சின்ன வயசில் பிறந்தநாள்ன்னா புது ட்ரஸ் , கோயில்ல ஒரு அர்ச்சனை, கொஞ்சம் சாக்லேட்...அதையும் சின்ன சின்ன கிண்ணத்துல போட்டு பக்கத்துல ப்ரண்ட்ஸுக்குன்னு பகிர்ந்துக்கிறதும்,அப்பா இண்டோ சிலோன் பேக்கரி இல்லன்னா ஜாய் பேக்கரில இருந்து சின்னச்சின்ன செவ்வக கேக்களும்.அந்த கேக்கை அப்பா வும் அம்மாவும் சர்ப்ரைஸாத்தான் கிச்சன்ல பாட்டில்களுக்கு மேல மறைவா வச்சிருப்பாங்க..
இந்த வருசம் என் பிறந்த நாளையும் அவங்கப்பா பிறந்தநாளையும் என் மகள் கொண்டாடினாள். அப்பா பிறந்தநாளுக்கு என்ன வாங்கலாம்ன்னு ஒரு வாரமா தொளைச்சு எடுத்துட்டா.. எல்லாருமா சேர்ந்து மார்க்கெட் போனாலும் யாருக்கும் தெரியாம அவ சேமிப்பில் இருந்து கொண்டுவந்த பணத்துல ஒரு டீசர்ட் வாங்கிக்குடுத்தேன். சாயாங்காலம் பாட்டுகிளாஸ் முடிஞ்சு வரும்போது இந்த கடையில் கேக் வாங்கித்தா..இந்த கடையில் கேண்டில் வாங்கனும் எத்தனை வயசுன்னு எல்லாம் கேட்டு அவளே பணமும் குடுத்தாள்.
சர்ப்பரைஸ் பார்ட்டி கொண்டாடியாச்சு. எல்லாரிடமும் மகள் டீசர்ட் வாங்கினான்னு சொன்னப்ப நானும் நானும்ன்னு குதிச்சான் மகன்.. அடே குட்டிப்பையா நீயும் தானே கடைக்கு வந்தே வாங்கும் போதுன்னு அவனையும் சேத்து சொல்ல ஆரம்பிச்சேன்.
அடுத்து என் பிறந்தநாள் போது பாட்டு க்ளாஸ் கிளம்பரோம் நானும் மகளும்.. வந்தவுடன் அதே மாதிரி செட்டப் நடக்கிறது , கிச்சனுக்கு ஒரு ஆள் ...மோடாவை இழுத்து நடுவில் ஒரு ஆள்.. ஆகா சர்ப்ப்ரைஸ் பார்ட்டி :)அப்பாகிட்ட சொல்லி இந்தமுறை ஏற்பாடுகள் நடந்திருக்கு..
கேக் வெட்டும்போது ஸ்பெஷல் அம்மா ன்னு குட்டிப்பையன் ஒரு குரல் விடறான்.அப்பா வருத்தப்படக்கூடாதேன்னு ஸ்பெஷல் அப்பான்னு ஒரு குரல்..
கேக் வெட்டியபின்னர் இன்னும் இருக்கு அம்மான்னு சொல்லிக்கிட்டே மகள் ஒரு சின்ன பாலிதீன் கவரில் இருந்த பெரிய பெரிய ரஸகுல்லா இரண்டு ..அம்மா உனக்குப் பிடிக்குமே..
இரு இரு இன்னும் ஒன்னு இருக்கு.. நட்ஸ் போட்ட கேட்பரிஸ் ட்ரை செய்தேன் ..ஆனா கிடைக்கல ஸாரி.. ன்னு சொல்லிக்கிட்டே ஒரு கேட்பரீஸ்.. நான் எப்பவோ இதெல்லாம் பிடிக்கும்ன்னு சொன்னதெல்லாம் ஞாபகம் வச்சு.. ஹ்ம்..
இத்தனைக்கு நடுவில் குட்டிப்பையன் ப்ரிட்ஜ்க்குள் தலைவிட்டுட்டு இருக்கான். டேய் என்னடா அங்க செய்யற சேட்டை பையா.. வெளியே வாடா! ..
"அம்மா வெயிட் ஆப்கோ ப்ரைஸ் தேனாஹேன்னா"..( அம்மா உனக்கு பரிசு தரனும்ல)
அப்பன்னு பார்த்து ஃப்ரிட்ஜ் காலியா இருக்கு மேலே ஒரே ஒரு முட்டை.
"அம்மா இந்தா இந்த egg தா ன் உன் ப்ரைஸ் ஒக்கே"..
