கண்ணாடியை லவட்டிய குரங்கின் உபயம்.. ஏறக்குறைய ஊர்சுத்திக்காமிக்கிற கைட் ஆக மாறி ரொம்பநாளச்சுங்க. ஒருமுறை கோவர்த்தனம் போகலாம்ன்னு கிளம்பினோம். போறவழியில் பிருந்தாவனத்தில் நம்ம ஊரு பெருமாள் கோயில் இருக்கே அதையும் காமிச்சிட்டு அங்க இருக்கும் அய்யரிடம் கோவர்த்தனம் பத்தி எதும் தகவல் கிடைக்குமா கேட்டுப்போகலாம்ன்னு திட்டம். 11 மணிக்குள் போனால் திறந்திருக்கும் இப்ப மூடி இருப்பாங்களே என்று பேசிக்கொண்டே உள்ளே சென்றோம். வெளிப்பிரகாரம் சுற்றித்தான் அந்த கோயில் வாசலுக்குக் போகலாம்.. அதற்குள் கோயில் மூடிய சேதியும் தெரிந்தது. சுற்று பிரகாரத்தில் சில தமிழ் அய்யர்கள் வீடு இருப்பதால் கேட்கலாமே என்று ஒரு வீட்டின் வாசலில் கால் எடுத்துவைக்க இருந்த நேரம். எனக்கு கண் தெரியவில்லை. ஆமாங்க எனக்கு கண் தெரியவில்லை. இத்தனை நேரம் தெள்ளத்தெளிவாக் தெரிந்த கண் கலங்கலாக மேகமூட்டமாக இருக்கிறது.
பொதுவாக கண்ணாடி போடவில்லை என்றால் தான் எனக்கு அப்படி இருக்கும். ஆனால் நடந்து கொண்டிருக்கும் போது நான் கண்ணாடியை கழட்டவும் இல்லையே.. என் கை தானா கண் பக்கத்தில் போனால் என் கண்ணாடி இல்லை. எல்லாரும் அய்யோ குரங்கு என்று கத்துகிறார்கள். உற்றுப்பார்த்தால் ஒரு குரங்கு அதன் கையில் என் கண்ணாடி. என் கண்ணாடியை அத்தனை லாவகமாக அது லவட்டி இருக்கிறது. என் மேல் துளி கூட நகம் படாமல்.
உடனே அது வீட்டின் மேல் ஏறி ஓடவும் ஆரம்பித்துவிட்டது. சட்டென்று இரு சாந்துபொட்டிட்ட ஹிந்திபேசும் இளைஞர்கள் எங்கள் முன்னால் வந்தார்கள். அதற்கு பிஸ்கெட் போட்டால் குடுத்துவிடும் பிஸ்கட் இருக்கா என்றார்கள். நாங்களோ எல்லாமே காரில் வைத்துவிட்டு ஹாயாக வந்திருக்கிறோம். பிஸ்கட் வாங்கசென்றவர் திரும்ப வருவதற்குள் குரங்கைப் பிடிக்க மேலே ஏறிய அந்த இளைஞர்கள் சிறிது நேரத்திற்கு பின் வந்து தனித்தனியாக காதை கடித்து துப்பிய கண்ணாடியைக்கொடுத்துவிட்டு அதற்கு பணம் கேட்டார்கள். பிஞ்சு போன கண்ணாடிக்கு என்ன தருவது என்று பேரம் பேசி லென்ஸ்க்காக 50 ரூ குடுத்தோம்.
பிறகு தான் தெரிந்தது குரங்கை இதற்காகவே அந்த இளைஞர்கள் பழக்கிவைத்திருக்கிறார்கள் என்று அதற்கு பிறகு கோவர்த்தன கிரியை அடைந்த போது எல்லா கோயில்களிலும் கடவுள் இப்படித்தான் இருப்பார் என்று என் ஞானக்கண்ணாலே வணங்கிக்கொண்டிருந்தேனே தவிர என் ஊனக்கண்ணால் வணங்க இயலவில்லை.
