இரவு எட்டரை மணிக்கு நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரத்திலேயே இருக்கும் சிவன் கோயிலின் வாசலில் காத்திருந்தோம். சில காவி வேஷ்டி சாதுக்கள் அங்கே பெரிய பெரிய பாத்திரங்களும் ட்ரங்க் பெட்டிகளுடனும் அமர்ந்திருந்தனர். எல்லாரையும் ஓரமாக நிற்க சொல்லிவிட்டு ஒரு சாது மட்டும் ஒரு சாம்பிராணி தூபங்களுடன் சிவனை தொழுது சுற்றி கிளம்பினார். வேகமென்றால் வேகம் விடுவிடுவென்று அவர் முன்னே நடக்க.. பின்னே மற்ற சாதுக்கள் தலையில் பாத்திரங்களும் பெட்டியுமாக " சம்போ மகாதேவ சம்போ மகாதேவ சம்போ" என்ற கோஷத்துடன் சந்துக்களில் புகுந்து புறப்பட்டார்கள் . போகும் வழியெங்கும் கடைக்காரர்களும் மக்களும் பணிவாக வழிவிட்டு செல்வதும் சப்பரத்தில் வரும் கடவுளை வணங்குவது போல வணங்கிச் சென்றார்கள். செருப்பில்லா கால்களோடு நாங்களும் பின்னால் ஓட்டமான நடையிட்டோம்.
துண்டி விநாயகர் அருகில் வந்ததும் அவர்களைத்தவிர மற்றவர்களை சோதனையிட்டு அனுப்பினார்கள். பதறி பின்பற்றியபோது கோயிலில் சென்று ஒரு ஓரமாக அமர்ந்து பெட்டிகளைத் திறந்து அவற்றிலிருந்து நன்றாக பளபளப்பாக தேய்த்து வைக்கப்பட்ட விளக்குகளை எடுத்துத் திரியிட்டு எண்ணெயிட்டு தயார் படுத்திக்கொண்டிருந்தார்கள். பாத்திரங்களில் அபிஷேக சாமான்கள். இங்கே ஏன் அமர்கிறீர்கள் என்று விரட்டிய கோயில் பணியாளரின் வார்த்தைக்கு குழம்பிய எங்களை , ஒரு சாது , நீங்க பாஸ் வச்சிருக்கவங்க தானே சும்மா உக்காருங்க என்று அமரச்செய்தார்.
கூட வந்திருந்த ஒரு பெண்மணி சாமியைத் தொட்டுவணங்கனும்ன்னா இப்போது ஒருமுறை பார்த்துக்கோங்க என்று சொன்னபோது சரி என்று உள்ளே நுழைந்தோம். மதியம் இருந்த கம்பி தடுப்பு அப்போது இல்லை.. குழந்தைகளூம் தொட்டு வணங்க வகையாக இருந்தது. இன்னோர் தமிழ் குடும்பமும் எங்களுடன் இணைந்து கொண்டனர். அந்த குடும்பம் சத்திரத்திலிருந்து வந்தவர்கள் இல்லை. அவர்கள் ஆரத்திக்கு காத்திருந்த எங்களுடன் சிநேக பாவம் காட்டாததில் எனக்கு ஒரு சந்தேகம் இருந்தது. பின்னால் அது சரியாக இருந்தது.
உங்களுக்கு இங்கே அந்த கோயிலின் சன்னதி அமைப்பை சொல்லிவிடுகிறேன்.சதுரமான சிறு அறை தான். அதன் நான்கு புறமும் வாசல் . உள்ளே ஒரு ஓரமாக(சதுரத்தின் ஒரு கார்னரில்) சிவன் தரையில் சிறிது பள்ளத்தில் இருக்கிறார். நான்கு வாயிலில் ஒரு வாயிலின் அருகில் எங்களை கூட்டி சென்ற கோயில் பணியாளர் சிறிது காத்திருங்கள் என்றார். அங்கே இருந்த கூட்டத்தினர் நகர்ந்ததும் எங்களை ,வாயிலின் நிலைப்படி சற்றே அகலமானது அதில் அமரச்செய்தார். நேரெதிரே அந்த சிநேக பாவம் காட்டாத குடும்பத்தினர் மற்றொரு வாயிலில் . அங்கே நிலைப்படியில் ஒருவர் தான் அமரவைக்கப்பட்டிருந்தார் மற்றவர்கள் சிறிதே பின்பக்கமாக ஆனால் மேடை அமைத்து உட்காரவைக்கப்பட்டிருந்தனர். ஏனென்றால் சாமி பள்ளத்தில் இருக்கிறாரே.