அக்கா குடுத்த கிப்டெல்லாம் ரொம்ப ஃபீலா பாத்துட்டு இருந்திருப்பான் போல..
ஓ ஒ தேங்க்காட் கண்ணுல தண்ணி வருதே..
"அட 'லூசு அம்மா' அழறா பாரு"
இந்த கதையை போஸ்டா போடலையான்னு ராப் பின்னூட்டமே போட்டுக் கேட்டப்புறம் போடாம இருக்கலாமா போட்டாச்சு..
47 comments:
me the first:):):)
நெடுநாள் ஆசை நிறைவேரிடுச்சி:):):)
/// rapp said...
me the first:):):)///
இது செல்லாது... சொல்லி வச்சு பதிவும், கமெண்டும் போட்டு இருக்கீங்க...:(
நல்ல இனிய பிறந்தநாட்கள்.. என்றும் தொடர வாழ்த்துக்கள் அக்கா!
தமிழ்பிரியன்.. இந்த பதிவு போடசொன்னதே ராப் தானே ..:)
ரொம்பவும் நெகிழ்வாக இருந்தது உங்கள் பிறந்த நாள் கொண்டாட்டங்கள்.
கலக்கல் பதிவு அக்கா.. :)))
i recommend this for " THirukkural kathaigal " in parents club :) anubhavama irundhalumE
முத்து, எவ்ளோ க்யூட் பாருங்க:):):) எனக்கு படிக்கும்போதே பிளாஷ்பேக்கெல்லாம் ஞாபகம் வந்து ஒரே அழுவாச்சியா வருது. குட்டிப் பையனுக்கு, மாதினிக்கு ரெண்டு பேருக்கும் ஸ்பெஷல் ஷொட்டு:):):)
//i recommend this for " THirukkural kathaigal " in parents club :) anubhavama irundhalumE//
வழிமொழிகிறேன்:):):)
எனக்கு வராத திருக்குறள்லாம் ஞாபகம் வருது:):):)
ஹையோ..சோ ஸ்வீட்ப்பா! எனக்கே படிக்கும்போது ரொம்ப டச்சிங்கா இருந்தது! சூப்பர்!! கலக்கல் கிட்ஸ்! :-))நல்லா எழுதியிருக்கீங்க!!
//நானும் நானும்ன்னு குதிச்சான் மகன்.. அடே குட்டிப்பையா நீயும் தானே கடைக்கு வந்தே வாங்கும் போதுன்னு அவனையும் சேத்து சொல்ல ஆரம்பிச்சேன்.
//
இவன் இனிமேல் என் pet:):):)
முட்ட கொடுத்த குட்டி வள்ளல் வாழ்க வாழ்க:):):)
பாத்தீங்களா மக்களே, இவ்ளோ சூப்பர் அனுபவத்தை உங்களுக்கு கிடைக்க ஊக்கப் படுத்தினது நான்தான்:):):)
ஆகா ! போட்டி போட்டுக்கிட்டு சர்ப்ரைஸ் பார்ட்டிகள் நடந்திருக்கு போல.....
வாழ்த்துக்கள் அக்கா :)
வெயிலான் நன்றி...
---------------------
ஜீவ்ஸ் சரியாத்தான் சொல்றீங்க.. சேர்த்துடலாமே..
-------------------
சென்ஷி நன்றி..
-----------
சந்தனமுல்லை நன்றிப்பா..
பிடிச்சிருக்கு :-)
முட்டை கொடுத்து சமாளிச்ச குட்டிக்கு எங்க special வாழ்த்து :)
//அட 'லூசு அம்மா' அழறா பாரு///
ஏன் பாஸ் அழறீங்க இதெல்லாம் அனுபவிங்க சந்தோஷமா?
சின்ன சின்ன தருணங்களில்
வெளிப்படும் அன்பில்
உங்களை அடைக்கலப்படுத்திக்கொள்ளுங்கள்!
மீண்டும் ஒரு முறை வாழ்த்துக்கள் அக்கா!
மீண்டும் ஒரு முறை வாழ்த்துக்கள் பாஸ்!
:)))
ஒருவேளை நீங்க சின்னவயசுலே பள்ளிக்கூடத்துலே முட்டை வாங்குனது அண்ணாத்தைக்கு யாராவது போட்டுக் கொடுத்துருப்பாங்களோ?
ச்சும்மா.....:-)))))))
குடும்பத்துலே இந்த அன்பு எப்பவும் மாறாமல் இருக்கணும் என்று மனமார வேண்டுகின்றேன்.
பெரியவ சொன்னால் அது பெருமாளே சொன்ன மாதிரியாக்கும்.