ராதாராணி பாதம் என்று ஒரு இடம் இருக்கிறது. அதனருகில் ஒரு சிறு ஆசிரமம் . அங்கே மரத்தின் அடியில் ஒரு கல் சாய்த்து வைக்கப்பட்டிருந்தது அதனைக்காட்டி, ஒரு சாது ,"இங்கே பாருங்கள் இந்த கல்லில் உங்களுக்கு என்ன தெரிகிறது" என்று கேட்டார். அவருக்காக உற்றுப்பார்த்ததில் எதோ தெரிகிறார்போலத்தான் இருந்தது.. ஆனால் ஞானக்கண் அப்போது சரியாக வேலை செய்யவில்லை. அவரே சொன்னார். ஒரு ஹனுமான் கல்லின் இயற்கை கலரிலேயே சுயம்புவாக இருக்கிறது என்று.. க்ரீடம் வால் போன்ற இடங்களெல்லாம் மட்டும் தெரிந்தது. மேலும் சில அந்த சிறு குடிலுக்குள் உள்ளது என்றார். உள்ளே செல்ல பயந்து நான் பின்வாங்கிவிட்டேன்.
அடுத்தமுறையும் கோவர்த்தனம் சென்றோம். அதே இடம்.. போன முறையை விட அந்த பாதம் இருந்த இடத்தில் எக்கச்சக்கமான குரங்குகள்.. அதனால் யாரும் காரைவிட்டே இறங்க மறுத்துவிட்டார்கள். நாத்தனார் கணவர் ம்ட்டும் நீங்கள் எனக்கு காண்பியுங்கள் என்று கேட்டதால் கண்ணாடியை பேண்ட் பாக்கெட்டில் ஒளித்துவைத்துக்கொண்டு இறங்கிவிட்டேன். குடிலுக்குள் நடு நாயகமாக இருந்த ஒரு கண்ணாடி போட்ட மேடையில் பல விதமான கற்கள் இருந்தது . அவை எல்லாம் ஒரு குரு வின் கலெக்ஷனாம்..
ஒவ்வொரு கல்லிலும் விதவிதமான உருவங்கள் இயற்கையாகவே வந்த உருவங்கள். ஓவியங்களைப்போல நிழலாக இருந்தன. ஹனுமான் க்ரீடத்தோட முட்டிக்காலில் சிவனை வணங்கும் போஸ்... கிருஷ்ணனை கைபிடித்த யசோதையைப்போல ( ஓவியங்களில் அதிகம் பார்ப்பீர்கள்) கண்ணன் வெண்ணை உண்ணும் காட்சி...புலி, இப்படி... முதலில் அவர் சொல்லும் போது தெரியாது உங்கள் மனக்கண்ணில் அதை உருவகப்படுத்தி ஒப்பிட்டுப் பார்க்கும் போது அது தெரியும்.. ஆச்சரியமாக இருந்தது..
52 comments:
மீ த பர்ஸ்ட்ட்ட்டூ
அக்கா, கோவர்த்தனம் எங்க இருக்குன்னு சொல்லலியே? கண்ணாடியை ஒளிச்சு வைத்துவிட்டு எப்படி கல் படங்களைப் பார்த்தீங்க?..
பாயிண்டை பிடிச்சிட்டோம்ல... ;)
தமிழ்பிரியன் ..நல்லா கவனிச்சிருக்க்கீங்க.. கண்ணாடிப்போடமலே.. :)
நான் பேண்ட் பாக்கெட்லேர்ந்து குடிலுக்குள்ள போனதும் எடுத்து மாட்டிக்கிட்டேன்..
கோவர்த்தனம் எங்க இருக்குன்னு சொல்லலையா.. அச்சச்சோ அப்ப நீங்க கண்ணாடி போடுங்க தமிழ்பிரியன் ..,. லிங்க் போட்டிருக்கேனே...