சிவனுக்கு அபிஷேகம் செய்யவிருந்த அய்யர் எங்களுக்கு முதுகு காண்பித்து அமர்ந்தார் பாதி அவரே மறைத்துவிட்டார். எதிர்கோஷ்டிக்கு நல்ல தரிசனம் . எங்களூக்கு எட்டி எட்டாமல் தெரிந்தார். மனதுக்குள் கோபம் எழுந்தது. அவர்கள் சரியாக பணம் கொடுத்து பேசி வைத்து உட்கார்ந்திருக்கிறார்கள் என்பது. "கோயிலுக்குள் அமர்ந்து ஒருவர் மேலே இத்தனை கோபம் வரலாமா மனதின் இன்னொரு குரல். அவர்கள் அதிக புண்ணியம் செய்திருப்பார்களோ. அட சே காசு கொடுத்து சாமர்த்தியமாய் நடந்து கொண்டார்கள் என்று சொல் இன்னொரு குரல்.
எனக்கு சரியாக பார்க்க முடியலையே.. ஹ்ம்.. இது என்ன கோயில் ஜோதிர் லிங்கத்தில் ஒன்று . அடிமுடி காணமுடியாத ஒளிகடவுள் அவரை முழுசா பார்க்க முடியலையேன்னு உனக்கு வருத்தமாக்கும் .
பால் தயிர் என அபிஷேகம் நடந்தது. என் மடியில் மகள் கனத்தாள். இடுக்கி அமர்ந்ததில் கால்களில் வலி. கோயிலின் உள் அமைப்பை நோட்டம் விட்டேன். மார்பிள் தளம் மார்பில் சுவர். மார்பிள் சிலைகள். ராம் லக்ஷ்மன் சீதா , பன்னிரண்டு கரங்களுடன் விநாயகர், லக்ஷ்மி நாராயன் என பல சிலைகள். வேதம்(?) ஓதி அவர்கள் அபிஷேகம் செய்து கொண்டிருந்தார்கள். கால்களை அந்த சன்னதிக்குள் விடாமல் நிலைப்படி மேடையில் அமரச் சொல்லி இருந்தார்கள். சற்றே கால்களை தளர்த்தி மாற்றி அமர முற்படும் போதெல்லாம் மந்திரம் சொல்லிக்கொண்டிருந்த சிறுவன் ஒருவன் ( அப்பரண்டிஸ்?) பதறி திரும்பிப் பார்த்தான். அத்தனைக்கு ஆகாதா காலையில் இதே இடத்தில் எல்லாரும் முண்டி அடித்து கும்பிட்டோமே.
அபிஷேகம் முடிந்ததும் ஒரு வெள்ளி கட்டில் வந்தது. அதன் மேலே அழகாகவிரிப்பிட்டு , தலையணையிட்டு வைத்தனர்.ஒரு வெள்ளி சிவன் தோள்வரையிலான உருவம் அதனையும் ஒரு சின்ன வெள்ளி முக்காலியில் வைத்து மாலையிட்டு வைத்தனர். இவையெல்லாம் சத்திரக்கட்டளையோடவைகளாம். சிவனுக்கு அலங்காரம் ஆரம்ப்மானது. மந்திரங்களுக்கு நடுவே வந்திருந்த மலர் மாலைகளில் சிலவற்றை தேர்ந்தெடுத்து வரிசைப்படுத்தி பூக்களை நெருக்கி அமைத்து, நறுக்கி கோர்த்து, ஒருவர் வழங்கியபடியே இருக்க , தலைமை பண்டா அதனை சிவனின் மேல் வரிசையாக வட்டமாக அடுக்கியபடியே வந்தார். பின்னர் வெள்ளி நாகம் குடை போன்றவற்றை அடுக்கி .. மேலே இருந்த கொக்கியில் இருந்து நாற்புரமும் தொங்கும்படி அலங்காரமாக பூக்களை வடிவமைத்தனர். மிக அழகான் வேலை . அந்த நேரம் அதை கவனிப்பது ஒரு வித தியானம் போல இருந்தது.
