November 24, 2008

பிடிச்சிருக்கு.. வாரணம் ஆயிரம்

படம் பார்க்கும் முன் விமர்சனம் படிக்கவேண்டாம் என்று நானே தடை விதித்துக்கொண்டேன் நல்லதாகப்போயிற்று. ஆனால் உள்ளே போய் உட்கார்ந்ததும் முதல் காட்சியில் சூர்யா வயசான கேரக்டரில் மூச்சை சிரமப்பட்டு விட்டுக்கொண்டு நடந்த காட்சி கமலை நினைவுப்படுத்தியது போலிருந்ததால் கொஞ்சம் கடுப்பாகிவிட்டது.ஆனால் பிற காட்சிகளில் சூர்யா தனித்து தெரிய ஆரம்பித்ததும் நல்லாவே இருந்தது. சிம்ரன் வயதாகிவிட்டது என்று நம்ப முடியவில்லை. சூர்யாவுக்கு போலவே போட்ட வயசான மேக்கப் தானா இருக்கனும்..

பழய காலத்துல போகும் போது மேக்கப் ட்ரஸ் எல்லாம் ஹிந்தி படம் மாதிரி இருந்தது ஏன்னு தெரியல. அப்பாவை ஹீரோவா எடுத்துகிற பையன் தீம் நல்லாவே இருந்தது.. இதுமாதிரி அம்மாவை மாடலா எடுத்துக்கிற படம் எதும் வந்திருக்கா? படம் பார்க்க வந்திருந்த சின்ன பசங்க எல்லாம் சீரியஸாவே இல்லாம கமெண்ட் அடிச்சிட்டிருந்தாங்க. ஆனா வீட்டில் போய் தான் யோசிப்பாங்க அங்கேயே சீரியஸானா.. கூட வந்த பசங்க கமெண்ட் பண்ணுவாங்கன்னு இருக்கலாமோன்னு நண்பர் சொல்றாங்க .

ஆனா படத்துல கூட சூர்யா மிடில் ஏஜ்ல தான் பழசெல்லாம் நினைச்சுப்பார்க்கிறார். பாட்டெல்லாம் தாமரை அருமையா எழுதி இருக்காங்க.எல்லா பாட்டையும் தாமரைக்கு கொடுத்ததுக்கு கவுதமுக்கு நன்றி சொல்லனும். நெஞ்சுக்குள் மாமழை, அனல் மேலே ரெண்டும் எனக்கு ரொம்ப பிடிச்சது. ஒரு காட்சியில் காதலுக்கு சம்மதம் கிடைத்ததும் .. அந்த கணம் ஒரு இளையராஜா பாட்டு மாதிரி இருந்ததுன்னு சொல்லிட்டு ...கிடார் சவுண்ட் அதிரடியா வந்ததும் கோபமாகிடுச்சு.பாட்டு நல்ல பாட்டு தான்... இளையராஜா பேரை சொல்லிட்டு அடுத்த நிமிசம் அந்த இசை என்னவோ போல இருந்தது.



அவுர் ஆகிஸ்தா கீஜியே பாத்தேங் " பாட்டு பாத்திருக்கீங்களா..? சமீரா என்ன அழகு? இந்தபாட்டு வந்த புதிதில் மந்திரம் மாதிரி ஓடிக்கிட்டே இருக்கும் வீட்டில்.. ஆனா அதுக்கப்பறம் சமீரா நடிச்ச படமெல்லாம் ..எப்படி இருந்த சமீரா இப்படி ஆகிட்டான்னு தோணும்.. ஏன் தமிழில் ஒரு அழகான பாத்திரம் தரலைன்னு வருத்தமா இருக்கும்.. இப்பத்தான் அந்த அழகான வாய்ப்பு வந்திருக்கு.. கவுதம்க்கு நன்றி.