. ஒருமுறை கோவர்த்தனம் போகலாம்ன்னு கிளம்பினோம்.//
சீக்கிரம் போய்ட்டு வாங்க நாங்களும் பார்த்த மாதிரி இருக்கும்
//சட்டென்று இரு சாந்துபொட்டிட்ட //
என்னங்க இது கொடுமை
மீ த பர்ஸ்ட் போட்டுட்டு கமெண்டுகளுக்கான பக்கத்திலேயே படித்ததால் லிங்க் தெரியலை.. பெயர் மட்டும் தான் தெரிந்தது... :)))
சுரேஷ் எதுங்க கொடுமை.. சாந்துன்னா.. ஆரஞ்சு கலரில் ஹனுமானுகு சாத்துவாங்களே அந்த சாந்து .. ஹிந்திக்காரங்க எல்லாம் அதை வச்சிருப்பாங்க பாத்திருக்கலாம் நீங்க..
கோவர்த்தனம் போயிட்டு வந்தாச்சுங்க அதைப்பத்தி தான் எழுதி இருக்கேன்..என் பேச்சுவழக்கு தமிழ் எழுத்தால புரியலையோ உங்களுக்கு.. அது பத்தி எழுதிய பதிவுக்கு நீலக்கலரில் லிங்க்கும் இருக்கு பாருங்க ..ஏற்கனவே போட்ட இரண்டு பதிவுகள் இருக்குங்க.. ஆன்மீகச்சுற்றுலா வகைகளில் பாருங்க..
நல்லாருக்குப்பா அனுபவம்..பதிவு!!
கலக்கல் குரங்கு!!
//கோவர்த்தனம் எங்க இருக்குன்னு சொல்லலையா.. அச்சச்சோ அப்ப நீங்க கண்ணாடி போடுங்க தமிழ்பிரியன் ..,.//
:-)))))))..அய்யோ அய்யோ!!
முத்துலட்சுமி கயல்விழி,
வித்தியாசமான அனுபவம்.சிறு கதை
ஒன்று எழுதலாம் போலருக்கு.
என்ன பெருசா அந்த குரங்கை பாராட்டுறீங்க? :):):)நான் இதவிட சூப்பரா கத்தியின்றி ரத்தமின்றி கண்ணாடில்லாம் புடுங்குவேன்:):):) கொரங்குங்க எல்லாம் தங்களுக்குள்ள தெறமசாலிங்கள பாத்தா, பரவாயில்லையே 'ராப் கணக்கா சேஷ்டை பண்றியேன்னுதான்' பாராட்டப்படுதாம்:):):)
//முத்துலெட்சுமி-கயல்விழி said...
தமிழ்பிரியன் ..நல்லா கவனிச்சிருக்க்கீங்க.. கண்ணாடிப்போடமலே.. :)
நான் பேண்ட் பாக்கெட்லேர்ந்து குடிலுக்குள்ள போனதும் எடுத்து மாட்டிக்கிட்டேன்..
///
எங்க அக்காகிட்ட கொஸ்டீனா?
பார்த்தீங்களா எம்புட்டு டக்கரா பதில் சொல்லிட்டாங்க ! :)))))
//முத்துலெட்சுமி-கயல்விழி said...
கோவர்த்தனம் எங்க இருக்குன்னு சொல்லலையா.. அச்சச்சோ அப்ப நீங்க கண்ணாடி போடுங்க தமிழ்பிரியன் ..///
:))))))))
//என் ஞானக்கண்ணாலே வணங்கிக்கொண்டிருந்தேனே தவிர என் ஊனக்கண்ணால் வணங்க இயலவில்லை///
அப்பிடியெல்லாம் சொல்லகூடாதுக்கா!
எல்லாமே நல்ல விசயம்தான்!
// rapp said...