இந்த இணைப்பில் இருக்கும் இடத்துக்கு சென்று நீங்களும் சிவனை நேரிலேயே தரிசிக்கலாம். (வீடியோ)
அலங்காரமான சிவன்(வீடியோ)
ஆரத்தி(வீடியோ) (மூன்று பேரே மறைத்துக்கொண்டார்கள்
நல்ல வேளை நாங்கள் சென்ற அன்று இத்தனை பேர் பூஜை செய்யவில்லை )
ஜிகினா வேலைப்பாடான சிகப்பு திரையிட்டு சிறிது நேரம் பூஜையானது. திறந்த பொழுது பலமணிகளின் ஓசையோடு ஆரத்தி பூஜை நடந்தது. சம்போ மகாதேவா என்று கோஷமிட்டனர் அனைவரும். அந்த சில நொடிகள் பக்திபூர்வமாக தோன்றியது. அடுத்த நொடி அந்த பூஜைத்தட்டை நம்மிடம் கொண்டுவந்த நபர் தட்சனை தட்சனை என்று கையை தட்டை நோக்கி காட்டியபோது சட்டென்று இறங்கிய ஜுரவேகம்போல தணிந்தது பக்தி. என் மாமனாருக்கு விபூதி யை பூசிவிட்டு மாலை ஒன்றையும் இட்ட பண்டா(அய்யர்)... சிறப்பு பூஜைக்கு வந்திருக்கும் நீர் 200 ரூபாயாவது தட்சிணையாக தரவேண்டும் என்றார். கூட்டத்தில் பணத்தை எடுக்க முடியாமல் திணறியவரை ஒருவர் மறுத்து,முன்பே நீங்களிட்ட தட்சணை போதுமானது வாருங்கள் என்று பின்னால் இழுத்துக்கொண்டார். தொடர்ந்த அவர்களின் தட்சணை மந்திரம் காதுகளில் ஒலித்தபடி இருந்தது.
கடவுள் உண்மையா? இப்படி இவர்கள் மந்திரத்தை சொல்லிவிட்டு நம்மை ஏன் பணம் பணமென படுத்தவேண்டும்.நாம் காலையில் தொட்டுவணங்கிய கடவுளுக்கு நாம் திடீரென தீண்டாதவர்களாகிப்போன மர்மம் என்ன ? என நாத்திகமும் ஆத்திகமும் மனசுக்குள் விவாதமேடை நடத்திய அந்நேரத்தில் பின்வரிசையில் பெஞ்சில் அமர்ந்திருந்த கணவரின் மேல் என் மகன் இருமுறை வாந்தி எடுத்திருக்கிறான். வெளியே வந்ததும் ஒருவேளை நம் விவாதபுத்திக்கு கிடைத்த தண்டனையாக இருக்குமோ.. அடச்சே உடனே எதாகிலும் கடவுள் மேலே பழியைத்தூக்கிபோடாதே கங்கா ஆரத்தி சமயத்தில் தின்ற குர்குரியும் ஜூஸும் ஆட்டமும் பாட்டமும் பின் அணிந்த ஸ்வெட்டரின் சூடும் கூட்டமும் தூக்கமும் என பிள்ளைக்கு ஏற்கனவே இருக்கும் சளி படுத்தி இருக்கும். அட இந்த இன்னொரு குரல் எப்போதும் ஒலித்துக்கொண்டே இருக்கிறதே.