கொஞ்சம் நீளம் அதை விட்டுருக்கலாம் இதைவிட்டுருக்கலாம்ன்னா.. ஆசிப் சொன்னமாதிரி ஒரு மனுசனோட வாழ்க்கையில் எல்லாமே சுவாரசியமாவா இருக்கும். படத்துல தமிழ் கொஞ்சமே கொஞ்சம் தான் பேசறாங்க.. பேசாம தமிழில் சப் டைட்டில் போட்டிருக்கலாம். விசா குடுக்கும் போது மட்டும் கீழ சப் டைட்டில் போட்டங்களே அது மாதிரி.. :)

பள்ளிக்கூடப்பையனா நீலக்கலர் யூனிபார்ம் போட்ட சூர்யா நம்பவே முடியலை.. ஆச்சரியம்..ரயில் காட்சிகள் அசத்தல். அப்பா உங்களை மறக்கமாட்டேன்னு அடிக்கடி சொல்றதை வேணா விட்டுருக்கலாம்.. யாரு தான் அப்பாவை மறப்பாங்க.. இன்னும் எவ்வளவோ எழுதலாம் படத்தைப்பற்றி..

ரோல் மாடல் பற்றி ராப் கேட்ட பின்னூட்டத்திற்கு பிறகு சேர்த்தவை: சூர்யாவோட சின்ன வயசில் தான் சிகரெட் பிடித்தாலும் காதலிச்சிருந்தாலும் தன்மகன் சிகரெட் பிடிக்கக்கூடாது மற்றும் பெண்களுடன் சாலையில் நின்று பேசக்கூடாது என்று சொல்லும் அப்பா.வளர்ந்ததும் தன் நிழல் வேண்டாம் இனி சுயமாய் முடிவெடுக்கலாம் நீயும் நானும் வளர்ந்த ஆளுன்னு சொல்லிவிட்டு போவதும், அதற்குபிறகு எல்லாவிசயத்தையும் பகிர்ந்துக்கற ஒரு நண்பனா இருப்பதும் தான் அப்பாவின் மேல் சூர்யாவுக்கு மதிப்பு ஏற்படக்காரணம்.

குர்காவுன் வரை போய் இந்த படத்தைப் பார்த்ததுக்கு நிச்சயம் மதிப்பிருக்கு..

46 comments:

குடுகுடுப்பை said...

என்ன மாதிரி இன்னொருத்தர், எனக்கும் படம் பிடிச்சதுங்க.எவ்வளவோ முரண்பாடுகள் இருந்தாலும் எனக்கு எங்கப்பாதான் ரோல்மாடல்.

ஆயில்யன் said...

/ஆசிப் சொன்னமாதிரி ஒரு மனுசனோட வாழ்க்கையில் எல்லாமே சுவாரசியமாவா இருக்கும். படத்துல தமிழ் கொஞ்சமே கொஞ்சம் தான் பேசறாங்க.///


நல்லா இருக்கு பாஸ்!

வரிகளும் & விமர்சனமும்!

கிரி said...

//அப்பா உங்களை மறக்கமாட்டேன்னு அடிக்கடி சொல்றதை வேணா விட்டுருக்கலாம்//

உண்மை தான்.

வல்லிசிம்ஹன் said...

சுவாரஸ்யமான விமரிசனம் முத்து கயல்.

நடிப்பு அதுவும் வயதானவரா நடிக்கிறது சிவக்குமாருக்கு தண்ணி பட்ட பாடு. சூர்யா இளையவர் இல்லையா. இன்னும் கொஞ்சம் பண்பட்டதும் நல்லா நடிப்பார்.
சமீரா நம்ம ஊர் நடிகை இல்லையா. அழகா இருக்காங்க.

Anonymous said...

இளையராஜா பாட்டு மாதிரி இருக்குனு சொல்லிடு.. இல்ல.. ராக் சாங் மாதிரின்னு சொல்லுவாரு.. இன்னொரு முறை பார்க்கும் போது நோட் பண்ணி பாருங்க..

