் செய்வது என்பது திறமைதான். மதியத்தில் சாமியை சுற்றிலும் பெரிய கம்பி தடுப்பைப்போட்டு சுவாமி மேலேயே மக்கள் விழுந்துவிடாமல் தடுத்திருந்தார்கள்.கம்பித்தடுப்பை தாண்டி தொட்டு வணங்கலாம். மலர்களும் வில்வமும் பாலுமாக நிறைந்திருந்தது. அவ்வப்போது மேலே கொஞ்சமாக நீக்கி தரிசிக்க செய்கிறார்கள்.ஜரகண்டி போலவே வெளியே துரத்திவிடுவார்கள்.


காசி விஸ்வநாதர் கோயிலில் பின்னால் மசூதி டூம் இருப்பதாக அறிந்திருந்தேன் . அதைப்பார்க்க சென்றபோது அங்கே பெரிய நந்தி ஒன்று .. அது பழய சிவன் கோயிலின் நந்தியாம். நந்தியின் முன்னால் வேலியிட்டு பாழடைந்த ஒரு கோயிலின் பாகம்.. அதன் பின் ஒரு மசூதி. பாதுகாப்பு மிக பலம். துப்பாக்கி ஏந்திய போலீஸ்களின் நடமாட்டம்.

காசிவிசாலாட்சி கோயில் நம் ஊர் கோயில். அங்கே பெண்கள் குங்கும அர்ச்சனை செய்வது ஒரு பழக்கம் இருக்கிறதாம். சிகப்புவளையல்களோடு வந்த சில தெலுங்குபெண்கள் செய்துகொண்டிருந்தார்கள். சாமிக்கு சார்த்திய சேலைகளை வாங்கிக்கொள்ளச் சொல்லும்படி அழைத்து வந்தப்பையனிடம் ஹிந்தியில் அந்த அய்யர் சொல்லிக்கொண்டிருந்தார்.. காசிக்குப்போனால் என்ன என்ன செய்யவேண்டும் என்று பாபா கூட ஒரு பதிவு போட்டிருந்தார் தேடி இணைப்பு செய்து வைக்கவேண்டும். நெற்றியைக்காட்டினால் காசு. நின்று கும்பிட்டால் தட்சனை. முதுகில் அடித்தால் காசு. கவனம் தேவை.

ப்ரசாதம் எடுக்காமல் சாமியை கண்ணால் கண்டு வரும்போது அது ஆன்மிகச்சுற்றுலா போலவே இல்லை. ஏதோ ம்யூசியம் இன்பச் சுற்றுலா போலத்தோன்றுவதை தடுக்க இயலவில்லை. காரணம் காசு பிடுங்கும் பண்டாக்கள் தான்.
காசியில் எடுத்த சில படங்களை அவ்வப்போது க்ளிக் க்ளிக் கேமிராக் கவிதைகள் பதிவிலும் வலையேத்துக்கிறேன்.
கங்கா ஆரத்தி , காசி விஸ்வநாதர் ராக்கால பூஜை அடுத்த அடுத்த பதிவில்......

38 comments:

Thamiz Priyan said...

மீ த பர்ஸ்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டூ

pudugaithendral said...

பயணக்கட்டுரை சூப்பர்.

அடுத்த பதிவுக்கு வெயிட்டிங்க்.

நான் காசிக்கு போகும்போது உங்களின் அனுபவப் பதிவு உபயோகமாக இருக்கும்.

pudugaithendral said...

மீ த பர்ஸ்டு.

நான் சொல்லாட்டி வேற யாரும் வந்திடுவாங்க

குசும்பன் said...

அங்கேயும் காசு புடுங்குகிறார்களா?:((

குசும்பன் said...

//Blogger புதுகைத் தென்றல் said...

மீ த பர்ஸ்டு.

நான் சொல்லாட்டி வேற யாரும் வந்திடுவாங்க//

ய்க்கோவ் உங்கள நினைச்சா எனக்கு பாவமா இருக்கு:)

pudugaithendral said...

ய்க்கோவ் உங்கள நினைச்சா எனக்கு பாவமா இருக்கு:)//

illa kusumban me the first sollum vaipu ambutu easya kidaikathu parunga athan

:))))))))

சென்ஷி said...

me the 7th :))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

தமிழ் நீங்க தான் பர்ஸ்டூ

:)
----------------
தென்றல் உங்களுக்குத்தான் முதலில் சொன்னேன்.. ஆனா பொறுப்பா படிச்சிட்டு பின்னூட்டம் போட்டதால் மீத பர்ஸ்டு போடமுடியல..சூட்சுமம் என்னன்னா.. பதிவை போட்டதும் படிக்காம மீ த பர்ஸ்ட் போடனும்.. ஓகேவா...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

காசியில் அலகாபாத்தில் தான் ரொம்ப காசு பிடுங்கறாங்க குசும்பன் அடுத்தடுத்த பதிவில் பாருங்களேன் கொடுமையை..