ஒரு குரலுக்கே பதிவு நீளும் இருகுரல் பதிவாச்சே கொஞ்சம் நீளமோ நீளம்.. :)
25 comments:
படித்தேன், பார்த்தேன், சுவைத்தேன்!
பதிவுக்கு எதிர்பதமாக ரத்தினச்சுருக்க பின்னூட்டம் :)))
நன்றி ஜீவா.
போறதுக்குள்ளே, காசிக்குப் போகணும் என்று புத்தகம், மற்றும் காசி பயணக் கட்டுரைகள் சேகரித்து வைத்திருக்கிறேன். உங்கள் காசி பதிவுகள் அனைத்தையும் படித்துக் கொண்டு விட்டேன். மிக நன்றாக எழுதியிருக்கிறீர்கள், என்னை விடப் புண்ணியம் செய்தவர்கள் நீங்கள்!
அந்த இன்னொரு குரலையும் ரசித்தேன்:-)
கெக்கேபிக்குணி ... ஏங்க இப்படி .. இப்பத்தானே பதிவில் எழுதிட்டுவரேன்..
என்னைவிட எதிர்கோஷ்டி புண்ணியமோ? என்றால் சாமர்த்தியம் என்று பதில் வந்ததுல்லயா.. அதுபோல உங்களைவிட நான் புண்ணியமோன்னா.. அட வாய்ப்பு வந்ததுங்க..
அங்கே இருந்தாலும் நான் வேறெதோ நினைச்சிருக்கேன் ..நீங்க வெறெங்கோ இருந்தாலும் அங்கே நினைச்சிருக்கீங்க.. புண்ணியம் உண்டா இல்லையா..:) சீக்கிரம்நீங்களும் ஆன்மீகச்சுற்றுலா போகனும்ன்னு வாழ்த்துகிறேன்.. என்ன எல்லாம் படிச்சிட்டேன்னு முடிச்சிட்டீங்க.. இன்னும் எழுதனும் சின்னச்சின்ன கோயில் பத்தி சாரநாத் பத்தி அதுக்கறம் தான் அலகாபாத் மறந்துட்டேனே.. அவசரம் தான் எனக்கு...:)
நேரில் பார்க்க முடியாமல் நினைத்து மட்டுமே (நான் இருக்கும் ஊரில்) பார்க்க முடிந்த இறைவனை வீடியோ மூலம் கொண்டு வந்து காண்பித்ததுக்கு மிக்க நன்றி. பார்க்கவும் படிக்கவும் பரவசமாக இருந்தது. வாழ்த்துக்கள்.
எனக்கும் அவசரம், முந்தின பின்னூட்டத்திலேயே கேட்டுருந்திருக்கணும், விடியோ பாக்கக் கிளம்பிட்டேன்:
பையனுக்கு அப்புறம் தேவலை ஆச்சா? சளியா?
அக்கறையா கேட்டிருக்கீங்க கெக்கே நன்றி.. ..சளி எல்லாம் வாமிட்டில் வெளியே வந்துட்டே இருந்தது நைட் இரண்டு மூன்று முறை.. அடுத்த நாள் திரும்ப காலையில் புதுமனுசனா குதிக்க ஆரம்பிச்சிட்டான்.. இந்த சட்டை இதுக்கு மேட்சான்னு கேக்கரவன் கிட்ட ஜூஸுக்கு மேட்ச் வாமிட்டுன்னேன்.. அடுத்த நாள் முழுக்க அதே சொல்லிட்டிருந்தான் ஜுஸ் கடை பாக்கும்போதெல்லாம். அதுக்கடுத்த நாள் மறந்துட்டான்.. குடிகாரன் பேச்சு ...... :)
நன்றி எக்ஸ்பாட் குரு.. அவ்வோளோ தூரத்துல இருக்க்கீங்களா நீங்க..:)
நானே அந்த வீடியோவை இன்னைக்குத்தான் தேடிப்பிடிச்சேன்.. பார்த்ததும் ஆகா பார்க்க முடியாத எத்தனையோ பேருக்கு உபயோகமாகுமேன்னும் பார்த்த எனக்கும் ஒரு ஞாபகமா இருகட்டுமேன்னு இங்கே இணைப்பு செய்து வச்சிட்டேன்..