உங்களடோ மத்த கருத்துகள் அருமை..

Anonymous said...

அப்பாடி, உங்களுக்கும் பிடிச்சிருக்கா, Join the club

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாங்க குடுகுடுப்பை.... முரண்பாடுகள் இல்லாத மனுசங்க யாருங்க.. தான் செய்த தப்பிலேர்ந்தும் விடுவிக்கப்பார்க்கிறது தானே ஒரு பெற்றோரின் குறிக்கோளா இருக்கும். பேச்சு, அதுதான் படத்துல பிடிச்சது எனக்கு .. எல்லாரும் எல்லாத்தையும் தெளிவா பேசிக்கிறாங்க ..
---------------
நன்றி ஆயில்யன்..

நாகை சிவா said...

ம்ம்ம்ம்...

:)

படம் பாக்கனும். முடிந்தால் அரங்கில்...

குசும்பன் said...

//இளையராஜா பாட்டு மாதிரி இருக்குனு சொல்லிடு.. இல்ல.. ராக் சாங் மாதிரின்னு சொல்லுவாரு.. இன்னொரு முறை பார்க்கும் போது நோட் பண்ணி பாருங்க..//

இதுக்காக மீண்டும் ஒரு முறையா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்! எனக்கு படம் பாக்கும் பொழுது கொட்டாவி கொட்டாவியா வந்தது:((

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கிரி .. ஐ லவ் யூ டாடி அடிக்கடி சொல்றதை ஏத்துக்கலாம் ஆனா மறக்கமாட்டேன்னது் என்னவோ போலத்தானே இருந்தது ..

------------------------
வல்லி கொஞ்ச நேரத்துக்கப்பரம் வர காட்சியில் எல்லாம் சூர்யா வயசான கேரக்டரிலும் நல்லாவே நடிச்சிருந்தது போலத்தான் இருந்தது.. அந்த முதல்காட்சி தான் அப்படி..
சமீரா :)

சந்தனமுல்லை said...

ஹை..நல்லாருக்கு போலிருக்கே உங்க விமரிசனத்தைப் பார்த்தா! ஆவியில், இரண்டாம் பாதி கொஞ்சம் போர் என்பது மாதிரி இருந்தது! ம்ம்..எனக்கும் அந்தப் பாடல்கள் பிடிக்கும்..:-)

rapp said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ், எனக்கு ரொம்ப ரம்பமா இருந்துச்சி. சரி, எப்டியும் உங்கக்கிட்ட சொல்லப்போறேன், அதை பின்னூட்டமாவே போடறேன்:):):)

rapp said...

அப்பாவை இவர் நெஜமாவே ரோல்மாடலா எடுத்தாரான்னே புரியல. ஒரே பாட்ல (ரெண்டு வருஷத்துக்குள்ள) எல்லாத்தையும் சாதிச்சிடறார். அஞ்சல பாட்டை சாவுக் கூத்துங்கறார், ஒடனே அவர் நண்பர் 'ஷிட்'னு சொல்றார்.

என்னமோ இலக்கியத் தந்தைங்கறார், அதை கொஞ்சம் கூட கட்சிப்படுத்தலே.

சிம்ரன் நல்லா இருந்தாங்க, அவங்க அம்மா ரோல் நல்லா இருந்தது.

'போந்தான்' அப்டின்னு சொல்வாங்க, அப்டி இருக்காங்க சமீரா. அடப்பாவிகளா, விஜய் மல்லய்யா புடிக்கலைன்னா இப்டியா குடும்பத்தை வெச்சு பழிவாங்குவீங்கன்னு தோனுச்சி. எனக்கு இவங்கள டர்னா மனா ஹைல இருந்து பிடிக்கும். இந்தப் படத்துல கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்னு ஆகிடுச்சி.

பிளாஷ்பேக் சப்பை. எம்சிசில நடக்குதாம், அடப்பாவிகளா ஏரியா ஆளுங்கள வெச்சிக்கிட்டே இப்டி டுபாக்கூர் பண்றாங்களேன்னு இருக்கு.