என்ன பெருசா அந்த குரங்கை பாராட்டுறீங்க? :):):)நான் இதவிட சூப்பரா கத்தியின்றி ரத்தமின்றி கண்ணாடில்லாம் புடுங்குவேன்:):):) கொரங்குங்க எல்லாம் தங்களுக்குள்ள தெறமசாலிங்கள பாத்தா, பரவாயில்லையே 'ராப் கணக்கா சேஷ்டை பண்றியேன்னுதான்' பாராட்டப்படுதாம்:):):)///
ஹய்ய்ய்!
ராப் அக்கா
தெறமை அல்லாத்தையும் திண்டுக்கல் பூட்டு போட்டு பூட்டியே வைச்சிருக்காங்க போல !
//என் கண்ணாடியை அத்தனை லாவகமாக அது லவட்டி இருக்கிறது. என் மேல் துளி கூட நகம் படாமல்.//
என்னமாய் ட்ரெய்ன் பண்ணியிருக்காங்க.
//முதலில் அவர் சொல்லும் போது தெரியாது உங்கள் மனக்கண்ணில் அதை உருவகப்படுத்தி ஒப்பிட்டுப் பார்க்கும் போது அது தெரியும்.. //
ஆமாங்க. இங்கே கர்நாடகாவில் பெல்லூர், ஹலிபேடு கோவில் சிற்பங்களும் அப்படித்தான். ஒவ்வொரு சிற்பத்துக்கும் அவர்கள் சொன்ன கதையைக் கேட்ட பிறகு மனக் கண்ணில் உருவகப் படுத்திப் பார்க்கணும். நல்லாச் சொல்லியிருக்கீங்க அனுபவங்களை.
நிஜமாவா அக்கா..அந்த கற்கள்..நம்ப முடியவில்லை..
இது சமயம் ஒரு விசயம் நினைவுக்கு வருகிறது..மலேசியாவில் நெகிரி மாநிலத்தில் போர்ட்டிக்சன்னில் ஓர் அனுமன் ஆலயம். சாலையோரத்திலேயே இருக்கும். சாலைக்கு எதிர்புறம் கடல்.. அனுமன் சிலை கடற்கரையை நோக்கியப்படி இருக்கும். அந்தக் ஆலயத்தின் பொறுப்பாளர்கள் சொன்னது ...அந்த சிலை தெற்கை நோக்கித்தான் வைக்கப்பட்டதாம்.... நாளடைவில் அது கடற்கரையை நோக்கி திரும்பி விட்டதாம்..கடற்கரை கிழக்குத்திசையில் உள்ளது!!!!
இதுப் பற்றி மேலும் ஆய்வு செய்ய நேரமில்லை...ஆனாலும் அறிவியல்பூர்வமான ஏதாவது காரணம் இருக்கக்கூடுமோ என்று நினைக்கத் தோன்றுகிறது!!!
நல்லவேலை நான் இன்னும் உங்க அளவுக்கு வரவில்லை...;))
பதிவு வழக்கம் போல கலக்கல் ;)
முல்லை நன்றிப்பா.. குரங்கு நல்லா கடிச்சு குதறி கொடுத்த அந்த கண்ணாடி லென்சைக்கூட கடைசியில் பத்திரமா வீடு சேர்க்கலை நான் :)அந்த ஊருல ஒரு கண்ணாடிக்கடை தானாம் அதும் அன்னைகுப்பாத்து லீவாம்..
-------------------
கெ.ரவிஷங்கர்.. என் கதையே பெரியகதையா இருக்கே இதுல இன்னொரு கதையா..:)
சரி ராப் நீ வரும்போதும் நான் கண்ணாடியை ஒளிச்சுவச்சர்ரேன் :))
-------------------
ஆயில்யன் என்ன தான் இருந்தாலும் இந்த கண்ணு கண்ணாடி இல்லாம தெரியாதில்ல.. :))
ராமலக்ஷ்மி நீங்க சொன்ன இடமெல்லாம் விஷ் லிஸ்ட்ல இருக்கு.. எப்ப நடக்க்போதோ.. :)
அடுத்த முறை போகும் போது கார் பார்க்கிங்கல்யே ஒருத்தர் கண்ணாடி பத்திரம்ங்கன்னார்.. நாங்க இத போனமுறை சொல்லி இருக்கலாமே நாங்க இப்ப தான்விவரமா எடுத்து உள்ள வச்சிக்கறமே இப்ப என்னத்துக்கு அறிவுரைன்னு நினைச்சிக்கிட்டோம்..