வெளிநாட்டினர் என்ன தான் இந்துமத பக்தியா இருந்தாலும் இதெல்லாம் பார்க்கமுடியாதே ஈ தர்ஷன் நல்ல விசயம் தான்.. காசு கேக்காது :)
( இப்பவரைக்கும் )
இப்போ அட்டன்டன்ஸ் கொடுத்துடறேன். பொறுமையா படிச்சுட்டு வந்து பின்னூட்டம் போடுறேன் :)
thodarndhu padippathil varum siramangal intha irandam kural :)
ullil irukkum irai veliyEri sandhEgam kudi kollum pOthu ethiril iruppathai sandhEkikkirom.
i am a converted agonist :) i get such a second voice often these days
agonist - agnostic -- spelling mistake.
நேர்ல பார்த்தா மாதிரியே ஒரு ஃபீலிங்க் கொடுத்திருச்சு உங்க எழுத்து. உள்ளிருந்து சில குரல்கள் வந்தது நல்லதுக்கா கெட்டதுக்கான்னு யோசிக்காம ஏதோ உங்களுக்கு குரலாவது கேட்டிருக்குன்னு நினைக்குறப்ப சந்தோஷம்.
இப்ப இங்க வீடியோ சரியா பார்க்க முடியாது. டவுன்லோடு செஞ்சு அப்புறமா பார்த்துக்கறேன்.
//ஒரு குரலுக்கே பதிவு நீளும் இருகுரல் பதிவாச்சே கொஞ்சம் நீளமோ நீளம்.. :)//
அதாவது சேம் ப்ளட் + எக்ஸ்ட்ரா ப்ளட்டுன்னு சொல்ல வர்றீங்க... கரெக்ட்தானே :))
முத்துக்கா, இனிமே ஒரு தடவை பேசுனா ரெண்டு தடவை பேசுனமாதிரின்னு டயலாக்கு விட்டுக்கலாம்... :))
இன்னுமிருக்கா, இல்ல இன்னும் அம்புட்டுத்தானா? நானும் அந்த கங்கை கரையோரம் சில இடங்களில் அலைந்து திரிந்துருக்கேன், அதிலும் குறிப்பாக 'கேதர்நாத்' போனது மறக்க முடியாத ஒரு நிகழ்வு.
பை த வே, அந்தப் "பின்னணி குரலை" என்றைக்கும் ஹஸ்! ஹஸ்!!பண்ணி அமர்த்தி போட்டுடாதீங்க, உள் வளர்ச்சிக்கு ரொம்ப முக்கியம்...
ஆமா, ஏன் இந்த வயசிலயே இந்த மாதிரி இடத்திற்கெல்லாம் போறோம், என்னயும் கேட்டாங்க, அதான் உங்ககிட்ட கேக்கிறேன். :-).
கெக்கே ... "பணமும், பொறுமையுமிருந்தா" இது மாதிரி இடங்களுக்கும் போயிட்டு வந்துடலாம் :-), (மேலும் கையில பெரியவங்க இருக்காங்களா, இருந்தா அந்த சாக்கில பொயிட்டு வந்துடுங்க..).
அன்பே சிவம் ;))
எல்லாம் நம்ம வளர்ந்த விதம் அப்படி!...ஆனா பிள்ளைகளுக்கு இந்த மாதிரி பயத்தை உருவாக்கமால் பார்த்துக்கோங்க.