இந்தப்படத்து அப்பா மகன் உறவு நம்ம அப்பாவை கொண்டாட வெக்குது, எப்டின்னா, அவங்களும் காட்சிப்படுத்த மாட்டேங்கறாங்க, நாமளும் உணர்வுப்பூர்வமா புரிஞ்சிக்க ஒரு லீட் சீன் வெக்க மாட்டேங்கறாங்க. நாம உக்காந்து படத்த பார்க்க போரடிக்குது, ஆனா அப்பாவை கொண்டாடுற படமாச்சே, தப்பா சொல்லக்கூடாது, இந்தப் படத்த பாக்காம நாம நம்ம அப்பாவை பத்தி யோசிப்போம்னு, எப்டியோ அவங்கவங்க தந்தையைக் கொண்டாட வெக்கிறாங்க. ஒரே நல்ல விஷயம்னா, படத்தோட அப்பாவை சிலாகிச்சு, நம்ம அப்பா இப்டி இல்லையேன்னு யோசிக்க வெக்கல. நல்லவேள நம்ம அப்பா ஜாலியா, நார்மலா, க்யூட் திமிரோட இருக்கார்னு நெனக்க வெக்குது.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

திலீப் மறுமொழிக்கு நன்றி.. அது என்னங்க இளையராஜா சாங்க் மாதிரி இருக்குன்னு சொல்லிடுன்னு மிரட்டுரீங்களோன்னு நினைச்சேன்.. இன்னொரு முறை தானே பார்க்கலாமே சிடியில்.. :)
------------------
சின்ன அம்மிணி.. யெஸ் நான் உங்க க்ளப்பில் சேந்துக்கிறேன்.. பெரிய விவாதமே ந்டத்தலாம் என்ன பிடிச்சது என்னபிடிக்கலன்னு. ஓகேவா..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நாகைசிவா..நான் திரையரங்கில் தான்போய் பார்த்தேன்.. 175 ரூபா ஒரு டிக்கெட்..
--------------
கொஞ்சம் போரான இடம் வருது தான் முல்லை.. வேண்ணா அந்த டைம் வெளீயே போய் பாப்கார்ன் வாங்கிட்டு வந்துக்கலாமே.. :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

குசும்பன் தூக்கமா வந்துச்சா இன்னும் உங்க விமர்சனம் படிக்கல வந்து படிச்சுட்டு சொல்றேன்..
--------------
ராப் என்ன சொல்றது உனக்கு.. கதை யை முழுசா இங்க தரவேணான்னு தான் நான் என்ன ரோல்மாடல்ன்னு எல்லாம் தெளிவ எழுதலை.. ரோல்மாடல்ன்னா எதையும் தன் மனசுக்கு பிடிச்சமாதிரி செய்யத்தான் ரோல்மாடல்.. நெஞ்சுலகை வச்ச்சுட்டான் விட்டிரு அவன் ஆசை அதுன்னு ஒவ்வொரு விசயத்துலயும் சூர்யா அப்பா சொல்றதை பார்த்தீங்கள்ள.. பெண்களோட பேசறதோ...சிகரெட் பிடிப்பதோ சின்ன வயசில் அவர் ஒருமாதிரி கைட் செய்தார்.. ஆனா அவனே வளர்ந்தப்பறம் நாம பெரியவங்க சமமான ஆளுங்கன்னு சொல்லி அப்ப வேற விதமா நடந்துக்கிறார்.. முக்கியமா எல்லாத்தையும் தன்காதலில் இருந்து எல்லாத்தையும் பகிர்ந்துக்கிறார். திரும்ப அதே அளவு அன்பும்,எதையும் பரிமாறிக்கற ஒரு நட்பையும் அப்பாக்கு தர அளவுக்கு பையனை வளர்த்திருக்கார். இதெல்லாம் தான் ரோல் மாடல்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ராப் உனக்காக இன்னொரு பாரா சேர்த்திருக்கேன்..அஞ்சலை பாட்டும் எனக்கு தப்பாத்தெரியல. பசங்களை கேட்டுப்பாருங்க.. காதல் தோல்வின்னா முதலில் குடிக்கறது தான். அப்ப அவங்க நடந்துப்பதுக்கும் அவங்க கேரக்டருக்கும் சம்பந்தம் இருக்காது..நண்பன் சொல்றது அவனுக்கும் அந்த இறப்புக்கும் காதலுக்கும் சம்பந்தம் இல்ல.. அவன் படிச்சவன் குடிக்கல.. சாவு டேன்ஸ்ன்னாலெ வெறுக்கக்கூடிய பெரிய இடத்துப்பையன்..