சென்ஷி said...

//புதுகைத் தென்றல் said...
ய்க்கோவ் உங்கள நினைச்சா எனக்கு பாவமா இருக்கு:)//

illa kusumban me the first sollum vaipu ambutu easya kidaikathu parunga athan

:))))))))
//

உங்கள நினைச்சா எனக்கும் பாவமா இருக்குது :))

சென்ஷி said...

இப்ப வரைக்கும் என் கமெண்டு பப்ளிஷ் ஆகல.. நான் ஊரெல்லாம் பார்த்து கவலைப்பட வேண்டியிருக்குது :((

சந்தனமுல்லை said...

//அடுத்த பதிவுக்கு வெயிட்டிங்க்//

ரிப்பீட்டு!

சுவாரசியம் வழக்கம் போலவே!

சென்ஷி said...

//புதுகைத் தென்றல் said...
ய்க்கோவ் உங்கள நினைச்சா எனக்கு பாவமா இருக்கு:)//

illa kusumban me the first sollum vaipu ambutu easya kidaikathu parunga athan

:))))))))
///

ஆனாலும் இந்த பின்னூட்டத்த மறுக்கா படிக்கும்போது என்னால சிரிப்ப அடக்க முடியல. அதுக்கு சத்தியமா குசும்பன் காரணமில்ல :)

சென்ஷி said...

//சந்தனமுல்லை said...
//அடுத்த பதிவுக்கு வெயிட்டிங்க்//

ரிப்பீட்டு!

//

ரிப்பீட்டு!

rapp said...

இது போங்காட்டம்:(:(:( நேத்தைக்கு அத்தனை தரம் வந்தப்போ போடலை, இன்னைக்கு ஊரார் பதிவை பின்னூட்டி வளர்த்தா, என் பதிவுல பின்னூட்டங்கள் தானே வளரும்னு, கும்மியடிச்சிக்கிட்டு இருக்கும்போது, இப்டி பண்ணிட்டீங்களே, கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.....................................:):):)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ராப் ஒய் ஆர் யூ க்ரையிங்கு... என்ன மிஸ்டேக்கும்மா செய்தேன்.. உனக்கு மெயிலில் அப்டேட் செய்யலைன்னு சொல்றீயா?

rapp said...

சூப்பர் சூப்பர்:):):) இவர் என்னை பார்த்த அந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்புக்கு கொஞ்ச நாள் முன்னதான் காசி, அப்புறம் மஹாராஷ்டிராவில் இருக்கிற ஒரு சிவன் கோவில்(தீவுபோன்ற நதிக்கரையில் இருக்குமே), இப்டி ஒருவாரம் டூரடிச்சிட்டு வந்திருந்தார். இதுல காசியைப் பத்தி டிவில வந்தாக் கூட சேனலை மாத்துற அளவுக்கு இவருக்கு அலர்ஜியாகிடுச்சி. மத்த தலங்களை விரும்புறவர், காசின்னா அலறுவார். அங்க இருக்கிற சாமியார்கள், தெருக்கள் எல்லாம் இவர் விமர்சிச்சதப் பாத்து, எனக்கு காசி மேல இன்ட்ரஸ்டே போய்டுச்சி. இதுக்கு முன்ன என் கிளாஸ் பிரெண்ட்ஸ் ரெண்டு பேர் போனப்பவும் இதே மாதிரி சொன்னாங்க, அதால அங்க நாமல்லாம் தங்கரத்துக்கு முடியவே முடியாதுன்னு நெனச்சிருந்தேன். இப்போ நீங்க சொல்லிருக்க இடம் சூப்பரா இருக்கே. இவங்கெல்லாம் இன்னும் இன்னும் நல்லா விரிவுப்படுத்திக்கலாம் இல்லையா, அட்லீஸ்ட் விஷயம் தெரியாம வர்ற நம்மூர் ஆளுங்களாவது பொழச்சுப்போவாங்க.

கானா பிரபா said...

//திரு. பனப்பனை சந்தித்தோம்//

பனப்பன் தான் ஓட்டல் நிர்வாகியா?

தொடர் சுவாரஸ்யமா இருக்கு தொடருங்க

கானா பிரபா said...

// புதுகைத் தென்றல் said...
நான் காசிக்கு போகும்போது உங்களின் அனுபவப் பதிவு உபயோகமாக இருக்கும்.//

இதை வச்சு ஏதாவது செய்யணும் பாஸ்,

சின்னப்பாண்டி எங்கிருந்தாலும் வரவும் ;-)

rapp said...