//அட சே காசு கொடுத்து சாமர்த்தியமாய் நடந்து கொண்டார்கள் என்று சொல் இன்னொரு குரல்.//
நான் போறப்ப காசு ரெடியா எடுத்து வைச்சிக்கறேன். அப்பத்தானே சாமிய நல்லா பாக்க முடியும் :)
@சென்ஷி .. :))
------------------
@ஜீவ்ஸ்.. அறிவியல் மதம்ன்னு கோவி சொல்றமாதிரி நீங்க சொல்றது ஒரு மதமா :))
ஆமாம் தெகா பெரியவங்க ஒரு காரணம்.. பணம் பொறுமை லீவு எல்லாமும் ஒரு காரணம்.. குலு மனாலியே போனாலும் அங்க ஒரு மானஸ் தேவியை கும்பிடற்து இல்லையா அது மாதிரியே தான் காசி போனாலும் கங்கையில் போட்டிங்க் உண்டு.. அந்த ஊருலயும் ஷாப்பின்க் உண்டு.. ஒரு ஊரை அந்த ஊரா ரசிக்கிறோம்.. சின்ன சின்ன சந்துகள் மக்கள் ன்னு எல்லாத்தையும் ரசிக்கிறோம்...அந்த ஊருல எது ஸ்பெஷல்ன்னு பார்த்தா கோயில் அதுக்க்கும் போறோம்..அவ்வளவு தான்... காசு இன்னமும் இருந்தா உலகமே சுத்தலாம்.
கோபிநாத் பயம்ன்னு இல்லாம கடவுளை சும்மாவேனும் அறிமுகப்படுத்தி வச்சிக்கலாம்..
-------------------------
சின்ன அம்மிணி காசு மட்டும் போதுமா? அதே மாதிரி யாரை பார்க்கனும் என்ன பேசனும்ன்னு , நமக்கு முன்னால யாரும் பேசறதுக்கு முன்னால பேசி சரிகட்டின்னு சாமர்த்தியமும் வேணும்.. நீங்க சாமர்த்திய சாலி போல ..ஓகே ஒகே.. :))
//படித்தேன், பார்த்தேன், சுவைத்தேன்!//
வழிமொழிகிறேன்:):):)
நாளைக்கு வந்து என் தெறமய பின்னூட்டத்துல காட்டறேன்:):):)
தரிசன அனுபவங்களோடு உங்கள் எண்ணங்களையும் பகிர்ந்து கொண்டிருப்பது அருமை.
ராப் எங்க போனே ஆளே காணோம்...
----------
ராமலக்ஷ்மி நன்றி நன்றி..:)
//சிறப்பு பூஜைக்கு வந்திருக்கும் நீர் 200 ரூபாயாவது தட்சிணையாக தரவேண்டும் என்றார். //
இவங்கெல்லாம் திருந்தவே மாட்டாங்களா! பழனியை விட ரொம்ப கொடுமை போல இருக்கே
//கடவுள் உண்மையா? இப்படி இவர்கள் மந்திரத்தை சொல்லிவிட்டு நம்மை ஏன் பணம் பணமென படுத்தவேண்டும்.நாம் காலையில் தொட்டுவணங்கிய கடவுளுக்கு நாம் திடீரென தீண்டாதவர்களாகிப்போன மர்மம் என்ன ? //
இதற்க்கு காரணம் இவரை போன்றவர்கள் தான். கடவுள் எப்போதும் எதையும் யாரிடமும் கேட்பதில்லை. இவரை போன்றவர்கள் தான் கடவுளுக்கு சேவை செய்வதாக கூறி கடவுளை இழிவு படுத்தி கொண்டு இருக்கிறார்கள்.
பணம் பிடுங்கி நம் நிம்மதியை குலைக்கிறார்கள் என்பதற்காகவே பழனிக்கு செல்வதை வெகுவாக குறைத்து விட்டேன். கடவுளை எங்கே வணங்கினால் என்ன?
இது எங்க திட்டத்துல மிஸ்ஸிங்க் - கொடுத்து வைக்கல - ம்ம்ம் - பராவால்ல - காசி விஸ்வநாதர் இன்னொரு தடவை கூப்பிடறாரா பாக்கலாம்.
Post a Comment