--------------------
புனிதா :) இதான் ப்ரச்சனை நம்மகிட்ட ..ஒன்னும் நம்பனும் இல்லன்னா நம்பக்கூடாது ஆனா நம்பியும் நம்பாம இருப்பதும் ஆச்சரியமா பார்ப்பதுமா இருக்கோம்..
ராப்.. சபாஷ் சரியான போட்டி...
குரங்குகள் அட்டகாசம் பிரச்சனையா இருந்தாலும் ரசிக்கற மாதிரி இருக்கும்..
{லக்ஷ்மி- என் கண்ணாடியை பிடிங்கீட்டு போனா உங்களுக்கு ரசிக்கற மாதிரி இருக்குதான்னு முறைக்கறாங்க...:-)}
//புனிதா :) இதான் ப்ரச்சனை நம்மகிட்ட ..ஒன்னும் நம்பனும் இல்லன்னா நம்பக்கூடாது ஆனா நம்பியும் நம்பாம இருப்பதும் ஆச்சரியமா பார்ப்பதுமா இருக்கோம்..//
நான் தான் நம்பவில்லையே.. :-P
:-)
நல்ல மார்க்கெட்டிங்க் டெக்னாலஜி
பதிவுல போட்டிருக்கற குரங்கு படம் யார் வரைஞ்சது?? ஞானகண்ணால் கண்ணால் தான் கடவுளையும் கல்லையும் பார்க்கணும்னு இருக்கும் போல!!!!
:))
எப்படி எல்லாம் சோதனை வருது பாருங்க....
மங்கை ...வந்துட்டாங்கய்யா பி. எஸ் வீரப்பா கணக்கா.. சபாஷ் சரியான போட்டியா.. ஹ்ம்.. கண்ணாடி என்பது என் கர்ண கவச குண்டலம்.. அதை பிரிக்க இத்தனை சதியா...:)
------------------------
சென்ஷி என்ன சொல்றே .. மார்க்கெட்டிங்கா எங்க ... அதான் ஒர்க் அவுட் ஆகலையே... ஆனா அது இல்ல பதிவின் காரணம் ...காசி பதிவில் குரங்கின் லவட்டல் பத்தி கோடிட்டிருந்தேன் நண்பர்கள் அது என்ன கதைன்னாங்க சொல்லிட்டேன்..
சிந்து,கூகிளில் கண்ணாடியும் குரங்கும்ன்னு தேடினப்ப இந்த படம் கிடைச்சது, ரொம்ப பொறுத்தமா இருக்குல்ல.. :)
------------------------
சிவா வர வர சோதனைகள் தான் பதிவு பண்ணிட்டிருக்கேன்னு தோணுது...
புதுமை புதுமையா செயல்களை செய்றதுதான் குரங்கின் இயல்பு. அதற்கு நீங்கள் இரையாகி விட்டீர்கள் சிறு முயற்சி.
புதுமை புதுமையா செயல்களை செய்றதுதான் குரங்கின் இயல்பு. அதற்கு நீங்கள் இரையாகி விட்டீர்கள் சிறு முயற்சி.
ஆச்சரியமாக இருந்தது!!
//எனக்கு கண் தெரியவில்லை. ஆமாங்க எனக்கு கண் தெரியவில்லை. இத்தனை நேரம் தெள்ளத்தெளிவாக் தெரிந்த கண் கலங்கலாக மேகமூட்டமாக இருக்கிறது.
//
நான் என்னவோ எதோனு நினச்சுட்டேன்!!