அன்பும் ஆசிகளும்.
நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்.
பிறந்த நாள் வாழ்த்துகள்
:)
சின்ன அம்மணி அழகாச் சொல்லிட்டாங்க. என்றென்றும் இந்த அன்பும் பாசமும் நிறைந்து வாழ வாழ்த்துக்கள்!
முட்டை பரிசுதான் சூப்பர். என் மகன், ரெண்டு மூணு வயசு இருக்கும் ஒருமுறை நந்தியாவட்டை பூ பறித்து வந்து தலையில் வைத்துக்கொள்ள சொல்லி கொடுத்தான். ஹூம் வயசு ஆக, ஆக இந்த நினைவுகள் மட்டுமே அம்மாக்களுக்கு சொந்தம் :-)
ம்ம். கொடுக்கணும்ங்கற நினைப்பு இருக்கே அதுவே பெரிசு.
குழந்தைகளுக்கு என் வாழ்த்துக்கள்.
அடுத்த வாரம் இதைப் பத்தி பதிவு போட ஐடியா வெச்சிருந்தேன். நீங்க முந்திட்டீங்க.
என் பதிவும் வரும்.
ராப் ..முட்ட கொடுத்த வள்ளலா.. அது சரி நீ மட்டும் டிசைனர் ட்ரெஸ் வாங்கிப்பே எனக்கு மட்டும் முட்டையா.. இரு இரு..
------------------------------
நன்றி ப்ரேம்குமார்.. இதுபோல பல இனிய நிகழ்வுகள் இனி உங்க வீட்டுலயும் நடக்குமே..
-----------------------
ஆயில்யன் மகிழ்ச்சியிலும் நிறைவிலும் கூட அழுகை வருமே..என்ன செய்ய? :)
புனிதா பிடிச்சிருக்கா ? உங்களிடமெல்லாம் பகிர்ந்ததில் எனக்கும் மகிழ்ச்சி
---------------------
துளசி கோபால் பெருமாளாகிட்டீங்க.. உங்க ஆசி பெற்றதில் தன்யளானேன்..
----------------
சின்ன அம்மிணி.. நன்றி..
:)
-----------------------------
கப்பி நன்றிப்பா..
ராமலக்ஷ்மி வாழ்த்துக்கு நன்றிங்க..
----------------
உஷா வாங்க .. ஆமாம்ப்பா வயசாக ஆக இந்த இன்னோசண்ட் குறைஞ்சு போகுதுல்ல.. என் பையன் தினமும் ஓரே ஒரு நந்தியாவட்டை டீச்சருக்கு கொண்டு போயிட்டிருந்தான்.. ;)
-----------
புதுகைத்தென்றல்..விசேசம்ன்னா பார்ட்டி இருக்கும் பார்ட்டின்னா கிஃப்ட் கொடுக்க்கனும்.. இப்படி அவங்க நிறைய கத்துக்கிறாங்களே பாத்து பாத்து.. :)
well written..
அதைவிட பொண்ணு பண்ணது ரொம்பவே பாராட்ட வேண்டிய விஷயம்.
நெகிழ வைத்து விட்டது
சபரி செய்தது காமெடியாக இருந்தாலும் அவன் செய்ததில் ஒரு true feelings இருக்கு. :-)
இப்படியெல்லாம் சின்ன புள்ளைங்க செய்யுஅதை பார்க்கும்போதே ஒரு வித மகிழ்ச்சியாய் இருக்கும். :-) ஆமாதானே அக்கா? :-)
Superb... :))எங்க பிறந்த நாளன்னைக்கு விழுந்து விழுந்து கவனிக்கற அம்மாவுக்கு.. அவங்க பிறந்தநாளுக்கு போன்ல விஷ் பண்ணாலே கண்ணு கலங்கிடுவாங்க... Really u and ur kutti's are great akka... :)) Convey my regards to them.. :)) Once again ma wishes to u akka.. :))
:)
feel top n the world ஆ.. :)
படிக்கவே சந்தோஷமா இருக்கு...
குட்டீஸ்களோடு உங்கள் பிறந்த நாள் பதிவு ரசகுல்லா
இந்த அன்பும் நெகிழ்வும் என்றும் தொடர வாழ்த்துகள் கவி...
இப்பல்லாம் சூழல்களையும் அது தரும் உணர்வுகளையும் விவரிக்கறதுல எக்ஸ்பர்ட் ஆய்ட்டே வர்றீங்க...கீப் இட் அப்...
நிகழ்வுகளின் டெம்போ குறையாம எழுதறது கஷ்டம்...இதுல நல்லா வந்திருக்கு.