rapp said...

ஹை, நீங்க ஜாலியா சொல்றீங்க. நான் ஒத்துக்கறேன் பயஸ்டா இருக்கேன்னு:):):) நானும் நீங்க சொல்ற விதத்துலதான் பாக்கறேன், ஆனா பையன் அப்பாவை உள்வாங்கிக்கிற மாதிரி ஒரு பீலே வரலை எனக்கு:):):) இத சுட்ட forrest gump ல ஒரு பீல் கொண்டு வருவாங்க பாருங்க, அது இதுல கொஞ்சமும் இல்லை. இத்தனைக்கும் வாரணம் ஆயிரம் பாத்தப்புறம்தான் இதை பாத்தேன். அதுல இருந்த மெல்லிய புன்னகைய இதுல கொண்டுவர முடியலைன்னாலும், ஒரு அழகியல் உணர்வே இல்லாமப் படமாக்கப் பட்டிருக்கு.

Vidhya Chandrasekaran said...

உங்க விமர்சனமும் படத்தை போலவே நல்லாருந்துச்சு:)

சமீராவின் வீட்டிற்க்கு சென்று சூர்யா பேசும் காட்சிகள் சூப்பர்.

ஆயில்யன் said...

//கொஞ்சம் போரான இடம் வருது தான் முல்லை.. வேண்ணா அந்த டைம் வெளீயே போய் பாப்கார்ன் வாங்கிட்டு வந்துக்கலாமே.. :)//

தியேட்டர்ல இருக்கிற அம்புட்டு பேருக்கும் கொடுக்கவா?
:)))))))))))

சென்ஷி said...

வெறுமனே எல்லோரோட விமர்சனத்த மாத்திரம் படிச்சுட்டு உக்கார்ந்திருக்கேன்.. என்னிக்கு படத்த பார்த்து நானும் விமர்சனம் எழுதுவேன்னு தெரியல.. பயங்கர பிசி :((

சென்ஷி said...

//ஆயில்யன் said...
//கொஞ்சம் போரான இடம் வருது தான் முல்லை.. வேண்ணா அந்த டைம் வெளீயே போய் பாப்கார்ன் வாங்கிட்டு வந்துக்கலாமே.. :)//

தியேட்டர்ல இருக்கிற அம்புட்டு பேருக்கும் கொடுக்கவா?
:)))))))))))
///

:):):)

ஆயில்ஸ் கலக்குறீங்க போங்க..

Thamiz Priyan said...

அக்கா, படம் பார்க்கும் ஆவலைத் தூண்டி விட்டீர்கள். பதிவிறக்கிப் பார்த்துட வேண்டியது தான்...:)
(ஆமா, செலவுக் கணக்கை சொல்லையே...;))) )

Ayyanar Viswanath said...

/இத சுட்ட forrest gump ல ஒரு பீல் கொண்டு வருவாங்க பாருங்க, அது இதுல கொஞ்சமும் இல்லை. /

என்ன சொல்றதுன்னே தெரியல :)
வேற ஏதாவது காரணத்த கண்டுபிடிங்க

நசரேயன் said...