நல்ல அனுபவம் :-)
யட்சன் :)நன்றி
-------------------
தவறு .. என்னங்க நீங்க அதான் பழக்கிவச்ச குரங்குன்னு சொல்லிட்டேனே அடிகக்டி அதே வேலையா இருந்திருக்கு அது .. ஏமாற்றுவேலைக்கு பலியாகிட்டேங்க..
--------------------------
பூர்ணிமா பயந்துக்காதீங்க.. :)
-----------------------------
அமுதா நன்றிங்க..
கலக்கல் குரங்குதான்..
குரங்கு வெச்சே பணம் பறிக்கிராங்களா?
இதுக்குத்தான் என்ன மாதிரி காண்டாக்ட் லென்ஸ் போட்டுக்கணும்ங்கறது :)
ராம் நன்றி
----------------
ஆமா பாசமலர் என்ன கடி கடிச்சு குதறி வச்சிருந்தது தெரியுமா ...கலக்கல் தான்
------------------
குடுகுடுப்பை ,, எப்படியும் சம்பாதிக்கனும்ன்னு இருக்காங்க. என்ன ஒரு அப்பாவி முகம் தெரியுமா அவங்களுக்கு.. ஹ்ம் :(
சின்ன அம்மிணி.. அந்த லென்ஸ் கீழ விழுந்தா தேடற அளவுக்கு பவர் வேணுமில்ல.. :)))
கடவுளை ஃபோட்டோ புடிச்சிருக்கலாம்.
சர்வேசன் அதான் போட்டோ பிடிச்சு போட்ட லிங்க் இருக்குல்ல.. எத்தனை தடவை விளம்பரம் செய்தாலும் பழய போஸ்டிற்கு ஒருத்தரும் போகமாட்டேங்கிறீங்களே...
என்ன கேமிராவை அந்த முறை எடுத்துட்டு போகாதது நல்லது தான்..இல்லன்னா அதை பறிகொடுத்து நல்லா திட்டு வாங்கி இருப்பேன்..
அனுபவ பதிவு அசத்தல்! அதைவிட அசத்தல் அந்த குரங்கு படம்!!!
இசக்கி முத்து , பாருங்க எல்லா ஊருலயும் பழக்கினாலும் பழக்காட்டியும் சில விசயங்களை செய்வதில் குரங்குகள் ஒரேமாதிரியாத்தான் இருக்கும் போல ..இல்லாட்டி இத்தனை அழகா ஒரு படம் கூகிளில் கிடைக்குமா.. :)
வடக்கு வாசல் இணைய தளத்துக்கு உங்கள் பதிவில் இணைப்பு கொடுத்தமைக்கு மிக்க நன்றி.
யதார்த்தா கி.பென்னேஸ்வரன்
//பிறகு தான் தெரிந்தது குரங்கை இதற்காகவே அந்த இளைஞர்கள் பழக்கிவைத்திருக்கிறார்கள் என்று//
தினுசு தினுசா யோசிக்கிறாய்ங்கய்யா :(
ஞானக்கண்ணில் பார்த்தால் எல்லாம் ...
ஹைய்யோ பாட்டு மறந்து போச்சு,
குரங்கார் அனுபவம் நல்லாருக்கு.
படத்தில போட்டிருக்கீங்களே அந்த குரங்கா தூக்கிட்டுப்போச்சு:)))
நன்றி சஞ்சய்..
நன்றி அமிர்தவர்ஷினி அம்மா...
குரங்குல எந்த குரங்குன்னா என்ன.. பாருங்க உக்காந்து எப்படி ஒடைக்குதுன்னு..
நான் ஐம்பதாவது பின்னூட்டம் போட்டுக்கறேன். இது பத்தின கருத்துகளை ச்சேட்ல சொல்லியாச்சு, அதனால் அதுக்கு ஒரு ரிப்பீட்டேய்:-))
நல்லாயிருக்கு.
குழந்தைகளுக்கு / குடும்பபடம் பார்க்க நேரமிருந்தால் வலைபக்கம் வரவும். நிறை/ குறை சொல்லவும்.
happy newyear invite you to join tamilbloggersunit
// என் கை தானா கண் பக்கத்தில் போனால் என் கண்ணாடி இல்லை. எல்லாரும் அய்யோ குரங்கு என்று கத்துகிறார்கள். உற்றுப்பார்த்தால் ஒரு குரங்கு அதன் கையில் என் கண்ணாடி. என் கண்ணாடியை அத்தனை லாவகமாக அது லவட்டி இருக்கிறது. என் மேல் துளி கூட நகம் படாமல்.//
முதற்கண் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
கோவர்த்தனத்தில் அனுமன் படுத்திய பாட்டை பார்த்து எனக்கு சுமார் 60 வருடங்களுக்கு முன்
எங்கள் கிராமத்து வாய்க்கால் கரையில் பட்ட அனுபவம் நினைவுக்கு வந்தது. எங்கள் ஊர், திருச்சி,
லால்குடி, ஆங்கரை கிராமம்.
எனக்கு ஒரு ஏழு அல்லது எட்டு வய்துக்கு மேல் இருந்திருக்காது. அதிகாலை குளிப்பதற்காக நானும்
என் அப்பாவும், வாய்க்காலுக்கு சென்றோம். கரையோரம் ஆலமரம். ஆலமரத்து அடியில்
பிள்ளையார். அதை ஒட்டி வாய்க்கால் படிகள். வாய்க்கால் கரையில் எனது அரை டிராயரை
கழற்றி வைத்துவிட்டு, வெறும் கோவணத்துடன் ( அது அந்தக்காலம். சிரிக்காதீர்கள் ! )
தண்ணீருக்குள் இறங்கி குளித்துவிட்டு வந்து பார்த்தால், என்
டிராயரைக் காணோம். பயந்து போய், அங்குமிங்கும் பார்த்தால், அனுமனின் அவதாரம் ஒன்று
என் டிராயரைக்கையில் வைத்துக்கொண்டிருக்கிறது. டிராயரின் ஒரு பைக்குள் கையை விட்டு
என்ன இருக்கிறது என்று கஸ்டம்ஸ் அதிகாரி மாதிரி பரிசோதி்த்துக்கொண்டிருந்தது. என்ன செய்வது எனத் தெரியாமல்,
அழத்தொடங்கி விட்டேன்.
பக்கத்திலிருந்த ஒரு முதியவர் சம்யோசிதமாக அங்கு யாரோ கொண்டு வந்திருந்த ஒரு
தேங்காயை எடுத்து பிள்ளையார் எதிரில் உடைத்தார். சத்தத்தைக் கேட்ட, குரங்கு எனது டிராயரை கீழே போட்டு விட்டு,
தேங்காய்ச் சில்லை எடுக்க ஓடி கீழே வந்தது. நான் அப்பாடி, மானம் பிழைத்தது என்று
எனது டிராயரை எடுத்துக்கொண்டு தலை தெறிக்க வீட்டுக்கு ஓடினேன்.
இப்போது நினைத்தாலும் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.
அது இருக்கட்டும்.
நீங்கள் போட்டிருக்கும் ஃபோட்டோவை (குரங்கு கையில் கண்ணாடியை வைத்துக்கொண்டு இருப்பது)
என் மனைவியிடம் காண்பித்தேன். அப்போது ,அவள் இந்தப் பதிவை படிக்கவில்லை.
ஜஸ்ட் போட்டோவை மட்டும் பார்த்துவிட்டு என்னைப் பார்த்து கேட்கிறாள்:
" நீங்க ஏன் அங்க போய் உக்காந்து இருக்கீங்க ? "
சுப்பு ரத்தினம்.
http://vazhvuneri.blogspot.com
கயல் ஜி..
புத்தாண்டு வாழ்த்துக்கள்
Post a Comment