மை ப்ரண்ட் நீ உன் அக்காவை விட்டுக்கொடுப்பியா.. நிச்சயமா அவ என்னோட ஆசைகளை குறிச்சு வச்சிக்கிட்டு அதை வாங்கித்தந்தது நெகிழ்வாவும் மன நிறைவாவும் இருந்தது..
---------------
ஸ்ரீமதி என் பொண்ணு இந்த வயசிலேயே செய்யறா.. நான் காலேஜ் போன காலத்துல தான் அம்மாவுக்கு பிறந்த்நாள் அப்பாவுக்கு பிறந்தநாள்ன்னா ஸ்பெஸலா எதாச்சும் செய்யனும்ன்னு நினைச்சு , ஆனா என் கவிதையால வாழ்த்தி கொடுமை செய்துட்டேன்.. :))
நிலா அப்பா ,ஆமாங்க சரியா சொன்னீங்க..
:)
--------------------
கானா இனிச்ச ரசகுல்லாவில் ஒன்னு எனக்கு,ஒன்னு அவளே சாப்பிட்டுட்டா :P
-----------------------
யட்சன்.. சும்மாவா, இந்த விசயத்தை மட்டும் எத்தனை பேருக்கு விவரிச்சிட்டேன் இதுவரை தெரியுமா.. அம்மாக்குமாமியாருக்கு, ப்ரெண்ட்ஸ்க்கு, நெய்பர்ஸ்க்கு பலதடவை படிச்சு மனப்பாடம் ஆனமாதிரி ஆகிடுச்சு.. :)
//ஸ்ரீமதி என் பொண்ணு இந்த வயசிலேயே செய்யறா.. நான் காலேஜ் போன காலத்துல தான் அம்மாவுக்கு பிறந்த்நாள் அப்பாவுக்கு பிறந்தநாள்ன்னா ஸ்பெஸலா எதாச்சும் செய்யனும்ன்னு நினைச்சு , ஆனா என் கவிதையால வாழ்த்தி கொடுமை செய்துட்டேன்.. :))//
நல்லவேள நான் அப்படி ஒரு கொடுமைய இதுவரைக்கும் அவங்களுக்கு செஞ்சதில்ல.. ;)) நான் எழுதினதெல்லாம் கொண்டு போயி குடுத்தா.. அதுக்கான ரியாக்ஷனே வேற.. ;)) அது வேற விஷயம்.. ஆனா, நான் இன்னும் முயற்சியே பண்ணல ம்ம்ம்ம் நானும் ட்ரை பண்ணி பார்க்கறேன்.. :)))))
உணர்ச்சி!
மகிழ்ச்சி!
நெகிழ்ச்சி!
;)))
ம்ம்ம்ம்..:-)).. சந்தொஷம்..இதுக்கு மேல என்ன வேனும்...
பிறந்த நாள் வாழ்த்துகள்!!!!மும்பை கலவரத்தில் மூழ்கி போனதால இப்ப தான் பார்த்தேன்.கொடுத்து வைத்த அம்மா நீங்க.
பதிவு படிச்சு எனக்கும் கண்ணுல தண்ணி வந்திடுச்சி, அம்மாவை நினைச்சு. பாத்து சரியா 9 மாசம் ஆயிடுச்சு. :-(
ஸ்ரீமதி என்னாம்மா நீ.. எழுதின நோட்டுப்புக்க காட்டக்கூடாது.. தனியா ஒரு கார்டுமாதிரி செய்தோ பேப்பரிலோ கொடுக்கனும்.. :))
--------------------
கோபி நறுக் கமெண்ட் :)
------------------------
மங்கை வாங்க வாங்க.. பார்ட்டிக்கு இத்தனை லேட்டா வர்ரீங்களே.. :)
சிந்து வாங்க.. குழந்தைகள் வரம் தானே.. :) அப்ப நீங்க சொல்றமாதிரி கொடுத்து வச்சிருந்துருக்கனுங்கறது உண்மைதான் :)
---------------
கபீஷ் என்னங்க.. கணினிகாலத்துல இப்படி அழலாமா..அம்மாக்கு கத்துகொடுத்துடுங்க கணினியை ..அப்பறம்முகம் பார்க்கலாம்..என்ன சமைச்சியான்னு கேட்டா மாட்டிக்குவீங்க அவ்வளவு தான்.. :)
அக்கா நான் எழுதற கவிதை பத்தி தெரிஞ்சுமா இப்படி சொல்றீங்க?? :))
ஸோஓஓஓஓ ஸ்வீட்ட்!!
Post a Comment