படம் பார்க்க முயற்சி செய்வேன், உங்க விமர்சனம் நல்லா இருக்கு

கப்பி | Kappi said...

//ஆசிப் சொன்னமாதிரி ஒரு மனுசனோட வாழ்க்கையில் எல்லாமே சுவாரசியமாவா இருக்கும். //

அது! :)


///சிம்ரன் வயதாகிவிட்டது என்று நம்ப முடியவில்லை//

:((

ச.பிரேம்குமார் said...

உங்களுக்கும் பிடிச்சிருக்கா ?? நல்லது! சீக்கிரம் பாத்துட வேண்டியது தான்

பார்க்கும் ஆவலை தூண்டியதற்கு நன்றி

வருண் said...

ராப் உடைய க்ரிடிசிஷம் களுடன் நானும் சேர்ந்துக்கிறேன். இந்தப்படத்துக்கு ரொம்ப வேறு வேறு மாதிரி விமர்சனங்கள் வருது.

கவுதம் மேனனுக்கு தேவையே இல்லாத ஆங்கில மோஹம் எரிச்சலை கிளப்புது. நிறைய இடங்களில் சூர்யாவின் ஆங்கிலம் சரியாக கலக்கவில்லை னுதான் சொல்லனும்.
ஆங்கிலம் காசுவலா வந்தால்தான் நல்லாயிருக்கும் வம்படியா புகுத்தினால் எரிச்சல்தான் வரும்.

***rapp said...
ஹை, நீங்க ஜாலியா சொல்றீங்க. நான் ஒத்துக்கறேன் பயஸ்டா இருக்கேன்னு:):):) நானும் நீங்க சொல்ற விதத்துலதான் பாக்கறேன், ஆனா பையன் அப்பாவை உள்வாங்கிக்கிற மாதிரி ஒரு பீலே வரலை எனக்கு:):):) இத சுட்ட forrest gump ல ஒரு பீல் கொண்டு வருவாங்க பாருங்க, அது இதுல கொஞ்சமும் இல்லை. இத்தனைக்கும் வாரணம் ஆயிரம் பாத்தப்புறம்தான் இதை பாத்தேன். அதுல இருந்த மெல்லிய புன்னகைய இதுல கொண்டுவர முடியலைன்னாலும், ஒரு அழகியல் உணர்வே இல்லாமப் படமாக்கப் பட்டிருக்கு.***

நான் ராப்புக்கு சின்ஸியரா ஜால்ரா அடிக்கிறேன். I feel exactly like how you feel, rapp! So you are not alone!

Athisha said...

உங்களுக்கு படம் இவ்ளோ பிடிச்சிருக்கா.. ஒரு வேளை யூத்துகளுக்குத்தான் படம் புடிக்கலையோ?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வித்யா சி.. நீங்க சொல்றதும் சரிதான்.. இதுக்குத்தான் டீசண்டாவே இருக்கக்கூடாதுன்னு வருத்தப்படற சூர்யா..:)

பிடிச்சக்காட்சின்னா நிறைய சொல்லலாம்..
"கூட்டிட்டுவ்ந்துட்டியா?
ஆமா நீங்க தானே சொன்னீங்க"