//கடகட என நமக்கான திட்டத்தை அவரே சொல்லிமுடித்துவிட்டார். குறுக்கே கேட்க அவசியமே இல்லை//

அடா அடா அடா, சூப்பர் இவரை மாதிரி ஒருத்தர் இருந்தா பிரச்சினையே இல்லாம நிம்மதியா போகலாம்:):):)

rapp said...

//இரண்டரை மணிக்கு கிளம்பினோம்.//

ஆஹா, சரியா கண்ணு சொக்கற நேரம், அப்போவா கெளம்புனீங்க:):):)

ஆயில்யன் said...

// புதுகைத் தென்றல் said...
பயணக்கட்டுரை சூப்பர்.

அடுத்த பதிவுக்கு வெயிட்டிங்க்.

நான் காசிக்கு போகும்போது உங்களின் அனுபவப் பதிவு உபயோகமாக இருக்கும்///

பயணக்கட்டுரை சூப்பர்!

தங்கச்சியக்கா மாதிரி ஆளுங்க காசிக்கு போறப்ப இதை அப்படியே நான் படிச்சு மனப்பாடமா ஒப்பிக்க உபயோகமாக இருக்கும்!

நன்றி அக்கா!

ஆயில்யன் said...

//சென்ஷி said...
//புதுகைத் தென்றல் said...
ய்க்கோவ் உங்கள நினைச்சா எனக்கு பாவமா இருக்கு:)//

illa kusumban me the first sollum vaipu ambutu easya kidaikathu parunga athan

:))))))))
//

உங்கள நினைச்சா எனக்கும் பாவமா இருக்குது :))//

தங்கச்சியக்கா உங்களை நினைச்சு எல்லாருமே பாவப்படும்போது நானும் கொஞ்சம் பட்டுக்கிறேன்!

rapp said...

ஓகே இங்க என்னோட பதவியப் பிடுங்கும் முயற்சி நடந்திருக்கே, கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்................அடுத்தப் பதிவில் பாத்துக்கறேன், உங்கள எல்லாம்:):):)

rapp said...

me the 25th?

Iyappan Krishnan said...

காசே தான் கடவுளப்பா!
பணம் பந்தியிலே குணம் குப்பையிலே!
காசில்லாதவன் கடவுளாயினும் !!

இதெல்லாம் தெரிஞ்சவங்க தான் சாமியாராக முடியும். காசில பண்டாவாக முடியும்.

Anonymous said...

காசிக்கு போகணும்னு எனக்கும் ஆசைதான். உங்க தொடர் அதுக்கு உதவியா இருக்கும்போல இருக்கே.

கோபிநாத் said...

\\நெற்றியைக்காட்டினால் காசு. நின்று கும்பிட்டால் தட்சனை. முதுகில் அடித்தால் காசு. கவனம் தேவை\\

இந்தியாவில் எல்லா கோவில்களிலும் இப்படி தான் போல!! ;)

துளசி கோபால் said...

இது...இது.....இதைத்தான் எதிர்பார்த்தேன்.

நல்லா வந்துருக்கு. இன்னும் கொஞ்சம் விவரமா எழுதுங்க:-)

பலருக்கும்(???) பயனாக இருக்கும்.

ராமலக்ஷ்மி said...

அழகாக விவரித்திருக்கிறீர்கள் முத்துலெட்சுமி. பாராட்டுக்கள். படங்களை க்ளிக் க்ளிக்கில் காணவும் ஆவலாய் இருக்கிறோம்.

பாச மலர் / Paasa Malar said...

காசு சமாசாரம் காசியையும் விடலியே...எல்லா இடமும் ஒரெ மாதிரிதான்..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ராப் வடநாட்டைப்பொறுத்தவரை கவர்ன்மெண்ட் இருப்பிடங்கள் டூரிஸ்ட் தங்குமிடங்களே நல்லா மெயிண்டெய்ன் செய்வாங்க.. இந்த முறை சத்திரம்ங்கறதால நாங்க முயற்சி செய்யலை ....
நல்லவேளை உங்க வீட்டுக்காரங்களை கோயிலுக்கு உள்ளே விடறதில்லை.. விட்டா அங்க பணம் பிடிங்கி இருப்பாங்க டாலரில்..
மத்தபடி பிடிக்கவே பிடிக்காது ன்னு சொல்லமாட்டேன்.. ஒரு கிராமம் எப்படியோ அப்படி தான் அந்த ஊர்.
சின்ன சின்ன சந்துகளா ஏன் கட்டினாங்கங்கறதுக்கு வரலாறு இருக்கு..மதத்தின் அடிப்படையில் சண்டை வரும் போது காப்பாத்திக்கறதுக்காக சிறு சிறு சந்துகளை உருவாக்கி தான் மக்கள் வாழ்ந்திருக்காங்க..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி கானா, ஆமாங்க சத்திரத்தில் மேனேஜர் பேர் தான் பனப்பன்..