சூர்யா அப்பா பேசிக்கிறது. எப்படி ?:))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சென்ஷி பிசி மேன் .. :)
--------------------
தமிழ்பிரியன் என் பிறந்தநாள் கிஃப்டான இதுக்கு எத்தனை செலவானா தான் என்ன.. கொண்டாடவேணாமா.. அதைப்போய் இங்க ஏன் எழுதிக்கிட்டுன்னு விட்டுட்டேன்.. :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அய்யனார் நீங்க அந்த ஆங்கிலப்படத்தையும் பார்த்திருப்பீங்க போல .. :)
---------------
நசரேயன் எல்லாப்படத்துலயும் நமக்கு அட்ராக்ட் செய்யற சிலவிசயம் இருக்குமில்ல .. எனக்கு இதுல இருந்தது.. பிடிச்சிருக்கு..அவ்வளவு தான்..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கப்பி நிஜம்மாவே சிம்ரனுக்கு வயசாகி இருக்கும்ன்னு நினைக்கமுடியல..ஜஸ்ட் ஒரு குழந்தை பிறந்து இப்படி ஆக முடியாது..
--------------
ப்ரேம்குமார்.. கண்டிப்பா பாருங்க.. அப்பாவா இருக்க க்ளாஸ் எடுக்கனும்ன்னு அம்பி சொல்லி இருக்கார் பதிவுல..:)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வருண் என்னத்துக்கு எரிச்சல்..இன்னைய காலக்கட்டத்துல எல்லாருமே வீட்டில் ஆங்கிலம் தான் பேசறாங்க.. ( நானில்லை எனக்கு வராது) நீங்க கூட கடைசியில் ஆங்கிலத்துல தான் என்னவோ சொல்லி இருக்கீங்க... ஒரு வேளை நீங்க பீட்டரோஸ்ப்தி பேமிலி போல.. சாரி சும்மா கிண்டலுக்கு.. இபப் வர்ர யங் ஏஜ் அப்பாம்மால்லாம் அப்படித்தான் ஆங்கிலமே பேசி வாழ்றாங்களாம்..

-----------
அதிஷா க்ர்ர்ர்.. நான் அப்ப வயசானவங்கறீங்களா.. பரவாயில்லை நாங்கள்ளாம் மனசால யூத் தான்.. மேலும் பதிவிலேயே சொல்லிட்டேன் சின்னப்பசங்க யோசிப்பதில்லைன்னு.. சூர்யா 30 வய்சுக்கு மேலதான் யோசிக்கிறாமாதிரி காட்டறாங்க.. கவுதமுக்கும் அத்தனை இருக்கும்.
அட படத்துல வர்ர காதல் காட்சியக்கூட நம்ப மாட்டேங்கறாங்க பசங்க..ஏன்ன ஒரு பொண்ணுக்காக இத்தனை எல்லாம் ஒருத்தன் செய்வானா செய்தாலும் அது தேவையில்லாததுன்னு தான் பசங்களே யோசிக்கிறாங்க..

Uma said...

நீங்க சொன்ன மாதிரியே படம் பார்க்கும் முன் விமர்சனம் படிக்க விரும்பலை

கானா பிரபா said...

பலர் படம் பிடிக்கவில்லை என்றாலும் பார்க்க இருக்கேன், நிச்சயம் நல்ல படைப்பாக இருக்கும். உங்க விமர்சனமே சாட்சி இருக்கே.

Anonymous said...

எனக்கும் படம் பிடித்திருந்தது... நான்கூட என் அப்பாவை நினைத்து படம் முடிவடையும்வரை ஆழ்ந்திருந்தேன். In fact அப்பா மேல் எனக்கு இருந்த கோபமே காணாமல் போய்விட்டது. என் அப்பாவின் தியாகங்களை உணர வைத்ததற்காகவேணும் அந்தப் படம் பிடித்துத்தான் ஆக வேண்டும். படம் பார்த்துத்தான் அப்பாவின் தியாகத்தின் உணர வேண்டுமா என்று கேட்கலாம்... சில சமயம் வீண் பிடிவாதங்கள் கண்ணை மறைத்துத்தான் விடுகிறது. இப்படி யாராவது உணர வைத்தால்தான் உண்டு. ரெண்டு நாளா இருந்த எனக்குள் மன இறுக்கமும் போய்விட்டது.

வருண் said...

***முத்துலெட்சுமி-கயல்விழி said...
வருண் என்னத்துக்கு எரிச்சல்..இன்னைய காலக்கட்டத்துல எல்லாருமே வீட்டில் ஆங்கிலம் தான் பேசறாங்க.. ( நானில்லை எனக்கு வராது)***

நான் அப்பா அம்மாவுடன் ஆங்கிலத்தில் பேசுவதில்லைங்க! அதுவும் அப்பா இறந்துபோன நேரதில், ஐ லவ் யு அப்பா லாம் சொல்ல மாட்டேன் னு நினைக்கிறேன்!

**நீங்க கூட கடைசியில் ஆங்கிலத்துல தான் என்னவோ சொல்லி இருக்கீங்க... ஒரு வேளை நீங்க பீட்டரோஸ்ப்தி பேமிலி போல.. சாரி சும்மா கிண்டலுக்கு.. ***

இந்த பீட்டரோஸ்பதி பட்டத்தை கொடுக்க ரொம்ப நாள் காத்திருந்தீங்க போல!

சரி, வாங்கிக்கிறேன்! :-)

அது வந்து நம்ம ராப் க்கு தமிழ் புரியாதுனு சும்மா எடுத்துவிட்டேன்.

சும்மா ஜோக்குதான்!

***இபப் வர்ர யங் ஏஜ் அப்பாம்மால்லாம் அப்படித்தான் ஆங்கிலமே பேசி வாழ்றாங்களாம்..***

சரிங்க, அப்படித்தான் இருக்கனும்! :-)

கோபிநாத் said...

படிச்சிட்டேன்...இன்னும் பார்கல ;(

மங்களூர் சிவா said...

நாங்களும் பார்த்துட்டோம். பிடிச்சிருந்தது.

சாணக்கியன் said...

நல்லா எழுதியிருக்கீங்க... என்னோட விமரிசனம் இங்கே..
http://vurathasindanai.blogspot.com/2008/11/blog-post.html

priyamudanprabu said...

எனக்கு படம் பிடித்திருந்தது
உங்கள் விமர்சனம் நல்லாயிருக்கு

Subash said...

படம் பற்றி சொன்ன அனைத்தையும் வரவேற்கிறேன்.இந்தியாவிலும் இலங்கையிலும் ஒரே நாளில் ரிலீஸ்.படம் வந்த அன்றே பார்த்“துவிட்டேன். மிக மிக மிக பிடித்திருந்தது. எங்க 13 பேருக்கும் பிடித்திருந்தது. நேற்றும் சனிக்கிளமையும் லைன் கேட்டை தாண்டி நிக்குது. ரஜனி படத்துக்கு மட்டும்தான் இப்படி இரக்கும்.

Subash said...

எனக்கு 23 வயது. அப்ப படிக்கும் போது ஆங்கில மீடியம்தான் இருந்தது.அதனால அது அவங்களுக்கு பழகியிருக்கும். படத்தில வாற அப்பாவும் அப்படியே இருக்கலாம். அதனால இவங்க ஆங்கிலத்தில் பேசுவது நெருடலாக இல்லை.
அப்பாக்கு முன்னால் ஆங்கிலம் பேசினால் கிழிதான் விழும். எனக்கு இருக்கிற அறிவு அவ்வளவுதான்

Subash said...

ஆனா படம் பிடித்த அனவுக்கு மனசில் ஒட்டவில்லை. ஆனா 3 தடவை பார்த்தும் அலுக்கவும் இல்லை. ( வீட்ல பார்க்கும் போது கடத்தல் பாட்சியையும் அஞ்சவை பாட்டையும் இழுத்து விட்டுட்டேனே!!!!!!!!! )

யட்சன்... said...

நான் படம் பார்க்கவில்லை...பார்க்கிற ஆர்வமும் இல்லை....

ஆனால் இன்னமும் 30 நிமிடங்கள் வரைபடத்தை ட்ரிம் செய்திருக்கலாம் என்பதே துறை சார்ந்தவர்களின் கருத்து.

கொஞ்சம் நீட்டி முழக்கியது படத்தின் வலுவினை குறைத்துவிட்டது.

இனி நிறைய விமர்சனம் எழுதுங்க...