--------------------
ஆயில்யன் ஏன் ஒப்பிக்க மட்டும் தானா நீங்களூம் தான் சிவ பக்தராச்சே போவீங்கள்ள ?
-------------------------
ஜீவ்ஸ் சரியா சொன்னீங்க..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சின்ன அம்மிணி நன்றி நன்றி .. இதற்கு முந்தன தடவை நாங்களா போய் சிரமப்பட்டுட்டோம்.. இம்முறை ஓகே லெவல்.அதான் பதிவு போட்டுட்டேன்.. பயன்பட்டா மிக்க மகிழ்ச்சி தானே..
-------------------
கோபி எல்லா இடங்களும் தான் இம்மாதிரி கோயிலை எப்பவாவது பாத்துட்டு தெருமுக்கு கோயில் அருமை சிலபேருக்கு புரிந்ததா ப்ளாக் எழுதி வச்சிருக்காங்க :)))
---------------------
துளசி நன்றி..காபி விளம்பரமா பேஷ் பேஷ்க்கு பதிலா நல்லா வந்திருக்கா..? :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ராமலக்ஷ்மி க்ளிக் க்ளிக் ல இதுவரை ஒரு பதிவு தான்போட்டிருக்கேன் காசி என்ற வகையில். ..இன்னும் படங்களை கொஞ்சம் க்ராப் கிரா ப் செய்துட்டு ஏத்திடுவேன்..
நன்றி.
------------
பாசமலர் பாருங்க காசு காசி ன்னு ...எழுதினாலே எதுகை மோனை தான் உங்ககிட்ட.. :)

கிரி said...

//கூட்டம் என்றால் எங்க குடும்பத்துக்கு கொஞ்சம் அலர்ஜி.//

பலருக்கும் இதே பிரச்சனை தான் என்று நினைக்கிறேன் :-)

//கேமிரா , போன் ஏன் பேனாவுக்குக்கூட அனுமதி இல்லை//

அப்படியா!!!!!

//5 ரூபாய்க்கு பால் ( பாதி தண்ணீர்)//

:-))))

//நெற்றியைக்காட்டினால் காசு. நின்று கும்பிட்டால் தட்சனை. முதுகில் அடித்தால் காசு. கவனம் தேவை.//

இதெல்லாம் இருக்கா!!

//காரணம் காசு பிடுங்கும் பண்டாக்கள் தான்.//

பண்டாக்கள் ன யாருங்க?

நல்லா இருக்குங்க உங்க பதிவு

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கிரி .. ஒருவேளை கொண்டுபோயிட்டோம்ன்னே வைங்களேன் அதை வச்சுக்க லாக்கர் ன்னு கடையில் வச்சிருக்காங்களாம் ஆனா அந்த கீ ஒன்னு கொடுப்பாங்களே அதை வச்சு எல்லா லாக்கரையும் திறக்கலாமாம் .ஒருத்தர் ஆங்கில ப்ளாக்கில் எழுதி வச்சிருக்கார் :))

அதனால் முதல்ல கோயிலுக்குன்னு போகும் போது இதெல்லாம் ரூம்ல வச்சிட்டு அப்பறமா மத்ததெல்லாம் பார்க்கனும்.

பண்டாக்கள்ன்னா... இந்த ஊரு பூசாரிங்க தாங்க..:) மூன்றாம் பாகம் காசி தொடரில் பாருங்க அவங்க வேலையை..

cheena (சீனா) said...

ஆகா ஆகா - இங்கேந்து சுட்டி பிடிசி அங்கே போயி புகைப்படம் பாத்து அங்கேயே இதுக்கும் சேத்து மறு மொழி போட்டாச்சு - சரியா - நாங்க இப்ப போனப்ப நாட் கோட் சத்தர்ல - தங்க சிவ லிங்கம் ( சொர்ணலிங்கம்) பிளஸ் வைரக்கற்கள் - ஒரு கோடியாம் - வச்சிருந்தாங்க - காணக் கண் கோடி வேண்டும். தீபாவளிக்கு தீபாவளி மக்கள் பார்வைக்கு வைக்கராங்க . நாங்க போனப்பதான் பிரதிஷ்டை பண்ணினதாலே 3 நாள் வச்சிருக்ந்தாங்க. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா